Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை வீழ்த்த மகிந்த செய்த நரபலி வேள்விகள்! ஜோதிடர் அதிர்ச்சி தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை வீழ்த்த மகிந்த செய்த நரபலி வேள்விகள்! ஜோதிடர் அதிர்ச்சி தகவல்!
பிரபாகரனை வீழ்த்த மகிந்த செய்த நரபலி வேள்விகள்! ஜோதிடர் அதிர்ச்சி தகவல்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். அதன் பிரதிபலனாக ஆட்சி அதிகாரங்களை இழந்திருந்தார். இந்நிலையில் மகிந்த ஜோதிடம் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவர் செய்த பரிகாரங்கள்இ பூஜைகளை சோதிடர் டப்ல்யூ.டீ.ஆரியரத்ன அம்பலப்படுத்தியுள்ளார்.

நாட்டில் நிலவிய போரை நிறைவு செய்து கொடுக்குமாறு கூறி தனது இரண்டு மாடி வீட்டில் மேற்கொண்ட காளி பூஜை மற்றும் இதுவரையிலான காலப்பகுதியில் மேற்கொண்டுள்ள பூஜை வழிபாடுகள் தொடர்பிலான முழுமையான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

பத்ரகாளி மற்றும் கல்லரை காளி அம்மா இருவரையும் வணங்கி கொண்டு தான் நான் இந்த பூஜையை ஆரம்பித்தேன். விடுதலைப் புலிகளின் தலைவர் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கல்லரை காளி அம்மாவுக்கு இரத்த பூஜை கொடுக்கும் போது, நான் நாட்டு மக்களுக்காக பால் பூஜை கொடுத்தேன். கல்லரை காளி அம்மாவுக்கு இரத்த பூஜை தான் மிகவும் பிடிக்கும். எனினும் நான் அதற்கு பழகவில்லை.

நான் பால் பூஜையை வித்தியாசமான முறையில் வழங்கி என் கோரிக்கையை கூறினேன். கல்லரை காளி அம்மாவிடம் நல்லது ஒன்றை எதிர்பார்க்கவும் முடியாது. கெட்ட விடயங்கள் மாத்திரமே. ஸ்ரீ பத்திரகாளி அம்மாவுக்கு நான் பழ பூஜை ஒன்றை கொடுத்தேன். சிறிது சிறிதாக பிரபாகரனின் கட்டுகள் உடைக்கப்பட்டன. இந்த நாட்டில் போர் நிறைவடைந்து நாட்டிற்கு சமாதானம் ஏற்படும் வரையில், அசைவ உணவுகளை தவிர்த்து பெற்றோர் மரணித்திருந்தாலும் அவற்றில் கலந்து கொள்ளாமலும், பிரம்ம வாழ்க்கை வாழ்வதாக பத்திர காளி அம்மா முன் வாக்குறுதியளித்தே இந்த வேலையை ஆரம்பித்தேன்.

அந்த வாக்குறுதியை நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வரையில் நிறைவேற்றினேன். அந்த காலப்பகுதியில் எனது அப்பா மற்றும் அண்ணா மரணித்து விட்டனர். அந்த ஒரு மரணச் சடங்குகளிலும் நான் கலந்து கொள்ளவில்லை. எனது இரண்டு மகள்களின் திருமணங்களில் கலந்து கொள்ள முடியவில்லை.

எனினும் எனது வாழ்க்கை நினைக்காத பலவற்றை பெற்றுக் கொண்டேன். பின்னர் அந்த இடத்திற்கு அருகிலே இரண்டு மாடி வீட்டை பணத்திற்கு பெற்றுகொண்டேன். அவ்வாறே காலங்களில் நகர்ந்த சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகினார். கடந்த காலங்களில் என்னை மரணத்தில் இருந்து காப்பாற்றியதனை மனதில் வைத்து கொண்டு, அதுவரையில் நாட்டில் இருந்த பலமான தலைவராக மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு உதவி செய்வதற்கு ஆயத்தமாகினேன்.

