Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டு மூளை ஆம்லெட்

Featured Replies

 
brain-omelette-mgyjjetq8uowzluqbron6fw2l

ஆட்டு மூளை ஆம்லெட் !

தேவையான பொருட்கள்:

ஆட்டு மூளை – ஒன்று
கறி மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
முட்டை – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
உப்பு – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று.

 

 

 

 

 

 

 

 

 

ஆட்டு மூளையை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மூளையை போட்டு அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி, நறுக்கிய வெங்காயம், கறி மசாலா, மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது, உப்பு மற்றும் பச்சை மிளகாய் போட்டு ஒன்றாக நன்கு பிசைந்து விட்டு கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் கலவையை ஒரு கரண்டி எடுத்து அடையாக ஊற்றவும்.பிறகு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு 2 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும்.

சுவையான எளிதில் செய்யக்கூடிய மூளை ஆம்லெட் தயார்.

http://justnowindia.com/mutton-brain-omlette/

Edited by மீனா

  • கருத்துக்கள உறவுகள்

மூளைக் கறி, மற்றும் குறுமா போல்தான் முன்பு செய்யிறது. நீங்கள் ஆம்லட் போட்டிருக்கிறீங்கள், இதுவும் நன்றாகத்தான் இருக்கும்....!

18 hours ago, மீனா said:

ஆட்டு மூளை ஆம்லெட் !

முட்டையும் போடுவது வழமை. ஆனால் அது இரத்தவறை மாதிரித்தான் இருக்கும், ஒம்லெட்டாக இருப்பதில்லை. 

எங்கோ முன்பு வாசித்து சிரித்தது தேடி இணைக்கின்றேன்.

ஆட்டுமூளை வறுவலும், ஆஸ்பத்திரி டோக்கனும்.

>> TUESDAY, FEBRUARY 9, 2010

 

goat_3.jpg
 

சமீபத்தில் ஒரு சகோதரியின் வெப்தளத்தில் "ஆட்டு மூளை வறுவல்" செய்யும் முறைபற்றி கொஞசம் தலைவாரியாக எழுதியிருந்தார். [இதற்க்கு விலாவாரியாக என்று எழுதுவது சரியில்லை என நினைக்கிறேன்...விலாவாரி "கிட்னி வறுவல்' சார்ந்தது.]

இதற்க்கு சிலபேர் பின்னூட்டமாக 'நல்லாஇருந்துச்சி:" என்ற ரேஞ்சில் எழுதியிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்டது சமயல் குறிப்பா? அல்லது வறுவலா எனத்தெரியவில்லை. 

எனக்கு உள்ளுர பயம் தான்.நாமும் வெள்ளைக்காரன் மாதிரி. "Good!!! taste nice!!'என்று எழுத மனசு வராமல் நானும் எழுதினென் 

இப்படி:
இதை சாப்பிட்டால் [கொலெஸ்ட்ரால் அதிகம்
உள்ளவர்கள்] ' ஹிந்துவாக இருந்தால்
"சங்கு" நிச்சயம். முஸ்லீமாக
இருந்தால் 'தலைமாட்டில்" ஊது பத்தி நிச்ச்யம்.

ஆனால் என் நண்பனிடமிருந்து [Sabeer Ahmad-Dubai] வந்த இ-மெயில் இப்படி இருந்தது;

ஏன்டா, நீ ஜோக்கடிக்கறியா பயம் காட்டுறியா?

ஏன் கேட்கிறேன்னா, நம்ம பாய்கள் பலபேர் ரசித்து ருசித்து சாப்பிடும் அயிட்டம்டா இது. நான் துபாயில் இருக்கும்போது பெரும்பாலும் உணவகங்களில் இரவு உணவுக்காக காத்திருக்கும்போது காதில் விழுந்த அயிட்டஙளின் பெயர்களில் சிலவற்றையாவது உன் கைல சொல்லலேன்னா நான் சாப்பிடறது செரிக்காது . 

மூளை fry , குடல் வறுவல், பல்குத்தி fry (நாம செவரொட்டிம்போம்), கொத்துப் பரோட்டா (அதுவும் beef கொத்து, மட்டன் கொத்து, chicken கொத்துன்னாதான் கொஞ்சம் மரியாதையா பாப்பான். சாதா கொத்துன்னா கழுவாத டம்ள்ரில்தான் தண்ணீரே தறுவான்.)

