Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே போகிறோம் நாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போகிறோம் நாம்? - அருணன்

<p>எங்கே போகிறோம் நாம்?</p>
 

 

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ். குடாநாடும் இலங்கையின் ஜனாதிபதியாக ஆர்.பிரேமதாஸாவும் இருந்த காலகட்டத்தில் ஒரு நாள் நடந்த சம்பவம் இது. 

நிதர்சனம் - புலிகளின் குரல் நிறுவனத்தின் ஆண்டு விழா யாழ் இந்துக் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் நிகழ்ந்தது. சிறப்பு நிகழ்வாக ஈழ நல்லூர் ஸ்ரீதேவி குழுவினரின் வில்லிசை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்குழுவின் கதை சொல்லி சாம்பசிவ. சோமாஸ்கந்த சர்மா. ஐயம் கேட்கும் பிற்பாட்டுக்காரர் இராசையா சிறீதரன். பொருளாதாரத் தடை மிகத் தீவிரமாக அமுல் செய்யப்பட்டிருந்த காலம் அதுவென்பதால் வில்லிசையின் பேசுபொருளாக அதுவே இருந்தது. ஒவ்வொரு தடையாக சொல்லிக்கொண்டு போன சர்மா சவர்க்காரத் தடை பற்றியும் குறிப்பிட்டார். அப்போது அவரிடம் 'அப்ப ஊத்தை (அழுக்கு) உடுப்புகளை என்ன செய்கிறது?' என்ற வினா எழுப்பப்பட்டது.

'எல்லாவற்றையும் மூட்டையாக கட்டி பிரேமதாஸாவிடம் அனுப்பச் சொல்லியினை' எனப் பதிலளித்தார் சர்மா. அவ்வளவுதான் ஒரு நொடி அவகாசம் கூடக் கொடுக்காமல் மேடையில் பிரவேசித்த பொறுப்பாளர் பரதன் ஒலிவாங்கியை எடுத்து 'இத்துடன் வில்லிசை நிகழ்ச்சி முடிவடைந்தது' என அறிவித்தார்.     

பார்வையாளர்கள், வில்லிசைக் குழுவினர் மத்தியில் அதிர்ச்சி - திடீரென நிகழ்ச்சியின் இடையில் அறிவித்தால் எப்படி இருக்கும்? பரதனுக்கு விளக்கமளிக்க அல்லது அவரை சமாளிக்க முயன்றனர் வில்லிசைக் குழுவினர். முடியவில்லை. இறுதியாக 'மங்களம் பாடிவிட்டு போகிறோமே' எனக் கேட்டனர். 'அதையெல்லாம் நாங்கள் பாடிக் கொள்ளுறம். முதல் நீங்கள் மேடையை விட்டு போங்கோ' எனக் கண்டிப்புடன் கூறினார் பரதன். இந்தக் கட்டத்தில் தனது ஆளுமையை மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் வளர்ப்பு முறையை, அவர்களின் கொள்கையின் உறுதியை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டினார் அவர்

பிரேமதாஸா சலவைத் தொழிலைத் கொண்ட பரம்பரையில் இருந்தே அரசியலுக்கு வந்தவர். இடியப்பம் போன்ற ஒரு சிங்களப் பாரம்பரிய உணவை (லவரியா) வீடு வீடாக விற்கும் தொழிலிலும் இவரது பெற்றோர் ஈடுபட்டவர்கள். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அனுரா பண்டாரநாயக்கா 'நான் லவரியா விற்றவன் அல்ல' என்ற அர்த்தம் தொனிக்க ஒரு முறை பிரேமதாசவை எள்ளி நகையாடினார். ஏன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரேமதாஸா அமர்ந்த இடத்தில் தான் இருந்து ஆட்சி புரிவதை அனுராவின் சகோதரி சந்திரிகா விரும்பவில்லை. அல்லது அவரது பரம்பரைப் பெருமை இடம் கொடுக்கவில்லை. அதனால் ஜனாதிபதி மாளிகையை விடுத்து அலரிமாளிகையில் இருந்தே ஆட்சி நடத்தினார்.   

