Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

""வைகறை மேகங்கள்""

Featured Replies

கவிபேரரசின் ""வைகறை மேகங்கள்"" கவிதை தொகுப்புக்கள்-"(தொடராய் வருகிறது....படியுங்கள்)

ஒளிப்புக்கள்....

பூந்துகில் உடுத்த புதுமதி யழகி

நீந்தியே திரியும் நீலப் பட்டில்

வைத்துப் பின்னி வண்ணங் கூட்டித்

தைத்துத் தொடுத்த தங்க சிமிழ்கள்...

சற்றேதெறித்த சரச்சிரிப்பாக

உற்று பார்க்கும் ஒளியின் பூக்கள்

திரும்பிச் சிரித்துத் தேன்விழி அசைத்து

விரும்பி அழைக்கும் வேசியர் கூட்டம்...

சித்திரப் பூக்கள் செம்பலா ஈக்கள்

நித்தில வீதியில் நிலவுக் கன்னி

அறுத்துப் போட்ட ஆரச் சிதறல்

வறுமை வானம் வடித்த கண்ணீர்...

உறைந்து தங்கிய ஒளியின் துளிகள்

விரந்து முறிந்த மின்னல் துண்டுகள்

இன்ப இரவில் இருட்டின் விழிகள்

விண்ணில் காணும் வெளிச்சக் கனவுகள்...

கட்டில் மீதில் காதலி மார்பை

தொட்டு தொட்டு சுகபோ தையினில்

கைதொடும் அழகை காதலி விரும்பி

மெய்தோடும் அழகை மேலே இருந்து

பார்த்துத் தவித்துப் பலமுறை ஏங்கி

வேர்த்து கிடக்குதா வெண்ணிலா வானம்...???

வட்ட நிலவின் வயிற்று பிள்ளைகள்

கொட்டி கிடக்கும் கொடியிலா முல்லைகள்

இயற்கைக் கன்னி என்னை கொஞ்சம்

மயக்க எண்ணி மையிருள் வானில்

அள்ளித் தெளித்த ஆடகப் பூக்கள்

வெள்ளிப் பொறிகள் வெண்ணிலாத் தூள்கள்...

எந்த கண்ணகி எதை உடைத்தாளோ..?

இந்தப் பரல்கள் எப்படி வந்தன..?

மின்மினிப் பறவைகள் மேகக் கிளைகளில்

பொன் மணிக் கூடுகள் புதுப்பித்தனவா..?

வெள்ளி சிமிழ்கள் விசும்பு வயலில்

நள்ளிருள் நடத்தும் நாற்று நடவுகள்

சுந்தர மங்கையர் சொர்க்க நாட்டிலே

செந்தளிர்க் குழந்தையைச் செவியோ டணைத்துத்

தாய்ப்பால் கொடுக்கையில் தவறிய துளிகள்

காய்த்து சிதறிய கற்பக விதைகள்..

தேங்கிய கடலின் சிப்பியை வானம்

வாங்கிய நிலையால் வந்த பேரெழில்

என்றே வியந்தேன் இதயம் சிலிர்த்தேன்

கண்டேன் கண்டதைக் கண்களில் ஏந்தினேன்

எண்ணி பார்க்க எண்ணி பார்த்தேன்

எண்ணுவ தெப்படி என்னைப் பார்த்தேன்.....!!!

Edited by vanni mainthan

  • Replies 54
  • Views 15.3k
  • Created
  • Last Reply

இது கவிப்பேரரசின் முதலாவது கவிதைத்தொகுப்பாகும். பதினேழு வயதிற்குள் எழுதிமுடித்து பத்தொன்பதாவது வயதில் அச்சேற்றி இருக்கின்றார்கள். கவிதைகளைப்படிக்கும்போது பிரமிப்பாக இருக்கின்றது. இவ்வளவு சிறியபிராயத்தில் இத்தனை கவி ஆளுமை எப்படி சாத்தியமாயிற்று? இக்கவித்தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கி இருப்பவர் கவியரசு கண்ணதசன் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல முயற்சி வன்னிமைந்தன் தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிபேரரசின் அழகான கவிவரிகள் கண்டு சந்தோசம் வன்னி மைந்தன் சார்.

மேலும் தாங்க.

  • தொடங்கியவர்

தொடர்...2

மலர்ச்சி....

தந்தி வரும் முத்துமொழித் தந்தையென முத்தமிடும்

சித்திரம் போல் பூஞ்சிவப்பு சிந்தி நன்ற -அத்தைமகள்

பூப்பெய்தி விட்டாளாம் ! பூமகளின் காலடியில்

பூப்பெய்தேன் என்ன வியப் பு...

பொன்னரைத்துப் பூசிவைத்த பூவை எனையினிமேல்

கண்களைத்துப் போகட்டும் காண்பாளா ? - மண்மேல்

தினைகாட்டு மானாய்த் திரிந்தாளே ஆமாம்

எனைக்கேட்டா பூத்தாள் இவள் ???

பாவடை தன்னில் பருவ நயம் சிந்திவரத்

தாவமால் தாவும் தளிர்சிட்டு -பூவாகி

ஆடிக் குலுங்கி அடையாளம் மாறியின்றி

மூடி மறைப்பாள் முகம் .

பனியுலர்த்தும் பால்மேனி பட்டாடைக் குள்ளே

கனிவனத்துத் தேன் நிலவாய் காயும் - மஞ்சளெனும்

வண்ணத்தில் புத்து வடிவம் பொலிய இனிக்

கன்னத்தில் மின்னும் கனி...

கண்திறந்த செவ்விளநீர் காலளந்து மண்ணளக்கும்

பண்ணிருக்கும் பார்வை பனிவடிக்கும் - என் விழியைக்

காணத் துடிப்பிருந்தும் காதல் அணைப்பிருந்தும்

நாணம் நடுக்கும் நலிந்து ...

தேனளந்து வைத்திருக்கும் செவ்விதழால் என்னெஞ்ச

வானளந்த வண்ணநிலா வந்து நின்றால் - நானழைத்துக்

கிள்ளாமல் கிள்ளி மிக்க கேலிசெய்வேன் என்றினைத்துச்

சொல்லாமல் போகும் சுடர்....

