Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர் பிரியும் வரை தூக்கிலிடுங்கள்! சேயா சிறுமி கொலை வழக்கின் தீர்ப்பில் நீதவான்

Featured Replies

5 hours ago, goshan_che said:

1) no one lives in a social vacuum. ஆகவே நம் எல்லோரின் நல்ல, தீய நடவடிக்கைக்கு ஒரு context ஆக சமூகம் இருந்தே தீரும். ஆனால் இந்த குற்றத்துக்கு சமூகம்தான் காரணமா? என்றால் இல்லை என்பதே என் நிலை. ஜட்ஜும் அப்படியே நினத்திருக்கலாம். சட்டத்தில் obiter dicta, ratio decedendi என்று சொல்லுவார்கள். ரேசியோ டிசிடெண்டி என்பது குறித்த வழக்கு பற்றி ஜட்ஜ் கூறுவது. ஒபிட்டர் என்பது வழக்கிற்கு சம்பந்தபட்ட இதர விபரங்களை பேசுவது. இந்த வழக்கில் ஒபிட்டர் குற்சிவாயுளது போலிருக்கு ( முழு ஜட்ஜுமெண்டை நான் படிக்கவில்லை) காரணம் ஜட்ஜ் இதை ஒரு தனிநபர் குற்றம் என்று கருதியுள்ளார்.

2) நீதித்துறை பற்றி தெரிந்திருப்பதால் கூறுகிறேன். சமூக சொற்பொழிவோ அல்லது சமூக காரணிகளை ஆராய்வதோ ஒரு நீதிபதியின் தொழில் அல்ல.

நீதிபதியின் வேலை, கிட்டத்தட்ட ஒரு கிரிகெட் அம்பயர் மாதிரி. நடக்கும் மெட்சில், இருக்கும் விதிகளை அமல் படுத்துவதுதான் அவர்கள் வேலை.

வீரகள், சூதாடுகிறார்கிறார்களா இல்லையா, இதர off the field விடயங்களை பற்றி அவர்கள் பேச வேண்டியதில்லை. சில நீதிபதிகள் ஓவ் தெ பாயிண்ட் ஆக போய் சிலதை பேசுவார்கள். அவ்வளவே.

இதை சிம்போலிக்காக காட்டத்தான் - நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கிறன.

மற்றும் படி தமிழ் திரைப் படங்களில் வருவது போல ஒரு social commentary கோர்ட்டில் நடப்பதில்லை. அங்கே விடயங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், குற்ற செயல் நடந்ததா( அக்டஸ் ரியஸ்), குற்றம் செய்வதுக்கான மனநிலை அல்லது எண்ணம் இருந்ததா ( மென்ஸ் ரியா), இரெண்டு கேள்விக்கும் ஆம் எனில் இதை செய்ததுக்கு தக்க மறுத்தான் ( valid defence) உண்டா ? என்பதே ஆராயப்படும். 3 கேள்விக்கும் ஆம் எனில் குற்றவாளி. 3 இல் ஒன்றுக்கேனும் இல்லை என பதில் வரின் சுற்றவாளி.

நீங்கள் சொல்லும் சமூகபாதிப்பு, வளர்ந்த முறை எல்லாம் - குற்றவாளி என தீர்ப்பானபின், தண்டனை காலத்தை கூட்ட/குறைக்க பயன் படும். Mitigating circumstances என்பார்கள்.

குற்றவியல் நடைமுறையில் - சமூககாரணிகளை பற்றி யாரும் ஆராய்வதில்லை.

அதுக்குரிய இடம், அரசியல் மேடைகள், பாராளுமன்றம் முதலிய சட்டவாக்க மையங்கள்.

நான் உங்களிடம் நீதி பரிபாலனத்துறையின் வழமையான சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றிய விளக்கம் கேட்கவில்லை. முன்பு நானும் தேவையில்லாமல் கைது செய்யப்பட்டு சிறீ லங்கா சிறைக்கு சென்றுள்ளேன். அங்கே காவல்நிலையம், தொடக்கம் நீதிமன்றம் சிறைவரை என என்ன பலாய் நடக்கின்றது என்பதை நேரில் கண்டு அனுபவித்து அறிந்தவன்.  

