Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க பாஸ்கரலிங்கத்தின் அவசர உதவியைக் கோருகிறது அரசாங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ள அரசாங்கம், பொருளாதார நிபுணரும், நிதியமைச்சின் முன்னாள் செயலாளருமான எம்.பாஸ்கரலிங்கத்தின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.பாஸ்கரலிங்கம் கடந்த காலங்களில் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் முன்னின்று செயலாற்றியிருந்தார்.

பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ள அரசாங்கம், பொருளாதார நிபுணரும், நிதியமைச்சின் முன்னாள் செயலாளருமான எம்.பாஸ்கரலிங்கத்தின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.பாஸ்கரலிங்கம் கடந்த காலங்களில் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் முன்னின்று செயலாற்றியிருந்தார்.

   

பொருளாதாரத்தில் நிபுணத்துவமற்ற ஹர்ச டி சில்வா போன்றோரின் வருகையின் பின்னர் பாஸ்கரலிங்கத்தின் மவுசு கட்சிக்குள் குறையத் தொடங்கியிருந்தது. இதன் காரணமாக மிக நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த பாஸ்கரலிங்கம் எதுவித பதவியும் வழங்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட பல்வேறு யோசனைகளை பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டது. அத்துடன் பொதுமக்கள் மத்தியில் நல்லபிப்பிராயத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் பல்வேறு தடவைகளில் குறைத்திருந்தது. இதன் காரணமாக அரசாங்கத்தின் வருமானம் குறைந்து பாரிய பொருளாதார நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளது.

இதிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி அனுபவமிக்க பாஸ்கரலிங்கத்தின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை என்பது அரசாங்கத்துக்கு இப்போது தெளிவாக புரிந்துள்ளது. இதன் காரணமாக கட்சிக்குள்ளும், அரசாங்கத்தினுள்ளும் பாஸ்கரலிங்கத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்துள்ளது. சமீபத்திய நாட்களில் அடிக்கடி அலரி மாளிகைக்கு விஜயம் செய்த பாஸ்கரலிங்கத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் குறித்து நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=152894&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.