Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IPL 9 செய்திகள் கருத்துக்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்!

 


 
  • warner_final_2016.jpg

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆகியுள்ளது.
பெங்களூர் அணியின் கிறிஸ் கெயில் 38 பந்துகளில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்தபோதும் பெங்களூர் அணியால் வெற்றியைப் பெறமுடியாமல் போனது.
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
2009, 2011 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்றில் தோற்ற பெங்களூர் அணி,இந்தமுறை ஹைதராபாதை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வெல்வதில் தீவிரமாகஇருந்தது. அதேநேரத்தில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ஹைதராபாத், இந்த வாய்ப்பை கோட்டை விட்டுவிடக்கூடாது
என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் பரபரப்பான போட்டியை அனைவரும் எதிர்பார்த்தார்கள்.
தொடக்க வீரர்களாக வார்னரும் தவனும் களமிறங்கினார்கள். ஆரம்பம் முதல் மிகவும் கவனமாக ஆடினார்கள். 4 ஓவர்களுக்குப் பிறகு அதிரடியாக ஆடத்தொடங்கினார் வார்னர். 5-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார். முதல் 6 ஓவர்களில் 59 ரன்கள் குவித்தது ஹைதராபாத். அடுத்த ஓவரில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் தவன்.
வார்னர் வழக்கம்போல அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தாலும் மறுபக்கம் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. ஹென்ரிக்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 24 பந்துகளில் அரை சதம் எடுத்தார் வார்னர். பிறகு
வார்னருடன் ஜோடி சேர்ந்த யுவ்ராஜ் வேகமாக ரன்கள் குவிக்க ஆரம்பித்தார்.
14-வது ஓவரில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார் வார்னர். அவர், 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார்.
அதன்பிறகு ஹைதராபாத் அணி தடுமாற ஆரம்பித்தது. தீபக் ஹுடா 3, ஓஜா 7,பிபுல் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். நம்பிக்கையுடன் ஆடிவந்த யுவ்ராஜ் சிங்கும் 17-வது ஓவரில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் கடைசி ஓவர்களில் பென் கட்டிங்கின் அதிரடியால் ஹைதராபாத் மீண்டு வந்தது. கடைசி 3 ஓவர்களில் 52 ரன்கள் குவித்தது. பென் கட்டிங் 15 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷேன் வாட்சன் வீசிய கடைசி ஓவரில் 24 ரன்களை அள்ளியது ஹைதராபாத் அணி. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.


கடினமான இலக்கைத் தாண்டுகிற முயற்சியில் களமிறங்கினார்கள் தொடக்க வீரர்களான கிறிஸ் கெயிலும் விராட் கோலியும். ஆரம்பம் முதலே தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கெயில். பரிந்தர் ஸ்ரன் வீசிய 4-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். 6 ஓவர்களின் முடிவில் 59 ரன்கள்
எடுத்தது பெங்களூர். 25 பந்துகளில் அரை சதம் எடுத்தார் கெயில்.
ஹைதராபாத்தின் பந்துவீச்சை கிறிஸ் கெயில் - விராட் கோலி ஜோடி அடித்து நொறுக்க 9-வது ஓவரிலேயே 100 ரன்களை பெங்களூர் கடந்தது. இறுதிப்போட்டியில் சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெயில், 76 ரன்களில் கட்டிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 32 பந்துகளில் அரை சதமடித்த விராட் கோலி எதிர்பாராதவிதமாக 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே டிவில்லியர்ஸும் ( 5 ரன்கள்) அவுட் ஆனார். இதனால் ஆட்டம் பரபரப்பானது.
கடைசி 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவர்களில் சிறப்பாகவீசுகிற முஸ்தாபிஜுர் ரஹ்மானும் புவனேஸ்வர் குமாரும் அந்த 4 ஓவர்களையும் பகிர்ந்துகொள்வதால் இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டது பெங்களூர்.
17-வது ஓவரில் முஸ்தாபிஜுர் பந்துவீச்சில் 11 ரன்களில் ஷேன் வாட்சன் ஆட்டமிழந்ததால் ஆட்டம் மேலும் பரப்பானது. துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். 9 ரன்கள் சேர்த்த பின்னி, ஹூடாவின் அட்டகாசமான 'த்ரோ'வில் ரன் அவுட்டானார். 7 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்கிற நிலைமை இருந்தபோது சிக்ஸர் அடித்தார் சச்சின் பேபி.
இதனால் கடைசி ஓவரில் பெங்களூர் அணி வெற்றி பெற 18 ரன்கள் தேவைப்பட்டது.அந்த ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். சிறப்பான பந்துவீச்சால், கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.
20 ஓவர்களின் முடிவில், பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. வார்னர்தலைமையில் விளையாடிய ஹைதராபாத் அணி, ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ளது.

http://www.dinamani.com/sports/2016/05/30/ஐபிஎல்-பரபரப்பான-ஆட்டத்தில/article3457001.ece

  • Replies 209
  • Views 12.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13307200_1052888624759831_78536416950670

வானரப் படை கல்லை வைத்து சாதித்தது.. வார்னர் படையோ "கட்டிங்"கை வைத்துக் கலக்கியது!

30-1464584766-bencutting-600.jpg

 பெங்களூரு: சீதையை மீட்க, கடலின் குறுக்கே கல்லை வைத்து பாலம் கட்டி இலங்கை சென்று சாதித்தது அன்றைய வானரப் படை. ஆனால் வார்னர் படையோ, கட்டிங்கை வைத்து சாதித்து விட்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் பென் கட்டிங்தான் நேற்று ஹைதராபாத் அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்த முக்கியக் காரணம்.

