Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IPL 9 செய்திகள் கருத்துக்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

குஜராத்- பெங்களூரு இன்று பலப்பரீட்சை: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?- தோல்வியடையும் அணிக்கு 2-வது வாய்ப்பு கிடைக்கும்

 

 
விராட் கோலி | ரெய்னா
விராட் கோலி | ரெய்னா

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டமாக கருதப்படும் தகுதி சுற்றில் குஜராத் லயன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இப்போட்டியை சோனி இஎஸ்பின் சானல் நேரடி ஒளிபரப்பு செற்கிறது.

லீக் ஆட்டங்களின் முடிவில் குஜராத், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடித்த குஜராத்-பெங்களூரு அணிகள் இன்று முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதுகின்றன.

2-வது வாய்ப்பு

அதேவேளையில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத்தும், 4-வது இடம்பிடித்த கொல் கத்தா அணியும் நாளை (25-ம் தேதி) ‘வெளியேற் றும் சுற்றில்' சந்திக்கின்றன. முதல் தகுதி சுற்று ஆட்டத் தில் வெற்றி பெறும் அணியா னது நேரடியாக இறுதிப்போட் டிக்கு முன்னேறும். இதில் தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் தகுதி சுற்றில் தோல்வி அடையும் அணி, வெளியேற்றும் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். 27-ம் தேதி நடைபெறும் இந்த ஆட்டமே 2-வது தகுதி சுற்று ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி 29-ம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது.

விராட் கோலி

பெங்களூரு அணி தகுதி சுற்றுக்கு முன்னேறியதில் கேப் டன் விராட் கோலியின் பங்க ளிப்பு அதிகம் உள்ளது. அந்த அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களை யும் நாக்-அவுட் போட்டி போன்று, நெருக்கடியில் சந்தித்து வெற்றி கண்டது.

இந்த 4 ஆட்டத்திலும் கோலி முத் திரை பதிக்க பெங்களூரு அணி முறையே குஜராத் அணியை 144 ரன் கள் வித்தியாசத்திலும், கொல்கத் தாவை 9 விக்கெட் வித்தியாசத் திலும், பஞ்சாப்பை 82 ரன் கள் வித்தியாசத்திலும், டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது.

வாழ்வா, சாவா போராட்டமாக அமைந்த டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை 138 ரன் களுக்குள் கட்டுப்படுத்தி துரத்த லில் 54 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார் கோலி. இந்த தொடரில் அவர் 4 சதங் கள், 6 அரைசதங்கள் என சராசரி 91.90 உடன் 919 ரன்கள் குவித்துள்ளார்.

அசுர பார்மில் உள்ள கோலி இன்னும் இரு ஆட்டங் களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இரு முறை கைநழுவிய கோப்பை யை இம்முறை பெங்களூரு அணி கைப்பற்ற வாய்ப்புள்ளது. அந்த அணி 2009 மற்றும் 2011 தொடர் களில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டிருந்தது.

சொந்த மண் சாதகம்

இந்த சீசனில் சின்னசாமி மைதானத்தில் குஜராத் அணியை இரண்டாவது முறையாக சந்திக்கிறது பெங்களூரு அணி. லீக் சுற்றில் அந்த அணிக்கு எதிராக இந்த மைதானத்தில் பெங்களூ 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது. அந்த ஆட்டத்தில் டி வில்லியர்ஸ் 129, கோலி 109 ரன்கள் விளாசியிருந்தனர்.

இன்றைய ஆட்டத்தை சொந்த மண்ணில் எதிர்கொள்வது பெங்க ளூரு அணிக்கு சாதகமான விஷய மாக கருதப்படுகிறது. கேப்டன் கோலி எதுவும் சாத்தியமாகும் என்ற மந்திரத்துடன் பேட்டிங் கிலும், அணியை வழிநடத்துவ திலும் மெருகேறியுள்ளார்.

கோலியுடன் டிவில்லியர்ஸூம் சூப்பர் பார்மில் உள்ளார். அவர் இந்த தொடரில் 1 சதம், 5 அரை சதங் களுடன் 603 ரன்கள் சேர்த்துள்ளார். தொடரின் ஆரம்ப கட்டத்தில் தட்டுத்தடுமாறிய கிறிஸ் கெய்ல் இறுதிக்கட்டத்தில் அதிரடிக்கு திரும்பியிருப்பது அணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

யுவேந்திரா ஷாகல்

பெங்களூரு அணியின் பந்து வீச்சையும் பாராட்டியே ஆக வேண் டும். ஆரம்ப கட்ட ஆட்டங்களில் 180 ரன்களுக்கு மேல் குவித்தும் பலம் இல்லாத பந்து வீச்சால் பெங்களூரூ அணி தோல்வியை தழுவ நேரிட்டது. ஆனால் லீக் ஆட்டங்களின் கடைசி கட்டத்தில் அனுபவம் இல்லாத பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு வெற்றிக்கு உதவினர்.

சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திரா ஷாகல் 11 ஆட்டத்தில் விளையாடி 19 விக்கெட் கைப்பற்றியுள்ளார். காயம் காரணமாக தொடரின் பிற்பாதியில் விலகிய மிட்செல் ஸ்டார்க்குக்கு பதிலாக இடம் பெற்ற கிறிஸ் ஜோர்டான் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 16 விக்கெட் கைப்பற்றியுள்ள வாட்சனும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

குஜராத்

அறிமுக அணியாக களமிறங் கிய குஜராத் லயன்ஸ், நடப்பு சாம்பி யனான மும்பை இந்தியன்ஸ் அணி யின் நம்பிக்கையை தகர்த்து, பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ரெய்னா, லீக் ஆட்டத்தில் பெங்களுரூவிடம் 144 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் முனைப்பில் உள்ளார்.

இந்த தொடரில் ரெய்னா 397, ஆரோன் பின்ச் 339, பிரண்டன் மெக் கலம் 321, தினேஷ் கார்த்திக் 283, டிவைன் ஸ்மித் 250 ரன்கள் குவித்துள் ளனர். ஆல்ரவுண்டரான டிவைன் பிராவோ இம்முறை பேட்டிங் கில் சிறப்பாக செயல்படாவிட் டாலும் பந்து வீச்சில் பலம் சேர்த்து வருகிறார்.