ஆட்டுக்கால் பாயா, ஈரல் fry, இப்டி சாப்ட்றாங்னா. அதுவும் உங்கூரு palm oilலதான் செய்வாய்ஙக(கட்ட தோசையும் சட்னியும் ஆர்டர் பண்ணிட்டு wait பன்ற என்னை ஏதோ செத்த எலிய பார்க்ற மாதிரிதான் பார்ப்பாய்ங்னா.) .

'தலைமாட்டில்" ஊது பத்தி நிச்ச்யம் பயம் காட்றியப்பா.

சமீபத்தில் ஒரு டயட்டிசியனிடம் [National Heart Institute-Kuala Lumpur] பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னது' 

இறைச்சி தாராளாமாக் சாப்பிடலாம், சாப்பிடும்போது இறைச்சி மட்டும் 5, 6 துண்டு அதாவது ஒரு துண்டு ஒரு தீப்பெட்டி அளவு என்றார், மனதுக்குள் சிரித்துக்கொண்டேன் எப்படி சொல்வது இந்த் உண்மையை இங்கு ஒவ்வோருவரும் ஒரு விருந்து என்று வந்து விட்டால் ஒரு தீப்பெட்டி தொழிற்ச்சாலையே சாப்பிடுகிறார்கள் என்று.

எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் சொன்னது: [ Dr.Bala Subramaniam.Cardiologist osler diagnostic centre;Chennai]
" பொதுவா மட்டன் சாப்பிடலாம்'
சாப்பிடும்போது, "பார்ட்ஸ்" தவிர்த்து விடுங்கள்.

" பார்ட்ஸ்னா என்ன டாக்டர்?'

'ஆர்கன்...கிட்னி/ஈரல்....

"பார்ட்ஸ் சாப்பிட்டா என்னா ஆகும் டாக்டர்?'

'உங்க பார்ட்ஸ் கெட்டுடும்'

இதைவிட தெளிவான பதில் யாரும் சொல்லமுடியாது

பொதுவாக சுவர்ரொட்டி , ஈரல் இவைகளுக்கு என்ன விதமான பட்டை , கிராம்பு, நெய் சேர்க்கலாம் என யோசிக்கும் முன் அதன் செயல்பாடுகள் [உடலில்] என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
.
.மற்றும் அன்றைக்கு [Physiology ]"உடல் உறுப்புகள்&பயன்பாடுகள்" க்ளாஸ் நடக்கும் போது சந்தனக்கூடு பார்த்துட்டு தூங்கிட்டேனப்பா' னு புலம்பவும் முடியாது
.
எனக்கு தெரிந்து ஆட்டுமூளையில் என்ன இருக்கிறது என ஒரு பேத்தாலஜி [Pathology] ரிப்போர்ட் பார்த்தால் 'இருப்பது எல்லாம் கொலஸ்ட்ரால்...கொலஸ்ட்ராலை த்விர ஏதுமில்லை' என்று விசாரனைக்கூண்டில் சொல்வது போல் உண்மை சொல்லும்.பேத்தாலஜி [Pathology] ரிப்போர்ட் எந்த சூழ்நிலையிலும் பேத்தாது. 

பொதுவாக கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவு செரிக்க
3 மணி நேரத்துக்கும் மேல் ஆகலாம். [சைவ]சாதாரண உணவு செரிக்க 2 மணி நேரம் ஆகலாம். 

"நான் தான் இதுவெல்லாம் சாப்பிடுவேணெ எனக்கு ஒன்னும் செய்யாதே!" என அடம்பிடித்தால் தனியாக வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ளவும். 

வயதான காலத்தில் தஞ்சாவூருக்கும் , பட்டுக்கோட்டைக்கும் ஆஸ்பத்திரி டோக்கன் வாங்க வரிசையில் நிற்கவேண்டிவரும்.

கையில் ஆளுக்கு ஆள் ஒரு பைலுடன் இன்டெர்வியுக்கு போகிற மாதிரி அலைவது காலக்கொடுமை.

உங்களுக்கு வயது 40ஐ தான்டிவிட்டதா?.. உங்கள் மனைவி ஆட்டுமூளை / பாயா என சமைத்து வைத்து விட்டு ' நீங்களே சாப்பிட்டுறுங்க..நான் காலையில் உள்ள இட்லி மிஞ்சிடுச்சு..அதை சாப்பிடுகிறேன்' என்று சொல்கிறார்களா..?

உங்கள் கல்யாணப்பத்திரிக்கையில் உங்கள் மனைவியின் பெயருக்கு முன்னால் 'தீன் குலச்செல்வி /திரு நிறைச்செல்வி என்று இருக்கும் அதை 'தீத்துக்கட்டும் செல்வி ' என்று திருத்தி வாசிக்கவும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.