Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதிகளுக்கு சீற்றத்தை கொடுத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் டில்லி பயணம்.

Featured Replies

இனவாதிகளுக்கு சீற்றத்தை கொடுத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் டில்லி பயணம்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழுவினருக்குமிடையே கடந்த வியாழன், வெள்ளி இரு தினங்களும் இடம்பெற்ற விசேட சந்திப்பு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டியுள்ள அதேநேரம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியிலும் கடும்போக்கையுடைய சிங்கள இனவாத சக்திகள் மத்தியில் பெரும் கிலேசத்தையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் இன்று எதிர்கொண்டு வரும் மிகமோசமான நெருக்கடி நிலைமைகள் பாரிய நடவடிக்கைகளினால் எதிர்கொள்ளப்படும் மனித அவலங்கள், சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் என்பன தொடர்பாக இந்தியாவின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொண்டு வருவதற்கு மேற்கொண்டு வந்த முயற்சிகள் பின்னடைவொன்றை எதிர்கொண்டிருந்த நிலையிலேயே இந்தத் திடீர் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளமையானது எதிர்காலத்தில் பல்வேறு நம்பிக்கை தரும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் விசேட அழைப்பின் பேரில் கடந்த புதன்கிழமை சென்னைக்குப் புறப்பட்டுச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இந்த விசேட சந்திப்புகளில் கலந்துகொண்டு இலங்கைத் தமிழர்களின் இன்றைய துயரநிலை குறித்து தெளிவாக எடுத்துக்கூறியுள்ளனர்.

சென்னையிலுள்ள தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் அவரது புதல்வரும் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஸ்ராலின், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து ஈழத் தமிழர்களின் இன்றைய அவலநிலை குறித்து சுமார் ஒருமணிநேரம் கலந்துரையாடியுள்ளனர்.

ஈழத் தமிழர்களின் இன்றைய துயரநிலை குறித்து தான் மிகுந்த வேதனையடைவதாகவும் அவர்களின் துயர் களையப்பட்டு நிரந்தர விடிவுக்காக தமிழக மக்களும் தானும் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் விசேட ஏற்பாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மறுநாள் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

புதுடில்லியிலுள்ள இந்தியப் பிரதமரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில் வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புத்துறை ஆலோசகர் கே.ஆர்.நாராயணன் மற்றும் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் விசேட பிரதிநிதியாக சுப.வீரபாண்டியனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அப்பால் சர்வதேச சமூகத்தை ஏமாற்றிக் கொண்டு இனஅழித்தொழிப்பு மற்றும் பாரியதோர் இராணுவ ஆக்கிரமிப்புக்கான நிகழ்ச்சி நிரல்களையே தயாரித்து வருவதாகவும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பங்களிப்பின்றி இலங்கையில் சமாதான சூழலை தோற்றுவிக்க முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வடக்கு - கிழக்கு இணைப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்களின் பங்காளிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)யினால் இலங்கையின் சட்டத்துறையைப் பயன்படுத்தி இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் மக்களிடமிருந்த குறைந்த பட்ச நம்பிக்கையும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் இலங்கையின் ஆட்சியாளர்கள் உதாசீனம் செய்துள்ளனர்.

இதெல்லாவற்றுக்குமப்பால் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலுள்ள இன்றைய நிலையில் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் அரச படையினரின் தாக்குதல் சம்பவங்களும் மிக மோசமாக அதிகரித்துள்ளன.

ஆட்கடத்தல்கள், கைது, காணாமல் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தினமும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நடவடிக்கைகளால் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உள்நாட்டிலும் தமிழகத்திலும் இடம்பெயர்ந்து அகதிகளாகவும் தங்கியுள்ளனர்.