முதலில் பேட்டிங்கில் அசத்தினார் கட்டிங். பின்னர் பவுலிங்கில் முக்கியத் திருப்பத்தைக் கொடுத்தார். ஹைதராபாத்தின் பேட்டிங்கின்போது இடையில் அது சொதப்பிய நிலையில் கடைசி வரிசையில் கட்டிங் அதிரடி காட்டி அணியின் ஸ்கோர் 200ஐத் தாண்ட உதவினார்.

அதேபோல பந்து வீச்சின்போது அடித்து நொறுக்கி ஆவேசமாக ஆடிக் கொண்டிருந்த கெய்ல் புயலைத் தடுத்து பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பி வைத்தார் கட்டிங். அதேபோல ராகுலையும் அவுட்டாக்கி பெங்களூரை பலவீனமாக்கினார்.


புயல் வேக பேட்டிங் ஹைதராபாத்தின் பேட்டிங்கின்போது இடையில் சில விக்கெட்டுகள் சடசடவென சரிந்தன. இதனால் மிகப் பெரிய ஸ்கோரை அது எட்ட முடியுமா என்ற சந்தேகம் நிலவியது. அந்த நேரத்தில் கட்டிங் அதி வேகமாக ஆடி ரன் குவித்தார்.


15 பந்துகளில் 39 ரன்கள் அதி வேகமாக ஆடிய அவர் 15 பந்துகளை மட்டுமே சந்தித்து 39 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடக்கம்.

பந்து வீச்சில் அடுத்து பந்து வீச்சிலும் தனது அணிக்கு முக்கியப் பங்காற்றினார் கட்டிங். கெய்ல் புயலாக மாறி வந்த பந்தையெல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டிருந்த நிலையில் அவரை அட்டகாசமாக அவுட்டாக்கினார் கட்டிங். கட்டிங் போட்ட பந்தை தூக்கி அடித்தார் கெய்ல். அது அழகாக பிபுல் சர்மா கையில் போய்த் தஞ்சமடைந்தது.

2 விக்கெட் 4 ஓவர்கள் வீசிய கட்டிங் 35 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களைச் சாய்த்தார். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனும் இவர்தான்.  



Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/cutting-is-the-mom-254827.html

  • தொடங்கியவர்

"சின்னச்சாமி"யை கலக்கிய "ஜித்து ஜில்லாடி" கெய்ல்!

 

 பெங்களூரு வெற்றி பெறாவிட்டாலும் கூட ஒட்டுமொத்த சின்னச்சாமி ஸ்டேடியத்தையும் அதிர வைத்து விட்டது நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி. ஹைதராபாத்தின் பேட்டிங்கின்போது வார்னர் பிரித்து மேய்ந்தார்.

யுவராஜ் சிலிர்க்க வைத்தார். கட்டிங் கதற வைத்தார். அடுத்து வந்த பெங்களூரு சேஸிங்கின்போது ஒட்டுமொத்த மைதானமும் ஆர்ப்பரித்து அலறியது. காரணம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழு வீச்சுடன் வெளுத்து வாங்கிய கெய்ல் புயல்.


கெய்ல் புயல் பெங்களூரு அணியின் சேஸிங்கில் பட்டையைக் கிளப்பியவர் கெய்ல்தான். என்னா அடி... என்னா அடி என்று ரசிகர்களை துள்ள வைத்து விட்டார்.

அடிச்சா சிக்ஸரு.. அடிக்காட்டி பவுண்டரி கெய்ல் தூக்கி அடிச்சா சிக்ஸர்.. சுமாரா அடிச்சா பவுண்டரி என்ற ரேஞ்சுக்கு நேற்று அவரது ஆட்டம் அமைந்தது. அவர் அடித்த அடியைப் பார்த்தால் இவரே 200 ரன்களைத் தாண்டிப் போய் அணியை வெற்றி பெற வைத்து விடுவார் என்றுதான் அனைவரும் நம்பினர்.

பாவம் பரீந்தர் ஸ்ரன் ஆட்டத்தின் நான்காவது ஓவரை வீசியவர் பரீந்தர் ஸ்ரன். இவரது பந்து வீச்சை நையப்புடைத்து விட்டார் கெய்ல். 2 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசி ஸ்ரனை நொந்து போக வைத்து விட்டார்.

 

கட்டிங்குக்கும் ஒரு அடி அதேபோல 5வது ஓவரில் கட்டிங் வீசி பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். பவர் பிளேயில் கெய்லும், கோஹ்லியும் சேர்ந்து விக்கெட் இழப்பின்றி 59 ரன்களைக் குவித்தனர்.


25 பந்துகளில் அரை சதம் 25 பந்துகளைச் சந்தித்த கெய்ல் 50 ரன்களைக் குவித்தார். ஒரு சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் கெய்ல். கட்டிங்கும், ஹென்டிரிக்ஸும் தொடர்ந்து பந்து வீச்சில் சொதப்பியது கெய்லுக்கு வசதியாகப் போய் விட்டது.

