Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி விமான நிலையம் குறித்து ஆராய இந்தியக்குழு ஸ்ரீலங்காவிற்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி விமான நிலையம் குறித்து ஆராய இந்தியக்குழு ஸ்ரீலங்காவிற்கு விஜயம்

[ Wednesday,16 March 2016, 04:30:44 ]   
deepak%20shathiry.jpg

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்காவை சென்றடைந்துள்ளது.

பலாலி விமான நிலையம் புனரமைப்பு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்தானிகராலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் சாஷ்திரி ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் குறித்த குழுவினர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும், விமான நிலைய தொழில்நுட்ப பணிகள் தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் தீபக் சாஷ்திரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐந்துபேர் அடங்கிய குழு பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலாலி விமான நிலையம் புனரமைப்பு செய்யப்படுவதாக காணி நில அளவைகள் இடம்பெற்று வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

பலாலி விமான நிலையத்திற்காக 1987 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28 ஆம் திகதி பெருமளவிலான பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/20561

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கறுப்பி said:

பலாலி விமான நிலையம் குறித்து ஆராய இந்தியக்குழு ஸ்ரீலங்காவிற்கு விஜயம்

 

 

பலாலி விமான நிலையத்திற்காக 1987 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28 ஆம் திகதி பெருமளவிலான பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/20561

1987 இல் செய்ய முடியாமல் போனதை இப்ப 30 வருடம் கழித்து செய்யப்போறீயள்....செய்யுங்கோ.....தெற்கில் அம்புலண்ஸ் வண்டி ஒட்டுவதற்கே உங்களை அனுமதிக்க மாட்டாங்களாம் சிங்கள சகோதரயாக்கள்....ஆனால்  வட‌க்கில் விமானமே ஓட்டலாம் உங்களுக்கு.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.