அமெரிக்க ஜனாதிபதியாக கறுப்பரான பராக் ஒபாமா வாசம் செய்தமையினால் அடுத்து வரும் ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் இருக்க மாட்டேன் எனக் கூறமாட்டார். ஒவ்வொரு நாட்டிலும் அரசுத் தலைவருக்கென பிரத்தியேக இல்லம் இருக்கும். இது மரபு ரீதியான ஏற்பாடு. ஆனால் மரபுகளை விட சாதித் திமிரே சந்திரிகாவின் கண்ணுக்குத் தெரிந்தது. சந்திரிகாவின் வழியிலேயே மகிந்தவும் நடந்து கொண்டார். இது சிங்களத்தின் சாதித் திமிருக்கு ஓர் உதாரணம். சந்திரிகாவின் இத் தீர்மானத்தை சிங்களவர்கள் தவறெனச் சுட்டிக் காட்டாததால் இம் முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது       

தமிழரிடையேயும் சாதித் திமிர் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பிரேமதாசாவின் பரம்பரையை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதை ரசிப்பார்கள் என்ற எண்ணத்திலேயே சர்மா அவ்வாறு குறிப்பிட்டார். அவ்வாறானவர்கள் அதைக் விளங்கிச் சிரிப்பதற்கு முன்னதாகவே பரதன் தனது நிலைப்பாட்டை, இயக்கத்தின் கொள்கையை உறுதியாக வெளிப்படுத்தும் முகமாக 'இத்துடன் வில்லிசை முடிவடைந்தது' என அறிவித்தார். அவரது அந்த முடிவு அனைவராலும் வரவேற்கப்பட்டது. சிறிது தாமதமாக சிலர் சிரித்த பின்னர் அறிவித்திருந்தாலும் அது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும். சாதி ஒழிப்பு பற்றி ஆயிரம் கட்டுரை எழுதலாம், மகாநாடுகள் நடத்தலாம், நாடகம் போடலாம். ஆனால் அவை ஏற்படுத்தும் தாக்கத்தை விட, வினாடி தவறாமல் பரதன் மேற்கொண்ட நடவடிக்கை காத்திரமாக இருந்தது எனப் பலரும் குறிப்பிட்டனர். ஆனால் இன்றைய நிலை.....?

           ***

<p>எங்கே போகிறோம் நாம்?</p>

தமிழக அரசியலில் என்ன நிலைப்பாடு இருந்தாலும் ஈழத் தமிழர் விடயத்தில் அக்கறையோடு செயற்படுபவர்களில் ஒருவராக திருமாவளவன் அடையாளம் காணப்பட்டுள்ளார். பறிக்கப்பட்ட தமது தொலைத்தொடர்புக் கருவிகளை மீளளிக்க வேண்டுமென்று பிரபாகரன் 1986ம் ஆண்டு நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்தார். அப்போது மாணவனாக இருந்த திருமாவளவன் இக் கோரிக்கைக்கு ஆதரவாக கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களைத் திரட்டிக்கொண்டு வீதியில் இறங்கினார். தமிழகத்தைக் கொந்தளிக்கச் செய்தார். இறுதியில் இப்போராட்டம் வெற்றியடைந்தது.

