கனடா- ஒன்ராறியோவில் இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு வரிசெலுத்துபவர்கள் வருடந்தோறும் பல மில்லியன் டொலர்களை செலவிடுகின்றனர் என இரண்டு சுயாதீன செய்தி விசாரனையில் இருந்து தெரிய வந்துள்ளது.
தவறான நடத்தைகளினால் குறைந்தது 50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இன்னமும் ஊதியங்களை பெற்று கொண்டிருக்கின்றனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடமொன்றிற்கு சராசரி சம்பளம் டொலர்கள் 90,000 அடிப்படையில் டொலர்கள் 4.5மில்லியன் டொலர்கள் வரிசெலுத்துபவர்களின் டொலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களிற்கு வழங்கப்படுகின்றது.
ஒன்ராறியோவில் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளிற்கு அவர்கள் சஸ்பென்சனில் இருக்கும் போது முழு சம்பளமும் பெற முடியும் என்ற சட்டம் உள்ளதெனவும் சிபிசி அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் National Post நடாத்திய புலன்விசாரனையில் கிடைக்கப்பெற்ற எண்ணிக்கை சற்று மோசமாக உள்ளது.
2015 கோடை காலத்தில் ஒரு மூன்று-வார கால பகுதியில் 80 பொலிஸ் அதிகாரிகள் வரையில் ஒன்ராறியோவில் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர் எனவும் இவர்களின் சராசரி வருடாந்த சம்பளம் டொலர்கள் 101,000ற்கும் மேற்பட்டதெனவும் தெரியவந்துள்ளது. இதில் ஒன்ராறியோ வரிசெலுத்துபவர்கள் அதிகாரிகளின் சம்பளத்தில் டொலர்கள்21,946 அல்லது வருடமொன்றிற்கு டொலர்கள் 8மில்லியன் என கூறப்பட்டுள்ளது.
ரொறொன்ரோவில் மட்டும் தற்சமயம் 14 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சராசரி வருடாந்த சம்பளம் டொலர்கள் 100,000 அதாவது வரி செலுத்துபவர்கள் தங்கள் ஊதியங்களில் டொலர்கள் 1.4மில்லியன்களை வழங்குகின்றனர்.
Post ன் முன்னிலை படுத்தப்பட்ட வாட்டர்லூ பொலிஸ் அதிகாரியின் கதையில் கிரெய்க் மார்க்கம் என்பவர் நம்பிக்கை துரோக குற்றச்சாட்டின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டவர். இறுதியில் குற்றத்தையும் ஒப்புக்கொண்டவர். இவர் மூன்று வருடங்களிற்கு டொலர்கள் 350,000ஐ சம்பளமாக பெற்றார்.
இவர் ஒரு பரவலாக-விளம்பரப்படுத்தப்பட்ட மின் அஞ்சல் ஒன்றை வாட்டர்லூ பொலிசிற்கு எழுதியுள்ளார். வீட்டில் இருந்து பாடநெறிகளை எடுத்தவாறு பயணம் மற்றும் நிறைய ஹொல்வ் விளையாட கிடைத்த “ஒரு நல்ல பரிசு” என அஞ்சலில் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கொலை முயற்சி குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஜேம்ஸ் வொசிலியோ டிவிசன் 55 ஐ சேர்ந்த நான்கு அதிகாரிகள் குறித்த அழுத்தம் ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் மீது அதிகரித்துள்ளது.
மற்றய மாகாணங்கள் போன்று ஒன்ராறியோவிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என கனடிய வரிசெலுத்துபவர்கள் கூட்டமைப்பின் ஒன்ராறியோ இயக்குநர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.