இவ்வருடம் ஆரம்பம் முதல் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமிழகத்திற்கு படகுகள் மூலம் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணவு உட்பட எந்தவொரு அத்தியாவசியப் பொருட்களுமின்றி மனித அவலமொன்றை எதிர்கொண்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டுக்கான பிரதான பாதையான ஏ-9 வீதி கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு யாழ்.குடாநாட்டிலுள்ள சுமார் 6 இலட்சம் தமிழ் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ளனர்.

இவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக தங்கியுள்ள தமிழ் மக்கள் மீது எறிகணைத் தாக்குதல், விமானக் குண்டு வீச்சு என்பவற்றை அரசபடையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதால் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

தனது சொந்த நாட்டு மக்கள் மீது பொருளாதாரத் தடை, போக்குவரத்துத் தடை என்பவற்றைக் கடுமையாக மேற்கொள்ளும் இலங்கை அரச படையினர் வேறு ஒரு நாட்டுடன் போர் புரிவதைப் போன்று செயற்படுகின்றனர்.

தலைநகர் கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பல கோடிக்கணக்கான ரூபா கப்பமாக பெறப்பட்டுள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்குள் நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள் தமிழர்களின் பொருளாதார வளங்களை திட்டமிட்டு சூறையாடும் ஒரு நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.

கடந்த 50 வருட காலத்திற்கும் மேலாக தென்னிலங்கையின் ஆட்சி பீடங்களில் அமர்ந்திருந்த சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன. அதன் உச்ச நிலையையே இன்றைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக இன்றைய ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கடும் போக்குடைய அனைத்து நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தி தமிழர்கள் தமது தாயகப் பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கான நிலைமையை தோற்றுவிக்க இந்தியா தனது முழுமையான செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டும்.

இந்திய அரசின் எந்தவொரு பங்களிப்புமின்றி இலங்கையில் அமைதி முயற்சியை ஒரு போதும் உருவாக்க முடியாது என்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெளிவாகவே சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகரான சுலோக் பிரசாத் பதவியேற்ற அன்றைய தினம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் நடைபெற்ற ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான இந்தச் சந்திப்பு புதியதோர் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னை பெரம்புத்தூரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தமைக்குப் பின்னர் மிக நீண்டகால இடைவெளியில் இந்தியாவின் அதிஉயர் மட்டத்திற்கும் இலங்கைத் தமிழர் பிரதிநிதிகளுக்குமிடையே இடம்பெற்ற பிரதான சந்திப்பு இதுவென்பதும் கவனிக்கத்தக்கது.

ஆரம்ப காலத்தில் அதாவது 1983 களில் ஈழத்தமிழர் ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு தமது நாட்டில் புகலிடம் வழங்கி ஆயுதம், நிதி போன்றவற்றை வழங்கி அரவணைத்த திம்புப்பேச்சுவார்த்தை இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பவற்றுக்கு வழிவகுத்த அயல்நாடான இந்தியா இன்றைய நெருக்கடியான சூழலில் இலங்கைத் தமிழர்களுக்கு கைகொடுக்க முன்வரவேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

www.thinakkural.com

  • கருத்துக்கள உறவுகள்

டில்லி வழியாக தெரியும் வெளிச்சங்களும் கொழும்பின் இக்கட்டு நிலையும்

- பீஷ்மர்-

தீர்வை நோக்கிய பயணத்தில் தவிர்க்க முடியாதபடி ஏற்படும் பன்முக சிக்கற்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு

* பசில் ராஜபக்ஷவின் யாழ்ப்பாண விஜயமும் சில முடிவுகளும்.