எனது சோதிட அறிவு மற்றும் தாயத்து மந்திரங்களில் மகிந்தவை வெற்றி பெற செய்வதற்கு நான் பெரிய விடயம் ஒன்றை செய்தேன். அதனை செய்து மகிந்தவை ஜனாதிபதியாக்கிய பின்னர் அவரை சந்திக்க அலரி மாளிகைக்கு சென்றேன். அந்த சந்தர்ப்பத்தில் அவர் என்னை மிகவும் நல்ல விதமாக வரவேற்றார். அதன் பின்னர் 2006ஆம் ஆண்டு போரை நிறைவு செய்வதற்கு மகிந்த மனிதாபிமான செயற்பாடுகளை மேற்கொண்டார்.

போரின் போது அதிக இரத்தம் சிந்தாமல் நிறைவு செய்து நாட்டிற்கு சமாதானத்தை ஏற்படுத்துமாறு காளி அம்மாவிடம் மீண்டும் நேர்ந்து கொண்டேன். அப்படி நடந்தால் நான் வசிக்கும் இந்த இரண்டு மாடி வீட்டை காளி அம்மாவுக்கு பூஜை செய்து ஒரு கோயிலாக மாற்றுவதாக வாக்குறுதியளித்தேன். அனைத்து சிங்கள யாத்ரPகர்களை ஒரு இடத்திற்கு அழைத்து வந்து பெரிய அளவிலான மத புண்ணிய செயற்பாடொன்றை மேற்கொள்வதாகவும் வாக்குறுதியளித்தேன்.

அத்துடன் பௌத்த மக்களுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என புத்தர் வழிபாடு மேற்கொள்வதாகவும், வாக்குறுதியளித்தேன். அவ்வாறு வாக்குறுதியளித்து எங்கள் வேலைகளை மேற்கொண்டு சென்றோம். அதனை தொடர்ந்து போர் நிறைவடைந்தது. காளி அம்மாவுக்கு வாக்குறுதியளித்ததனை போன்று 2010ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 16, 17, 18 ஆம் திகதி ஆகிய நாட்களில் பெலியத்தை டீ.ஏ.ராஜபக்ச மைதானத்தில் பெரிய அளவிலான சாந்தி ஒன்றை செய்தோம்.

அனைத்து மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலாசார நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன. தானங்கள் வழங்கப்பட்டன. பிரித் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்து எனது தனிப்பட்ட செலவுகளாகும். 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03ஆம் திகதி வாழும் எனது வீட்டை கடவுளுக்கு பூஜையிட்டேன். பௌத்த மக்களுக்காக எண்பத்து நாலாயிரம் புத்தர் சிலைகளுக்கான பூஜை வழிப்பாடு வாக்குறுதியையும் நிறைவேற்றுவதற்காக புத்தர் ஜெயந்தியை அண்மித்த சந்தர்ப்பத்தில் புத்தர் சிலைகளுக்கான வேலைகளை ஆரம்பித்தேன்.

முதலில் களனி விகாரையில் ஆரம்பித்து இரண்டாயிரத்து 600 சிலைகளுக்கு பூஜையிட்டேன். மீண்டும் புத்தர் சிலை பூஜைகளை ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பித்து நாடு முழுவதும் 14 தானங்களை வழங்கினேன். மண்ணினால் செய்யப்பட்ட சிலைகளை நாங்கள் செய்யவில்லை. இரசாயனத்தில் கற்தூள்கள் பயன்படுத்தி செய்யப்பட்ட சிலைகளையே செய்து பூஜை செய்தோம்.

எனினும் அதற்கான நற்பெயர்கள் அனைத்து ஜனாதிபதி மாளிகையினால் மேற்கொள்ளப்படுவதாகவும், நாமலின் தருணயன்ட ஹெடக் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவுமே கூறப்பட்டன. எனினும் அவற்றை குறித்து நான் கவலைப்படவில்லை. எனது கடமைகளை நான் படிப் படியாக நிறைவேற்றி வந்தேன். நான் வசித்த வீட்டை உடைத்து கோயில் ஒன்றை கட்டினேன்.

