Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்பாதுகாப்பு வலயம், தேசிய பாதுகாப்பு என்ற பெயர்களில் தமிழினப்படுகொலையின் தடயங்களை மூடிமறைக்கப்படுகின்றதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசாங்கம், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றும், தேசிய பாதுகாப்பு என்றும் தமிழின அழிப்பின் தடயங்களை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. சமீபத்தில், முள்ளிவாய்க்கால் வட்டுவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் உடலங்கள் அப்பகுதியில் சிறிலங்கா படையினரால் புதைக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமது சொந்தக் காணிகளை படையினர் தரமறுப்பதோடு, அங்கிருந்து வெளியேற மறுக்கின்றனர் என்ற அப்பகுதி மக்களின் கருத்து இதனை வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்பகுதியில் 617 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் அதனைச் தங்களுக்கு சொந்தமாக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசாங்கம், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றும், தேசிய பாதுகாப்பு என்றும் தமிழின அழிப்பின் தடயங்களை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. சமீபத்தில், முள்ளிவாய்க்கால் வட்டுவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் உடலங்கள் அப்பகுதியில் சிறிலங்கா படையினரால் புதைக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமது சொந்தக் காணிகளை படையினர் தரமறுப்பதோடு, அங்கிருந்து வெளியேற மறுக்கின்றனர் என்ற அப்பகுதி மக்களின் கருத்து இதனை வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்பகுதியில் 617 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் அதனைச் தங்களுக்கு சொந்தமாக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

   

வட்டுவாய்க்கால் ஏ1 - ஏ8 வரையிலான காவலரண்களை அமைத்து யாரும் நுழையாதவாறு சிறிலங்காவின கடற்படையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

கண்காணிப்பு உள்ளாக்கப்பட்டுள்ள காணிகளில் பெரும்பகுதி படையினரது பயன்பாட்டுக்கு இல்லாமல், வெறும் பற்றைகளால நிறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

பயன்பாடு இல்லாது பற்றைகளால் நிறைந்த பகுதியொன்றிக்கு காவலரண்கள் அமைத்து சிறிலங்காவின் படையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றமை என்பது அப்பகுதியில் இன்படுகொலைக்கு உள்ளான பொதுமக்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுள்ளது என்பதனை தெட்டத் தெளிவாக வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.

இப்பகுதி மக்களின் அச்சமும் சந்தேகமும் இதனையே வெளிப்படுத்துகின்றது.

வட்டுவாய்க்கால் பகுதி என்பது போரின் இறுதிக்கட்டத்தில் முக்கிய பகுதியாக அமைந்திருந்தது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலக பணிப்பாளர் புலித்தேவன் உட்பட வெள்ளைக்கொடியோடு வந்த பலரை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்த பகுதியாக இருக்கின்றது.

வட்டுவாய்கால் நீரேரியினைக் கடந்து சிறிலங்கா படையினரிடம் வந்தடைந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் நிலை இதுவரை என்ன என்பது தெரியாக கதையாகவுள்ளது.

குறிப்பாக, இப்பகுதியில் சிறிலங்கா படையினரது நேரடி துப்பாக்கிச் வேட்டுக்களால் 2000க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதான செய்திகளும் உண்டு.

வட்டுவாய்க்காலில் புதைந்திருக்கும் கதைகளுக்கு அப்பால், போர் உக்கிரம் பெற்றிருந்த முள்ளிவாய்க்காலினைச் சுற்றிய பகுதிகள் ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு எனலாம்.

இக்கதைகள் ஒவ்வொன்றும் தமிழினப்படுகொலையின் தடயங்களாக உள்ளன.

சமீபத்தில் தமிழர் தாயக்தின் வட பகுதியில் சிறிலங்கா படையினரது கட்டுப்பாட்டுக்குள் இருந்த விடுவிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட சிறு தொகுதி காணித்துண்டுகளில், சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தியிருந்த வீடுகளில் வதைக்கூடங்களின் எச்சங்கள் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டியது.

குறிப்பாக, காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் வாய்திறக்க மறுத்து வருகின்ற கதைகளுக்கு அப்பால், இவ்வாறான வதைக்கூடங்களின் எச்சங்கள் இன்படுகொலையின் தடயங்களாகவே உள்ளன.

தற்போதைய சிறிலங்காவின் ஆட்சிபீடத்தில் சமாதான தேவதையாக வலம்வரும் சந்திரிகா அம்மையார் அவர்கள், சிறிலங்காவின்அரசுத் தலைவராக இருந்த காலத்தில், ஆயிரக்கணக்கான காணாமல் போன தமிழ் இளைஞர்களின் கதை முதல் இன்று வரை காணாமலும் கடத்தப்பட்டவர்களது நிலையும் என்னவென்பது தெரியவில்லை.

தமிழர் தாயகத்தின் வடபுலத்தில் சிறிலங்கா படையினர் உயர்பாதுகாப்பு வலயங்காளாக 5 ஆயிரத்து 710 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

தற்போது 2009ம் ஆண்டு இனவழிப்பின் போரின் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் தனது இனவழிப்பின் எச்சங்களையும் தடயங்களையும் மூடிமறைக்கும் யுத்தியாக தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் நிரந்தர படைமுகாம்களை, தமிழர் நிலமெங்கும் நிறுவ முனைகின்றது சிறிலங்கா அரசாங்கம்.

உயர்பாதுகாப்பு வலயங்கள் என்றும், தேசிய பாதுகாப்பு பொறிமுறை என்றும் தமிழர் தேசத்தினை சிங்கள மயமாக்குதல், இராணுமயமாக்குதல், பௌத்த மயமாக்குதல் என்ற சிங்கள் அரச கொள்கை நிலைப்பாட்டுக்கு வடிவம் கொடுக்கின்றது.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது தெளிவு

செய்திகளுக்கு அப்பால்......: சுதன்ராஜ்

http://www.seithy.com/breifNews.php?newsID=148715&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.