திருமாவளவன் பிற்காலத்தில் ஒடுக்கப்பட்ட இனத்தவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு 'விடுதலைச் சிறுத்தைகள்' எனும் பெயரில் கட்சியை ஆரம்பித்தார். தமிழகத்திலும், இந்திய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய இவர், இப்போது கூட தமது தலைவர் பிரபாகரன் என்றே குறிப்பிடுகிறார். அவரது கட்சியைச் சேர்ந்தவர்தான் ரவிக்குமார். அவரை 'பற நாயே' எனக் குறிப்பிட்டார் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் பெயரால் அரசியல் அடைக்கலம் பெற்றுள்ள இரா.துரைரத்தினம். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது புதிதாக அரிதாரம் பூசியுள்ள ஐ.பி.சி. நிறுவனம். இப்படியான விருது அவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே பிரபல கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்கள் ரவிக்குமார் தொடர்பாக இரா.துரைரத்தினத்தின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் கண்டனம் தெரிவித்திருந்தார். தீவுப் பகுதிப் பெண்களைப் பற்றியும், மட்டக்களப்பு மக்களைப்பற்றியும், கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் பிரபல எழுத்தளார் எஸ்.பொ குறித்து இரா.துரைரத்தினம் என்ன நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என்பது பற்றியும் முகநூலில் தெளிவாக வெளியிடப்பட்டிருந்தது. 2014 செப்டம்பரில் ஜெனிவாவில் நடைபெற்ற ஒன்று ஒன்று கூடலில் துண்டுப் பிரசுரமொன்றை வெளியிட்டு இவரது முகத்திரையைக் கிழித்திருந்தனர். இந்த விடயங்கள் எதனையுமே இந்த வணிக நிறுவனம் கருத்தில் கொள்ளவில்லை.   

'பணத்தை மட்டும் சேர்த்துக்கொள். உலகம் முழுவதும் சேர்ந்து கொண்டு உன்னை ஒரு பண்பாளன் என்று கூறத் தயங்காது' பெர்னாட்ஷா (உதயன் 9.6.2015 புதன் பொய்கை)

'விளாம்பழத்தை மூடியிருக்கும் ஓடு போல பணக்காரர்களின் செயல்களைப் பணம் மூடியிருக்கிறது. என்ன ஆகிவிடப்போகிறது பார்த்து விடுவோம் என்றொரு துணிச்சல் அவர்களுக்கு மட்டும் வருகிறது'. கண்ணதாசன் (ஆயிரம் கால் மண்டபம் - பக்கம் 95- 96) போன்ற கருத்துக்களை இவருக்குக் கௌரவமளிக்கும் முடிவை எடுத்தவர்கள் வாசித்திருக்கிறார்கள் போல இருக்கிறது. தமிழினத்தின் பெயரால் இக் கௌரவத்தை அளித்ததற்காக விடுதலையை நேசித்த தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தலை குனிந்து கொள்வோம். ரவிக்குமார் போன்றோரிடம் மன்னிப்புக் கோருவோம். முள்ளிவாய்க்காலிலும் பின்னர் வவுனியா தடுப்பு முகாம்களிலும் தமிழரை அவமானப் படுத்தியது சிங்களம். இப்போது தமிழரின் பெயரால் முன்னாள் ஏரிக்கரை (லேக் ஹவுஸ்) பத்திரிகையாளரை கௌரவித்து தமிழினத்தையே கேவலப்படுத்தியுள்ளது ஐ.பி.சி நிறுவனம். இந்த நிலையில் அப்துல் ரகுமானின் மூன்று கவிதைகள் நினைவுக்கு வருகின்றன.

'உன்னை

மொழிகளுக்கெல்லாம்

முதல் மொழி என்றார்

அதனால் உன்னை

முதலாகப் போட்டு

வியாபாரம் தொடக்கி விட்டார்'

 (பக்கம் 127)

**

'சுயம்வர மண்டபத்தில்

போலி நளன்களின் கூட்டம்

கையில் மாலையுடன்

குருட்டுத் தமயந்தி'

(பக்கம் 53)

**  

'புதிய இயேசுவை

எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது

பழைய சிலுவை!

புதிய வலைகளோடு

புறப்படுகின்றான் பழைய சாத்தான்

புதிய ஒப்பனைகளோடு

சந்தையில் நிற்கின்றனர்

பழைய வேசிகள்'

(பக்கம் 26)

(எங்கே போகின்றோம் நாம் - தமிழருவி மணியன்)

**

ஐ.பி.சி நிறுவனத்தின் முடிவை வழிமொழிந்தவர்களுக்கும் ஒரு கவிதை இதே நூலில் காணப்படுகிறது.

'குதிரை ஏறப்போவதாக

கூறிக்கொண்டே

காலம் முழுவதும்

கழுதைமேல்

ஊர்வலம்'   -(அரவிந்தன் பக்கம் 11i)

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=a07bad2a-32f4-496e-b9df-3d2eecb1d846

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.