நீங்கள் எப்போதாவது கைது செய்யப்பட்டு இருக்கின்றீர்களா? சிறைக்கு சென்று இருக்கின்றீர்களா? அந்த அனுபவம் எப்படி உங்களுக்கு இருந்தது? அங்கே பாரிய குற்றங்கள் புரிந்த சிறைக்கைதிகளுடன் உரையாடி இருக்கின்றீர்களா? நீங்கள் உங்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி அதாவது நீங்களே இந்த ஐந்து வயது சிறுமியை கொலை செய்திருந்தால் எப்படி உங்கள் நிலமை இருக்கும் என்று சற்று கற்பனை செய்து சிந்தித்து உங்கள் கருத்தை சொல்லமுடியுமா? அதாவது நீதிபதி மரணதண்டனையை உங்களுக்கு அறிவிக்க முன்னர் நீங்கள் ஏதாவது கூறவிரும்புகின்றீர்களா என உங்களைப்பார்த்து கேட்கின்றார், உங்கள் பதில் என்னவாக அமையும்?

எல்லோரும் வில்லங்கமான நிலமைகள் வரும்போது அடுத்தவனை கையைக்காட்டி விட்டு தாம் நழுவிவிடுவது வழமை. நீங்களும் அவ்வாறே நாங்கள் சட்டத்துறையில் இருக்கின்றவர்கள் சமூகத்தின் ஓட்டை உடைசல்களை அடைப்பதற்கு லாயக்கு அற்றவர்கள், எங்களுக்கு பவுன்டரி சிக்ஸர்கள் ஆட்டமிழப்புக்களிற்கு கையைநீட்டவும், தூக்கவும் மட்டுமே முடியும், பாராளுமன்றத்தில் கதிரைக்கு போட்டியிடுபவர்களே நீதி பரிபாலனத்துறையில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்று எழுதுகின்றீர்கள். அதாவது உங்களிற்கு தேவை பணமும், பதவியும், கெளரவமும், சமூக அந்தஸ்தும்  மட்டுமே. இதுதான் யதார்த்தம். மற்றும்படி விளக்குகளை அணைப்பது, மின் விசிறிகளை நிறுத்துவது,  மெளனமாக எழுந்து நிற்பது, பின்னர் எடுப்பாக மரணதண்டனை என்று கூவுவது, கையொப்பம் இடுவது, பின்னர் அருமந்த பேனையை உடைத்து எறிவது... இந்த கூத்துக்கள் எல்லாம் சுத்த பம்மாத்து வேலைகள். நீங்கள் நீதித்துறை நாடகத்திற்கானது அரங்கவியல் இல்லை என்று சொல்கின்றீர்கள். ஆனால், ஆரம்பம் தொடக்கம் மேலேயுள்ள செய்தியை  முழுமையாக ப்படித்துப்பாருங்கள், அங்கே நாடகம் போல் அல்லாமல் வேறு ஏது உருப்படியாக நடக்கின்றது?

நீதித்துறை நவீனத்துவம் அடையவேண்டும். அதற்கு உங்களைப்போல் நீதித்துறையில் பங்கெடுப்பவர்கள் அதற்கான Initiatives ஆரம்ப முயற்சிகளை எடுக்கவேண்டும். அதைத்தான் நான் இங்கே முக்கியமாக எதிர்பார்க்கின்றேன். மற்றும்படி, இலங்கை நீதிமன்றம் என்றால்.... முதலில் நீதி பரிபாலனத்துறையில் பணியாற்றுவதற்கு, பங்கெடுப்பதற்கு எவர் எவர்க்கு யோக்கியதை உண்டு என்பதே கேள்விக்குறி.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

1) சிறைக்குப்போனதில்லை ஆனால் ஒரு 10 வருடம் தினமும் சிறைக்குள் போயிருக்கிறேன். இதையொத்த குற்றம் புரிந்த ஒருவரின் வழக்கிலும் வேலை செய்திருக்கிறேன். அதனடிப்படியில், பட்டறிவின் பால்பட்டே நான் எழுதுகிறேன்.

2) நீங்கள் சொல்லும் சீர்திருத்தம் நீதிதுறையில் நடக்கவே செய்கிறது. டி என் ஏ எவிடண்ஸ், இன்னும் பல விடயங்கள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகிறன. ஆனால் சமூக மாற்றம் நீதிமன்றில் இருந்து வராது. வரவும் கூடாது. இது தட்டிக்கழிக்க சொல்லவில்லை. ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்று separation of powers. நீதி, நிர்வாகம், சட்டவாக்கம் இந்த மூன்றுக்கும் தெளிவாக வரையறைகள் உள்ளன. அவற்றிக்குள் இருந்து வெளியே போகக்கூடாது. போனால் ஜனநாயகமே ஆட்டம் காணும். இந்தியாவில் இன்னும் ஓரினச்சேர்கை சட்டப்படி குற்றம். உயர்நீதி மன்று இதை தள்ளுபடி செய்ய, உச்சநீதிமன்றம் அந்த சட்டத்தை மீள் நிலை நிறுத்தியது. அப்போ உச்ச நீதி மன்று கொடுத்த விளக்கம். சட்டம் மோசமானதா இல்லையா என்பதை தீர்மானிப்பது பராளுமன்று, நீதிமன்றல்ல. இதில் பதவி, பணம், கெளரவம் எங்கே வந்தது என்று புரியவில்லை.