அத்தானை வெல்லவரும் அரும்புவிழி வாளென்னும்

அத்-தானை கொண்டுதினம் ஆடவைப்பாள்-முத்துபோல்

செல்ல விளையாட்டுச் செய்தவளின் கன்னிமுகம்

மெல்லச் சிவக்கும் மிளிர்ந்து..

ஈரெட்டு புவயதும் இன்னும் முடியவில்லை

சீரெட்டும் சிந்து சிரிப்புருவம் - காரெட்டும்

கூந்தலிலே பாட்டெழுதிக் கொள்ளென்று சொன்னபடி

பூந்தேனில் நின்றதம்மா பூத்து

என்றன் படத்தை இமைக்காமல் பார்த்தனைத்துத்

தென்றல் விழிக்குள்ளே தேங்கிவரும் - அன்பொழுக

என்னத்தான் வேண்டும் இனியென்பாள் நானவளை

எண்ணத்தான் வேண்டும் இனி...!!!

தொடரும்....

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர் 3- 4

கறுப்பு நிலா....

கண்ணகியே தாயே கறுப்பான இரும்பிடையே

பொன்னகையே பூவே புரட்சி துறவியவன்

தீட்டிவைத்த காவியமே திருமகளே தேனுக்குள்

போட்டுவைத்த பழம்போலப் பூந்தமிழர்க் கினிப்பவளே..

மாதத்தின் முழுநிலவே மறமகளே உன்னினிய

பாதத்தில் சின்னமகன் பாட்டுமலர் தெளிக்கின்றேன்

உச்சிமிகக் குளிர்ந்துவிட உன்னை புகழ்ந்து விட்டேன்

நிச்சயமாய் இனிஎன் நினைப்பைச் சொல்லுகிறேன்...

அந்திப் பூ விரிவது போல் அறிவை விரித்து வைத்துச்

சிந்தித்தேன் ஆமாம் சிரிப்புத்தான் வந்ததம்மா

உள்ளபடி உன் வாழ்க்கை உலகுக் குதவாத

செல்லுபடிஆகாத சிறுகாசு தானென்பேன்...

பருவநிலா காலத்தில் பயிரை போய் காவாமல்

அறுவடைக்குச் சென்றால் ஓ ஆழாக்கும் கிட்டாதே...

தொட்டு மாலையிட்டோர் தோகையரை கூடியபின்

விட்டு பிரிந்து வேறுதிசை போனாலும்

கண்ணீரைத்தினம் சிந்திக் கண்மூடி வாழ்வதுதான்

பெண்டிர்க்குக் கற்பென்று பேசினால் அக்கற்பே

இந்த உலகத்தில் இல்லா தொழியட்டும்

சந்தையிலும் விலை போகாச் சரக்காகி போகட்டும்...

கல்லாகி போனவளே கண்ணகி நீ பெற்ற

பொல்லாத மகனொருவன் புலம்புவதை கேளிங்கே

கட்டில் சுகங்காணக் காளையவன் சொல்லும்போதே

தட்டிக் கேட்டிருந்தால் தவறி யிருப்பானா...???

பெட்டி பாம்பாக பேசா திருந்ததுதான்

கட்டழகே நீசெய்த கடுங்குற்றம் முதற்குற்றம்

உப்பு கடல்நோக்கி ஓராறு செல்வதும்

இப்புவியிவில் வியப்பில்லை எழில்மகளே என்கணவன்

தப்பான கடல்நோக்கி தாவிச் செல்லும்போதே

அப்பப்பா ஈதென்ன அநியாயம் எனச்சொல்லி

அணையொன்றை கட்டியந்த ஆண்மகனைத் தடுத்திருந்தால்

தினைவனத்துக் கிளிபோலத் திருமகளே வாழ்ந்திருப்பாய்...

அளவாக தீயெரிந்தால் அதனை விளக்கென்போம்

அளவுக்கு மீறிவிட்டால் அதனை நெருப்பென்போம்

அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால்

களவுக்கு போனதம்மா காத்துவைத்த உன்சொத்து...

உத்தமிநீ என்றேநான் ஒப்புகொள்வேன் ஆனால்

நித்திலத்தேன் பெட்டகத்தை நீயுன்றன் கைக்குள்ளே

வைத்திருக்க தெரியாமல் வாழ்விழந்து போனாயே

பைந்தியந்தான் உன்னைப் பார்புகழ பாடியவன்...

படையிழந்பின்னாலே பார்க்கவர நினைத்தாயே

உடைந்தவோர் ஆடியினை ஒட்டவைக்க முயன்றாயே

விரலொடிந்த பின்னாலே வீணைபெற நினைத்தாயே

கரமொடிந்த பின்னாலே கைவளையயைக் கேட்டாயே...

சிறகொடிந்த பின்னாலே தேன்மயிலே வானத்தில்

பறந்துவர நினைத்தாயே பால்திரிந்த பின்னாலே

குடிக்கநினைத்தாயே குளிரலைமேல் வெண்ணிலவைப்

பிடிக்க முயன்றாயே பேதைத்தலைமகளே....

அறம்பாடி மதுரை அரசன் புகழ்சாடித்

திறம்பாடும் பூநகரைத் தீயால் எரித்தாயே

அத்திறத்தைச் சோணாட்டில் அணுவளவு காட்டி நின்றால்

சத்தியமாய் வாழ்வில் தளிர்த்துச் செழித்திருப்பாய்....

மன்னவனும் மாண்டதனால் மதுரை எரிந்ததனால்

உன் கணவன் நிலையாக உன்னிடத்தே மீண்டானா...???

கண்ணீரைத் துடைத்தானா..?? கனி மகளே உன்வாழ்வில்

பன்னீரைத் தெளித்தானா பாவி..படுபாவி...

கயவன் இழிந்தமகன் கண்மூடி போனவுடன்

மயங்கி விழுந்தாயே மடமகளே வாழ்நாளில்

பொய்யாகி போனமகள் புழுதியிலே செத்ததனால்

ஜயோ ஆ என்றலறி அழுது துடித்தாயே...

தொடரும்.....

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர் -3-4

காவியத்தில் உனைகண்டு

கண்ணீரா நான் வடித்தேன்..??

ஆவி சிலிர்த்தேனா...??

அல்ல...சிரித்துவிட்டேன்...