கெய்ல் புயலைக் கட் செய்த கட்டிங் அணியின் ஸ்கோர் 9 ஓவர்களிலேயே 100ஐத் தொட்டபோது கெய்லும் சதத்தை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருந்தார். 10 ஓவர்கள் முடிவில் கெய்ல் 74 ரன்களில் இருந்தார். இந்த நிலையில்தான் கெய்லின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் கட்டிங். அவர் போட்ட பந்தை தூக்கி அடித்தார் கெய்ல். அது பிபுல் சர்மா கையில் போய்த் தஞ்சமடைந்தது. 38 பந்துகளில் கெய்ல் 76 ரன்களைக் குவித்திருந்தார்.

 

விராத் கோஹ்லியின் 54 கெய்ல் ஓய்ந்த நிலையில் கோஹ்லியின் அதிரடி தொடர்ந்து. அதிரடியாக ஆடி வந்த அவர் 35 பந்துகளில் 54 ரன்களைக் குவித்து அணியை ஸ்டெடியாக கொண்டு போய்க் கொண்டிருந்தார்.

ஏமாற்றிய ஸ்ரன் பந்து வீச்சு இந்த நிலையில்தான் ஸ்ரன் வீசிய பந்து கோஹ்லியை அழகாக ஏமாற்றி பைல்ஸைத் தட்டிச் சென்று அவரை அவுட்டாக்கியது. கோஹ்லி பெருத்த ஏமாற்றத்துக்குள்ளானார். மைதானமோ அதிர்ச்சியில் உறைந்தது.

மீள முடியாத அதிர்ச்சி அதன் பின்னர் பெங்களூர் அணி கடைசி வரை மீள முடியவில்லை. அனுபவம் வாய்ந்த வீரர்கள் அடுத்தடுத்துப் போன நிலையில் வாட்சன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவராலும் முடியவில்லை. கடைசிக் கட்டத்தில் பேபி சற்று அதிரடியாக ஆடத் தவறியதால் நம்பிக்கை மேலும் பலவீனமானது.

அடித்து ஆட முயன்ற ஜோர்டான் கிறிஸ் ஜோர்டான் கடைசி நேரத்தில் அடித்து ஆட முயன்றார். அவர் அல்லது பேபி சற்று தைரியமாக அடித்து ஆடியிருந்தால் நிச்சயம் பெங்களூருக்கு சாதனை படைக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.



Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/gayle-storm-pacified-the-brilliant-bowling-srh-254830.html

  • தொடங்கியவர்

ஐபிஎல் சாம்பியன் ஹைதராபாத்: இறுதிப் போட்டி 10 துளிகள்

 
 
கோப்பையுடன் வார்னர் | படம்: முரளிகுமார்
கோப்பையுடன் வார்னர் | படம்: முரளிகுமார்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைஸர் ஹைதராபாத் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் ஆனது.

இந்தப் போட்டியில் சில புதிய சாதனைகள் படைக்கப்பட்டு, சில பழைய சாதனைகள் சமன் செய்யப்பட்டன. அவற்றுடன் சில முக்கிய துளிகள் இதோ...

# சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் எடுத்த 208 ரன்களே, ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் முதலில் ஆடிய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் 2011 ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் ஆடி அடித்த 205 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.

# இதுவரை நடந்துள்ள 9 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றுள்ளது

# ஹைதராபாத் அணியின் பென் கட்டிங் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸர் மைதானத்தை தாண்டி 117 மீட்டர் உயர்ந்து வெளியே பறந்தது. இந்த ஐபிஎல் போட்டியில் இதுவே அதிகபட்ச உயரம் சென்ற சிக்ஸர் ஆகும். இதற்கு முன் 110 மீட்டர்களே சாதனையாக இருந்தது.

# ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 24 பந்துகளில் அரை சதம் எடுத்து ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் அதிவேக அரை சதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் அரை சதம் எடுத்திருந்தார்.

# 2016-ஆம் ஆண்டு 28 டி20 போட்டிகளில் விராட் கோலி 18 முறை அரை சதம் கடந்துள்ளார். இதற்கு முன், கிறிஸ் கெயில் 38 டி20 போட்டிகளில் 16 முறை அரை சதம் கடந்ததே சாதனையாக இருந்தது. இந்த ஐபிஎல் சீஸனில் விராட் கோலி 973 ரன்கள் குவித்திருந்தார். இதுவே ஒரு சீஸனில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்திருக்கும் அதிகபட்ச ரன்கள் ஆகும். ஹைதராபாத் அணியின் வார்னர் 848 ரன்களோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

# பெங்களூரு அணியின் ஷேன் வாட்சன் 4 ஓவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்திருந்தார். டி20 போட்டிகளில் இதுவரை அவர் கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

# இதுவரை நடந்துள்ள 9 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றுள்ளது.

# ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்பது இது மூன்றாவது முறை. இதற்கு முன் 2009, 2011 ஆகிய இரண்டு சீஸன்களில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்து தோல்வியடைந்துள்ளது.

# நேற்றைய போட்டியில் இரண்டு அணிகளும் பவர்ப்ளேவின் முடிவில் 59 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது. இரண்டு அணிகளின் பவர்ப்ளே மொத்த ஸ்கோர் 119 ரன்கள். 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதியில், சென்னை - கொல்கத்தா அணிகள் குவித்த 110 ரன்களே இதற்கு முன் ஐபிஎல் இறுதியில் அதிகபட்ச மொத்த பவர்ப்ளே ஸ்கோராக இருந்தது.

# உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி, அண்டர் 19 உலகக் கோப்பை, ஐபிஎல் என கிரிக்கெட்டின் முக்கிய தொடர்களில் விளையாடி கோப்பை வென்ற அணிகளில் யுவராஜ் சிங் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-சாம்பியன்-ஹைதராபாத்-இறுதிப்-போட்டி-10-துளிகள்/article8665865.ece?homepage=true&ref=tnwn

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: RCBஐ வீழ்த்தி மகுடம் சூடியது சன்ரைசர்ஸ்!

ipl111.jpg

ஐ.பி.எல் சீசன் ஒன்பதில் சாம்பியனாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை அனியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகுடம் சூடியது. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 208 ரன்கள் எடுத்தது. அதற்கடுத்து விளையாடிய பெங்களூர் அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்து 3வது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியது. இத்தொடரில் 973 ரன்கள் குவித்த பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோலி தொடர் நாய்கனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பேட்டிங்குக்குச் சாதகமான சின்னசாமி மைதானத்தில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. ஓப்பனர்களாகக் களமிறங்கிய வார்னரும், தவானும் தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தனர். இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் விளையாடியதால் கெயிலுக்கு அதிக ஓவர்கள் வழங்கப்பட்டது. பவர்பிளேயின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது. 7வது ஓவரை வீச வந்த சஹால், தான் வீசிய 4வது பந்திலேயே அந்த பார்ட்னர்ஷிப்பைப் பிரித்தார். தவான் 28 ரன்களில் ஜோர்டானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வன்த ஹென்ரிக்சும் 4 ரன்களில் ஜோர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

வாட்டி எடுத்த வார்னர்
 
இந்த சீசனில் அற்புத ஃபார்மில் இருக்கும் வார்னர் ஆர்.சி.பி யின் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் பதம் பார்த்தார். வெறும் 23 பந்துகளில் அரை சதம் கடந்த வார்னர் இத்தொடரில் 800 ரன்களைக் கடந்தார். ஒட்டுமொத்த ஐ.பி.எல் வரலாற்றிலேயே ஒரு சீசனில் 800 ரன்களைக் கடக்கும் இரண்டாவது வீரர் வார்னர் ஆவார். மறுமுனையில் யுவராஜ் சிங்கும் அடித்து ஆடத் தொடங்கினார். வார்னர் 69 ரன்களில் இருந்த போது அரவிந்தின் பந்துவீச்சில் கேட்சாகி வெளியேறினார். வார்னர் அவுட் ஆனதால் சன்ரைசர்சின் ரன் ரேட் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் யுவராஜ் சிங் சிறப்பாக ஆடினார். 2 சிக்சர் 4 பவுண்டரிகள் அடித்த யுவி 38 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஹூடா, நமன் ஓஜா ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.

ipl2.jpg

 

யாரடிச்சாரோ…? யாரடிச்சாரோ…?
 
இந்த சீசனில் ஆர்.சி.பி யின் மிகச்சிறந்த பவுலராக விளங்கிய வாட்சன் இன்று சொந்த அணிக்கே சூனியம் வைத்தார். தான் வீசிய 4 ஓவர்களில் 61 ரன்களை வாரி வழங்கினார் வாட்சன். அதில் ஆறு சிக்சர்கள் அடங்கும். அதிலும் குறிப்பாக இவர் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் பென் கட்டிங் 24 ரன்களை விளாசினார். இதன்மூலம் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 208 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. ஜோர்டன் 3 விக்கெட்டும், அரவிந்த் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

கெயில் சூறாவளி
 
209 என்ற மிகப்பெரிய ஸ்கோரை விரட்டிய பெங்களூர் அணிக்கு கெயிலும் கோஹ்லியும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். கோலி பொறுமையாக விளையாட, கெயிலோ வெளுத்துக்கட்டினார். ஸ்ரன் வீசிய ஓவரில் இரண்டு சிக்சர் மற்றும் 1 பவுண்டரியை விளாசிய கெயில் 25 பந்துகளில் அரை சதம் கடந்தார். 76 ரன்கள் எடுத்திருந்த போது கட்டிங் பந்துவீச்சில் பிபுல் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து கெயில் வெளியேறினார். முதல் விக்கெட்டிற்கு கெயில் கோலி இணை 114 ரன்கள் குவித்தது. கெயில் அவுட் ஆனதும் கோலி டாப் கியரில் பறக்கத் தொடங்கினார். இந்த சீசனில் 1000 ரன்களைக் கோலி கடப்பார் என்று நினைக்கையில் ஸ்ரன் வீசிய பந்தில் 54 ரன்கள் எடுத்திருந்த போது போல்டானார்.

ipl3.jpg

 

சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்
 
ஓப்பனர்கள் இருவரும் அவுட் ஆன பிறகு பெங்களூர் அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் 5 ரன்னிலும், ராகுல் மற்றும் வாட்சன் ஆகியோர் தலா 11 ரன்களிலும் வெளியேறினர். அதனால் 4 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. தான் சந்தித்த முதல் பந்திலேயே முஸ்தாஃபிசூரை சிக்சருக்குப் பறக்கவிட்ட பின்னி 8 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 7 பந்துகளுக்கு 24 என்ற கடினமான நிலையில் முஸ்தாஃபிசூர் பந்தில் சச்சின் பேபி சிக்சர் அடிக்க சோர்ந்து போயிருந்த பெங்களூர் ரசிகர்கள் உயிர்பித்து எழுந்தனர். இதனால் கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. இக்கட்டான நிலையில் கடைசி ஓவரை வீசிய புவனேஷ் யார்க்கர்களாக போட்டுத்தாக்க ஆர்.சி.பி யின் இன்னிங்ஸ் 200 ரன்களில் முடிவுக்கு வந்தது.
 