அவர் 15 விக்கெட்கள் வீழ்த் தியுள்ளார். இதேபோல் குல் கர்னி 14 விக்கெட் கைப்பற்றி யுள்ளார். பந்து வீச்சில் இவர்கள் இருவரையே அணி பெரிதும் நம்பி உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ள போதிலும் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் இரு அணிகளும் முனைப்பு காட்டும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8640133.ece?homepage=true

  • Replies 209
  • Views 12.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பெங்களூரூ: ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 10 விக்கெட்களையும் இழந்து 158 ரன் எடுத்தது. குஜராத் அணியின் டிவன் ஸ்மித் சிறப்பாக ஆடி 73 ரன் எடுத்தார்.தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரூ அணி 3 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

 

Gujarat Lions 158 (20/20 ov)
RCB 28/4 (5/20 ov)
  • தொடங்கியவர்
பெங்களூரு அணி வெற்றி ; பைனலுக்கு முன்னேறியது
  • தொடங்கியவர்

பெரோஷா கோட்லா மைதானத்தில் ஐதராபாத்- கொல்கத்தா இன்று மோதல்: வெற்றி பெற்றால் தகுதி சுற்று, தோல்வியடைந்தால் வெளியேற்றம்

 

ஐபிஎல் தொடரில் ‘வெளியேற்றும் சுற்றில்' இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் போட் டியை சோனி இஎஸ்பிஎன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

கொல்கத்தா அணி 2012, 2014-ல் சாம்பியன் பட்டம் வென் றிருந்தது. 2011-ல் பிளே ஆப் சுற்று வரை முன்னேறியிருந்தது. இந்த சீசனில் லீக் சுற்றில் இரு முறை ஐத ராபாத் அணியை கொல் கத்தா வீழ்த்தியிருந்தது. இது அந்த அணிக்கு சாதகமாக கருதப்படு கிறது. கேப்டன் காம்பீர் 14 ஆட்டத் தில், 5 அரை சதங்களுடன் 473 ரன்கள் சேர்த்துள்ளார். அவருடன் களமிறங்கும் தொடக்க வீரரான ராபின் உத்தப்பா 383 ரன்களும், ஆல்ரவுண்டர் யூசுப் பதான் 359 ரன்களும் எடுத்துள்ளனர்.

இளம் வீரரான மணீஷ்பாண்டே 11 ஆட்டத்தில் 212 ரன்களே சேர்த்த போதிலும் இக்கட்டான நேரத்தில் உதவுபவராக உள்ளார். காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்ஸல் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக் கூடும். கடைசி லீக் ஆட்டத்தில் ஐத ராபாத் அணியை கொல்கத்தா வீழ்த்தியதில் சுழற்பந்து வீச்சாளர் களான சுனில் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். இந்த ஆட்டத்தில் நரைன் 3 விக்கெட்களும், குல்தீப் இரு விக்கெட்களும் கைப்பற்றி யிருந்தனர்.

ஐதராபாத் அணி கடந்த 2013-ல் பிளே ஆப் சுற்று வரை எட்டிப் பார்த்தது. இந்த சீசனில் அதிரடி வெற்றிகளை குவித்த போதிலும் வெளியூர் மைதானங்களில் கடை சியாக மோதிய இரு ஆட்டத்தி லும் தோல்வியடைந்து சரிவை சந்தித்தது.

கேப்டன் வார்னர் 14 ஆட்டத் தில் 658 ரன்கள் சேர்த்து, அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டிய லில் 2-வது இடத்தில் உள்ளார். அவருடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடும் ஷிகர் தவண் தொடரின் ஆரம்பத்தில் சரியாக விளையாடாவிட்டாலும் பிற்பாதியில் சிறந்த பங்களிப்பை வழங்க தொடங்கினார். ஷிகர் தவண் இதுவரை 463 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆல்ரவுண்டர்களாக யுவ ராஜ்சிங், ஹென்ரிக்ஸ் வலம் வருகின்றனர். நட்சத்திர வீரரான மோர்கன் இதுவரை குறிப்பிடும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பந்து வீச்சில் முக்கியமான கட்டத்தில் அனுபவ வீரரான ஆஷிஸ் நெஹ்ரா விலகியதால் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

முஸ்டாபிஸூர் ரஹ்மான், புவனேஷ்வர் குமார், பரிந்தர் ஷரண் ஆகியோரை நம்பியே பந்து வீச்சு உள்ளது. இவர்கள் நேர்த்தியாக செயல்படும் பட்சத் தில் கொல்கத்தா அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

இன்றைய ஆட்டத்தில் தோல் வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கால்பதிக்கும். இந்த ஆட்டம் 27-ம் தேதி டெல் லியில் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article8644417.ece

  • தொடங்கியவர்

இறுதிச்சுற்றில் பெங்களூர்: தனியாளாக குஜராத்தை வீழ்த்தினார் டிவில்லியர்ஸ்

 


 

