Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்மில் வாழும் வில்லியம் சேக்ஸ்பியர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்மில் வாழும் வில்லியம் சேக்ஸ்பியர் டேவிட் கமரூன் தமிழில்:- நியூசீலந்திலிருந்து கிஷாளன் வரதராஜன்:

 

நம்மில் வாழும் வில்லியம் சேக்ஸ்பியர்  டேவிட் கமரூன் தமிழில்:- நியூசீலந்திலிருந்து கிஷாளன்  வரதராஜன்:

 

உலக நாடக இலக்கிய மேதை வில்லியம் சேக்ஸ்பியரின் 500 ஆவது ஆண்டு நினைவையிட்டு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நியூசீலந்து ஹரல்ட் நாளிதழுக்கு எழுதிய விசேட கட்டுரை இது.
 
நியூசீலந்தில் சேக்ஸ்பியரின் நாடகங்கள் இன்றும் பல்கலைக்கழக மட்டத்திலும் பாடசாலைகளிலும் ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 
டேவிட் கமரூனின் பிரத்தியேகக் கட்டுரையை தமிழில் தருபவர் கிஷாளன் வரதராஜன்.
 
13 வயதில் இலங்கையிலிருந்து   நியூசீலந்து சென்ற கிஷாளனுக்கு  இப்பொழுது  வயது 19. தமது தாய் மொழியை இன்றும் மறவாமல்   அவர் முயற்சித்த  மொழிபெயர்ப்பை அவர் எழுதியபடியே  இங்கு தருகிறோம்.
 
வருங்காலத்தில் புலம்பெயர தமிழ் மொழிபெயர்ப்புக்கள்  எப்படி வரலாம்;  அவற்றின் மொழி நடை இலக்கியம் எப்படி அமையலாம்  என்பதற்கு  இக்கட்டுரை உதாரணமாக அமையலாம்.. ..ஆனால் அவையும் எவ்வளவு காலத்திற்கோ   என்பதையும்   நம்மை இக்கட்டுரை  சிந்திக்க வைக்கிறது.
 
 9k=
 
நம்மில் வாழும் வில்லியம் சேக்ஸ்பியர்  டேவிட் கமரூன் தமிழில்:- நியூசீலந்திலிருந்து கிஷாளன்  வரதராஜன் 

 
2016 ஆம் ஆண்டு William Shakespeare மரணம்  அடைந்த 500 வருடங்களை குறிக்கிறது.
 
இன்றும் அவரால் எழுதப்பட்ட இலக்கிய வாசகங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் உலகமெங்கும் வெளியிடப்பட்டு பல பாடசாலைகளில்  மாணவர்களால் கற்கப்படுகின்றன.
 
அவரது சமகாலத்தவரான Ben Jonson கூறினார் " அவர் ஒரு காலதிற்கானவர் அல்ல அனால் பற் காலதிற்குமானவர்," என.
 
தற்காலத்தில் Shakespeare எமது கல்வி, ஆங்கில மொழி, மற்றும் சமுதாயத்தினுள்ளாக  உயிரோடு உள்ளார்.
 
ஆங்கில மொழி இவரின் ஈடுபாட்டால் மாற்றியமைக்கப்பட்டு நவீன உலக மொழியாக மாறியது.
 
முதன்முதலாக Samuel Johnson  மூலம் தொகுக்கப்பட்ட English Dictionary அனைத்து எழுத்தாளர்களை விடவும் Shakespeareஇன் வாசகங்களிளிருந்துதான் சொற்களை எடுத்தது.
 
 3000 புது சொற்களும் சொற் தொடர்களும் Shakespeare இன் நாடகங்களில் இருந்தன. நாம் பயன்படுத்தும் தற்கால ஆங்கிலத்தில்  உள்ள சொற்கள் 
 
அவரது நாடகங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன.  இதுமட்டுமல்லாமல் இலக்கணத்தையும்  இவர் மாற்றியமைத்தார்.
மொழியில் மட்டுமல்லாமல் இவரது நாடகக் கதைகளும், கதாபாத்திரங்களும் இப்பொழுதும் எம்மை சிரிக்க மற்றும் அழ வைக்கின்றன.
 