** தமிழ்த்தேசிய கூட்டணி- மன்மோகன் சந்திப்பு; அலைகளும் சுழிகளும்

*** மலையகத்தின் எதிர்ப்புகளும் முடக்கல்களும்

இலங்கையில் தமிழர் நிலைப்பட்ட பிரச்சினை வட்டத்தினுள் வட, கிழக்கை மையமாகக் கொண்டு இரண்டு முக்கிய முன்னெடுப்புக்கள் சென்ற வாரம் நிகழ்ந்துள்ளன. ஒன்று, ஜனாதிபதி ராஜபக்ஷவின் நிர்வாகத் துறைப் பொறுப்பாளராக இன்று மேற்கிளம்பியுள்ள பசில் ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்துக்கு 61 பேர் கொண்ட ஒரு குழுவுடன் (பத்திரிகை புகைப்படக்காரர்கள் உட்பட) சென்றமை. சில தீர்மானங்களுக்கு வந்தமை. இரண்டாவது டில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் குழுவொன்று கலைஞர் கருணாநிதியின் வழிநடத்தலின் பேரில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தமை. இலங்கை மலையகத்தில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றம்பற்றி இறுதியில் நோக்குவோம்.

அரசியல் நீர்மட்டத்துக்கு மேலே இவை தெரிய குறிப்பாக கொழும்பில் நீர் மட்டத்துக்கு கீழ் வடக்கு, கிழக்குக்கு எதுவுமே கொடுக்கக் கூடாது என்ற நிலைப்பாடு வலுவடைந்துள்ளமையை காணலாம்.

நிபுணர்கள் குழுவின் 11 பேர் சமர்ப்பித்த ஆலோசனைகள் வடக்கு - கிழக்கு சம்பந்தமாக சில புதிய சோடனைகளை குறிப்பிட்டுள்ளது. அவைபற்றி ஆராய இதுவல்ல இடம். ஆனால், அந்த ஆலோசனை முழு நிபுணர் குழுவினதும் அல்ல அதற்கு மேல் அது சர்வகட்சியின் செயற்குழுவாலும் பின்னர் சர்வகட்சிகளாலும் ஆராயப்பட்டதன் பின்னரே ஜனாதிபதிக்கு செல்லும். அந்த இரண்டு மட்டங்களிலும் இந்த ஆலோசனைகளை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த மட்டங்களிலே விவாதிப்பதற்குகூட வரக்கூடாது என்பதன் அரசியலை புரிந்துகொள்வது சிரமமாகவுள்ளது.

இத்தகைய ஒரு கெடுபிடிச் சூழலிலேதான் திடீரென பசில் ராஜபக்ஷவின் குழு யாழ்ப்பாணம் சென்றது மாத்திரமல்லாமல், சில திடீர் முடிவுகளை எடுத்துள்ளதென்பதும் தெரியவருகின்றது. ஆனால், பசில் ராஜபக்ஷ குழுவும், ஏ-9 பாதை மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே செல்கின்றது. எனினும், யாழ்ப்பாணத்திலே கஷ்டங்கள் உள்ளன என்பதை இந்த விஜயம் மூலம் அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளதென்றே கூறவேண்டும்.

ஏ-9 பாதை தொடர்ந்து மூடப்பட்டிருப்பதற்கான தேவை பற்றி பேசப்படவே இல்லை. பசில் ராஜபக்ஷ குழு, படையினர் தீர்மானங்களை எவ்வாறு ஏற்றிருக்கின்றது அல்லது எவ்வாறு ஏற்கவில்லை என்று தெரியவில்லை.

இந்த நகர்வுகள் நெற்றிப் புருவங்களை ஆச்சரியத்துடன் உயர்த்த சென்னை வழியாக டில்லியில் நேற்றைக்கு முன்தினம் நடைபெற்ற சந்திப்பு தெரியவந்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவொன்று கலைஞர் கருணாநிதியின் சிபார்சின் பேரில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. பேராசிரியர் சு.ப.வீரபாண்டியனும் உடன் சென்றுள்ளார்.

அச் சந்திப்புப் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள திரு. சம்பந்தன், தாம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு நிலைமைகளை விளக்கியதாகவும், வட,கிழக்கு இணைவு உடைவுநிலையில் இருப்பதை எடுத்துக் கூறியதாகவும் சொல்லியுள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைவினை தாங்கள் முற்றுமுழுதாக ஆதரிப்பதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்லாமல், கலைஞரின் வேண்டுகோளுக்கிணங்கவே சந்திக்க இணங்கிக் கொண்டமையையும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழ்க் கூட்டமைப்பின் இம் முயற்சி பாராட்டப்பட வேண்டியது.

