Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின்போதும், ஐநாவிலும் பாகிஸ்தான் அளித்த உதவியை மறக்க முடியாது! - மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எமது இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையாகவே பங்கு பற்றும் உண்மை நண்பனான பாகிஸ்தானுடனான நட்புறவை மென்மேலும் மேம்படுத்துவது மிக அவசியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எமது இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையாகவே பங்கு பற்றும் உண்மை நண்பனான பாகிஸ்தானுடனான நட்புறவை மென்மேலும் மேம்படுத்துவது மிக அவசியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

   

இரண்டு நாள் இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு உத்தியோகபூர்வ செங்கம்பள வரவேற்பு அளிக்கும் வைபவம் ஜனாதிபதி செயலக வளாகத்தில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதனடிப்படையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது ; பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் உத்தியோகபூர்வ விஜயத்தின் நிமித்தம் நாம் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

குறிப்பாக இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிக நீண்ட கால நட்புறவு நிலவி வருகின்றது. எமது நாட்டின் அபிவிருத்திக்கு மாத்திரமல்லாமல் எம் நாட்டில் யுத்தம் நிலவிய காலத்தில் தேசிய பாதுகாப்பின் நிமித்தம் பாகிஸ்தான் எமக்கு பாரிய ஒத்துழைப்பை நல்கியது. அவ்வுதவிகளை எம்மால் ஒரு போதும் மறக்க முடியாது. அதனால் இலங்கை அரசாங்கமும் இந்நாட்டு மக்களும் பாகிஸ்தான் அரசாங்கம் குறித்தும் அந்நாட்டு மக்கள் தொடர்பாகவும் பெரும் கௌரவத்தையும் மரியாதையையும் கொண்டுள்ளனர்.

அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் கடந்த வருடங்களில் பாகிஸ்தானின் பிரதிநிதி இலங்கைக்கு சார்பாக செயற்பட்ட விதம், எமக்கு அளித்த அனுசரணை மற்றும் ஒத்துழைப்பை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். பாகிஸ்தான் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் எப்போதுமே எமது இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையாகவே பங்கு பற்றும் உண்மை நண்பனாவர். அதனால் எம்மிரு நாடுகளுக்கடையிலான நட்புறவை மென்மேலும் மேம்படுத்துவது மிக அவசியமானது.

வர்த்தகம் உள்ளிட்ட எட்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் நாம் இன்று கைச்சார்த்திட்டுள்ளோம். அவற்றில் நீர் மின்சாரம், மீன்பிடிக் கைத்தொழில், கப்பல் துறை என்பன பிரதானமானவையாக உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேநேரம் நான் கடந்த வருடம் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட இராஜதந்திர விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும் இணக்கப்பாடுகளையும் வெற்றிகரமாக நடைமுறைப்புத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடினோம். அவற்றை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதனால் நாம் இச்சந்தர்ப்பத்தை மிக முக்கிய வாய்ப்பாகக் கருதுகின்றோம்.

இதேவேளை சார்க் அமைப்பின் அடுத்த மாநாடு அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எமக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அழைப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். அம்மாநாட்டில் நாம் பங்குபற்றுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

இவை அனைத்து செயற்பாடுகளுக்கும் மத்தியில் பாகிஸ்தான் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையிலும் மக்களுக்கு மத்தியிலும் ஏற்பட்டுள்ள நட்புறவை நாம் பெரிதும் மதிக்கின்றோம். இரு பக்க நட்புறவை மேன்மேலும் மேம்படுத்தி இச்செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் ஒத்துழைப்பையும்,நட்புறவையும் மென்மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதனால் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தை மிக முக்கிய வருகையாகக் கருதுகின்றோம். அவரது வருகையின் நிமித்தம் நாமும் எமது அரசாங்கமும் மக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=148664&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.