Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் மர்மம்..? மைத்திரியுடன் புகைப்படத்தில் உள்ள இரு தமிழ் சிறார்களை கண்டுபிடிக்க நடவடிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தொடரும் மர்மம்..? மைத்திரியுடன் புகைப்படத்தில் உள்ள இரு தமிழ் சிறார்களை கண்டுபிடிக்க நடவடிக்கை!
[ வியாழக்கிழமை, 14 சனவரி 2016, 08:38.22 PM GMT ] [ பி.பி.சி ]
missing_children02.jpg
காணாமற் போன இரு மாணவர் மைத்ரியுடன் கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பதாக அவர்களின் தாயார் கூறுகிறார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் காணாமல் போயுள்ள இரண்டு பேரை தேடிக்கண்டுபிடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயங்கரவாதப் புலனாய்வு காவல் துறையினர், காணாமல்போனவர்களின் தாய்மார்களும் உறுதியளித்திருப்பதாக அவர்கள் குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணி பெரியமடுவைச் சேர்ந்த காசிப்பிள்ளை ஜெயவதனி, நெடுங்கேணி சின்னபூவரசங்குளத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் சந்திராணி ஆகிய இரண்டு தாய்மார்களையும் கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு காவல்துறையினரின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களின் மகள் மற்றும் மகன் தொடர்பான வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது.

காசிப்பிள்ளை ஜெரோமி, யோகேஸ்வரன் மயூரன் ஆகிய இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளனர்.

பின்னர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் பிரசுரம் ஒன்றில் மைத்திரிபால சிறிசேனவுடன் அந்த இருவருடன் ஏனைய சில மாணவ மாணவியரும் இருந்த புகைப்படம் வெளியாகியிருந்தது.

அத்துடன், அதே போன்ற வீடியோ காட்சியொன்றும் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டிருந்ததைக் கண்டு இந்தத் தாய்மார்கள் இருவரும் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு புகைப்படத்திலும் காணொளியிலும் காணப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பயங்கரவாதப் புலனாய்வு காவல்துறையினர் இந்த தாய்மார்கள் இருவரையும் நேற்று புதனன்று விசாரணை செய்து, அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டதுடன் காணாமல் போயுள்ள அவர்களின் பிள்ளைகள் இருவரையும் கண்டுபிடிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கின்றனர்.

missing_children.jpg

missing_children01.jpg

http://www.tamilwin.com/show-RUmuyBSYSWiryF.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மைத்திரி எண்டாலே மர்மம் தானே

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் பல தமிழ் பிள்ளைகளை தமது வீட்டுவேலைக்கு அடிமைகளாக வைத்துள்ளனர். அப்படி அடிமைகளாக்கப்பட்ட பிள்ளைகளை மற்றவர்களின் பார்வையில் இருந்து திசை திருப்ப தத்தெடுத்துள்ளோம் என்று சொல்லி பாடசாலைகளுக்கும் அனுப்பும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

கொஞ்ச நாள் இயக்கப் பெட்டைகளுக்கு சிங்களச் சிப்பாய்களை மணம்முடித்துக் கொடுத்தார்கள் மகிந்த அன்ட் கோ.

அந்த வேளையில்  இப்படிப் பல. மைத்திரியும் முன்னாள் மகிந்த அன்ட் கோ ஆள் தானே. tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.