உண்மையில் கடந்த சில நாட்களாக கலைஞர் காட்டும் ஆர்வம் சாதாரண இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிறைந்த ஊக்கத்தை தருகின்றது. ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிலையில் எல்லாம் சுமுகமாக `ஓடவேண்டியது' மிக முக்கியமாகும்.

தேசிய கூட்டமைப்பின் இளம் எம்.பி.க்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளமை தெரிந்ததே. எனவே அவர்கள் உடனடியாக வந்துவிட முடியாதென்பதும் உண்மையே. சென்ற எம்.பி.க்கள் ஏறத்தாழ சிரேஷ்ட நிலையினர் என்பதும் உண்மையே. அது மாத்திரம் அல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெறும் கட்சிகள் ஒவ்வொன்றினதும் பிரதிநிதிகள் இருந்துள்ளனர் என்பதும் உண்மையே. திரு சம்பந்தன் இத்தகைய சந்திப்புக்களில் மிக்க திறனுடன் நடந்துகொள்பவர் என்பதும் உண்மையே. கடந்த வாரம் தனது மீள் கன்னிப் பேச்சினால் பாராளுமன்றத்தின் கவனத்தையும், தமிழ் மக்களின் ஆர்வத்தையும் ஈர்த்துள்ள புதிய எம்.பி.சிறிகாந்தா அவர்களும் இத்தகைய சந்தர்ப்பங்களில் நன்கு பயன்படுத்தப்பட வேண்டியவர்.

என்ன காரணங்களுக்காக அவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்பது பற்றி சாதாரண ஈடுபாட்டாளர்களாகிய எமக்குத் தெரியாது. உண்மையில் ஏதாவதொரு தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே அவர் செல்லாதிருந்திருக்கலாம். ஆனால், பாராளுமன்ற குழுத் தலைவர் என்கிற முறையில் சம்பந்தனுக்கு பாரிய ஒரு பொறுப்புள்ளது. அதாவது அந்த 22 எம்.பி.க்களினதம் திறமைகளை சரிவரப் பயன்படுத்துவதாகும்.

அதற்கும் மேல் மிக மிக அவசியமானது கூட்டவை அணியினர் ஒன்றாக இயங்குகின்றனர் என்ற மனத்திருப்தி மக்களிடையே ஏற்படுத்தப்படுவதாகும். இந்த விடயத்தில் முதுநிலை அங்கத்தவர்களான சம்பந்தன் அவர்களுக்கும், மாவை சேனாதிராஜா அவர்களுக்கும் நிறைய பொறுப்புண்டு.

டில்லிக்கு சென்ற குழுவின் சு.ப.வீரபாண்டியன் அவர்கள் இடம்பெற்றிருப்பது முக்கியமானதொரு அரசியல் நிகழ்ச்சியாகும். சந்திப்புப் பற்றி வந்த புகைப்படங்களை பார்க்கும்போது சு.ப.வீ .அவர்கள் முக்கியப்பட்டு நிற்பதையும் காணலாம்.

திராவிட இயக்க நிலையில் பேராசிரியர் சு.ப.வீ இன்று மிக முக்கியமானவர். அவருடைய அனுசரணை வலுவுடையதாகும். ஆனால், அதேவேளையில் இலங்கைத் தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்துக்கான தமிழக ஆதரவு ஒரு குறிப்பிட்ட பக்கச்சார்பு இல்லாமலிருக்க வேண்டியது அவசியமாகிறது. வை.கோவுடனான உறவு அதற்கு முன்னர் எம்.ஜி.ஆர்.உடனான உறவுகள் சென்ற வாரம் வரை அணுகுமுறைகளை சிக்கற்படுத்தியதை அறிவோம். எனவே, இந்த விடயங்களில் மிகுந்த நிதானத்துடன் நடந்துகொள்வது அவசியமாகிறது. சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தின் பொறுப்பாளர் சில சந்திப்புகளை ஏற்படுத்தி வருகின்றமையும் தெரியாமலிருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக சென்னை நிலையில் நீருள் சுழியாக இன்னுமொரு ஓட்டமும் உள்ளது.

