Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெருமூடி மடம் - தொன்ம யாத்திரை ஓர் அறிமுகம்

Featured Replies

10644930_1040967282624586_66273234415859

தொன்ம யாத்திரை - ஓர் அறிமுகம்

மரபின் அழிப்பென்பது ஓர் இனத்து இருப்பின் அழிப்பு வரலாற்றின் அழிப்பு . அதனை மீட்பதென்பது அதன் சந்ததிகளின் கடமை . சொற்ப அளவிலான நிலங்களும் மரங்களும் குளங்களும் ஏரிகளும் கட்டடங்களும் தமக்கென்ற வரலாற்றுக் காலகட்ட சாட்சியமாக நம்மிடம் எஞ்சி நிற்கின்றன . பண்பாட்டு உற்பத்திகள் கைவினைகள் வழக்குகள் ,நடைமுறைகள் , ஆற்றுகைகள் போன்ற சமூக அசைவியக்கத்தின் பேறுகளை நாம் அடையாளம் காணுதல் நமது காலகட்டத்தின் தேவையென உணருகிறோம் .
பெரும்பான்மை இனத்தின் புதிய அடையாள உருவாக்கங்கள் நிகழும் இக்கால கட்டத்தில் நமது தொன்மையை அறிதலும் கொண்டாடுதலும் நம்மிடம் இருக்கும் ஓர் எதிர்ப்பு நடவடிக்கை .இந்த அடிப்படையில் நமது தொன்மங்களை புழக்கத்திற்குறிய கொண்டாட்டத்திற்குரிய இடங்களாக மாற்றுவதற்கான ஒரு முன்னெடுப்பே 'தொன்ம யாத்திரை '.
இதில் பல சகோதர அமைப்புக்கள் இணைந்து கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளன . இதன் உள்ளடக்கம் வருமாறு ,

1 - முன்கள ஆய்வு

இதன் போது எந்த இடத்தை தெரிவு செய்தல் அது தொடர்பாக குறித்த பிரதேச மக்களிடம் ஏற்கனவே இருக்கும் தொன்மக் கதைகள் போன்றவற்றை அறியவும் அங்கே என்ன வகையான நடவடிக்கைகள் , உரையாடல்கள் , ஆற்றுகைகளை நிகழ்த்தலாம் என்பன பற்றியும் , குறித்த பிரதேச சனசமூக நிலையங்கள் , இளைஞர் அமைப்புக்கள் போன்றவற்றை சந்தித்து மேற்படி நடவடிக்கை தொடர்பான அவற்றின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ளப்படும் .

2 - யாத்திரை

தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு சில கிலோமீட்டர் முன் தொடங்கி அது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தும் , பதாகைகள் தாங்கியும் யாத்திரை இடம்பெறும் .

3 - ஆற்றுகைகள் - கொண்டாட்டம்

குறித்த இடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிலான ஆற்றுகைகளும் , உரைகளும் , நடைபெறும் . இயற்கை சார் உணவுகள் வழங்கப்படும் , நாடுப்புற வடிவங்கள் , கூத்தின் சில பகுதிகள் , அல்லது பிரதேசம் சார் மக்கள் பாடல்கள் இசைக்கப்படும் .

சில மணி நேரங்கள் மட்டுமே கொண்ட இந்த நிகழ்வானது நமது மரபை கொண்டாடவும் , நமது தலைமுறையின் புதிய கொண்டாட்ட வழிமுறைகளைக் கண்டடைவதற்குமாகும் .
மேற்படி யாத்திரைகளின் நீட்சியாக அவை தொடர்பான ஆவணமாக்கல் (எழுத்து , காணொளி , புகைப்படங்கள் ) நடைபெறும் . குறித்த இடங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான பொறிமுறைகளைக் கட்டமைக்கவும் , அவை தொடர்பான சமூகவியல் ஆய்வுகளை அகலப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் . தொல்லியல் திணைக்களத்திற்கும் , குறித்த அரச நிறுவனங்களுக்கும் இவற்றின் பராமரிப்பு தொடர்பிலான எமது அழுத்தம் வழங்கப்படும் .