இதன்மூலம் பெங்களூர் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது சன்ரைசர்ஸ் அணி. ஏற்கனவே 2009ம் ஆண்டு இறுதிப்போட்டியில் பெங்களூர் அணி மற்றொரு ஹைதராபாத் அணியான டெக்கான் சார்ஜர்சிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரை ஆர்.சி.பி யுடனான தோல்வியோடு தொடங்கிய சன்ரைசர்ஸ் அணி அவர்களையே வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது மேலுமொறு சிறப்பு. விராத் கோலி ஆரஞ்சுத் தொப்பியையும், புவனேஷ்வர் குமார் பர்ப்பிள் தொப்பியையும் தங்கள் வசப்படுத்தினர். பெங்களூர் கேப்டன் விராத் கோலி தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். கோப்பை வென்ற சன்ரைசர்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்திகை வழங்கப்பட்டது.

13325459_1053040348077992_57917138758193

13310379_1053040311411329_68618829421095

13332830_1053040274744666_70249477109445

13321920_1053040258078001_55396219583279

13319782_1053040204744673_24553896688688

13336087_1053040104744683_73135088753874

13335558_1053038844744809_26646203640629

  • தொடங்கியவர்
முரளியின் அறிவுரை: 'பதற்றமின்றி இருங்கள்'
 
 

article_1464599939-TamilmurolodLEAD-Box.டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இரண்டிலும், உலகில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், ஐ.பி.எல் போட்டிகளில் 2010ஆம் ஆண்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றபோது, 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை அணிக்கு, 4 ஓவர்களில் வெறுமனே 17 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி, சென்னையின் வெற்றிக்கு முக்கிய பங்கை ஆற்றியிருந்தார்.

இப்போது 2016ஆம் ஆண்டில், சண்றைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு வழிகாட்டியாக முரளி செயற்பட்டுவருகிறார். இந்தத் தொடரின் சிறந்த பந்துவீச்சு அணியாக ஹைதராபாத் அணியே, கிரிக்கெட் விமர்சகர்களால் வர்ணிக்கப்பட்டது.

எனினும், கிறிஸ் கெயிலின் அதிரடியால் பெங்களூர் அணி முன்னிலை பெற்றபோது, அணியின் பந்துவீச்சாளர்களைப் பதற்றமின்றி இருக்குமாறு தெரிவித்ததாகத் தெரிவித்த முரளி, இரண்டு துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், பெறவேண்டிய ஓட்ட வீதத்தின் அளவு அதிகரிக்குமெனவும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

ஒரு வீரராக, ஏராளமான கிண்ணங்களை வென்றுள்ள போதிலும், பயிற்றுநராக இதுவே முதற்கிண்ணம் எனத் தெரிவித்த முரளி, அதன் காரணமாக, மிகவும் சிறப்பாக உணர்வதாக மேலும் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/173355/ம-ரள-ய-ன-அற-வ-ர-பதற-றம-ன-ற-இர-ங-கள-#sthash.PMgtDy7g.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஐபிஎல்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள்!

 


 
  • 21.jpg

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார் யார்?

அதிக ரன்கள்

வீரர்கள்

போட்டி

இன்னிங்ஸ்

ரன்கள்

அதிக ரன்

சராசரி

விராட் கோலி

(பெங்களூர்)  

16

16

973

113

81.08

டேவிட் வார்னர்

(ஹைதராபாத்)

17

17

848

93*

60.57

டி வில்லியர்ஸ் 

(பெங்களூர்)

16

16

687

129*

52.84

கெளதம் கம்பிர் (கொல்கத்தா)

15

15

501

90*

38.53

ஷிகர் தவன்

(ஹைதராபாத்)

17

17

501

82*

38.53

அதிக விக்கெட்டுகள்

வீரர்கள்

போட்டி

இன்னிங்ஸ்

ஓவர்

விக்கெட்டுகள்

எகானமி

புவனேஸ்வர் குமார் (ஹைதராபாத்)

17

17

66.0

23

7.42

சஹால்

(பெங்களூர்)

13

13

49.1

21

8.15

ஷேன் வாட்சன் (பெங்களூர்)

16

16

56.3

20

8.58

குல்கர்னி

(குஜராத்)

14

14

49.0

18

7.42

முஸ்தாபிஜுர் (ஹைதராபாத்)

16

16

61.0

17

6.90

http://www.dinamani.com/sports/2016/05/30/ஐபிஎல்-அதிக-ரன்கள்-அதிக-விக்/article3458005.ece

  • தொடங்கியவர்

இது தான் இந்த ஐபிஎல்லில் பெஸ்ட் லெவன்!

சுமார் இரண்டு மாத காலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்த ஐ.பி.எல் திருவிழா முடிவுக்கு வந்துவிட்டது. பெங்களூர் அணியை வீழ்த்தி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த ஐ.பி.எல் சீசனில் சிறப்பாக விளையாடிவர்களை கொண்டு உருவாக்கிய  ஐபிஎல் 2016 கனவு அணி இங்கே! 