  • 27.jpg

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச்சுற்றில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ûஸ வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
 பெங்களூர் அணியின் கேப்டன் கோலி உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியபோதும் தனியாளாக களத்தில் நின்ற டிவில்லியர்ஸ் 47 பந்துகளில் 5 சிக்ஸர்,
 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார்.
 பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த குஜராத்தின் இன்னிங்ûஸ மெக்கல்லமும், ஆரோன் ஃபிஞ்சும் தொடங்கினர்.
 2-ஆவது ஓவரை வீசிய இக்பால் அப்துல்லா, மெக்கல்லம் (1), ஆரோன் ஃபிஞ்ச் (4) ஆகியோரை வீழ்த்தினார். பின்னர் வந்த கேப்டன் சுரேஷ் ரெய்னா 9 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்க, 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது குஜராத்.
 இதையடுத்து தினேஷ் கார்த்திக்குடன் இணைந்தார் டுவைன் ஸ்மித். சாஹல் வீசிய 10-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விரட்டிய ஸ்மித், சாஹல் வீசிய 12-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரை தூக்கினார். தொடர்ந்து வேகம் காட்டிய ஸ்மித், அப்துல்லா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி, 31 பந்துகளில் அரை சதம் கண்டார்.
 குஜராத் அணி 13.5 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோர்டான் பந்துவீச்சில் கார்த்திக் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 30 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா 3 ரன்களில் நடையைக் கட்ட, டுவைன் பிராவோ களம்புகுந்தார். தொடர்ந்து அசத்தலாக ஆடிய ஸ்மித், சாஹல் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்த கையோடு கோலியிடம் கேட்ச் ஆனார். அவர் 41 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் குவித்தார்.
 இதன்பிறகு வந்த துவிவேதி பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். வாட்சன் வீசிய 19-ஆவது ஓவரின் முதல் இரு பந்துகளில் இரு சிக்ஸர்களை விளாசிய துவிவேதி, அடுத்த பந்தில் கோலியிடம் கேட்ச் ஆனார். அவர் 9 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.
 4-ஆவது பந்தில் பிராவோவை (8) போல்டாக்கினார் வாட்சன். பின்னர் வந்த குல்கர்னி, அடுத்த இரு பந்துகளில் பவுண்டரிகளை விரட்ட, 19-ஆவது ஓவரில் மட்டும் 21 ரன்கள் எடுக்கப்பட்டன. இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் குல்கர்னி 10 ரன்களில் (4 பந்துகளில்) ரன் அவுட்டாக, 20 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குஜராத்.
 பெங்களூர் தரப்பில் ஷேன் வாட்சன் 4 ஓவர்களில் 29 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இக்பால் அப்துல்லா 4 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.
 அதிர்ச்சித் தொடக்கம்: பின்னர் ஆடிய பெங்களூர் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் கோலி ரன் ஏதுமின்றியும், கிறிஸ் கெயில் 9 ரன்களிலும் குல்கர்னி பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தனர்.
 பின்னர் வந்த ராகுலை டக் அவுட்டாக்கினார் குல்கர்னி. அவரைத் தொடர்ந்து வாட்சன் 1 ரன்னிலும், சச்சின் பேபி ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து பெங்களூர்.
 டிவில்லியர்ஸ் அதிரடி: இதன்பிறகு டிவில்லியர்ஸுடன் இணைந்தார் ஸ்டூவர்ட் பின்னி. இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்தது. ஜகாத்தி வீசிய 9-ஆவது ஓவரில் இரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசிய ஸ்டூவர்ட் பின்னி, 15 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது 9.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூர்.
 இதன்பிறகு டிவில்லியர்ஸுடன் இணைந்தார் இக்பால் அப்துல்லா. இந்த ஜோடி குஜராத்திடம் இருந்து வெற்றியைப் பறித்தது. அசத்தலாக ஆடிய டிவில்லியர்ஸ், ஸ்மித் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து 33 பந்துகளில் அரை சதம் கண்டார்.
 மறுமுனையில் இக்பால் அப்துல்லாவும் அதிரடியாக ஆட, பெங்களூரின் வெற்றி எளிதானது. 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது பெங்களூர். டிவில்லியர்ஸ் 47 பந்துகளில் 79, அப்துல்லா 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் குவித்தது.
 குஜராத் தரப்பில் குல்கர்னி 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சுருக்கமான ஸ்கோர்
 குஜராத்-158
 ஸ்மித் 73 (41)
 கார்த்திக் 26 (30)
 வாட்சன் 4வி/29
 பெங்களூர்-159/6
 டிவில்லியர்ஸ் 79* (47)
 அப்துல்லா 33* (25)
 குல்கர்னி 4வி/14
2-ஆவது தகுதிச்சுற்றில் குஜராத்
 முதல் தகுதிச்சுற்றில் தோற்ற குஜராத் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேற இன்னொரு வாய்ப்புள்ளது. தில்லியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் 2-ஆவது தகுதிச்சுற்றில் கொல்கத்தா அல்லது ஹைதராபாதைச் சந்திக்கும் குஜராத். அதில் வெற்றி பெறும்பட்சத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறலாம்.

http://www.dinamani.com/sports/2016/05/25/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-/article3449718.ece

  • தொடங்கியவர்

ஜாகீர் கான் வழங்கிய அறிவுரை இப்போதும் மனதில் உள்ளது: டிவில்லியர்ஸ் மகிழ்ச்சி

 
ஏ.பி.டிவில்லியர்ஸ். | கோப்புப் படம்: கே.முரளிகுமார்.
ஏ.பி.டிவில்லியர்ஸ். | கோப்புப் படம்: கே.முரளிகுமார்.

குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஆப் ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் தனது பாணியில் ஆடி இறுதி வரை நின்று வெற்றியை உறுதி செய்தார்.

கோலி 0-வில் ஆட்டமிழந்தாலும் டிவில்லியர்ஸ், இக்பால் அப்துல்லா ஆகியோர் பெங்களூருவை இறுதிப்போட்டிக்கு இட்டுச் சென்றனர்.

தான் கடைசி வரை நின்று ஆடியதற்கு தங்கள் அணியில் ஆடிய முன்னாள் வீரர் ஜாகீர் கான் கூறியது தன் மனதில் இருந்தது என்று கூறினார் டிவில்லியர்ஸ். அதே போல் அதிக இறுதிப்போட்டிகளில் தான் விளையாடியதில்லை என்றும் இந்த இறுதிப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தொடர்பாக டி வில்லியர்ஸ் கூறியதாவது:

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிக அளவிலான இறுதிப்போட்டிகளில் நான் விளையாடியதில்லை. பெங்களூரு அணிக்காக 6 வருடங்களாக விளையாடிய நிலையிலும் இறுதிப்போட்டியில் எங்கள் அணியை நான் பார்த்ததில்லை. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

இந்த ஆட்டத்தில் எங்களது செயல்திறன் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் நினைத்தனர். இந்த தருணத்தில் நாங்கள் பெற்ற வெற்றி பயனுள்ளதாக உள்ளது. கடந்த சில வருடங்களாகவே நாங்கள் கூட்டு முயற்சியாக சிறப்பாக விளையாடி வருகிறோம்.

ஆனால் இறுதிப்போட்டியை ரசித்து விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அது கிடைத்துள்ளது, நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் என்ன நடக்க போகிறது என்பது தெரியாது.

குல்கர்னி அற்புதமாக பந்து வீசினார். பாராட்டுகள் அவரையே சேரவேண்டும். ஆரம்பத்திலேயே அவர் ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். எங்கள் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர்கான் எப்போதுமே என்னிடம் ஒன்று கூறுவார், இது வேடிக்கையான சிறிய ஆட்டம், இதில் ஒருபோதும் நீ வெளியேறிவிடக்கூடாது என்பார்.

எனவே அது எனக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்தது. குஜராத் அணி பவர் பிளேவிலேயே கிட்டத்தட்ட வென்றிருந்தனர். அதன் பிறகு நாங்கள் போராடியே வென்றோம்.

இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறினார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article8646083.ece?homepage=true

  • தொடங்கியவர்

டி20 கிரிக்கெட்டில் 51 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு கோலி ‘டக்’ அவுட்

 

 
விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறும் காட்சி. | படம்: பிடிஐ.
விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறும் காட்சி. | படம்: பிடிஐ.

விராட் கோலி 51 இன்னிங்ஸ்களுக்கு பிறகு நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக டக் அவுட் ஆனார்.

குஜராத் லயன்ஸை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்த நேற்றைய ஆட்டத்தில் தவல் குல்கர்னி பந்தை காலை நகர்த்தாமல் கட் ஆட முயன்று பந்து உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது. ஸ்கோரரை தொந்தரவு செய்யும் முன்னரே விராட் கோலி அவுட்.

2014-ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக விராட் கோலி கடைசியாக டக் அவுட் ஆனார். பிறகு நேற்று டக் அவுட் ஆனார். இந்த இரண்டு டக்குகளுக்கும் இடையே 2378 ரன்களை அடித்தார் விராட் கோலி. இதில் இந்த ஐபில் போட்டித் தொடரில் மட்டும் 14 இன்னிங்ஸ்களில் எடுத்த 919 ரன்கள் அடங்கும்.

இதே போல் முன்பு ஒருமுறையும் 50 இன்னிங்ஸ்கள் டக் அடிக்காமல் இருந்துள்ளார் விராட் கோலி.

200 டி20 போட்டிகளில் ஆடிய 21 பேட்ஸ்மென்கள் பட்டியலில் விராட் கோலிதான் 6 டக்குகளுடன் குறைந்த டக் அடித்தவர் என்ற பெருமையை தக்க வைத்திருப்பவர்.

அதே போல் ஐபிஎல் தொடரில் பவர் பிளேவுக்குள் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2-வது பவுலரானார் தவல் குல்கர்னி. 2011-ம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக இசாந்த் சர்மா பவர் பிளேவுக்குள் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார். 2008-ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக ராவல்பிண்டி எஸ்க்பிரஸ் ஷோயப் அக்தர் பவர் பிளேவுக்கு முன்னதாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அஜித் சாண்டிலா 2012 ஐபிஎல் தொடரில் ஹேட்ரிக் உட்பட பவர் பிளேவுக்குள் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவல் குல்கர்னி மொத்தமாக பவர் பிளேவுக்குள் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இது ஒரு சாதனை.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-51-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/article8645141.ece

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., : ஐதராபாத் வெற்றி; கோல்கட்டா வெளியேற்றம்

 

ஐ.பி.எல்., கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி

 

புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியும் கோல்கட்டா அணியும் மோதின.டாஸ் வென்ற கோல்கட்டா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய கோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து ஐதராபாத் அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வியடைந்த கோல்கட்டா அணி தொடரை விட்டு வெளியேறியது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2வது தகுதி சுற்றுப் போட்டிக்கு முன்னேறிய ஐதராபாத் அணி, குஜராத் அணியை எதிர் கொள்ளும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1529258

  • தொடங்கியவர்

ஆசிஷ் நெஹ்ராவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை: லண்டனில் நடைபெற்றது!

 


 

 

nehra.jpg

 

இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ராவுக்கு முழங்காலில் நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

37 வயதான நெஹ்ரா, ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த 15-ம் தேதி நடைபெற்ற பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின்போது அவருடைய முழங்காலில் தசை நார் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அஜய் ஷிர்கே கூறுகையில், "பிசிசிஐ மருத்துவ குழு, லண்டனில் உள்ள எலும்பியல் சிறப்பு மருத்துவர் ஆன்ட்ரூ வில்லியம்ஸிடம் நெஹ்ராவின் காயம் குறித்து ஆலோசித்தது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வில்லியம்ஸ் அறிவுறுத்தியுள்ளார்' என்றார்.

இதனையடுத்து லண்டனில் நெஹ்ராவுக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் நெஹ்ரா குறித்த தகவலையும் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண், ட்விட்டரில் வெளியிட்டார். அதனையடுத்து, கிரிக்கெட் வீரர் பலரும் நெஹ்ரா, விரைவில் குணமாகவேண்டும் என்று தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

http://www.dinamani.com/sports/2016/05/25/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article3450727.ece

  • தொடங்கியவர்

யுவராஜ், ஹென்ரிக்ஸ், புவனேஸ்வர் குமார் அசத்தல்: கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத்