3) ஒரு குழந்தையை இம்சித்துக் கொண்டேன் என்று நான் குற்றம் நிரூபணமாகி கூண்டில் நிற்கும் போது, இதே கேள்வியை நீதிபதி என்னிடம் கேட்டால் " எனது மோறல் கொம்பாஸ் பழுதடைந்து விட்டது, எனக்கு நல்லதுக்கும் கெட்டதுக்கும் வேறுபாடு தெரியவில்லை. தயவு செய்து என்னை ஒருபோதும் சிறையில் இருந்து விடுவிக்காதீர்கள். ஏனெனில் இது வேறும் பலருக்கு ஆபத்தாய் முடியும்" என்றே நான் சொல்லியிருக்க கூடும். இப்படி பலர் முன்பு கோர்ட்டில் சொல்லி இருக்கிறார்கள்.

4) ஒரே சூழலில், ஒரே பள்ளியில், ஒரே பெற்றோருக்கு பிறந்த இரு சகோதரகள் ஒருவர் உழைத்து வாழ்பவராயும் மற்றயவர் கள்ள மட்டை போடுபவராயும் வாழ்கிறார்கள். இதில் எங்கே இருக்கிறது சமூகத்தின் பங்கு? இலங்கையில் யாரும் போதைவஸ்தை கடையில் விற்பதில்லை. சிறுமிகளை சீரழிப்பதை அந்த சமூகம் ஒரு நல்ல விடயம் போல் பார்பதில்லை. இவை எல்லாம் அந்த சமூகங்களால் தீமையாகவே பார்க்கப் படுகிறன. அப்படியிருக்க சமூகத்தின் ஓரங்களில் நடக்கும், விதிவிலக்குகளை காட்டி சமூகத்தில் மாற்றம் தேவை என வாதிட முடியாது. 

இந்த திரியை பாருங்கள். யாழ்பாணத்திலே, புலி இருக்கும்போது கூட, மாட்டையும் விட்டு வைக்காதவார்கள் இருந்திருக்கிறார்கள். அதற்க்காக யாழ் சமூகத்தில் இது பரவலாய் காணப்படுகிறது, இது பற்றி ஒரு சமூக மாற்றம் தேவை எனச் சொல்ல முடியுமா? இல்லை.

5) இந்த திரி வார இறுதியையும் தாண்டிச் செல்வதால் இத்தோடு முடிக்கிறேன். முடிவாக, நான் ஆரம்பத்தில் கூறியது போல, கொலைகாரர்கள் உருவாவதில் nature (பிறப்பு) ற்கும், nurture ( சூழலுக்கும்) பங்கிருக்கிறது என்பது மட்டும் உண்மை. இயற்கையிலே குரூபியாய் இருப்பவர்கள் சூழலும் தப்பாய் அமைந்தால் இலகுவில் கொலைகாரர் ஆகிறார்கள். இயற்கையில் குரூபி அல்லாதோர் சூழல் தப்பாய் அமைந்தாலும் அதில் இருந்து மீண்டு விடுகிறார்கள்.

நேரத்துக்கு நன்றி

வணக்கம்.

 

உங்கள் நேரத்திற்கும், விவாதத்திற்கும் நன்றி. நான் இந்த செய்தியை கைத்தொலைபேசியில் பார்த்தேன். உடனடியாக எனது கருத்தை தெரிவிப்பதற்கு வசதி கிடைக்கவில்லை. இப்போது வீட்டில் வசதியாக நிற்பதால் கொஞ்சம் விபரமாக எழுதமுடிகின்றது. நான் இந்தச்சிறுமியை கொலைசெய்து குற்றவாளிக்கூண்டில் நின்றால் எனக்கு மரணதண்டனை தரப்படமுன்னர் நீதிபதி ஏதும் கூற விரும்புகின்றாயா என்று என்னைப்பார்த்து கேட்டால் எனது பதில் நிச்சயம் சமூகத்தை கடுமையாக சாடுவதாகவே இருக்கும். உங்களைப்போல் பெருந்தன்மையுடன் பதில் கூறமாட்டேன். ஏன் என்றால் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த, பார்த்த, அனுபவங்கள், படிப்பினைகள் அப்படி. வணக்கம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.