Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆஸ்கர் விருதுகளில் இனப் பாகுபாடு சர்ச்சை: வில் ஸ்மித் புறக்கணிப்புக் குரலால் பரபரப்பு

Featured Replies

ஆஸ்கர் விருதுகளில் இனப் பாகுபாடு சர்ச்சை: வில் ஸ்மித் புறக்கணிப்புக் குரலால் பரபரப்பு

 

 
 
73-வது கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் மனைவியுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் | படம்: ஏ.எஃப்.பி.
73-வது கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் மனைவியுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் | படம்: ஏ.எஃப்.பி.

ஆஸ்கர் விருது தெரிவுப் பட்டியலில் அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் அடுத்த மாதம் (பிப்ரவரி) ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என ஹாலிவுட் திரை நட்சத்திரம் வில் ஸ்மித் அறிவித்துள்ளார்.

ஏபிசி என்ற தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் வில் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஏற்கெனவே, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட், இயக்குநர் ஸ்பைக் லீ ஆகியோர் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புறக்கணிப்பு காரணம் என்ன?

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறுபான்மை இனத்தவர் இடம்பெறவில்லை. இது திட்டமிட்டே நடைபெறுகிறது என்பது நடிகர் வில் ஸ்மித்தின் குற்றச்சாட்டு.

விருதுக்காக தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 20 நடிகர்களில் ஒருவர்கூட சிறுபான்மை இனத்தவர் இல்லை என்பதே இந்த புறக்கணிப்புக்கான காரணம் என நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள மூவருமே வெவ்வேறு தளங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

கண்டுகொள்ளப்படாத 'கன்கஸன்':

அண்மையில் வில் ஸ்மித் நடிப்பில் வெளிவந்த 'கன்கஸன்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் எந்த ஒரு பிரிவிலும் இடம் பெறவில்லை. இது திட்டமிட்ட புறக்கணிப்பு எனக் கூறி வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.

மேலும், சிறுபான்மை இனத்தவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அவர் ஃபேஸ்புக்கில் அறிவித்திருந்தார்.

மனைவிக்கு ஆதரவு:

மனைவி ஜடாவை ஆதரித்து தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய வில் ஸ்மித், "என் மனைவி மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர். அவருக்கு ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் தவறு நடப்பதால் அதை புறக்கணிக்க வேண்டும் என்று தோன்றினால் அது சரியான முடிவே. அவரைப் போன்ற பெண்மணியை மனைவியாக அடைந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்" என்றார்.

இன பிரச்சினைக்கு தீர்வு காண்போம்:

அவர் மேலும் கூறும்போது, "என் இனத்தவர் மத்தியில் எங்களுக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளோம். அப்படியிருந்தும் எங்களுக்கு இன்னமும்கூட சில பிரச்சினைகள் எழுகின்றன. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது எங்கள் கடமை. அவ்வாறு தீர்வு காண முடியாவிட்டால் பிரச்சினை உருவாக நாங்களும் ஒரு காரணம் என்றே அர்த்தம்.

என் மனைவியின் வார்த்தைகள் இன பாகுபாடுக்கு எதிரான நடவடிக்கைக்கான அழைப்பு. இது அவருக்கான, எங்கள் குடும்பத்துக்கான குரல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இனத்திற்கான குரல்.

அமெரிக்காவின் பெருமிதமே அதன் பன்முகத்தன்மைதான். அந்த பன்முகத்தன்மை திரைத்துறையிலும் எதிரொலிக்க வேண்டும். ஆனால், ஹாலிவுட்டில் தவறு நடக்கிறது.

ஒவ்வொரு படைப்பாளியிடமும் ஒரு திறமை இருக்கிறது; அழகியல் பொதிந்திருக்கிறது. ஆனால் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் தெரிவுப் பட்டியலைப் பார்த்தால் ஏமாற்றமளிக்கிறது.

இந்த தெரிவுப் பட்டியல் ஆஸ்கர் அகாடமியை பிரதிபலிக்கிறது. ஆஸ்கர் அகாடமியின் நிலைப்பாடு ஒட்டுமொத்த ஹாலிவுட் திரைத்துறையின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. ஹாலிவுட்டின் இந்த சார்பு பார்வை சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் பார்வையாக கருதப்படும்.

பிரிவினைவாதம், இனவாதம், மத பேதம் நோக்கி அமெரிக்க திரைச் சமூகம் மெல்ல மெல்ல சரிந்து கொண்டிருக்கிறது. நான் மிகவும் நேசிக்கும் ஹாலிவுட்டில் இது தொடர நான் விரும்பவில்லை" என்றார் வில் ஸ்மித்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8139790.ece

ஒஸ்கார் விருது வழங்கும் பட்டியலில் கறுப்பினத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள் ளதால் பெப்ரவரி 28 இல் நடக்க இருக்கும் ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வைப் புறக்கணிக்கப்போவதாக பிரபல ஹொலிவூட் நடிகர் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த இவர்: நாங்களெல்லாம் புகழடைந்தாலும் இன்னமும் கறுப்பினமக்களில் ஒருவராகத்தான் பார்க்கப்படுகின்றோம். இந்தமுறை ஒஸ்கார் விருதுக்குத் தெரிவு செய்யப் பட்டவர்கள் பட்டியலில் இனப்பாகுபாடு காட்டப்பட்டதாகவும் தெரிவித்த அவர் இப்படியான சூழலில் ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வதென்பது தர்மசங்கடமாக இருக்குமெனவும் அதனால்தான் “ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வதில்லையென” முடிவை எடுத்ததாகவும் மிகவும் மனவேத னையுடன் பதிலளித்தார்.