டேவிட் வார்னர் (கேப்டன்)

12.jpg


இந்தத் தொடரின் ஒரே  அயல்நாட்டு  கேப்டனாக இருந்தாலும் தனி ஒருவனாக  நின்று பெரும்பாலான போட்டிகளில்  ஹைதரபாத் அணியை வெற்றிபெற வைத்தார் வார்னர். பந்துவீச்சு மிகவும் பலமாக இருந்தாலும், பேட்டிங்கில் இவருக்கு யாரும் பெரிய அளவில் ஒத்துழைப்புத் தரவில்லை. ஆனால் வார்னர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் 17 போட்டிகளில் 9 அரைசதங்களுடன் 843 ரன்கள் குவித்து, ஒரு சீசனில் 800 ரன்னைக் கடந்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் . குறிப்பாக குவாலிஃபயரில் குஜராத் அணிக்கு எதிராக, தனியொருவனாகப் போராடி 93 ரன்கள் எடுத்த வார்னரின் அந்த இன்னிங்ஸ் டி20 வரலாற்றின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் வார்னர்  சிறப்பாக செயல்பட்டார். பவுலர்களை பயன்படுத்துவதில் இவர் பயன்படுத்திய  ட்ரிக்ஸ் வாவ் ரகம்.

குவின்டன் டிகாக்:-

13.jpg

இந்தத் தொடரில் சீரான அட்டத்தை வெளிப்படுத்திய ஒரே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குவிண்டன் டி காக் தான். 23 வயதுதான் என்றாலும் இவரது ஆட்டத்தில் அவ்வளவு முதிர்ச்சி. அதுவும் குறிப்பாக இவரது கட் ஷாட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. டெல்லி அணி சேஸ் செய்த பல போட்டிகளில் அணிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் டிகாக். ஆர்.சி.பி- க்கு எதிராக இவர் அடித்த சதம், வோர்ல்டு கிளாஸ்! டி காக்குக்கு இந்த ஐ.பி.எல்லில் மூன்று முறை தவறாக அவுட் கொடுக்கப்பட்ட நிலையிலும் மூன்று அரை சதம், ஒரு சதம் உட்பட 445 ரன்கள் குவித்திருக்கிறார் டி-காக்.

விராட்  கோஹ்லி

14.jpg

கிரிக்கெட் விளையாடுவது போலவா கோஹ்லி இந்த சீசனில் விளையாடினார்?  'பேட்மேன்' எதிரிகளைப் பந்தாடுவது போல், சர்வதேச பவுலர்கள்  பலரையும்  உரித்துத்தள்ளினார் கோஹ்லி. ஒரே சீசனில் 973 ரன்கள், 4 சதங்கள், ஏழு அரைசதங்கள்,  38 சிக்சர்கள் என ருத்ரதாண்டவம் ஆடினார் வி.கே.! ' அரையிறுதிக்குத் தகுதி பெறுமா' என்று பலரும் இவரது அணி குறித்து நினைத்துக்கொண்டிருக்க, தானே முன்னின்று  அணியை இறுதிப் போட்டி வரையிலும் அழைத்துச் சென்றார். ஒரு கேப்டன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார் கோலி. 20 ஓவர் போட்டியில் சதமடித்தால் சரி, 15 ஓவர் போட்டியில் கூட சதமடித்து பிரமிக்க வைத்த கோஹ்லியின் பேட்டிங் மாஸ்டர்கிளாசை வர்ணிக்க புதுப்புது வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் வர்ணனையாளர்கள் .

ஏ.பி.டிவில்லியர்ஸ்:-,..

15.jpg

கோலி பேட்மேன் என்றால்,  டிவில்லியர்ஸ் சூப்பர்மேன் . குவாலிஃபயரில் குஜராத் அணியின் ,வெற்றியை அவர்களிடமிருந்து வம்படியாய் பறித்த  அந்த   இன்னிங்க்ஸ், ஏ.பி.டியின் மிகச்சிறந்த டி-20 இன்னிங்க்சில் ஒன்று.  வெறும் அதிரடி மட்டுமென்று இல்லாமல், அணியின் நிலை உணர்ந்து ஒவ்வொரு கியராக மாற்றி வேறொரு ஏ.பி.டியை இம்முறை நமக்குக் காட்டினார். 6 அரைசதங்கள் 1 சதம் என 687 ரன்கள் குவித்தார் ஏ.பி.டிவில்லியர்ஸ். ஸ்ட்ரைக் ரேட் - 168,  கோஹ்லியுடன் இவர் அமைத்த கூட்டணி  எதிரணி பவுலர்களுக்கு   வேற லெவல்  தலைவலியாக அமைந்தது .களத்தில் என்ன வேலை செய்தாலும் அங்கு ஏ.பி.டி மேஸ்ட்ரோதான்! ஆம் இந்தத் தொடரில் மொத்தம் 19 கேட்சுகள் பிடித்து அதிலும் முதலிடம் வகிக்கிறார்  இந்த  சூப்பர்மேன்.

டுவைன் ஸ்மித்,

16.jpg

சென்னை அணியில் இருந்த  ஃபார்மை அப்படியே குஜராத்த்துக்கு எடுத்து வந்தார் ஸ்மித். ஓப்பனிங்காக இருந்த போதிலும் சரி, மிடில் ஆர்டரில் இருந்த போதும் சரி, ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தில் எந்தக் குறையும் இல்லை. 3 முறை பவர்பிளேவில் லயன்ஸ் அணி 70 ரன்களைக் கடந்ததே, ஸ்மித்தின்  அசுர வேக அதிரடி ஆட்டத்துக்கு  உதாரணம்.  பேட்டிங்(324 ரன்) மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் (8 விக்கெட்) மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார். ஓரிரு போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய போதும், அணிக்குத் தேவையானபோது விக்கெட்டுகள் எடுக்க இவர் தவறவில்லை. கொல்கத்தாவுக்கு எதிராக
 8 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். ஐந்தாம் நிலையில் களமிறங்க தகுதியான சிறந்த ஆல்ரவுண்டர் இவர்.