நேர்ந்து கொண்ட அரசியல்வாதிகள் ஒருவரும் உதவிக்கு வரவில்லை. இதன்போது என்னிடம் இருந்த அனைத்து பணமும் முடிந்து விட்டன. பின்னர் வீட்டை வங்கியில் அடகு வைத்து 90 லட்சம் பெற்றுகொண்டு கோயிலுக்கான வேலைகளை ஆரம்பித்தேன் எனினும் ஏதாவது ஒரு தடை ஏற்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

காளி அம்மாவுக்கு நேர்ந்து கொண்டது நான் அல்லது மஹிந்த ராஜபக்ச. அவர் புண்ணிய நடவடிக்கைகளுக்கு உதவவில்லை என்றால் அவை வெற்றியளிக்காது. மஹிந்த ராஜபக்சவுக்கு இது குறித்து நினைவூட்டுவதற்கு பல சந்தர்ப்பங்கள் ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல முயற்சித்தேன் எனினும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பின்னர் படிப்படியாக மஹிந்தவை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர்.

ராஜபக்ச அரசாங்கத்தினுள் பிரச்சினை ஏற்பட்டது. இறுதியில் நினைக்காத வகையில் ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். தெற்கில் தலைவர் ஒருவரை உருவாக்குவது கந்த விகாரையின் தலைமை தேரர்களின் கனவாக காணப்பட்டன.  நாட்டின் தலைவராகுவதற்கு மகிந்த ராஜபக்ச தகுதியானவர் என தலைமை தேரர் எண்ணினார். அதன் பின்னர் மஹிந்தவை தலைவராக்குவதற்கு தேரர் பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டார்.

மகிந்தவுடன் போட்டியிடுவதற்கு வந்த அனைவரையும் சிறைப்படுத்தினார். அந்த சிறை கட்டினை அவிழ்ப்பதற்கு முன்னர் தான் மரணித்து விடுவேன் அதனால் என்னை சிறை கட்டினை கட்டுமாறு கூறினார். எனினும் இவை யாருக்காக செய்ய வேண்டும் என நான் அறிந்திருக்கவில்லை. பின்னர் தான் அறிந்து கொண்டேன். 2010ஆம் ஆண்டு தான் இவை மேற்கொள்ளப்பட்டன. 2011 மே மாதம் 13ஆம் திகதி தேரர் காலமானார். தேரரிடம் இருந்த பெறுமதியான அனைத்து பொருளும் எனக்கு கிடைத்து விட்டன.

மகிந்த என்னை புறக்கணிப்பது தொடர்பில் என்னிடன் வேலை செய்து கொள்ள வந்த ஐ.தே.கவின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கூறியதோடு கந்த விகாரையின் தலைமையின் தேரரின் சிறை கட்டினை பற்றியும் கூறினேன். நான் மஹிந்தவுக்கு உதவியதற்கு கொள்கை ரீதியில் நானும் ஐ.தே.க காரன் தான். இதன்போது குறித்த உறுப்பினர் கட்டினை வெட்ட முடியுமா என என்னிடம் வினவினார். நான் முடியும் என்றேன். அப்படி என்றால் தற்போதே வேலையை ஆரம்பிக்குமாறு கூறி அவரால் தொடர்ந்து நேரம் கொடுக்க முடியாதென்பதனால் இளம் அரசியவாதி ஒருவரை எனக்கு அறிமுகம் செய்தார்.