வில் ஸ்மித் இரண்டு தடவைகள் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பதோடு மட்டுமல்லாது இந்தமுறை “concussion” என்ற படத்திற்காக கோல்டன் குளோப் விருதினையும் பெற்றுக்கொண்டவராவார். இவரின் கருத்துப்படி இந்த முறை ஒஸ்கார் விருது வழங்கப்படும் அனைவரும் வெள்ளையினத்தவராகையால் இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஆஸ்கார் விருதுகளில் இனவாதமா?

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்கார் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட அனைவருமே வெள்ளையினத்தை சேர்ந்த நடிகர்கள்.

160119035152_oscars_624x351_reuters_nocr
நடிகருக்கான பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சிலர்

அமெரிக்காவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகமோ எதிர்வரும் 2044ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் வெள்ளையின மக்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள் என கணித்துள்ளது.

இருப்பினும், இவர்கள் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் அதிகமாகவே இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் யாருக்கு அதிகம் இழப்பு?

ஆஸ்கார் விருதுகள் என்றழைக்கப்படும் அகாடாமி விருதுகள் தொடங்கி 88 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆண்டுக்கான தேர்வும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது.

சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர்கள் என முக்கியப் பிரிவுகளில் வெள்ளையர்களின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மைக்கேல் பி ஜோர்டான், இத்ரிஸ் எல்பா போன்ற கருப்பின நடிகர்கள் முக்கிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படாதது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.

160119171904_oscars_idris_elba_no_blanco  இத்ரிஸ் எல்பா போன்ற பிரபல நடிகர்கள் போட்டிக்குரிய பட்டியலில் இல்லை

கருப்பின நடிகர்கள் அகாடமி விருதுகளுக்கு புறக்கணிக்கப்படுகிறார்கள் எனும் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

அந்த விருதுகளுக்கு வாக்களிக்கவுள்ளவர்கள் யாரென்பதை மனதில் வைத்தே ஆப்ரிக்க-அமெரிக்க நடிகர் மற்றும் நடிகைகளுக்கு போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அகாடமியிலுள்ள 6,000 உறுப்பினர்களில் 94% வெள்ளையினத்தவர்.

இதன் காரணமாக இந்த ஆண்டு பல பிரபலங்கள் விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இயக்குநர் ஸ்பைக் லீ மற்றும் நடிகை ஜாடா பிண்கெட் ஆகியோர், தமது எதிர்ப்புகளைத் தெரிவிப்பதற்காவே விழாவை புறக்கணிக்கிறோம் என அறிவித்துள்ளனர்.

ஆஸ்கார் விருதுகளில் பன்முகத்தன்மை இல்லை என சமூக ஊடகங்களிலும் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.

கடந்த ஆண்டும் விருதுகளுக்கு “வெள்ளையடிக்கப்பட்டன” என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

160119130721_oscars_creed_624x351_warner  ஆஸ்காரில் பன்முகத்தன்மை உள்ளதா எனக் கேள்விகள்

ஆனால் இந்த விமர்சனங்கள் நியாயமானவையா? கடந்த பல ஆண்டுகளில் ஆஸ்கார் விருதுகள் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கவில்லையா? மொத்த திரையுலகுமே அப்படித்தான் உள்ளதா?

இப்படி பல கேள்விகளும் எழுந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கத் திரையுலகில் இருக்கும் இன மற்றும் பாலியல் பன்முகத்தன்மை குறித்த ஆய்வை தெற்கு காலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.

160119090448_oscar_spike_lee_624x351_get  விருதுக்கான பட்டியலில் புறக்கணிக்கப்பட்டுள்ள ஸ்பைக் லீ

நடிப்பு, இயக்கம், இதர பணிகள் ஆகியவற்றில் எவ்வித பின்புலம் கொண்டவர்கள் எந்த அளவில் இருக்கின்றனர் என அந்த ஆய்வு கூறுகிறது.

கடந்த 2006-2013 ஆண்டுகாலப்பகுதிக்கான அறிக்கையில் இருக்கும் தகவல்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, ஹாலிவுட்டில் இந்த நூற்றாண்டில் எந்த அளவுக்கு இன விகிதாச்சாரம் பிரதிபலிக்கின்றன என்பது தெரியவருகிறது.

அந்த முடிவுகள் ஒருவேளை ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கலாம்.

http://www.bbc.com/tamil/arts_and_culture/2016/02/160226_oscar_racism?ocid=socialflow_facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.