Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு வெற்றியைக் கொண்டுவருமா இருபதுக்கு-20 போட்டிகள்?

Featured Replies

இலங்கைக்கு வெற்றியைக் கொண்டுவருமா இருபதுக்கு-20 போட்டிகள்?
 

article_1452086064-TamilSLsoiyjsd.jpgநியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடர், நாளை  இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

டெஸ்ட் தொடரையும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரையும் இழந்த இலங்கை அணி, தான் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இருபதுக்கு-20 போட்டிகளிலாவது வெற்றிபெற எதிர்பார்த்துள்ளது.

நாளைய போட்டியில், நியூசிலாந்தின் டிம் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்குப் பதிலாக, ஒருநாள் தொடரில் இலங்கைக்குத் தலையிடியாக அமைந்த மற் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். அவர், 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இலங்கை சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

இலங்கை: திலகரட்ண டில்ஷான், தனுஷ்க குணதிலக, டினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், மிலிந்த சிரிவர்தன, சாமர கப்புகெதர, திஸர பெரேரா, நுவான் குலசேகர, சச்சித்திர சேனநாயக்க, துஷ்மந்த சமீர, ஜெப்றி வன்டர்சே

நியூசிலாந்து: கேன் வில்லியம்ஸன், மார்ட்டின் கப்டில், றொஸ் டெய்லர், கொரே அன்டர்சன், கொலின் முன்றோ, மிற்சல் சான்ட்னெர், லூக் றொங்கி, அடம் மில்னி, ட்ரன்ட் போல்ட், மற் ஹென்றி, இஷ் சொதி.

- See more at: http://www.tamilmirror.lk/163223#sthash.DIfeRMut.dpuf
  • தொடங்கியவர்

3 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி!

3 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி!

January 7, 2016  10:54 am

Bookmark and Share
 
இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நியூசிலாந்து பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக Martin Guptill 58 ஓட்டங்களையும் Kane Williamson 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் Nuwan Kulasekara 2 விக்கெட்டுக்களையும் Jeffrey Vandersay 1 விக்கெட்டினையும் பெற்றனர்.

வெற்றிபெற இலங்கை அணிக்கு 183 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் களம் இறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக Danushka Gunathilaka 46 ஓட்டங்களையும் Milinda Siriwardana 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் Matt Henry மற்றும் Trent Boult ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை பெற்றனர்.
  • தொடங்கியவர்

நியூஸிலாந்து- இலங்கை இரண்டாவது T-20 நாளை

January 09, 2016

நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையில் இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் இரு போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடர் ஆகிய நடைபெற்று வருகின்றது.

new-zealand-vs-sri-lanka1

இந்நிலையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் 2 க்கு 0 என்ற ரீதியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 3 க்கு 1 என்ற ரீதியில் கைப்பற்றியது. அதேவேளை முதலாவது 20 ஓவர் போட்டியையும் 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதன்படி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற நியூஸிலாந்து 20 ஓவர் தொடரையும் வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்தில் நாளைய போட்டியில் களமிறங்கும்.

http://www.onlineuthayan.com/sports/?p=7448&cat=2

  • தொடங்கியவர்

14 பந்துகளில் அரைசதம் விளாசி கொலின் மன்ரோ சாதனை; இலங்கையை நாசம் செய்த நியூஸிலாந்து

 

 
  • இலங்கைக்கு எதிராக டி20 கோப்பையைக் கைப்பற்றிய நியூஸிலாந்து அணி. | படம்: ஏ.எஃப்.பி.
    இலங்கைக்கு எதிராக டி20 கோப்பையைக் கைப்பற்றிய நியூஸிலாந்து அணி. | படம்: ஏ.எஃப்.பி.
  • மேலேறி வந்து சிக்சர் விளாசிய டி20 2-வது அதிவேக அரைசத நாயகன் கொலின் மன்ரோ. | படம்:ஏ.எஃப்.பி.
    மேலேறி வந்து சிக்சர் விளாசிய டி20 2-வது அதிவேக அரைசத நாயகன் கொலின் மன்ரோ. | படம்:ஏ.எஃப்.பி.

ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற இலங்கை-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது, கடைசி டி20 போட்டியில் மன்ரோவின் அதிவேக அரைசத சாதனையுடன் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 10 ஓவர்களில் 147 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலங்கையை அடித்து நொறுக்கியது.

இந்தத் தோல்வியினால் டி20 முதலிடத்தை இழந்தது இலங்கை, மே.இ.தீவுகள் முதலிடம் பெற்றது.

நியூஸிலாந்து இடது கை பேட்ஸ்மென் கொலின் மன்ரோ யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் கண்ட உலக சாதனையை முறியடிக்கும் நிலை இருந்தது, ஆனால் அவர் 14 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது அதிவேக அரைசதமாகும், இதில் மார்டின் கப்தில் வைத்திருந்த அதிவேக நியூஸிலாந்து சாதனையை முறியடித்தார் மன்ரோ.முன்னதாக மார்டின் கப்தில் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 63 ரன்கள் விளாசினார்.

மார்டின் கப்தில், வில்லியம்சன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 40 பந்துகளில் 89 ரன்களை விளாசி எடுத்தனர். அடுத்த 58 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கொலின் மன்ரோ மற்றும் கேன் வில்லியம்சன் இணைந்து 3.2 ஓவர்களில் எடுத்தனர். இதில் மன்ரோ 14 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 50 எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 147 ரன்கள் 10 ஓவர்களில் விளாசப்பட்டுள்ளது.

7 ஓவர்களில் 89/1 என்ற நிலையில் இறங்கிய மன்ரோ, 2-வது பந்திலேயே திசர பெரேராவை லாங் ஆனில் பெரிய சிக்சர் ஒன்றை அடித்தார்,

8-வது ஓவரை வாண்டர்சே என்ற லெக் ஸ்பின்னர் வீச, முதல் சிக்ஸ் டீப் மிட்விக்கெட்டுக்குப் பறந்தது, அடுத்த சிக்ஸ் லாங் ஆஃப் திசைக்குப் பறந்தது. மூன்றாவது ஃபுல் பந்து டீப் ஸ்கொயர்லெக்கில் காணாமல் போனது. பிறகு உதனாவின் பந்தை மேலேறி வந்து கவர் திசையில் ஒரு சிக்சரை விளாசினார் மன்ரோ.

பிறகு சமீரா வீசிய ஃபுல் பந்தை நன்றாக லாங் ஆஃபில் தூக்கி அடித்தார், ரசிகர்களிடையே கேட்ச் ஆனது. ஒரே பவுண்டரியும் இதே ஓவரில் புல்டாஸில் வந்தது. இது ஒரு பவுன்சில் சென்றது. அடுத்ததாக டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு பயங்கர சிக்ஸ் அடிக்க கொலின் மன்ரோ 14 பந்துகளில் 7 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் உலகின் 2-வது அதிவேக டி20 அரைசதம் கண்டதோடு 10-வது ஓவரில் ஆட்டம் முடிந்து போனது.

19 பந்துகளில் அரைசதம் எடுத்து நியூஸிலாந்து டி20 சாதனையை வைத்திருந்த கப்திலைக் கடந்தார் மன்ரோ, கேன் வில்லியம்சன் 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஒருமுனையில் சாதுவாக நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மன்ரோ ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக இலங்கை அணியை நியூஸிலாந்து பேட் செய்ய அழைத்தது. நேர் பவுண்டரி மிகவும் அளவு குறைவாக இருந்ததால் இலங்கை பேட்ஸ்மென்கள் அந்த இடத்தை குறிவைத்து அடிக்க முயன்றே விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனை உணர்ந்த கேன் வில்லியம்சன் அதற்கேற்றார்போல் களவியூகத்தையும் பந்துவீச்சையும் அமைத்தார். கிராண்ட் எலியட் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆஞ்சேலோ மேத்யூஸ் மட்டுமே ஒரு முனையில் இன்னிங்ஸை கட்டமைத்து 49 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். தில்ஷன் முன்னதாக 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆக இலங்கை 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் ஆடம் மில்ன, சாண்டன்ர், தலா 2 விக்கெட்டுகளையும், கிராண்ட் எலியட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/14-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8088823.ece