வேடிக்கை தானம்மா விந்தைதான் உன்போக்கு

சூடிக் களிக்கும் சுகப் பூவாம் உனைவிட்டே

ஓடித்திரிந்தனே உன்மத்தன்; அப்போதே

தேடிப்பிடித்துத் திருத்தி அழைத்திருந்தால்

வாடிவிட்ட பயிராக வருந்தா திருந்திருப்பாய்

ஆடிமிகக் களித்திருப்பாய் அமைதியிலே நின்றிரிருப்பாய்....

கலங்காமல் நீயன்று களமேறத் துணியாத

பலன்தானே தாயேநீ பட்டதுயர் மதுரையிலே

மோகக்கதையதனை முடித்துவிட்டே உன் கணவன்

வேகமாய் உனை நாடி வீடுதேடி வந்தவுடன்

சிரித்து களித்துச் செவியெல்லாம் தேன்பாய

உரித்த சுளைபோலும் உன்னிதழை நீ திறந்து

சிந்தைநிலாக் காவலரே சிலம்பிதனை நாடித்தான்

வந்தீரோ..?? என்றுனது வாய்நிறையத் தேன்வழியச்

சொன்னாயே பாவி சுவையொழுக சிலம்புதனை

அன்னவனின் கைமீ(து) அளிக்கத் துணிந்தாயே...

பத்தினியாய் நீயிருந்தும் பயனில்லை உண்மையிலே

பித்தம் பிடித்தவள்நீ பேதை பெரும்பேதை

அநியாய் காரனுக்கே ஆராத்தி எடுத்தவள் நீ.

கனியென்றே எண்ணி கருங்கல்லை கடித்தவள் நீ...

பல்லுடைந்து போனதற்கும் பதறித் தவிப்பதற்கும்

எள்ளுருண்டை காரணமா ஏந்திழையே..? உன் கணவன்

வெட்டி விழுந்தவுடன் வேங்கையென உன் தோளைத்

தட்டி விரந்தாயே தமிழரசன் பேரவைக்கு

""தேரா மன்னனெ"" னத் தென்னவனை சொன்னாயே

ஆராய்ந்து பார்த்தாயா அன்னமே உண்மையிலே

மன்னல்லன் தேராதான் மலர்கொடியே நீயேதான்....நாளை தொடரும்...

  • தொடங்கியவர்

தொடர்...-3-4-5

பொன்னகையைக் காவமல் புவியில் தொலைத்து விட்டுப்

பெரும்பழியை புவிமீது பெரிதாய்ச் சுமத்துவதில்

பொருளென்ன? புரியாத புதிரம்மா உன் வாழ்வு...

பட்டுத் துகில்விரித்த பவளம்பூம் பஞ்சணையில்

தொட்டுப் பிடித்துச் சுவையிதழில் விரல்தடவிப்

பதமான சுகங்கண்டு பாவிமகன் உனைபற்றி

முதலிரவில் சொன்னதெல்லாம் மோகமொழி தானென்றே

அறியாமால் போனாயே அதுவுன்றன் பியைல்லவா..??

பிரிக்காத ஏடுன்னைப் பிரித்தெங்கோ போனானே...

எச்சரிக்கை செய்தேன் எழுதுங் கவிஞர்களே

முச்சீரால் தான்வெண்பா முடிந்துவிட வெண்டுமெனும்

சட்டம் வகுத்திருக்கும் சந்த தமிழ்போலக்

கெட்ட மகனைநீ கிழித்துவைத்த கோட்டினையே

விட்டுபரியாத வேளையினைச் செய்வதற்கு

சுட்டுவழியாலே சொக்கவைத்து சிக்கவைக்கத்

தவறி விழுந்தவுனைத் தாய்க்குலமா பாராட்டும்..??

கவலைக் காவியம ;நீ கண்ணீரால ;தான் முடிந்தாய்...

தாய்க்குலமே தாய்க்குலமே தங்கமகன் சொல்லுகிறேன்

வாய்ச்சாலக் காரனென்றென் வார்த்தையினை தள்ளாதீர்

கற்பொன்றில் மட்டும் கண்ணகியைப் போலிருங்கள்

மற்றவற்றில் அந்த மடமகளை மறந்திடுங்கள்...

இப்போதும் அவளைப் போல் ஏமாந்து நின்றிருந்தால்

முப்போதும் கண்ணீரில் மோனநிலை கொண்டிருந்தால்

கடலுள் விழுந்தசிறு கடுகாகிப் போவீர்கள்

இடருள் சிக்குண்டே எருக்கம்பூ ஆவீர்கள்...

கருவுடைந்த முட்டையென கலங்கித் தவிப்பீர்கள்

வருத்தத்தில் தானுங்கள் வாழ்நாளை கழிப்பீர்கள்

சுகப்பட மாட்டீர்கள் சூறைக ;காற்றுக்குள்

அகப்பட்ட பஞ்சினைப்போல் அலைந்தே அழிவீர்கள்...

குலமகளே தமிழ் நெஞ்ச கோவிலுக்குள் இருள்போக்கி

விளக்கேற்றி நெஞ்சுக்குள் வீற்றிருக்கும் பொன்மகளைத்

திறனாய்வு செய்கின்ற தீவாட்டி தடியன் யார்...??

அறுக்கத்தான் வேண்டும் அன்னவரின் நாக்கையெனச்

சீறுகின்ற பெரியீர் சிந்தையிலே அறப்பாட்டுக்

கூறுகின்ற பூமகளைக் கொஞ்சுதமிழ் அஞ்சுகத்தை

நிந்தித்(து) எழுதவில்லை நினைசெல்லாம் ஒருநிலையாய்ச்

சிந்தித்தே எழுதியுள்ளேன் சிந்திக்க வேண்டுகிறேன் ....!!![/color]

தொடரும்....

  • தொடங்கியவர்

இருக்கிறேனம்மா இருக்கிறேன்....

பாலமிட்ட உறவுநிலா பாலைநதி அலையாக

காலவெளிச் சோலைகளில் கலக்கமலர் பூத்தென்ன

செல்லக் கனவுகளின் சிங்காரச் சின்னமலர்

மெல்லச் சிரிப்பதுவும் மீளாத உறவுகளை....

