Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்ற சொற்பதத்தை நீக்க இலங்கை அரசு நடவடிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்ற சொற்பதத்தை நீக்க இலங்கை அரசு நடவடிக்கை!
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2016, 02:47.28 AM GMT ]
swaminathan_001.jpg

இலங்கை வரலாற்றில் குறுகிய காலத்தில் 'உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள்' என்ற சொற்பதத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பியான கவீந்திரன் கோடீஸ்வரன் எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முள்ளிக்குளம் சமூகம் தொடர்பில் கோடீஸ்வரன் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்குப் பதிலளித்து மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் சுவாமிநாதன்,

"முள்ளிக்குளம் மட்டுமல்லாது குறிப்பாக, வடக்கு, கிழக்கில் வசிப்பவர்கள் இலங்கையில் இடம்பெற்ற இனமோதல் விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் நன்கு அறிவேன். அதனால்தான் இந்த அரசானது மீண்டும் ஒரு யுத்த சூழல் ஏற்படாதவாறு தனது கடமைகளை முன்னெடுத்து வருகின்றது.

இம்மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறினர். ஆகையால், இந்த அரசினது குறுகிய காலத்திற்குள் இலங்கை வரலாற்றில் 'உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள்' என்ற சொற்பதத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றது.

தமது காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக முள்ளிக்குள மக்கள் பிரதிநிதிகளால் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட இவ்விடயம் புதிய அரசால் கையாளப்படுகின்றது.

முள்ளிக்குளத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக அங்கு இடம்பெயர்ந்த 169 குடும்பங்களுக்குப் பூர்வீக கிராமத்தை அண்டிய பகுதிகளில் தலா 80 பேர்ச்சஸ் வீதம் மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது'' - என்றார்.

http://www.tamilwin.com/show-RUmuyBRcSWhs7C.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.