உலக சமுதாயங்களிலும் இவரது ஆழப்பதிந்து உள்ளன.
 
சிறையில் இருக்கும்போது Nelson Mandela அவர்கள் Shakespeare  இன் Julius Caesar என்னும் நாடகத்தில் வரும் குறிப்பு ஒன்றை சொன்னார், "கோழைகள் மரணத்தின் முன்னர் பலமுறை மரணிப்பர், வீரர் ஒருமுறை மட்டுமே மரணிப்பர்."
 
Kate Tempest எழுதிய "My Shakespeare" என்னும் கவிதையில் Shakespeare இன் உருவம் முழுமையாகக் காட்டப்பட்டுள்ளது.

Shakespeareஇன் செல்வாக்கு அவரது மரணத்தின் பின்னரும் உலகமெங்கும் பரப்பப்பட்டுள்ளது. Dickens, Goethe, Tchaikovsky, Verdi, Brahms மற்றும் Christie போன்ற பிரபல்ய எழுத்தாளர்கள் இவரது கையாக்கங்களை அடிப்படையாக வைத்து பலவற்றை எழுதியுள்ளனர்.

இன்று Shakespeare இன் பெயரில் பல நிகழ்வுகள் உலகெங்கும் நடைபெறுகின்றன . January 5ஆம் திகதி  "Shakespeare Lives" என்னும் நிகழ்வை England ஆரம்பித்துவைத்தது. இதன் சிறப்பம்சமாக Shakespeare இனால் கல்விக்கு உண்டான செல்வாக்குகள் எடுத்துக்காட்டபட்டன.
 
இந்நிகழ்ச்சி 70க்கும் மேற்பட்ட நாடுகளில் நடாத்தப்படவுள்ளது. இதை நடாத்துவது British Council மற்றும் GREAT British பிராச்சாரம்.
 
இங்கு பலவகையான மேடை நிகழ்வுகளும், கண்காட்சிகளும் நடைபெறவுள்ளன.
 
Royal Shakespeare Company சீனாவிற்கு செல்லவுள்ளது. Shakespeare's Globe உலகெங்கும் நிகழ்வுகள் நடாத்தவுள்ளது. Play Your Part என்னும் புது சமூக ஊடக நிகழ்ச்சி அடுத்த தலைமுறைகளுக்கு தமது திறமைகளை டிஜிட்டல் விதத்தில்  எடுத்துக் காடுவதற்கு வாய்ப்பு வழங்க உள்ளது. இது Voluntary Services Overseas என்னும் British தொண்டு வழங்கும் அமைப்புடன் சேர்ந்து உலகெங்கும் உள்ள சிறார் படிப்பறிவின்மையைக் காட்டி   உலகுக்கு விழிப்பூட்ட  முயல உள்ளது.
 
இதன் மூலம் உலகெங்கும் கல்வி வாய்ப்புக்களைக்  கூட்ட முடியும் என நம்பப்படுகிறது.
 
மொழியைத் தவிர எம் வரலாற்றயும், சமுதாயத்தையும் உயிருக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாமல் எமது கல்வியிலும் இப்பொழுதும் பங்குபற்றும் Shakespeare க்கு ஓர் அளவில்லா சக்தி உள்ளது.
 
மிகவும் பிரபலமான காதல் கதை முதல் உலகப் புகழ் பெற்ற சோகக் கதை வரை; மிகவும் கற்பனை வாய்ந்தது முதல் மிகவும் சிரிப்புமிக்கது வரை; மிகவும் நினைவுமிக்க பேச்சு முதல் பழம்பெரும் கதாபாத்திரங்கள் வரை, Shakespeare இடம் ஒருவரிடமும் இல்லா திறமையும் கற்பனையும் வாய்ந்த மானிடனை காண்கிறோம்.
 
இந்த நல்வருடத்தில் எம்முடன் சேர்ந்து இந்த எழுத்தாளரின் வாழ்வையும் அணியா மரபையும் கொண்டாட அழைக்கின்றோம்.

David Cameron

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128373/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.