Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வுக்காகக் கூட்டமைப்பு பாடுபடும்போது குழப்பியடிக்கக் கடும்போக்காளர்கள் முயற்சி!- அமைச்சர் மனோ சாடல்!

Featured Replies

தீர்வுக்காகக் கூட்டமைப்பு பாடுபடும்போது குழப்பியடிக்கக் கடும்போக்காளர்கள் முயற்சி!- அமைச்சர் மனோ சாடல்!
 
தீர்வுக்காகக் கூட்டமைப்பு பாடுபடும்போது குழப்பியடிக்கக் கடும்போக்காளர்கள் முயற்சி!- அமைச்சர் மனோ சாடல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர்களும் அரசியல் தீர்வுக்காக பாரிய சிக்கலான காரியத்தை செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கூட்டமைப்புக்கு எதிராக வடக்கிலும், புலம்பெயர் நாடுகளிலும்கூட எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தீவிரவாதிகளே இவ்வாறு குழப்பம் விளைவிக்கின்றனர் இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். 
 
நாடாளுமன்றத்தை அரசமைப்புச் சபையாக நியமிப்பதற்குரிய பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை பல்லின சமூகமும் வாழும் நாடாகும். எனவே, இன, மத, மொழி ரீதியாக பல்லின தன்மையை அடிப்படையாகக்கொண்டுதான் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தேசபிதாவான டி.எஸ்.சேனாநாயக்க அன்று குறிப்பிட்டார். இதைஎவராலும் மறுக்கவும் முடியாது, நிராகரிக்கவும் முடியாது. 
 
இலங்கையில் பன்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவேண்டும். அந்தவகையில்தான் அரசமைப்பு மறுசீரமைப்பு செயற்பாட்டைப் பார்க்கிறோம். கடந்த காலங்களில் சிங்களத் தலைவர்கள் இதற்குரிய முயற்சிகளை எடுத்தனர். எனினும், ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே அவை கிழித்தெறியப்பட்டன. பண்டாரநாயக்க தனது சிங்களச்சட்டத்தைக் கொண்டுவந்திருந்தாலும், அதிகாரப் பகிர்வு அவசியம் என்று வலியுறுத்தினார். 
 
தீவிர போக்காளர்களின் எதிர்ப்பால் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. அதன்பின்னர் வரலாறு என்னை மன்னிக்கட்டும் என அவர் கூறியிருந்தார். டல்லி - செல்வா ஒப்பந்தத்துக்கும் இந்த கதிதான் ஏற்பட்டது. சந்திரிகா காலத்திலும் தீர்வுப்பொதி கொண்டுவரப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி அதை எரித்தது. நாடாளுமன்றத்திலும் சகல கட்சிகளினதும் ஆலோசனையைப் பெறாமல் தன்னிச்சையாகச் செயற்பட்டதாலேயே எதிர்ப்பு வெளியிடப்பட்டது என அக்கட்சி அதன் பின்னர் விளக்கமளித்தது. 
 
அரசமைப்பு மாற்றத்தின்போது 3 முக்கிய விடயங்கள் கருத்திற்கொள்ளப்படும். தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலமாக தீர்வு. இந்தத் தீர்வு எவ்வாறு அமையவேண்டும் என பேசலாம். அந்தவகையில்தான் பேச்சுகள் இடம்பெறுகின்றன.
 
அதேவேளை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு சிறுபான்மையின கட்சிகள் உடன்பட்டிருக்கவில்லை. அந்த முறைமை தீமையாக இருக்கலாம், சர்வாதிகாரமாக இருக்கலாம். ஆனால், நாட்டில் ஒப்பந்தங்கள் கைவிடப்பட்ட காலப்பகுதிகளில், தமிழருக்கு பேரம்பேசும் பலத்தை வழங்கியது இந்த நிறைவேற்று முறைதான். ஆறுவருடங்களுக்கு ஒருமுறையேனும் சந்தர்ப்பம் கிடைக்கும். அப்போது கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
 
எனினும், தேச நலனைக் கருத்திற்கொண்டு பொதுநலத்துடன் தனிவழிப்பயணத்தைக் கைவிட்டுவிட்டு, பொதுப்பயணத்தில் நாம் இணைந்தோம். மாற்றத்தை கொண்டு வருவதற்குத் தமிழ் பேசும் மக்கள் பங்களிப்பு வழங்கினர். சிங்கள மக்களுக்குள்ள உரிமைகளைப் பறிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதிகாரங்களை, வளங்களை பகிர்ந்துகொண்டு சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழவே விரும்புகிறோம். எனவே, ஒரு மதம், ஒரு மொழி, ஒரு இனத்துக்கு முன்னுரிமை வழங்கும் நிலை மாறவேண்டும். 
 
அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர்களும் பாரிய சிக்கலான காரியத்தை செய்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் வாழும் பிராந்தியத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் பாரிய எதிர்ப்பு அவர்களுக்கு வலுக்கிறது. தீவிரவாதிகளே இவ்வாறு எதிர்ப்பு வெளியிடுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இருக்கும் சக்திகளுக்கு ஊக்கமளிக்கக்கூடாது. பொன்னான சந்தர்ப்பத்தைச் சரிவர பயன்படுத்த வேண்டும் என்றார். 
 
  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு தீர்வென்று எதையோ மனசில வைச்சிட்டு ஆளாளுக்கு பாடுபடுறதா சொல்லிக்கிறேள். அது என்ன தீர்வென்று கேட்டால் சொல்லுறேள் இல்ல. இந்த நிலையில் தான் தமிழ் மக்கள் பேரவை வர வேண்டி வருகுது. அதற்கு காரணம் யார் என்பதை சிந்திக்கும் நிலையில் இப்ப சிங்கள அரசவையில்.. அமைச்சராக மாறிவிட்ட பின் மனோவுக்கு இல்லாமல் போய்விட்டதோ..?!

பதவி சுகம் எல்லாரையும் கொஞ்சம் ஆட்டங் காணத்தான் செய்யுது. :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.