 
  • 39.jpg

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வெளியேற்றும் சுற்றில் 22 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.
 இந்த வெற்றியின் மூலம் இறுதிச்சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது ஹைதராபாத். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்ற கொல்கத்தா போட்டியிலிருந்து வெளியேறியது.
 தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் ஷகிப் அல்ஹசன், அங்கித் ராஜ்புட் ஆகியோருக்குப் பதிலாக மோர்ன் மோர்கல், ராஜகோபால் சதீஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஹைதராபாத் அணியில் கரண் சர்மா, கேன் வில்லியம்சன் ஆகியோருக்குப் பதிலாக பிபுல் சர்மா, பென் கட்டிங் ஆகியோர் இடம்பெற்றனர்.
 டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த ஹைதராபாத் அணியில் ஷிகர் தவன் 10 ரன்கள் சேர்த்த நிலையில் மோர்கல் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
 இதையடுத்து டேவிட் வார்னருடன் இணைந்தார் மோசஸ் ஹென்ரிக்ஸ். வழக்கமாக அதிரடியாக ஆடும் வார்னர், கொல்கத்தாவுக்கு எதிராக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினார். அதேநேரத்தில் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆட, ஹைதராபாதின் ஸ்கோர் உயர்ந்தது. 10-ஆவது ஓவரை வீசிய குல்தீப், இந்த ஜோடியைப் பிரித்தார்.
 3-ஆவது பந்தில் சிக்ஸரை விளாசிய ஹென்ரிக்ஸ், அடுத்த பந்தில் குல்தீபிடம் கேட்ச் ஆனார். அவர் 21 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 31 ரன்கள் சேர்த்தார். 5-ஆவது பந்தில் வார்னர் போல்டு ஆனார். அவர் 28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
 இதன்பிறகு யுவராஜ் சிங்குடன் இணைந்தார் தீபக் ஹூடா. இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்தது. 13 பந்துகளைச் சந்தித்த தீபக் ஹூடா 2 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
 பின்னர் வந்த பென் கட்டிங் டக் அவுட்டாக, நமன் ஓஜா களம்புகுந்தார். ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் அசத்தலாக ஆடிய யுவராஜ் சிங் 6 ரன்களில் அரை சதத்தை நழுவவிட்டார். 30 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் குவித்த அவர், ஹோல்டர் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
 பின்னர் வந்தவர்களில் பிபுல் சர்மா ஆட்டமிழக்காமல் 6 பந்துகளில் 14 ரன்களை விளாச, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது ஹைதராபாத்.
 கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோர்கல், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 கொல்கத்தா தோல்வி: பின்னர் ஆடிய கொல்கத்தா அணியில் உத்தப்பா 11 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த காலின் மன்றோ 16 ரன்கள் சேர்த்த நிலையில் யுவராஜ் சிங்கின் துல்லியமான "த்ரோ'வில் ரன் அவுட்டானார்.
 இதன்பிறகு கேப்டன் கெளதம் கம்பீர் 28 ரன்களில் நடையைக் கட்ட, கொல்கத்தாவின் சரிவு தவிர்க்க முடியாததானது.
 இதன்பிறகு யூசுப் பதான் 2, சூர்யகுமார் 23 ரன்களில் வெளியேற, மறுமுனையில் போராடிய மணீஷ் பாண்டே 28 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
 ஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே
 கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹென்ரிக்ஸ் 3 ஓவர்களில் 17 ரன்களை கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஹென்ரிக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சுருக்கமான ஸ்கோர்
 ஹைதராபாத்-162/8
 யுவராஜ் சிங் 44 (30)
 ஹென்ரிக்ஸ் 31 (21)
 குல்தீப் யாதவ் 3வி/35
 கொல்கத்தா-140/8
 மணீஷ் பாண்டே .. 36 (28)
 கௌதம் கம்பீர் 28 (28)
 புவனேஸ்வர் குமார் 3வி/19
குஜராத்-ஹைதராபாத் நாளை மோதல்
 தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் 2-ஆவது தகுதிச்சுற்றில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதும், முதல் தகுதிச்சுற்றில் தோற்ற குஜராத்தும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் பெங்களூரை சந்திக்கும்.

http://www.dinamani.com/sports/2016/05/26/யுவராஜ்-ஹென்ரிக்ஸ்-புவனேஸ்/article3451873.ece

  • தொடங்கியவர்

கண்ணீர் விட்டு அழுத சியர் லீடர்ஸ்! இது ஐ.பி.எல் அதிசயம்!

girlss1.jpg

“அவங்கெல்லாம் காசுக்காக ஆடுறாங்க. அவங்களால கிரிக்கெட்டுக்கு அசிங்கம்” இப்படித்தான் ஏகம் பேர் கூறினார்கள், டி20 போட்டிகளில் உற்சாக நடனமாடும் பெண்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது. நம் ஐ.பி.எல் போட்டிகளில் அவர்கள் ஒரு அங்கமாகவே மாறிவிட்டாலும் அவர்களை வெறும் நடனம் ஆடும் பொம்மைகளாகவே பார்த்தனர் பலர். ஆனால் நேற்று இரவு நடந்த அச்சம்பவம் நம் அனைவரையும் ஒரு நிமிடம் உரையவைத்தது. “கிரிக்கெட்டிற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?” என இனி ஒருவரும் கேட்க முடியாது. ஆம், நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோற்று விட, அவ்வணியின் சீயர் கேர்ள்ஸ் இருவர் கண்ணீர் சிந்திய காட்சி அவர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இப்படியொரு காட்சி ஐ.பி.எல் லின் ஒன்பது ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்தது இல்லை. ஒவ்வொரு அணியின் சீயர்லீடர்சும் அவர்கள் அணி சிக்சர் அடிக்கும் போதும், விக்கெட் வீழ்த்தும் போதும் உற்சாகமாக ஆடுவார்கள். ஆட்டத்தில் வென்ற பிறகு இரண்டு மடங்காக அவ்வுற்சாகம் அதிகரிக்கும். தோற்றாலும் சிரித்துக்கொண்டே ரசிகர்களையும் கேமராவையும் பார்த்து சிரித்துவிடுச் சென்றுவிடுவார்கள். ஆனால் கே.கே.ஆரின் அந்த மூன்று சீயர் லீடர்களும் புவனேஷ் அந்த கடைசிப் பந்தை வீசியதும், உற்சாகமூட்டவேண்டும் என்ற தங்கள் கடமையையும் மறந்து கண்ணீர் சிந்தி சோகம் படரச்செய்தார்கள். அவுட் ஆகி பெவிலியன் வந்த பின்னர் கேப்டன் கவுதம் கம்பீர் சென்டிமென்டாக எப்போதுமே பேடுகளைக் கழட்ட மாட்டார். ஆனால் நேற்று அவரே ஜீரணித்துக்கொண்டு ஐந்து பந்துகள் இருக்கும்போதே அனைத்தையும் களைத்து  தோல்வியை ஏற்க தயாராகியிருந்தார். ஆனால் வெவ்வேறு நாட்டைச் சார்ந்த இப்பெண்கள், அனைவரும் சாடியது போல் கிரிக்கெட்டிற்குச் சம்பந்தம் இல்லாத பெண்கள், எந்த வகையிலும் வங்க மண்ணைப் பற்றி அறிந்திடாத அப்பெண்களால் அத்தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

Always wish my KKR boys the best and never said anything to the girls who bring so much cheer. Lov u girls & thanx

CjUmHdeUkAE4J-z.jpg

இவ்விளையாட்டு ஒரு ரசிகரை எந்த அளவிற்கு ஆளும் என்பதற்கு இதைவிட வேறு எந்த நல்ல எடுத்துக்காட்டும் தேவையில்லை. கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர்களுக்கான சம்பளம் ஒரு போட்டிக்கு 6000 முதல் 12000 வரை. அவர்களின் அணி போட்டியை வென்றால் 3000 ரூபாய் போனஸ். நேற்றைய தோல்வியால் அவர்களுக்கு போனஸ் கிடைக்காது தான். ஆனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் அன்பையும் பெற்று விட்டனர் அவ்விரு மங்கைகள். அணியின் உரிமையாளர் ஷாரூக் கூட தன் டுவிட்டர் பக்கத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 



அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களான டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும், ரசிகர்களும் வீரர்களும் அப்பெண்களைப் பாராட்டி வருகின்றனர். உங்களுக்காகவாவது அடுத்த சீசன்ல கம்பீர் அண்ட் கோ ஜெயிக்கட்டும்!

http://www.vikatan.com/news/sports/64603-cheer-leaders-cries-for-kkr-loss.art

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்? குஜராத்-ஹைதராபாத் இன்று மோதல்

 


 
  • 9.jpg

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது தகுதிச்சுற்றில் குஜராத் லயன்ஸும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாதும் மோதுகின்றன.
 அறிமுகத் தொடரில் விளையாடும் குஜராத் அணி, முதல் தகுதிச்சுற்றில் தவறவிட்ட இறுதிச்சுற்று வாய்ப்பை, 2-ஆவது தகுதிச்சுற்றின் மூலம் பிடிப்பதில் தீவிரமாக உள்ளது.
 அதேநேரத்தில் லீக் சுற்றில் இரு ஆட்டங்களிலும் ஹைதராபாதிடம் தோற்றிருப்பது குஜராத் அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும் லீக் சுற்றில் கண்ட தோல்விக்கு குஜராத் பதிலடி கொடுக்கப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 குஜராத் அணியில் பிரென்டன் மெக்கல்லம், ஆரோன் ஃபிஞ்ச், கேப்டன் சுரேஷ் ரெய்னா, டுவைன் ஸ்மித், தினேஷ் கார்த்திக், டுவைன் பிராவோ என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் இவர்களில் ஸ்மித்தைத் தவிர வேறு யாரும் தொடர்ச்சியாக ரன் குவிக்காதது கவலையளிக்கிறது.
 இந்த ஆட்டத்தில் பிரென்டன் மெக்கல்லம் குஜராத்துக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். மிடில் ஆர்டரில் ரெய்னா, ஆரோன் ஃபிஞ்ச், தினேஷ் கார்த்திக், பிராவோ ஆகியோர் சிறப்பாக ஆடினாலொழிய குஜராத் பெரிய அளவில் ரன் குவிப்பது கடினம். வேகப்பந்து வீச்சில் தவல் குல்கர்னி அசத்தி வருகிறார். முதல் தகுதிச்சுற்றில் அதிரடி மன்னர்களான விராட் கோலி, கிறிஸ் கெயில் ஆகியோரை கிளீன் போல்டாக்கிய குல்கர்னி, இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரவீண் குமார், பிராவோ ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர்.
 கடந்த ஆட்டங்களில் அசத்தலாக பந்துவீசிய மித வேகப்பந்து வீச்சாளரான டுவைன் ஸ்மித், இந்த ஆட்டத்திலும் குஜராத்துக்கு பலம் சேர்ப்பார் என நம்பலாம். சுழற்பந்து வீச்சில் ஜடேஜாவை நம்பியுள்ளது குஜராத்.
 மிரட்டும் வார்னர்: ஹைதராபாத் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவன், மோசஸ் ஹென்ரிக்ஸ், யுவராஜ் சிங், தீபக் ஹூடா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
 குஜராத் அணி வலுவான பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளதால், ஹைதராபாத் அணிக்கு வார்னரும், ஷிகர் தவனும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். அதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 7 அரை சதங்களுடன் 686 ரன்கள் குவித்துள்ளார். அவரின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என நம்பலாம்.
 மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங்
 ஃபார்முக்கு திரும்பியிருப்பது ஹைதராபாதுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான வெளியேற்றும் சுற்றில் இக்கட்டான நேரத்தில் 30 பந்துகளில் 44 ரன்களைக் குவித்து உதவிய யுவராஜ் சிங், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 வேகப்பந்து வீச்சில் ஆசிஷ் நெஹ்ரா காயம் காரணமாக விலகியபோதிலும், புவனேஸ்வர் குமார், முஸ்தாபிஜுர் ரஹ்மான் கூட்டணி அசத்தி வருகிறது. அவர்கள் இருவரும், குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 குஜராத் அணியின் முக்கிய வீரர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். டுவைன் ஸ்மித் சிறப்பாக ஆடிவரும் அதேவேளையில், அந்த அணியின் தொடக்க வீரர்கள் தடுமாறி வருகிறார்கள். நாங்கள் முதலில் பேட் செய்தாலும், பந்துவீசினாலும் ஓர் அணியாக இணைந்து ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். நாங்கள் வகுத்துள்ள திட்டங்களை சரியாக செயல்படுத்துவது மிக முக்கியமானதாகும்.

http://www.dinamani.com/sports/2016/05/27/இறுதிச்சுற்றுக்கு-முன்னேற/article3452671.ece

  • தொடங்கியவர்

வோர்னரின் அதிரடியில் வெளியேறியது குஜராத் ; இறுதிப் போட்டியில் ஹைதராபாத் - பெங்களூர்

 

டேவிட் வோர்னர் தனி ஆளாக நின்று அடித்­தாட, இறு­தியில் அவ­ருக்கு துணையாக நின்று பிபுல் ஷர்மா அதி­ர­டி­காட்ட குஜராத் அணியை வீழ்த்தி இறு­திப்­போட்­டிக்கு நுழைந்­தது ஹைத­ராபாத் அணி.

David_Warner.jpg

நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள இறு­திப்­போட்­டியில் கோலி தலை­மை­யி­லான பெங்­களூர் அணியை சந்­திக்­கி­றது ஹைத­ராபாத் அணி.

 

இறு­திச்­சுற்­றுக்குள் நுழையும் இரண்­டா­வது அணி எது என்­பதை நிர்­ண­யிக்கும் 2ஆவது தகுதி சுற்றில் குஜராத் லயன்ஸும்இ ஹைத­ராபாத் சன் ரைஸர்ஸ் அணியும் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதா­னத்தில் மோதின.

இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற வோர்னர் தனது அணி முதலில் பந்து வீசும் என்று தெரி­வித்தார். இதன்­படி முதலில் கள­மி­றங்­கிய குஜராத் அணி சீரான இடை­வெ­ளியில் விக்­கெட்­டுக்கள் விழஇ மறு­மு­னையில் கணி­ச­மான ஓட்­டங்­க­ளையும்

சேர்த்­த­படி இருந்­தது. 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 162 ஓட்­டங்­களைப் பெற்­றது குஜராத்.

