Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண நில வெடிப்பிற்கு காரணம் வெளியானது...??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாண நில வெடிப்பிற்கு காரணம் வெளியானது...??
[ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 05:46.35 AM GMT ]
house-vedippu.jpg
யாழ். புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் நிலத்தில் உண்டான திடீர் வெடிப்புகள் பூமிநடுக்கம் அல்ல எனவும், அவை நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் உண்டாகும் உடைவுகளால் ஏற்படும் தரை இறக்கம் மட்டுமே எனவும், பேராதனை பல்கலைக்கழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வீடொன்றிலும் தோட்ட நிலங்களிலும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

யாழ். குடாநாட்டில் தரையின் கீழ் நீரோட்டங்களும் குகைகளும் காணப்படுகின்றன. இந்த நிலையில் நாம் குழாய் கிணறுகள், ஆழமான கிணறுகள் அமைத்து அவற்றினுடாக நிலத்தடி நீரை அதிகமாக வெளியே உறிஞ்சி இழுப்பதால் நிலத்தின் கீழ் நிலத்தடி நீரோட்ட இடைவெளி அதிகரித்து சுண்ணாம்பு பாறைகள் உடைவதுடன் அதன் காரணமாக மண் பிடிமானம் குறைவடைந்து இவ்வாறு நிலம் கீழ் இறங்குகிறது. இதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுகிறது.

மேலும் இதுபோன்ற பல சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்திலும் இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கட்டுடை இடிகுண்டு 1200ம் ஆண்டு இவ்வாறான செயற்பாடுகளினாலேயே உருவானது.

இதனைவிட மாத்தளை பகுதியிலும் மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான சம்பவம் நடந்துள்ளது.

அத்துடன் டோக்கியோ போன்ற வளர்சியடைந்த நகரங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இந்த சம்பவத்தில் பாரிய சத்தமொன்று ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளமை தொடர்பாக கேட்ட போது, நிலத்தின் கீழ் ஏற்படுகின்ற கற்பாறைகளுடைய வெடிப்பின் காரணமாக இச்சத்தம் ஏற்படும்.

இவ்வாறான அனர்த்தங்களை தவிர்க்க வேண்டுமாயின் இயற்கைக்கு முரணான வகையில் நிலத்தடி நீரை அகத்துறிஞ்சுவதை நிறுத்த வேண்டும்.

இல்லையேல் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாததாய் அமைந்துவிடும், எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmuyBRYSWho7J.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.