பின்னர் கட்டினை வெட்டி ஐக்கிய தேசிய கட்சியை வெற்றி பெற செய்து தருமாறு காளி அம்மா முன் குறித்த இளம் அரசியல்வாதி நேர்த்திக்கடன் ஒன்றை முன்வைத்தார். மற்றுவர்கள் போன்று அல்ல நாங்கள் கூறுவதனை செய்பவர்கள். எனவும் கூறினார். உண்மையில் நான் அந்த வார்த்தைகளை நம்பினேன். காலமான தேரரின் செய்வினை கட்டுகளை வெட்டி நீக்கி விட்டு 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வெற்றி பெறுவதற்காக காளி அம்மாவிடம் கோரிக்கை வைத்தேன். அதனை நிறைவேற்றினால் சிலவற்றை நிறைவேற்றுவதாக கூறினேன்.

நாங்கள் வேலையை ஆரம்பித்தோம். வெற்றிகரமாக கட்டுகளை வெட்டி நீக்கினோம். நாட்டில் அரசாங்கமும் மாற்றமடைந்தது. குறித்த இளம் அரசியல்வாதி பிரதேச பிரதேசமாக சென்று எதிர்பார்க்காத வகையில் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் நேர்ந்து கொண்ட ஒன்றையும் நிறைவேற்றவில்லை. காளி அம்மாவுக்கு நேர்ந்து விட்டு செய்யவில்லை என்றால் அது மிகப்பெரிய குற்றமாகும். நிச்சயமாக காளி அம்மா பழிவாங்குவார்.

நேர்ந்து கொண்டவைகளை மேற்கொள்ளாமையினால் இந்த அரசாங்கத்தினருக்கும் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை ஏற்பட ஆரம்பித்து விட்டது. அந்த செய்வினை கட்டினை வெட்டுவதற்கு தொடர்ப்புபட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர் தற்போது எதிர்பார்க்காத வகையில் நோய்வாய்ப்பட்டுள்ளார். அவருக்கு மாத்திரம் அல்ல கட்டினை வெட்டிய எனக்கும் நெஞ்சு வலி ஏற்பட்டது. கடந்த வாரம் பெலியத்த வீட்டிற்கு சென்று திரும்பும் போதே இந்த வலி ஏற்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் தங்காலை வைத்தியசாலை நான் அனுமதிக்கப்பட்டேன். பின்னர் அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் தலையிட்டு என்னை கொழும்பிற்கு அழைத்து வந்தார்கள். தேசிய வைத்தியசாலையில் மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டது. வைத்தியர்கள் சத்திரகிசிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்கள். வாழ்வதற்கான அதிஷ்டம் 10 வீதமே உள்ளன என வைத்தியர்கள் கூறினார்கள். பிரச்சினை இல்லை சத்திரசிகிச்சையை மேற்கொள்ளுமாறு வைத்தியரிடம் கூறினேன்.

நான் பாவம் செய்யவில்லை. எனக்கு ஒன்றும் ஏற்படாதென நான் நம்பினேன். சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்து விட்டன. நான் இன்னும் வாழ்கின்றேன். எனினும் வங்கியில் அடகு வைத்த வீட்டை மீட்டுக் கொள்வதற்கு பல மாதம் செலுத்தவில்லை என்பதனால் வங்கியில் இருந்து சிவப்பு அறிக்கையும் வந்துவிட்டது. எனது சொத்துக்களை நான் எனக்காக பூஜை செய்யவில்லை. நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றே செய்தேன்.

எனினும் நேர்ந்து கொண்டதனை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது உள்ள அரசாங்கத்தினுள் பல பிரச்சினைகள் உள்ளன. பார்க்கும் போது இந்த அரசாங்கத்தின் ஆயுள் குறைவாகவே காணப்படுகின்றது. எதிர்காலத்தில் நாட்டில் புதிய தலைவர் உருவாகுவார். அவர் தான் நாட்டை இணைப்பார். கடவுளுடன் வேலை செய்வதனை விடவும் அரசியல்வாதிகளுடன் வேலை செய்வதே கடினம் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
22-Mar-2016 09:17 am

http://onlineuthayan.com/news/11339

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா சொல்றாரய்யா, டீரெயிலு!! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.