அள்ளிக் கொடுப்பதுவும் ஆண்டுகளால் அழிவதில்லை

பள்ளிப் பருவநிலை பழையகதை ஆவதில்லை

எண்ணச் சிறகுகளை எவர்வெட்டிப் போட்டாலும்

கண்ணில் பழையநிலா கவிபேசத் தவறவில்லை...

முழங்காத மேளத்தை மூன்றுமுறை பார்ப்பதுபோல்

பழங்காதல் எண்ணியெண்ணிப் பாட்டோடு சாய்த்துவிட்டேன்

சுட்டு விழியோரச் சொப்பனமே அன்றென்னைப்

பட்டு குழலொதுக்கிப் பார்வையினால் தின்றாயே

கன்னிக் கவியுடம்பைக் கண்களுக்குள் ஆடவிட்டுக்

உன்னைநீ தேடியன்று என்னிடத்தே வந்தாயே...

சாகாத அந்நினைவே தங்கமே இந்நாளில்

நோகமால் என்நெஞ்சை நூல் போட்டு சுமக்கிறது

காலச் சுவடுகளை கற்பனையால் தொட்டுவிட்டுக்

கோலக் கனிமுகத்தைக் குளிர்தடத்தில் காணுகிறேன்...

இன்னும் மனக்குளத்தில் ஏக்கப் படகுவர

என்னை நினைப்பாயோ? எண்ணாமல் இருப்பாயோ?

அந்தப் பனிநாட்கள் ஜயோ என் கற்பகமே

எந்தப்பிறவியிலே எப்போது இனிவருமோ...???

தொட்டுப் படிக்காத தொடர்கதையே ஏனம்மா

விட்டு விலகி வெகுதூரம் போய்விட்டாய்..??

சுனைநீராய் நாமிருந்த சுகஇடத்தில் தினந்தோறும்

நினைவோடு உறவாடி நெடுநேரம் பேசிவிட்டேன்...

வாயில்லை கண்ணீரை வார்த்தைகளாய்க் கொட்டிவைத்தேன்

நீயில்லை அதைக்காண நீதான் அருகில்லை

அந்தக் கனவுகளை அரைகுறையாய் விட்டு விட்டு

எந்தக் கவிதைகளை என்னிதயம் பாடுவதோ ??

இதயம முணுமுணுப்பில் இமைமடிப்பு தரும்நிழலில்

பதநீர் எனப்படர்ந்து பழையகதை பேசுகிறாய்

தேனரும்பும் வெள்ளிவிழித் திருவாசல் வழியாக

வானமுத தீபமெல்லாம் வைகறைபோல் ஏற்றுகிறாய்...

போனகதை போனதென்றான பூமியிலே நானிருப்பேன்?

ஏனம்மா தெரியாத? இருக்கிறதே ஓரிதயம்?

உனைப்பற்றிச் சொல்லாத ஓரசைவும் கனிசிட்டே

எனைச்சுற்றி இன்றில்லை இருந்தாலும் நியில்லை...

முத்தார முகங்கண்டு மூன்றாண்டு போனதென்று

கத்தாத கவிக்குயில்நான் கடைசியிலே கதறிவிட்டேன்

உன்னினைவுச் சுமையென்றென் ஒளிநெஞ்சில் இல்லையென்றால்

என்னிதயம் என்னிதயம் எப்போதோ கனத்திருக்கும்...

இதயவிழி தனைமெல்ல எண்ணஇமை மூடட்டும்

வதங்கிவிட்ட மலர்போல்என் வாழ்நாளும் முடியட்டும்

அங்கும்என் அழகே உன் அன்புரசப் பிஞ்சுமுகம்

மங்காமல் மின்னியென்றேன் மடிமீது மலரட்டும்....!!![/color]

  • தொடங்கியவர்

வானத் துகில்கள்...

முகிலா ? இல்லை முத்தொளி மங்கையர்

துகிலா? ஆமாம் சுந்தரக் கவிதைகள்

கருவான் வீதியின் கனவு ரதங்கள்

விரிவான் குளத்தின் வெள்ளி படகுகுள்...

கதிரவன் எரித்த கடுந்தீச் சூட்டில்

கொதித்தே எரிந்த குளிர்கடல் மீது

புத்துக் கிளம்பிய புகைக் கூட்டங்கள்

வாத்து நடையில் வானக் கொக்குகள்...

நீள்வான் அழகி நிர்வ ணத்தில்

வாழ்கின்றாள் என்றே வருந்தி அலையாக்

கொய்து கொய்து குளிர்கடல் வேந்தன்

நெய்து கொடுத்த நித்தில ஆடைகள்...

மோனத் தவத்தில் மூழ்கிகிடக்கும்

வான மகளின் வடிவுடல் மீதில்

இடைதனைத் தேடி ஏங்கி இளைத்து

நடைபயில் கின்ற நளினச் சேலைகள்...

சவங்களின் ஆவிச் சரித்திரம் தேடித்

தவழ்ந்து நடக்கும் தத்துவப் பயணிகள்

இடியுடன் மின்னல் இமைக்குள் வழிபோல்

மடியினில் மறைத்த மந்திர மங்கையர்...

பலரும் அறிய பகலவன் கடலாம்

குலமக ளவளைக் கூடியே கொடுமையில்

பிறந்த வெள்ளைப் பிள்ளைகள் தம்மைப்

பிறக்கச் செய்த பெரியவன் அவனைத்

தேடி நடந்து திசைதெரி யாமல்

வீடிழந் திருக்கும் வெள்ளைக் கிள்ளைகள்...

[/color]

தொடரும்....

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர்.....8

கையிழந்தோரின் கவிதை நாடகம்

மையிருள் மேடையின் மௌன காவியம்

கனவெனும் வானில் காணும் காரணம்

வினவா தேஅது வெள்ளைத் தோரணம்...

நித்திரை உலகின் நிலயாய வாழ்வுத்

தத்துவம் சொல்லும் சரித்திர குறிப்புகள்

முத்து விதைகளை மூடிவைத்திருக்கும்

சித்திரப் பருத்திச் சிறகுன் றங்கள்...

'

தேவியர் கூட்டம் சித்திரப் பொய்கையில்

தாவியே குளிக்கத் தனியே அவிழ்த்துக்

கரையினில் வைத்திடக் கண்ணிமைப் போதில்

விரந்து பறந்த வெள்ளைத் துகில்கள்....