குஜராத் அணியில் அதி­க­பட்­ச­மாக பிஞ்ச் 50 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்தார். இதை­ய­டுத்து 163 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் கள­மி­றங்­கிய ஹைத­ராபாத் அணி 19.2 ஓவர்­களில் 6 விக்­கெட்­டுக் களை இழந்து 163 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டியது.

டேவிட் வோர்னர் இறு­திவரை களத்தில் நின்று அணியை வெற் ­றிக்கு அழைத்துச் சென்

றார். இவர் இந்தப் போட்­டியில் 93 ஓட்­டங்­களை விளா­சினர். இவரைத் தவிர இவ­ருக்கு துணை நின்ற ஷர்மா 27 ஓட்­டங்­களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் அனை­வரும் ஒற்றை இலக்க ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்­றினர்.

அணித் தலைவர் என்ற பொறுப்பை சரியாக

நிறைவேற்றிய வோர்னர்

ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டிவரை அழைத்து வந்திருக்கி றார்.

http://www.virakesari.lk/article/6905

  • தொடங்கியவர்

கோலியே எமது இலக்கு - புவனேஸ்வரகுமார்

Published by Gnanaprabu on 2016-05-28 15:07:02

 

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் விராட் கோலியின் விக்கட்டினை வீழ்த்த திட்டமொன்றை அணியினர் செயற்படுத்தவுள்ளதாக  சன்ரைஸைஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஐ.பி.ல் போட்டியில் அதிக விக்கட்டுகளை கைப்பற்றிய வரிசையில் புவனேஸ்வர்குமார் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

இறுதிப்போட்டியில் விராட் கோலியை வீழ்த்துவது தொடர்பில் கேள்வியொன்றை கேட்டபோதே இவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் விராட் கோலி சன்ரைஸஸ் அணியுடனான  போட்டிகளில்  முதல் போட்டியில் 14 ஓட்டங்களையும் மற்றுமொரு போட்டியில் 75 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தார்.

இதில் ஒரு போட்டியில் புவனேஸ்வரகுமார் விராட் கோலியின் விக்கட்டினை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருட ஐ.பி.எல் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் விராட்கோலி முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

எனவே இறுதிப்போட்டியில் இவர்கள் இருவருக்கிடையிலான போட்டி நிச்சயமாக சூடுபிடிக்கும்.

244009.jpg

http://www.virakesari.lk/article/6913

  • தொடங்கியவர்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் இன்று பெங்களூரு-ஐதராபாத் பலப்பரீட்சை: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது யார்?

 

 
01IN_IPL_TROPHY_27_2873358f.jpg
 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை இரவு 8 மணிக்கு சோனி இஎஸ்பின் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் இரு அணிகளும் இன்றைய போட்டியை எதிர்கொள்கின்றன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.20 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். தோல்வி அடையும் அணி ரூ.11 கோடியை பெறும்.

கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மும்பையில் தொடங்கிய 9-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

விராட் கோலி

சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் இன்று மல்லுக்கட்டுகின்றன. இரு அணிகளையும் இறுதிப்போட்டி வரை அழைத்து வந்த பெருமை அந்த அணியின் கேப்டன்களையே சேரும். பெங்களூரு அணி 2009 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தது.

3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள அந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக உள்ளது. கேப்டன் கோலி இந்த தொடரில் உச்சக்கட்ட பார்மில் உள்ளார். இந்த தொடரில் அவர் 15 ஆட்டத்தில் 4 சதம், 6 அரை சதங்களுடன் 919 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங்கோடு மட்டுமல்லாமல் அணியை வழிநடத்தும் தலைமைப்பண்பிலும் கோலி சிறந்து விளங்குகிறார்.

மிரட்டும் டி வில்லியர்ஸ்

அவருக்கு உறுதுணையாக டி வில்லியர்ஸூம் அதிரடியில் மிரட்டி வருகிறார். இந்த தொடரில் ஒரு சதம், 6 அரை சதங்களுடன் 682 ரன்கள் சேர்த்து அதிக ரன்குவித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.

முதல் தகுதி சுற்று போட்டியில் 29 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் டி வில்லியர்ஸ் தனது அசாத்தியமான பேட்டிங்கால் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்து இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேற உதவினார். தொடரின் கடைசி பகுதியில் ஒரு சில ஆட்டங்களில் அதிரடி காட்டிய கிறிஸ் கெயிலும் அச்சுறுத்தும் வீரராக உள்ளார்.

பதிலடி கொடுக்குமா?

இவர்களை தவிர கே.எல்.ராகுல், அப்துல்லா, வாட்சன் ஆகியோரும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தக்கூடியவர்களே. பேட்டிங்கில் அசுர பலத்துடன் காணப்படும் பெங்களூரு அணியின் பந்து வீச்சு ஆரம்ப கட்ட ஆட்டங்களில் மோசமாக இருந்தது. இதனால் அதிக ரன்களை குவித்தும் தோல்வியை தவிர்க்க முடியாத நிலைமைக்கு அணி தள்ளப்பட்டது.

ஆனால் தொடரின் கடைசி பகுதியில் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் உத்வேகத்துடன் செயல்பட தொடங்கினர். சுழற்பந்து வீச்சாளர் யஜூவேந்திரா ஷாகல் இந்த தொடரில் 12 ஆட்டத்தில் 20 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தொடரின் பிற்பாதியில் அணியில் சேர்க்கப்பட்ட கிறிஸ் ஜோர்டான் சிறந்த பங்களிப்பை வழங்குகிறார்.

வாட்சன் தனது அனுபவத்தை பந்து வீச்சில் சரியாக பயன்படுத்தி வருகிறார். அவர் இந்த தொடரில் 15 ஆட்டத்தில் 20 விக்கெட் கைப்பற்றியுள்ளார். லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஐதரபாத்திடம் தோல்வியடைந்திருந்தது. இந்த பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது பெங்களூரு அணி.

ஐதராபாத்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடந்த 2013-ல் தான் அறிமுகம் ஆனது. அந்த தொடரில் பிளே ஆப் சுற்று வரை முன்னேறியது. தற்போது முதல் முறையாக இறுதிப்போட்டியை சந்திக்கிறது. ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னரின் பலத்தை அதிகம் சார்ந்துள்ளது.

லீக் சுற்றில் தொடர்ச்சியாக வெற்றியை குவித்த நிலையில் கடைசி பகுதியில் திடீர் சறுக்கலை சந்தித்தது. இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. வெளியேற்றும் சுற்றில் 22 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

வார்னர்

அடுத்து நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் வார்னர் தனிநபராக போராடி 93 ரன்கள் குவித்து அணியை இறுதி போட்டிக்கு தகுதி பெற செய்தார்.இந்த தொடரில் அவர் 16 ஆட்டத்தில் 8 அரை சதங்களுடன் 779 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் கோலிக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார்.

