Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் அனல்மின் நிலையத்திற்காக மக்களை வெளியேற்ற வழக்கு தாக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் அனல்மின் நிலையத்திற்காக மக்களை வெளியேற்ற வழக்கு தாக்கல்

[ Thursday,18 February 2016, 03:05:56 ] 
sampoor.jpg

திருகோணமலை - சம்பூர் அனல்மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியிலிருந்து உரிமையாளரை வெளியேற்றுவதற்காக மூதூர் பிரதேசசபையினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உறுதிக்காணியிலிருந்து வெளியேற்றுவதற்காகவே தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வைரமுத்து அருமைத்துரை ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.

மூதூர் நீதிமன்றத்திலிருந்து மார்ச் மாதம் 3ஆம் திகதி 9 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சம்பூர் அனல் மின் நிலையம் காரணமாக 25இற்கும் மேற்பட்ட குடியிருப்பு காணிகளிலிருந்து மக்கள் வெளியேறவேண்டிய நிலையிலுள்ளதாகவும், எனினும் தனது காணியை மாத்திரம் முற்றுமுழுதாக இழக்கும் நிலையுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அனல் மின்நிலையத்திற்கான நீர் செல்லும் குழாய் தனது காணியூடாக செல்வதாகவும் தம்மை உடனடியாக காணியிலிருந்து வெளியேறுமாறு தெரிவித்ததாகவும், எனினும் தான் மாற்றுக்காணி கோரியதாகவும் அதனைக் கூட தரமுடியாது என பிரதேசசபை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுமாத்திரமன்றி எந்தவொரு கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டாது என தெரிவித்ததாகவும் தற்போது கூட சமுர்த்தி நிவாரணத்தை தவிர தமக்கு வேறு கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் கூறினார்.

 

http://ibctamil.com/news/index/18934

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.