மலைமகள் சூடும் மல்லிகை பூக்கள்

விலைசொல் இயலா வெள்ளிச் சட்டைகள்

ஆடுந்தென்றல் அகல்வான் மீது

பாடும் பாடல்கள் பாட்டுடைத் தலைவிகள்...

சூரிய பூமியின் சொர்க்க சுவடுகள்

மாறிய வடிவில் மழைநீர் ஆடைகள்

மடித்து சுருட்டா வான மெத்தையில்

வெடித்து விழுந்த வெள்ளை பஞ்சுகள்...

நானினி மறைப்பதில் நயமிலை அவையே

வானினை அடைந்தஎன் வளர்கற் பனைகள்....!!!

தொடரும்....9

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர்..10

வாழ்ந்து விட்டு சாகிறேன்....

அந்திமலர் மேடைதனில் ஆடிவரும் மேகம்

சந்தமொழி சிந்திதினம் தந்தசுக போகம்

இந்தமனம் தவநிலையில் ஏற்றவரமாகும்

அந்தசுகம் இல்லையெனில் ஆவிபறிபோகும்....

போதைமனம் பாவையவள் புமடியில் நாளும்

பாதைதடு மாறிதினம் பஞ்சனையில் வீழும்

கோதைமகள் ஆடவிடும் கோபுரமும் தோளும்

சீதைவழி வந்தமகள் தேனழகு போலும்....

பாடிவர வேற்றகுயில் பருவநிழல் போடும்

மூடிமறை வான எழில் மோகமலர் சூடும்

தேடிவரும் சொர்க்கவிழி தேனொளியில் ஆடும்

கூடிவரும் கனவுரதம் ஒளியில்நட மாடும்.....

காலழகு மேலழகு தோளழகு கண்டு

நாலழகும் பாலழகும் நம்முடைய தென்று

நூலவிழும் இடையழகை நூறுமுறை தின்று

வேலழகு விழியழகில் விடுபடுவ தென்று?

முத்துரதம் போலதினம் மோகவெறி தூண்டும்

தத்தையர்கள் என்னருகில் தாவிவர வேண்டும்

பத்துவிரல் தொட்டுமனம் பாட்டெழுத மீண்டும்

அத்தைமகள் போலபல கொத்துமலர் வேண்டும்...

பார்ப்பதுவும் பனியுதிரும் பால்நிலவில் மோதி

வேர்ப்பதுவும் விதிர்ப்பதுவும் விழியழகில் பாதி

சேர்ப்பதுவும் பெண்ணுடலில் தேன்மழையில் மீதி

வார்ப்பதுவும் இல்லையெனனில் வாழ்விலெது நீதி..??

பெண்ணழகு தந்தவனே பெரியவன் நீ போற்று

அன்னரத மஞ்ஞைகளை ஆடிவர வேற்று

கண்ணழகு கண்டதிலே காதல்மது வுற்று

கன்னியரை மறந்துவிடும் கவிஞனெவன் காட்டு...

நின்றசதை வீதிகளில் நீண்டதொரு பயணம்

கண்டுசுகம் கொண்டுவரும் காதலெனும் பருவம்

பெண்மையினை வான்வெளியில் பேசவிடும் தினமும்

இன்றுசுகம் கண்டுவிடில் என்னசெய்யும் மரணம்?

தொடரும்...11

  • தொடங்கியவர்

உலகம்.....

உன்னை பார்த்து உலகம் குரைக்கும்

''தன்னம்பிக்கை தளர விடாதே''

இரட்டை பேச்சு பேசும் உலகம்

மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே....

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு

உலகின் வாயில் இரட்டை நாக்கு

""எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்

உனக்கு சொல்கிறேன் உள்ளத்தில் எழுது...."'

இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்

இலக்கியம் இல்லை லேகியம் என்றது

திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்

பரிமே ழலகரை வரச்சொல் என்றது...

குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்

குண்டுச் சட்டியில் குதிரை என்றது

எலியாட் நெருடா எல்லாம் சொன்னேன்

திறமை எல்லாம் திருடிய தென்றது....

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்

வடுக பட்டி வழியுது என்றது

அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்

கழுதைக் கெதற்குக் கண்மை என்றது....

மேடையில் கால்மேல் காலிட்டமர்ந்தேன்

படித்த திமிர்தான் பணிவில்லை என்றது

மூத்தவர் வந்ததும் முதலில் எழுந்தேன்

கவிஞன் நல்ல ''காக்கா'' என்றது...

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்

காதில பூ வைக்கிறான் கவனம் என்றது

விரல்நகத் தளவு விமர்சனம் செய்தேன்

அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது....

தொடரும்....

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர்- 11

மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்

புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது

மூச்சு பிடித்து முட்டி முளைத்தேன்

தந்திரகாரன் தள்ளிநில் என்றது....

பகையை கண்டு பைய நகர்ந்தேன்

பயந்துவிட்டான் பாவம் என்றது

மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்

விளங்கிவிட்டதா மிருகம் என்றது....

பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்

வறுமை விந்தில் பிறந்தவன் என்றது

என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்

புலவன் இல்லை புர்~'வா என்றதுஃஃஃஃஃ

சொந்த ஊரில் துளிநிலம் இல்லை

இவனா மண்ணில் மைந்தன் என்றது

தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்

பண்ணையார் ஆனான் பாவலன் என்றது....

கயவர் கேட்டால் காசு மறுத்தேன்

கறக்க முடியாக் கஞ்சன் என்றது

உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்

உதறித் திரியும் ஊதாரி என்றது...

மங்கைய ரிடையே மௌனம் காத்தேன்

கவிஞன் என்ற கர்வம் என்றது

பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்

கண்களைக் கவனி காமம் என்றது....

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்

குருட்டு அதிh~;டம் கூடிய தென்றது

மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்.

டெல்லியில் யாரையோ தெரியும் என்றது...

திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்

அய்யோ புகழுக் கலைகிறான் என்றது

நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்

கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது....

''அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்

தன்நிழல் பார்த்துத் தானே குரைக்கும்...''''