யூசுப் பதான்

17.jpg

பொதுவாக ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது  ஓரிரு போட்டிகளில் மாஸ் காட்டும் யூசுப், இம்முறை முழு பார்முக்கு வந்து முழு  தொடரிலும் தன் திறமையை நிரூபித்தார். இத்தொடரில் அவர் அடித்தது வெறும் 361 ரன்கள் . ஆனால், அவரது சராசரி 72.20. எதிரணி வீரர்களால் 5 முறை மட்டுமே இவரை ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது. லீக் போட்டியொன்றில்  பெங்களூரு அணிக்கெதிராக கடைசி கட்டத்தில் சிக்சர் மழையாய்ப் பொழிந்து, தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை வெற்றி பெற வைத்தார். மழையால் பாதிக்கப்பட்ட புனேவுக்கு எதிரான ஆட்டத்தில் இடியாய் இடித்தார் யூசுப். இவரது ஆப் ஸ்பின்னும் அணிக்கு அவ்வப்போது உதவியது.சிக்கனமாக பந்து வீசினார். ஃபினிஷர் ரோலுக்கு பக்கா ஃபிட் யூசுப் பதான்.

ஆந்த்ரே ரசல்

andr.jpg

கடந்த சீசனின் தொடர் நாயகன், இம்முறையும் சூப்பர் நாயகன்தான். இவரால்  நட்சத்திர பந்துவீச்சாளர் மோர்னே மோர்கெலின் தேவை கொல்கத்தாவுக்கு குறைந்தது.  பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அமர்க்களப்படுத்திய ரசல், காயத்தால் அவதிப்பட்டது, நைட் ரைடர்சுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. ரஸ்ஸல் காயத்துக்குப் பிறகு கொல்கத்தா சரியான வேகப்பந்து ஆல்ரவுண்டர்  இல்லாமல் திணறி தோல்விகளை தழுவியது.  15 விக்கெட்டுகளும், 8 இன்னிங்ஸ்களில் 188 ரன்களும் குவித்து இத்தொடரின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்தார். இவரது இடத்தை எந்தவொரு வீரராலும் நிச்சயம் நிரப்ப முடியாது என்பதே உண்மை. 

கிறிஸ் மோரிஸ்

18.jpg

இந்த சீசனின் ஏலத்தில் 7 கோடிக்கு மோரிஸ் வாங்கப்பட்ட போது எத்தனையோ கேள்விகள் எழுந்தன. அதெற்கெல்லாம் தனது திறமையால்  பதில் சொல்லிவிட்டார் மோரிஸ். 150 கி.மீ பந்து வீசி அசத்தியதுடன், அசால்டாக சிக்சர்களைப் பறக்கவிட்டும் அமர்க்களப்படுத்தினார்.  தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்டம் கண்ட டெல்லி அணிக்கு,  தற்போது மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறார் மோரிஸ். 13 விக்கெட்டுகள் அள்ளிய மோரிஸ் 7 இன்னிங்ஸ்களில் 195 ரன் எடுத்தார். வெறும் 17 பந்துகளில் அரைசதம் அடித்து, இத்தொடரின் அதிவேக 50-ஐ பதிவு செய்தார். குறிப்பிட்ட அந்த போட்டியில் குஜராத் பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்து கடைசிப் பந்துவரை இவர் ஆடிய ஆட்டம் மிரட்டலின் உச்சம்,

புவனேஷ்வர் குமார்

19.jpg

ஸ்விங்காலும், யார்க்கர்களாலும் எதிரணியை மிரட்டிய புவனேஷ்தான் இந்த ஆண்டின் பர்ப்பிள் கேப் வின்னர். முதல் போட்டியில் பெங்களூருவின்  சர்ஃபராசால் சூறையாடப்பட்ட பிறகு, தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, மிகச்சிறந்த கம்பேக் கொடுத்தார் புவி. கடைசி தருணங்களில் ஏற்பட்ட இக்கட்டான சூழல்களிலும் முதிர்ச்சியோடு பந்து வீசிய புவனேஷ், நிச்சயம் பர்ப்பிள் கேப் வெல்லத் தகுதியானவர்தான். பவர் பிளேயில் மெயிடென்கள், டெத்தில் யார்க்கர்கள் என 23 விக்கெட்டுகள் அள்ளிய புவி, இந்திய அணியில் தான் இழந்த ஸ்டார்டிங் பெர்த்தை நிச்சயம் கைப்பற்றி விடுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

யுஸ்வேந்திர சஹால்.

20.jpg

ஒவ்வொரு சீசனிலும் பெங்களூரு அணியின் டாப் பவுலராக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் சஹால். திடீரென்று வேகம் காட்டுவது, கூக்ளி, ஐந்தாவது ஸ்டம்ப் லென்தில் வீசுவது போன்றவை  இவரது மிகப்பெரிய பலங்கள். இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பவுலர்  (21 விக்கெட்டுகள்) இவர்தான்.பேட்டிங்குக்குச் சாதகமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கூட விக்கெட் வேட்டை நடத்தும் சஹால், ஜிம்பாப்வே தொடருக்குத் தேர்வானதில் ஆச்சரியம் ஏதுமில்லை. பெங்களூரு அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரே  சஹால்தான். டி-20  பார்மேட்டுக்கு ஏற்ற ஸ்பின் பவுலர் என்பதால், சிறந்த லெவனில் கண்டிப்பாக இவருக்கு இடம் உண்டு.

