Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிப்புச் சம்பவம் பாரிய துளைக்கூடாக பயணி வீழ்ந்து உயிரிழப்பு!

Featured Replies

பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிப்புச் சம்பவம் பாரிய துளைக்கூடாக பயணி வீழ்ந்து உயிரிழப்பு!
2016-02-04 11:08:26

பறந்து கொண்­டி­ருந்த சோமா­லிய பய­ணிகள் விமா­ன­மொன்றில் ஏற்­பட்ட வெடிப்­பினால் அவ்­வி­மா­னத்தில் பாரிய துளை­யொன்று ஏற்­பட்­டுள்­ளது.

 

14636CaNmlK3VAAEynZe.jpg

 

அத்­ து­ளைக்கு ஊடாக பய­ணி­யொ­ரு­வரும் கீழே வீழ்ந்து இறந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

 

டால்லோ எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­தினால் இயக்­கப்­பட்ட பிளைட் டி3159 எனும் மேற்­படி விமானம், நேற்­று­முன்­தினம் இரவு சோமா­லிய தலை­நகர் மொகா­டி­ஷு வி­லி­ருந்து டிஜி­பௌட்டி நாட்டின் தலை­நகர் டிஜி­பௌட்டி சிற்­றியை நோக்கிப் பறந்து­ கொண்­டி­ருந்­தது.

 

எயார்பஸ் ஏ 321 ரகத்தைச் சேர்ந்த இவ்­ வி­மா­னத்தில் 74 பயணிகள் இருந்­தனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

14641_14636CaNmlLDUYAAKNBC.jpg

 

அப்­போது திடீ­ரென வெடிப்புச் சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­ற­துடன் தீயும் பர­வி­யது. இதனால், விமா­னத்தின் பாரிய துளை ஏற்­பட்­டது. இச்­சம்­ப­வதில் இரு பய­ணி­க­ளுக்கு காயங்கள் ஏற்­பட்­டன.  

 

அத்­துடன் விமா­னத்தில் ஏற்­பட்ட துளைக்கு ஊடாக பயணி ஒருவர் வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்ளார் என சோமா­லிய அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். அந்­ந­பரின் சட­லத்தை கிரா­ம­வா­சிகள் மீட்­டுள்­ளனர். 

 

வெடிப்புச் சம்­பவம் இடம்­பெற்­ற­போது அவ்­வி­மானம் 12,000 முதல் 14,000 அடி வரை­யா­ன­ உ­ய­ரத்தில் பறந்­து­கொண்­டி­ருந்­தது.

 

14641_14636CaNmlLLUcAAko_N.jpg

 

பின்னர் அவ்­வி­மானம் அவ­ச­ர­மாக மீண்டும் மொகா­டிஷு நக­ருக்கு  திருப்­பப்­பட்டு பாது­காப்­பாக தரை­யி­றக்­கப்­பட்­டது.

 

இது ஒரு குண்­டு­வெ­டிப்­பாக இருக்­கலாம் என தான் கரு­து­வ­தாக மேற்­படி விமா­னத்தின் விமானி தெரி­வித்­துள்ளார். 

 

சோமா­லிய பிர­தமர் ஒமர் அப்­திர்­ரஷீட் அலி ஷார்­மார்க்­கேயின் பேச்­சாளர் ஒருவர் இது தொடர்­பாக கூறு­கையில், எத்­த­கைய வெடிப்புச் சம்­பவம் என்­பது குறித்து முரண்­பா­டான பல தக­வல்கள் இது தொடர்­பாக விசா­ரணை நடை­பெ­று­கி­றது  எனக் கூறியுள்ளார்.  

 

இவ்வெடிப்புக்கான காரணத்தை உடனடியாக கூற முடியவில்லை என டால்லோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹம்மத் இப்ராஹிம் யாசின் தெரிவித்துள்ளார். 

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=14641#sthash.PCIhAOcw.dpuf
  • தொடங்கியவர்

நடுவானில் விமானத்தில் ஓட்டை: 74 பயணிகள் தப்பிய அதிசயம்! (வீடியோ)

 

11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஜன்னல் உடைந்தது. இதனால், 74 பயணிகளுடன் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் விமானி.

Plane%20damage.jpg

சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் இருந்து,  டிஜிபோட்டிக்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானத்தில் 74 பயணிகள் மட்டுமே இருந்தால் அவர்கள் விரும்பிய இடத்தில் அமர்ந்துள்ளனர்.

இந்நிலையில் விமானம் புறப்பட்ட 20 நிமிடத்தில்,  சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் வலது பக்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது. பின்னர் விமானத்தில் தீ பற்றியதால் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூக்குரலிட்டுள்ளனர்.

உடனடியாக விமானி மொகடிஷூக்கு விமானத்தை திருப்பி அவசரமாக தரையிறக்கினார். பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானியில் இந்த செயலால் பெரும் விபத்தும் உயிர் பலியும் தடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதல் காரணமாகவே விமானத்தில் ஓட்டை ஏற்பட்டதாக விமானி தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

http://www.vikatan.com/news/world/58558-somalian-daallo-airline-investigators-say-blast-wa.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.