உலகின் வாயைத் தைத்திடு அல்லது

இரண்டு செவிகளை இறுக்கிடு மூடிடு

உலகின் வாயைத் தைப்பது கடினம்

உந்தன் செவிகள் மூடுதல் சூலபம்.....!!!

தொடரும்...12

  • தொடங்கியவர்

தொடர்...12

அலைகள்...

அலைகளே நீர்மேல் ஆடுந் தண்ணீர்

மலைகளே கடலின் மந்திர கைகளே

விந்தை புரிந்து வீசுங்காற்று

நித்தம் திரிக்'கும் நீர்க்காயி றுகளே....

காற்றெனுங் கயவன் கடலாம் கன்னியின்

மேற்புறம் உரியும் மெல்லிய துகில்கயே

தர்க்க கடலின் தத்துவ உரைகளே

சொர்க்கப் படுக்கையில் சூருட்டிய பாய்களே...

கரையில் தற்கொலைக் காரியம் நடத்தல்

முறையா? சரியா? முடிவுரை என்ன ?

கண்pழி புகந்து கனவென மலர்ந்து

வெண்துகில் போர்த்து மேலே எழுந்து...

விம்மி தாழ்ந்த வெண்மார் புகளே

தம்பலம் காட்டும் தண்ணீர் வெடிகளே....

தொடரும்...13

  • தொடங்கியவர்

தொடர் -13

கடல்நீர் விழாவில் கரக ஆட்டம்

நடத்தித் தோற்கும் நாடகக் கும்பலே

கருப்புக் கடலது காசநோ யாலே

இருமித் துப்பும் எச்சில் மலைகளே....

கறுப்புக் கடற்றயிர் கடையப் படுகையில்

தெறித்த வெண்ணை திரைகளே - நீங்கள்

கரையில் கலையும் கடலின் கனவுகள்

கரைக்கன் னத்தில் கடல்முத் தங்கள்....

நகர்ந்து விரைந்து நடந்து கரையில்

தகர்ந்து போகும் தண்ணீர் சுவர்கள்

வாழ்வினை உணர்த்தும் மாய நிழல்களே

ஆழ்கடல் புமியின் அடிவரு டிகளே....

கொஞ்சம் இருங்கள் கொஞ்சம் இருங்கள்

வஞ்சியர்க் கெனசில வார்த்தைகள் சொல்கிறேன்

சின்ன சித்திரச் சிரிப்புப் பெண்களே

வண்ண விளக்கை வருகிற காற்றே....

அணைத்து விடுவதாய் அலட்டி கொள்கிறீர்

நினைத்த துண்டா நீலக் கடலை?

ஊற்றுநீர் மேட்டில் ஒளிந்து திரியும்

காற்று கன்னிகள் கடலில் ஏற்றிடும்.....

வெள்ளை விளக்குகள் விடிந்தும் எரிகிற

நல்ல காட்சியின் நயமறந்தீரோ?

பச்சை அலைகளே பவள நிழல்களே

உச்சி வெயிலிலே உருகும் ஏழைகள்....

மமதை புமியின் மாளிகைச் சுவர்களைத்

தமக்குள் எண்ணித் தவிப்பதுபோல

முழுநிலாக் கன்னியை முற்றுகை போட

எழுந்து பார்த்தே இடுப்பொடி படுகிறீர்.....

காற்றால் எழுந்த கடல்வீக் கங்களே

தோற்ற கணக்குத் தொடகளே நீவீர்

நிலவைப் பிடிப்பது நிச்சய மில்லை

உலகை பார்கிறேன் ஒடிந்த எழைகள்....

மஞ்ச வாசியை மாய்ப்பது நிச்சயம்

செஞ்சுடர் குருதியில் செய்கிறேன் சத்தியம்.....!!!

தொடரும்....14

(மு. மேத்தா . அ.ரகுமான். தாமரை . பா விஜய். வாலி. கண்ணதாசன்.

புலம்பெயர் கவிகள். தாயக கவிகள் இதிலே தொடராய் வரும் படித்து பலவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...)

  • தொடங்கியவர்

தொடர் - 14

குழந்தை.....

மொட்டுத் தொட்டிலில் முகிழ்த்து கிடக்கும்

பட்டு குழந்தையை பார்த்து சிரிக்கிறேன்

செதுக்கி வைத்த சேலைச் சிலைகள்

பதுக்கி வைத்த பஞ்சணைச் சின்னம்....

மோக நாடக முடிவுரை சொல்லி

வேகமாய் வந்து விழுந்து சதைத்திரை

வேட்டியால் உழுத விதை;துச் செழித்த

கூட்டு பண்ணையின் கொழுந்து குளிர்கனி....

ஆடைப்போரின் அழுத்தத் தாலே

ஓடை விட்டே ஒதுங்கிய படகு

இருளின் நிழலில் இருவிழி மூடி

இருவர் நடத்திய இன்ப வழக்கின்

விளக்கஞ் சொல்ல வெடித்த சாட்சி

பிள்க்கக் கூடாப் பெண்ணிலாத் துண்டு...

தடுக்க கூடிய தவறிருந்தாலும்

படுக்கை வகுப்பில் பருவம் நடத்திய

காமக் கணக்கில் கடைசி மிச்சம்

சாமக் கவிதையின் சரித்திர பக்கம்....

தொடரும்...15

  • தொடங்கியவர்

தொடர் - 15

நடித்த நாடகங்களைச் சொல்லி

வெடித்து வந்த விளம்பரப் பலகை

இருட்டில் குலுக்கி எடுத்தத னாலே

பருந்து விழுந்த பரிசுச் சீட்டு....

உருவச் சிறப்பில் உறையுந் தாயின்

பருவச் செழிப்பைப் பங்கிடும் மென்புழு

உயிரொளிந்திருக்கும் உளிச்சதைத் துண்டு

தயிரென உறைந்த சதைப் பூ செண்டு....

மஞ்சக் கவிதையை மறுபடி தாயின்

நெஞ்சில் நிறுத்தும் நிலைக்கண் ணாடி

தசைப்பள் ளத்துச் சாம்பல் தத்துவம்

இசைவெள் ளத்தால் எழுதிய சித்திரம்....

துள்ளி நடந்த சுக விளையாட்டில்

பள்ளி யறையில் படுத்திய பாட்டில்

கட்டில் அழுத கதைகளைக் கேட்டுத்

தொட்டிலில் அழுதிடும் தூக்க மாத்திரை....