  • தொடங்கியவர்

நடப்பு உலக T20 சம்பியன் இலங்கை அணியின் தரப்படுத்தல் முதலாம் இடம் பறிபோனது.

புதிய நம்பர் 1 மேற்கிந்தியத் தீவுகளுக்கு வாழ்த்துக்கள்.

எனினும் சம அளவு புள்ளிகளுடன் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் காணப்படுகின்றன.

12508874_10153151278865870_6281388116057

12507154_10153817684962999_6733614356585

  • தொடங்கியவர்

சொந்த ஊருக்கே ஓடிடுறோம்... கதறிய சிங்கங்கள் !

 

க்லாந்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் சிங்கத்தை கிவி கொத்தி குதறி எடுத்து விட்டது .  50 ஓவர் ஆட்டத்தையே டி20 போல ஆடிக் காட்டிய இலங்கை அணிக்குதான் இந்த நிலை. இந்த போட்டியில் பல சாதனைகள் அசாத்தியமாக நிகழ்த்தப்பட்டன. அவற்றை பார்ப்போம்.

kivi%20.jpg

                                                                                         நன்றி :ஸ்போர்ட்ஸ் கீடா

இந்தப் போட்டியில் மார்டின் கப்தில், கோலின் மன்றோ இருவருமே 20 பந்துகளுக்குள் அரைசதம் கண்டனர். இது ஒரு புதிய சாதனையாகும்.

ஒரே போட்டியில் மார்டின் குப்தில் 19 பந்துகளில் அரை சதம் அடித்து, மிக விரைவாக அரைசதமடித்த நியூசிலாந்து  வீரர் என்ற சாதனையை படைக்க, அதே போட்டியில் அவரது சாதனையை கோலின் 14 பந்துகளில் முறியடித்தது, கிரிக்கெட் உலகில் இதற்கு முன்பு எங்கும் நிகழ்ந்திராதது.  

இதற்கு முன், கடந்த 2009ஆம் ஆண்டு  இந்தியா& இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டியில்  சங்கக்காரா 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதே போட்டியில் கவுதம் கம்பிர் 19 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். ஆனால் இருவரும் வேறு வேறு அணியை சேர்ந்தவர்கள். 

kivs.jpg

டி20 வரலாற்றில் 12 பந்துகளில் அரைசதமடித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் யுவராஜ்சிங். அடுத்த படியாக 17 பந்துகளில் அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங் மற்றும் மைபர்க், கிறிஸ் கெயில் உள்ளனர். 18 பந்துகளில் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் அரை சதம் அடித்துள்ளனர்.

கோலின் மன்றோ தனது 50 ரன்களில் 46 ரன்களை ஓடாமலேயே பவுண்டரி, சிக்சர்களில் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் வெற்றியை எட்டியது. அந்த வகையில் இதுவும் ஒரு புதிய சாதனை ஆகும். இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு,  தென்ஆப்ரிக்க அணி பாகிஸ்தான் அணி எடுத்த 130 ரன்களை 11. 3 ஓவர்களில் துரத்தி வெற்றி கண்டதே சாதனையாக இருந்தது.

http://www.vikatan.com/news/sports/57483-guptill-sets-fastest-record-munro-breaks.art

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான இளம் வீரர்களை வைத்துக் கொண்டு இலங்கையணி பலம் மிக்க நியூசிலாந்திடன் இந்தளவிற்கு விளையாடியதே வரவேற்க கூடியது. வருங்காலத்தில் இவ்வணி நிட்சயம் சாதனை படைக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.