தமிழகத்துக்கு திருமலை, மன்னார் அகதிகள் செல்ல விடுதலைப் புலிகள் காரணமாகவே பலர் வருகின்றனர் என்கிற கூற்றினை சற்று உரக்கவே எடுத்துக்கூறும் ஒரு போர்க்குழு உள்ளது. எனவே தான் திரு சம்பந்தன் அவர்களது பொறுப்பு மிகப் பாரியதாகிறது. அதேவேளையில், அவர் திறமையின் மீதுள்ள நம்பிக்கை இனந்தெரியாததொரு ஆறுதலையும் தருகின்றது.

மலையகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றம் முக்கியமானது. பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்ச்சி சம்பந்தமாக வளர்ந்துவந்த தேசிய ஒருமைப்பாட்டு நிலை ஏறத்தாழ உடைக்கப்பட்ட நிலையிலேயே இன்றுள்ளது. இவ்விடயத்தில் ஜே.வி.பி.யின் முன்னிலைப்பாடும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்த ஆதரவும் மிக முக்கியமானது. திரு சோதிலிங்கம் `தினக்குரல்'ல் சென்ற ஞாயிறு எழுதிய கட்டுரையில் இந்த எழுச்சியை மலையக தமிழரின் தேசிய எழுச்சியென்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஆனால், அந்தப் போராட்டம் மிகுந்த சாதுரியமான முறையில் தொழிற்சங்க வட்டத்துக்குள் வைத்தே இப்பொழுது தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால், மலையகத்தின் ஒருமைப்பாடு என்பது தொழிற்சங்க வட்டத்துக்குள் வைத்திருக்கப்பட முடியாதென்பது உணரப்பட வேண்டியது அவசியம். உண்மையில் மலையக தொழிற்சங்கங்கள் சில மலையகத் தமிழர்களின் இலங்கை நிலைப்பட்ட முக்கியத்துவத்தை தொழிற்சங்க வட்டத்துக்குள்ளேயே வைத்துக்கொண்டு தொழிற்சங்கங்கள் மூலமாக தங்கள் அரசியலை செய்கின்றனர். அரசியல் வழியாக தொழிற்சங்கங்களுக்கு வருதல் என்ற நிலைமையை மாற்றி தொழிற்சங்கங்கள் வழியாக அரசியல் பலத்தை ஏற்படுத்தவும் தக்கவைப்பதும் நடைபெறுகின்றன.

காலஞ்சென்ற திரு தொண்டமானிடத்து இந்த இரு துருவங்களையும் சமநிலையில் வைத்துப் பேணும் தூரதிருஷ்டியும் ஆளுமைப்பலமும் இருந்தது. இப்பொழுது அது இருப்பதாகக் கூறமுடியாது. மலையகம் தனது தனித்துவத்தையும், அதேவேளையில் அதன் இலங்கை நிலைப்பட்ட முக்கியத்துவத்தையும் உணர்ந்து பேணத்தக்க ஓர் அரசியல் அங்கு வளரவேண்டியது அவசியம். சென்றவாரம் ஏற்பட்ட திசைதிருப்பங்கள் இந்த தேவையை மிக அழுத்தமாக வற்புறுத்துகின்றன. இந்த விடயம் தனியே ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.

http://www.thinakkural.com/news/2006/12/24...s_page17907.htm

வழமை போல் நிழற் பிரதமர் சோனியாவை ஏன் சந்திக்கவில்லை?...கடிவாளம் அவர் கையில்தானே இருக்கிறது! :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.