Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா மற்றும் முல்லைத்தீவில் தீ விபத்துக்கள் ; வீடு,கடை தீக்கிரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா மற்றும் முல்லைத்தீவில் தீ விபத்துக்கள் ; வீடு,கடை தீக்கிரை

[ Tuesday,26 January 2016, 03:06:36 ] 
vavuniya%20fire%20accident3.jpg

வவுனியா பஸார் வீதியில் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தை வவுனியா பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த தீ விபத்து நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை அவதானித்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீயினால் எரிந்த பொருட்களின் பெறுமதி இதுவரை கணிப்பிடப்படவில்லை. அத்துடன் தீ ஏற்படுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

இதேவேளை முல்லைத்தீவு - அளம்பில் தெற்கு யாழ் வீதியில் உள்ள வீடு ஒன்று நேற்று இரவு முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது .

அளம்பில் சந்தி பகுதியில் தையல் நிலையம் ஒன்றினை நடாத்திவரும் யாழ் வீதி அளம்பில் தெற்கை சேர்ந்த கண்ணையா வியஜராசா என்பவருடைய இலல்மே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நிரந்தர வீட்டுக்கான வேலைகள் நடைபெற்று வருவதன் காரணமாக இவர்கள் தற்க்காலிகமாக வசித்து வந்த வீடே முற்றாக எரிந்துள்ளதுடன், தீயை அணைக்க அயலவர்களும் வீட்டாரும் முயற்சித்த போதிலும் அது பலனளிக்காது போகவே வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக வீட்டினுள் இருந்த ஒரு இலட்சம் ரூபா பணம், 10 பவுண் மேற்பட்ட தங்க நகை, இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுமே தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://ibctamil.com/news/index/17584

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.