கொள்ளை இன்பக் கூடல் நகரில்

வெள்ளை குருதியில் விளைந்த முல்லை

விந்தைத் தின்றுயிர் விளைந்ததே அது தான்

விந்தை மாபெரும் விந்தை மண்ணில்

விழுந்ததும் குழந்தை வேதனை பாடி

அழுவதும் மனகி அசைவதும் ஏனோ?

மரணக் கணக்கில் மற்றுமோர் பெயரைக்

குறித்துக் கொள் எனக் கூறத் தானோ?

தொடரும்.... - 16

  • தொடங்கியவர்

தொடர்... - 16

கல்லறைக் கண்ணீர்...

அன்னமே காதலியே ஆவி கலந்தவளே

உன்னை பிரிகின்ற ஓவியமே - கண்ணீரும்

ஓடிப் பெருக உளமுருகி நம்பிரிவைப்

பாடி முடிக்கின்றேன் பார்....

வானத்தில் வட்டநிலா வந்ததடம் இல்லையென

ஆனதுபோல் நம்காதல் ஆனதடி - மோனத்தில்

பண்பாடி வந்ததுவும் பால்மழலை சொன்னதுவும்

கண்மூடி கண்ட கனவு....

சின்ன இடையழகை தெம்மாங்கு தேன் பேச்சைப்

பண்பாடும் புங்கண்ணின் பாவனையைப் - பொன்கழுத்தை

ஒப்Nபது மில்லா ஒளிமுகத்தை என்னுயிரே

எப்போது பார்ப்பேன் இனி.....

காவியம் சின்னக் கதையாய் முடிந்ததடி

ஆவிபறி போயிற் றரைநாளில் - ஓவியமே

நானே தொடங்கிவைத்த நம்காதல் மன்றத்தில்

தேனே விழுந்ததடி தீ....

தாகம் எடுத்துத் தவிக்கின்ற வேளையிலென்

சோகங் குறைத்த சுவைச்சாறே - மோனகமே

முப்போதும் உன்றன் முகம்பார்த்து வந்தமகன்

எப்படித் தானிருப்பேன் இங்கு....???

தொடரும்.....17

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர்.....17

பனிச்சோலை உன்னைப் பகலெல்லாம் பார்துக்

கனிச்சாறே சொன்னேன் கவிதை - தனியே

உனைமறந்(து) இங்கே உயிர்வாழ்வ தென்றல்

நினைவிழந்து போகாதோ நெஞ்சு?

மூச்சாகி நெஞ்சுக்குள்மோக நினைவுட்டி

நீச்சலிட்(டு) ஆடிடும் நித்திலமே- பூச்சரம் போல்

என்னெஞ்சில் பூத்தவளே ஏந்திழையுன் எண்ணமன்றி

இன்னொன்றும் இல்லை இனி...

மறைத்தாலா தாழை மணங்குறையும்? நீரில்

கரைத்தாலா தங்கம் கரையும்? - கரையில்

இறைத்தாலா வற்றிவிடும் ஏடுகடல்? நெஞ்சில்

மறையாது காதல் மலர்...

தூங்க மறுத்துத் துடிக்கின்ற கண்ணிமையும்

ஏங்கித் தவிக்கும் இதயமும் - பூங்கொடியே

போனகதை எண்ணிப் புலம்பிடதே இன்னுமுனைக்

காணத் துடிக்கிறது கண்....

விதையில்லா மாங்கனியே வேல்விழியால் காதல்

கதை பேசி வந்தாயே கண்ணே- அதையெண்ணி

வேகின்றேன் என்புருகி விக்கி தழுகின்றேன்

கோகிலமே என்கனவில் கொஞ்சு...

சாவும் நெருங்காது சந்தியிலே நிற்கின்றேன்

பூவுன்னை எண்ணிப் புலம்புகின்றேன் - கூவும்

குயிலே இனிக்குமுன் கோலமொழி இல்லை

துயிலின்றி உள்ளேன் துடித்து..

எட்டாத கொம்பனாய் ஏந்திழையே இவ்வுலகில்

கிட்டாக் கனிநீ கிடைப்பாய? - வட்டமிட்டு

நாடி நரம்புகளில் நான்தீட்டும் பாட்டுகளில்

கூடிக் கலந்துகவி கூறு...

தொட்டவுடன் நெஞ்சில் சுகபோதை சேர்க்கின்ற

பட்டுத் தளிர்மேனிப் பால்நிலவே - கெட்ட

பொழுதாக நம்காதல் போனதடி பூவே

அழுதிடா(து) என்னை அனுப்பு....

இப்பிறவி ஏதோ இருவிழியும் அற்றவனின்

சொர்ப்பனமாய் போனதடி தோகையே - தப்பின்றிக்

காட்டுவித்த காதல் கனவென்றே நீயெண்ணிப்

போட்டுவிடு நெஞ்சுக்குள் பூட்டு...

செத்தால்என் மீது தெளிக்கும் மலர்களுமே

பித்தாகச் செய்தவளுன் போசொல்லும் - உத்தமியே

நல்லமு(து) உன்நினைவால் நாளும் அழுதழுதென்

கல்லறையும் பாடும் கவி.....!

தொடர்....18

  • தொடங்கியவர்

தொடர்... - 18

அந்தச் சிரிப்பு....

என்பாட்டுக் குயிர்கொடுத்த இளைய செல்வி

இதழோரப் பள்ளியில் படித்த கல்வி

மின்வெட்டுச் சிரிப்பாகும் பச்சைத் தென்றல்

மீட்டிவிட்ட பூ விணை நாத மாகும்.....

பொன்வீட்டு முற்றத்தில் வெள்ளிக் கோலம்

போட்டுவைத்த அழகாகும் இதயம் தீட்டும்

என்பாட்டில் உயிரிருந்தால் தமிழே அஃதும்

இளஞ்சிரிப்புக் கன்னிதந்த வரமே யாகும்....

பூந்தகட்டுப் பொன்னிதழின் மின்னல் வீட்டில்

பூத்துவிட்ட செம்புக்கள் வரைந்த கோட்டில்

காந்தநதி மெல்லமெல்ல பயணம் போகும்

கன்னியவள் சிரிப்பதற்கே உவமை யாகும்...

