Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வெளிவிவகார செயலாளர் கொழும்பு வருகிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் எதிர்வரும் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார். இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஆராயும் நோக்கிலும் அதற்கான ஏற்பாடுகளை பார்வையிடும் வகையிலுமே இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் எதிர்வரும் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார். இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஆராயும் நோக்கிலும் அதற்கான ஏற்பாடுகளை பார்வையிடும் வகையிலுமே இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

   

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய உயர் மட்ட குழு கலந்துகொள்ளவுள்ள நிலையில் அது தொடர்பான ஏற்பாடுகளையும் இந்திய வெளியுறவு செயலர் தனது விஜயத்தின்போது ஆராயவுள்ளார். அந்தவகையில் 10 ஆம் திகதியளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்டவர்களையும் ஜெய் சங்கர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் இரு நாட்டு பல் துறைசார் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழு அமர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளன.இலங்கை தலைவர்களுடன் இந்திய வெளியுறவு செயலர் மேற்கொள்ளவுள்ள சந்திப்புக்களின்போது இரு நாட்டு மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கைக்கான இந்தியாவின் புதிய முதலீடுகள் என்பவை தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இந்திய வெளியுறவு செயலரின் இலங்கை விஜயம் தொடர்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி.சில்வா மேலும் தெரிவிக்கையில்,இந்திய வெளியுறவுச் செயலாளர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டே இங்கு வருகின்றார். இது வழமையான விஜமாகும். இதன்போது இலங்கையில் வெளிவிவகார செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளை சந்திப்பார். ராஜதந்திர மட்டத்திலான இவ் விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்திப்பது தொடர்பில் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை.

10 ஆம் திகதி இலங்கை வரவுள்ள இவர் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்தியாவுடன் கையெழுத்திடப்படவுள்ள வர்த்தக தொழில்நுட்ப உடன்படிக்கை தொடர்பாக உத்தியோகபூர்வ உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இவ் உடன்படிக்கை எப்போது கையெழுத்திடப்படுமென தீர்மானிக்கப்படவில்லை.என்றார்.

இதேவேளை ஜெனீவா பிரேரணை தொடர்பாக மீளாய்வு செய்வதற்காகவும் அதனை இலங்கையர் மத்தியில் செயல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காகவும் இந்தியாவின் உயர்மட்ட ராஜதந்திரி ஒருவர் இலங்கை வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இங்கு வரும் இந்திய ராஜதந்திரி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும சந்தித்து வடக்கு, கிழக்கு பிரச்சினை தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும் அவ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

http://www.seithy.com/breifNews.php?newsID=148511&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.