Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரலிலை அகப்பட்டது உலக்கைக்கு தப்புமே?- யாழ்ப்பாணத் தம்பி-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உரலிலை அகப்பட்டது உலக்கைக்கு தப்புமே?- யாழ்ப்பாணத் தம்பி-

02 ஜனவரி 2016

உரலிலை அகப்பட்டது உலக்கைக்கு தப்புமே?- யாழ்ப்பாணத் தம்பி-

இப்ப எல்லாம் என்ன கதைச்சு அரசியல் செய்யிறது? ஆரோட சேந்து அரசியல் செய்யிறது எண்டு மகிந்தருக்குப் பிரச்சினைதான். சேராத இடத்தில் சேர்ந்தால் துன்பம் வரும் எண்டுற மாதிரி அவரைச் சுற்றி இருக்கிற ஆக்கள் வீராப்பு பேசி உள்ளதையும் கெடுத்த கதையாய் எல்லாம் நடக்குது..

இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு எண்ட மாதிரி பலர் திரும்பிப் பாக்காமல் ஓடிப்போட்டினம். அமைச்சுப் பதவியளை எடுத்துப் போட்டு மகிந்தவுக்கு எதிராய் நல்லா புட்டுப் புட்டு வைக்கினம். 

சேற்றிலே புதைந்த யானைய காகமும் கொத்தும் எண்டுற மாதிரி மகிந்தரின்டை நிலமை ஆகிட்டுது. பிறகென்ன செய்த அநியாயங்களுக்கு இந்தத் தம்பி மட்டுமே பகிடி விடுறான். எல்லாரும்தான் நக்கல் அடிக்கினம்.. 

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுாத்தானாம் ஆண்டி எண்டுறதைப்போல திரும்பத் திரும்ப வாயாலை கெட்டுக்கொண்டிருக்கிறார் மகிந்தர். இப்பவும் பாருங்கோவன். அப்பா தமிழ் மக்களின்டை காணியை விடுவிச்சால் புலி புலி எண்டு பீதியை காட்டி எரியிற வீட்டிலை இலாபம் புடுங்கிற இனவாத அரசியல் செய்யிறார்.

சிங்கள மக்களுக்கு எதிரான ஊழலாய் இருந்தால் என்ன? தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையாய் இருந்தால் என்ன? ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு. இப்பிடித்தான் மகிந்தர் தலை கீழாய் நிண்டாலும் அவரிலை படிஞ்ச கறையள் போகாது

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம். இப்பிடித்தான் இந்த விமலும் உதயகம்பன்பிலவும். குணத்தை மாற்றக் குருவில்லை. இவையின்டை இனவாத கொடூர குணங்கள் ஒருகாலும் போகாது. வெறுங்கை முழம் போடாது எண்டுறதை அறியாமல் கத்திக் கொண்டிருக்கினம்.

உதயகம்பன்பிலை கடத்தலுக்கு எதிராய் கருத்துச் சொல்லியிருக்கிறார். கடத்தல் மன்னன் மகிந்தவின் ஆட்சிப் பிரியர், அடிமை இப்ப கடத்தலுக்கு எதிராய் பேசிறார் எண்டால் அவரின்டை மனித உரிமை குறித்த ஆர்வத்தை பாருங்கோவன்..

அடுத்தவர் விமல். அவர் அரசாங்கம் பணத்தை ஆடம்பரமாய் செலவு செய்யுது எண்டுறார். என்ன கொடுமை கண்டியளே? முந்தி மகிந்த மன்னர் செய்யாத ஆடம்பரம் என்ன இருக்குது? சனங்களின்டை காசுகறை சுறண்டி களியாட்டம் போடுறது தானே அவரின்டை ஆட்சி.

அந்த ஆட்சியிலை ஊழல் செய்து நிதிமோசடி செய்தவர் எண்டுற குற்றம் சுமத்தப்பட்ட விமல் இப்ப அநாவசிய செலவு எண்டு பீலா விடுறார். கொஞ்சம் பொருத்தமாய் பேசலாமே? இந்த நிதிப்போராளி வேசம் எல்லாம் உங்களுக்கு சரிவராது கண்டியளே விமல் வீரவன்ச. 

ஒரு கதைக்கு இப்பிடி எங்கடை பேச்சுக்கள் பாஸ் எண்டு மகிந்தவிட்டைப் போய் விமலும் உதயவும் கேட்டால் அவர் என்ன நினைப்பார் தெரியுமே ஒரு முடிவு கட்டாமல் விடமாட்டாங்கள் போலிருக்கே? எண்டுதான் நினைப்பார். 

ஆனால் உப்புத் திண்ணடவன் தண்ணி குடிச்சுத்தானே ஆகோனும்? ஆண்டவா... கடவுளும் இனிக் காப்ப ஏலாது. உரலிலை அகப்பட்டது உலக்கைக்கு தப்புமே?
 
யாழ்ப்பாணத் தம்பி 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127449/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.