வார்னரை தவிர ஷிகர் தவண், யுவராஜ் சிங், ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, நமன் ஓஜா, பென் கட்டிங் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர்.

பந்து வீச்சு பலம்

பந்து வீச்சில் ஐதராபாத் அணி பலம் வாய்ந்ததாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 15 ஆட்டத்தில் 23 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு உறுதுணையாக உள்ள முஸ்டாபிஸூர் ரஹ்மான் 16 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் களமிறங்காத அவர் இன்று களமிறங்கக்கூடும். இந்த இருவருடன் பரிந்தர் ஷரணும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்படக்கூடியவராக உள்ளார். முதல் முறையாக இறுதிப்போட்டியை சந்திக்கும் ஐதராபாத் அணி, பெங்களூரு அணியின் சொந்த மைதானத்தில் நெருக்கடியை சமாளித்து அசத்தும் பட்சத்தில் பட்டம் வெல்லும் கனவு நனவாகக் கூடும்.

நேரம்: இரவு 8

இடம்: பெங்களூரு

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-இறுதிப்போட்டியில்-இன்று-பெங்களூருஐதராபாத்-பலப்பரீட்சை-முதல்முறையாக-சாம்பியன்-பட்டம்-வெல்வது-யார்/article8662840.ece?homepage=true

  • தொடங்கியவர்

டேவிட் வார்னர் வெற்றியை பறித்துவிட்டார்: குஜராத் கேப்டன் ரெய்னா கருத்து

 
 
Raina_2860152g_2873418f.jpg
 

ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் டேவிட் வார்னர் தங்களது வெற்றியை பறித்துவிட்டதாக குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் முதலில் பேட் செய்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. ஆரோன் பின்ச் 50 மெக்கலம் 32 ரன்கள் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், பென் கட்டிங் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

163 ரன்கள் இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணியில் ஷிகர் தவண் 0, ஹென்ரிக்ஸ் 11, யுவராஜ் சிங் 8, தீபக் ஹூடா 4, பென் கட்டிங் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுமுனையில் தனிநபராக வெளுத்து வாங்கிய கேப்டன் டேவிட் வார்னர் 35 பந்துகளில் அரை சதம் கண்டார்.

இதன்பிறகு நமன் ஓஜா 10 ரன்களில் நடையைக் கட்ட, பிபுல் சர்மா களம்புகுந்தார்.

அவர் வந்த வேகத்தில் 3 சிக்ஸர்களை விளாசினார். மறுமுனையில் அசத்தலாக ஆடிய வார்னர், பிரவீண் குமார் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியும், அடுத்த பந்தில் ஒரு ரன்னும் எடுக்க 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்து வெற்றி கண்டது ஐதராபாத்.

வார்னர் 58 பந்துகளில் 93, பிபுல் சர்மா 11 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் தரப்பில் டிவைன் பிராவோ, கவுஷிக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறும்போது, “போராடி பெற்ற இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. களத்தில் கடைசி வரை நின்றால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. பிபுல்சர்மா மிகவும் சிறப்பாக ஆடினார். இறுதிப் போட்டி பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. ஏனென்றால் எங்களது திட்டத்தை வீரர்கள் சிறப்பாக செயல்படுத்துவார்கள்” என்றார்.

தோல்வி குறித்து குஜராத் கேப்டன் ரெய்னா கூறும்போது, “ஐதராபாத் அணியின் ஆட்டம் உண்மையிலேயே சிறப்பாக இருந்தது. வார்னர் அபாரமாக ஆடி எங்களது வெற்றியை பறித்து விட்டார்.

163 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான். எங்கள் அணி வீரர் கவுசிக் எதிர் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் பாராட்டு எல்லாம் ஐதராபாத் அணியை தான் சேரும். பயிற்சியாளர் எனக்கு உரிய சுதந்திரத்தை முழுமையாக கொடுத்தார். இதனால் கேப்டன் என்ற நிலையில் என்னால் இந்த தொடரில் சிறப்பாக பணியாற்ற முடிந்தது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/டேவிட்-வார்னர்-வெற்றியை-பறித்துவிட்டார்-குஜராத்-கேப்டன்-ரெய்னா-கருத்து/article8660978.ece

  • தொடங்கியவர்

சன் ரைசர்ஸ் 127/3

 

  • தொடங்கியவர்

20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் 208/7

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., பைனல்: பெங்களூரு அணிக்கு 209 ரன் இலக்கு

 

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு அணியும், ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன் எடுத்தது.

ஐதராபாத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் 38 பந்துகளில் 3 சிக்ஸ்ர் 8 பவுண்டரிகள் உட்பட 69 ரன் எடுத்தார். யுவராஜ் 38 ரன்னும் பென் கட்டிங் 39 ரன்னும் எடுத்தனர்.

இதனையடுத்து பெங்களூரு அணிக்கு 209 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1531356

 

  • தொடங்கியவர்

RCB 69/0

  • தொடங்கியவர்

RCB 140/2

Gayle 76

Kohli 54

  • தொடங்கியவர்

RCB 164/5

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட் : ஐதராபாத் அணி சாம்பியன்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Kohli, MVP of the tournament: Most sixes in the tournament surprised me. I am happy with the award. I don't want to talk much. The winning team deserves the place here.

Virat Kohli takes the orange cap:

Mustafizur Rahman is the Emerging player of IPL 2016.

Cutting is the Man of the Match:

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., பைனலில் பெங்களூரு அணி தோல்வி

பெங்களூரு: பெங்களூருக்கு எதிரான இறுதிபோட்டியில் வென்று ஐதராபாத் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு அணியும், ஐதராபாத் அணியும் மோதின.டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன் எடுத்தது.தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் 38 பந்துகளில் 3 சிக்ஸ்ர் 8 பவுண்டரிகள் உட்பட 69 ரன் எடுத்தார். யுவராஜ் 38 ரன்னும் பென் கட்டிங் 39 ரன்னும் எடுத்தனர்.

209 ரன் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஒவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐதராபாத் அணி முதன்முறையாக கோப்பையை கைபற்றியது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1531655

Tamil_News_large_153169220160530000513_3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.