நீந்திவிட்ட சிரிப்புரதம் மிதக்குங் காலை

நித்திலப்பூத் தொட்டுவைத்த உதட்டு சாலை

சாந்தநிலா போல்மெல்ல மலர்ந்து பார்க்கும்

சாகாத கற்பனைக்குச் சந்தஞ் சேர்க்கும்......

தொடரும்....19

  • தொடங்கியவர்

தொடர்..20

தெய்வீகத் திருநாட்டில் ஏற்றிப் பார்த்த

தேன்விளக்கே அவள் சிரிப்பு ஒளிநூல் சேர்த்து

நெய்கின்ற மலர்த்தறியில் தெறித்து வந்த

நெய்வாச ஒளிப்பட்டு காதற் காட்டில்

பெய்கின்ற கவிதைமழை நனைத்துப் பார்த்த

பேராசைக் கற்பனைப்பு நெஞ்சை மோதச்

செய்கின்ற மாயநதி என்னைக்காதற்

சிறைக்குள்ளே போட்டவிதி தெய்வ சோதி.....

சாயாத ஒற்றைமுகில் பனிப்புங் காட்டில்

சஞ்சரித்த குளிரழகு பிரிவுச் சூட்டால்

காயாத கனவுவெளி மேடைமீது

கண்வளர்ந்த பிள்ளைநிலா வெளிச்சம் அன்பு

வாயாலே வசந்தவிழா பந்தல் போட்டு

வரவேங்கும் கீதமலர் அரும்புக் காட்டில்

பாயாத மஞ்சளொளிப் பருவம் பார்த்துப்

படம்போட்ட பாலரும்புக் கொழுந்துக் காட்டில்....

விடிவானப் பனிவெள்ளித் தோட்டம் பாடல்

விளையாட விட்டகலைக் கோட்டம் நெஞ்சில்

முடிவில்லாக் கனவுகளை அள்ளிபோட

முகமேகம் தந்தகலை மின்னல் நானே

வடிக்கின்ற கவிதைகளின் வார்த்தை பின்னல்

வாலிபத்தை வாயிதழில் சிந்திச் சிந்தி

நடிக்கின்ற கனிமகளின் சிரிப்பே போதும்

நாளுமது நளினரசக் கனவில் மோதும்......!

தொடர்....21

  • தொடங்கியவர்

தொடர்...... 21

என்னோட ராவுகள்....

சில ராத்திரிகள் எனக்கின்னும்

விடியவே இல்லை..

அந்த இரவுகளைச்

சூரியன் துடைத்துவிட்டாலும்

என்னுள் அந்த இருள்வெள்ளம்

விடியவே இல்லை....

விளயாட்டுச் சிறுவயதில்

வெறிநாய் கடிக்க

நாய் போல் குரைத்துசாகும்

நரகத்தை எண்ணியெண்ணி

அச்சத்தில் விழித்திருந்த

ஆஸ்பத்திரி ராத்திரி...

எந்தக் குறளும் தளைதட்டாதா?

முகடு முட்டிய முட்டைபோல

ஆயிரத்து முந்நூற்று முப்பதையும்

அசைபிhத்துத் தோற்ற அசட்டு ராத்திரி....

''ஊர்ச்சிறுவரோடு ஒளிந்து விளையாட

ஆளில்ல வீடொன்றோர்

அடுக்களையில் நானொளிய

பக்கத்து வீட்டு கலவிச் சத்தம் :icon_idea::icon_idea:

வெட்கத்தை விட்டு காது குடைய

சில்லிட்டுறைந்த சிருங்கார ராத்திரி''

தொடரும்...22

_அட பாவி மானுசா இப்படி எல்லாம் கேட்டிருக்காரே...கறுமம் கறுமம்..)

Edited by vanni mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி ஜயா...உங்கள் பணியை தெடர்க...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[

''ஊர்ச்சிறுவரோடு ஒளிந்து விளையாட

ஆளில்ல வீடொன்றோர்

அடுக்களையில் நானொளிய

பக்கத்து வீட்டு கலவிச் சத்தம் :icon_idea::D

வெட்கத்தை விட்டு காது குடைய

சில்லிட்டுறைந்த சிருங்கார ராத்திரி''

தொடரும்...22

_அட பாவி மானுசா இப்படி எல்லாம் கேட்டிருக்காரே...கறுமம் கறுமம்..)

  • தொடங்கியவர்

தொடர்...

உள்ளுரில்

யுத்தம் விளைந்த ராத்திரி பொழுதில்

தெருவோடு மணல் பரப்பி

மணலோடு ஆயுதம் பரப்பி

அதன்மீது உடல் பரப்பிக்

கண்கொட்ட விழித்திருந்த

கலவர ராத்திரி....

அத்தை வீட்டில் கடன்கேட்க்க

அப்பா அனுப்பி வைக்க

அத்தை மகள் பார்த்த அதிச்சியில்

வெட்கமுற்று கடன் என்ற வார்த்தையைக்

கம்பளிக்குள் புதைத்துவிட்டு

அரைநொடியும் தூங்காத

அவமான ராத்திரி...

மூத்தகிழவன் சாக

முதற்சாவு நான் பார்க்க

எள்ளில்லாமல் சுற்றும் செக்கைபோல்

கண்ணீரில்லாமல் பெண்கள் அழ

உயிர்க்கிழவனை விடவும்

பிணக்கிழவன் அழகென்று

சந்தோசப்பட்ட சாவு ராத்திரி...

சென்னை என்னும்

கட்டட காட்டுக்குள்

தொலைவதற்கு முதல்நாள்

வளர்த்த புமியே

வாழ்த்திய வானமே

போகிறேன் என்று புலம்பிப் புலம்பி

நட்சத்திரங்களை நனைத்த

கிராமத்து ராத்திரி...

ஒரு

கிளியை போல் பறந்து வந்து

புவைப்போல் மடியில் விழுந்த

பொண்மணி கடிதத்தில்

காற்புள்ளி அரைப்புள்ளியிலும்

கவிதை தரிசித்த காதல் ராத்திரி...

கலீல் ஜீப்ரானின்

முறிந்த சிறகுகளில் முகம்புதைத்து

கண்ணீர்க் களைப்பில் தூங்கிப்போக....தொடரும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.