உங்களுடைய கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன , இணைந்து கொள்ளுங்கள் அனுபவத்தைப் பகிருங்கள் .
முதலாவது யாத்திரை - தெருமூடி மடம், பருத்தித்துறை பஸ் நிலையத்திற்கு அருகில் .
குறிப்பு - இந் நிகழ்வானது " பசுமை நடை " (Muthu Krishnan) "ஊர்க் குருவிகள் " ஊர்க்குருவிகள் போன்ற தமிழ்நாட்டில் இயங்கும் அமைப்புக்களின் செயற்பாடுகளின் மூலம் தோன்றிய சிந்தனை , மேலும் கடந்த காலங்களில் (2002) யாழ்ப்பாணம் நுண்கலைப் பீடம் மேற்கொண்ட மரபு காக்கும் நடவடிக்கைகளின் ஒரு தொடர்ச்சியுமாகும் . அவை நமக்கு முன்னோடியான நடவடிக்கைகள் .

கிரிஷாந்த்
செயற்பாட்டாளர் ,
விதை குழுமம் .

 

நன்றி முகநூலிலிருந்து

ஜீ உமாஜி
  • 1 month later...
  • தொடங்கியவர்

தொன்ம யாத்திரை 01 நிறைவடைந்துள்ளது .
தெருமூடி மடம் மீதான விழிப்பையும் வாசிப்பையும் மேற்கொள்ளும் பொருட்டு இன்றைய யாத்திரையில் 
மக்களுக்கான விழிப்பு கையேடு வினியோகிக்கப்பட்டதுடன் ஊர் மக்களிடையே தங்களுடைய மரபுச்சொத்து பற்றிய விழிப்புணர்வுக்குரிய உரையாடல் அசைவினை எங்களால் இயன்ற வரை உந்தித்தள்ளியிருக்கிறோம்.
தெருமூடி மடம் பற்றிய கதையாடல்களுடன் பறை இசை , கூத்துப் பாடல்கள்- உரையாடல்கள் உள்ளிட கொண்டாட்டங்களை மோருடனும் புன்னகையுடனும் தெருமூடி மடத்தின் திண்ணையில் கொண்டாடியது அனைவருக்கும் மகிழ்ச்சி.
கொண்டாட்டத்தின் முன்னும் கொண்டாட்டத்தின் போதும் தெருமூடிமடம் பற்றிச் சேகரிப்பான , தரவுகள் , தகவல்கள் , கதைகள் , நம்பிக்கைகள் , அனுபவங்கள் எழுத்து பிரதிகளாகவும் எண்ணிம ( டியிற்றல்) பிரதிகளாகவும் ஆவணமாக தொகுக்கப்படவுள்ளன.
தொடர்ந்தும் மடம் தொடர்பில் அரச பொறுப்புத் தளங்கள் அதனைப் பாதுகாக்கவும் தொல்பொருள் சின்னமாக அறிவித்து , மரபுசார் இருப்பையும் சுற்றுலா உள்ளிட்ட அதனை கொண்டாடும் பயனுள்ளதாக்கும் வேலைத்திட்டங்களை ஏற்படுத்தவும் மக்களின் பெயரால் அழுத்தங்களை தொடர்ந்தும் தொன்ம யாத்திரை அமைப்பும் அதன் செயற்பாட்டாளர்களும் வழங்குவார்கள்.
வருகை தந்த நண்பர்களுக்கும் , இதை பற்றிய உரையாடல் வெளியையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்திய எல்லோருக்கும் நன்றியும் அன்பும்.
தொடர்ந்தும் தொன்மங்களை நோக்கி நகரவுள்ள யாத்திரைக்கு உங்களின் சிந்தனையையும் செயலையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
via- யதார்த்தன் 
செயற்பாட்டாளர் , விதை குழுமம்.
(-விதை - அக்கினிச் சிறகுகள் - Jaffna today )
photos -பிறைநிலா 
(பத்திரிகையாளர் -செயற்பாட்டாளர் விதைகுழுமம்)

12718197_829336490526444_461108624314985

12963726_829337067193053_778644642431703

12993478_829336947193065_588630212444316

 

12963420_829337763859650_373489544361227

தொன்ம யாத்திரை - 01 தெருமூடி மடம்.முழுப்புகைப்படத்தொகுப்பு.

https://www.facebook.com/Thonma-Yathirai-தொன்ம-யாத்திரை-822197481240345/photos/?tab=album&album_id=829336270526466

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.