முஸ்தாஃபிசுர் ரஹ்மான் :-

21.jpg

இந்திய அணியை வங்கதேச மண்ணில் துவைத்தெடுத்த  இந்த இளம் புயலிடம் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் மீறி மிகச்சிறப்பாக செயல்பட்டார்  முஸ்தாபிசுர். மொத்தமாக 17 விக்கெட்டுகள்  அள்ளினார் . ரஹ்மானின் வேரியேஷன்கள் அனைத்து  பேட்ஸ்மேன்களையும் திணறடித்தது. குறிப்பாக அதிரடி ஆட்டக்காரர்  ரஸ்ஸல்லை தனது யார்க்கரால் இவர்  நிலைகுலைய வைத்தது, இந்த ஐ.பி.எல் லின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று. கடைசி கட்ட  ஓவர்களில் மிகச்சிக்கனமாகப் பந்துவீசி  இத்தொடரில் சன்ரைசர்சின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றினார் முஸ்தாஃபிசுர். சராசரியாக ஒரு ஓவருக்கு 6.90 ரன்கள் மட்டுமே கொடுத்த ரஹ்மான் இத்தொடரின் சிறந்த இளம் வீரர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத்  தவிர ஆடம் சம்பா, நெஹ்ரா, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரும் சிறப்பாகவே விளையாடினர். எனினும் குறைந்த போட்டிகளில் மட்டுமே இவர்கள் விளையாடியதால்  லெவனில் சேர்ப்பது சரியாக இருக்காது. இவ்வணியில் 4 இந்தியர்கள் மட்டுமே இடம் பிடித்திருப்பது  மிகவும் கவலைக்கு உரிய விஷயம். இன்னும் ஐ.பி.எல் அணிகள் வெளிநாட்டு வீரர்களையே பெரிதும் நம்பியிருக்கின்றன என்பதையே இது உணர்த்துகிறது. இந்நிலை மாறி இந்திய வீரர்கள் ஜொலித்தால்தான் உலக அரங்கிலும் இந்தியா ஜொலிக்க முடியும். அதற்குத்தானே ஐ.பி.எல் நடத்துறோம் யுவர் ஆனர்?!

http://www.vikatan.com/news/sports/64694-ipl-2016-dream-eleven.art

  • தொடங்கியவர்

ஐபிஎல் துளிகள்: அசத்திய டேவிட் வார்னர்

 
டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

ஐதராபாத் அணி முதல்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. அந்த அணி பட்டம் வென்றதில் வார்னரின் பங்கு அதிகம் உள்ளது. கேப்டனாக அவர் அணியை எல்லா வகையிலும் முன்னின்று வழி நடத்தினார்.

பெரும்பாலான ஆட்டங்களில் அவர் தனிநபராகவே களத்தில் போராடி வெற்றி தேடிக்கொடுத்தார். இந்த தொடரில் அவர் 848 ரன்கள் குவித்தார். இதில் பாதிக்கு மேல் இலக்கை நோக்கி துரத்திய ஆட்டங்களில் வந்தவை. வார்னர் இல்லையென்றால் ஐதராபாத் அணி இறுதிப்போட்டியில் கால்பதித்திருக்காது. இறுதிப்போட்டியில் வார்னர் 38 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார்.

மற்ற அணிகள் சுழற்பந்து வீச்சை ஆயுதமாக பயன்டுத்திய நிலையில் புவனேஷ்வர் குமார், முஸ்தாபிஜுர் ரஹ்மான், ஆஷிஸ் நெஹ்ரா, பரிந்தர் ஸரன், ஹன்ரிக்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியே எதிரணிகளை துவம்சம் செய்தார் வார்னர். அவரின் அசாத்திய திறமையால் தான் ஐதராபாத் முதல் முறை பட்டம் வென்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-துளிகள்-அசத்திய-டேவிட்-வார்னர்/article8671171.ece?homepage=true

  • தொடங்கியவர்

இவங்கதான் இந்த ஐபிஎல்லில் மோசமான 11 ஃப்ளாப் பாய்ஸ்!

இந்த ஐ.பி.எல்லில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள், சொதப்பித் தள்ளி ரசிகர்களுக்கு பல்பு தந்தார்கள். ஸ்டெயின், இஷாந்த் முதல் ஏன், நம்ம தோனி வரை நிறைய ஃப்ளாப்புகள். அப்படி ஃப்ளாப் ஆனவர்களில் ஒரு 11 பேரை ஓர் அணியாக இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

இவர்கள் அரியர் வைப்பவர்கள் அல்ல, டிஸ்டிங்சன் வாங்குபவர்கள். ஆனால் சரியாக சோபிக்காமல் சொதப்பியவர்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை  பொய்யாக்கியவர்கள். அவர்கள் யார் யார் ? இதோ…

பிரெண்டன் மெக்குல்லம்

202.png

தனது கடைசி டெஸ்ட் போட்டியில், அதிவேக சதமடித்து ஓய்வு பெற்ற இந்த நியூசி. முன்னாள் கேப்டன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு. இருந்தது. இம்முறை 354 ரன்கள் எடுத்திருந்தாலும், ஒரே ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தார் BAZZ!  ஸ்மித்தோடு இணைந்து அதிரடியான துவக்கம் தந்தாலும், அதை பெரிய ஸ்கோராக இவரால் மாற்ற முடியவில்லை. குறிப்பாக ஸ்பின்னர்களிடம் ரொம்பவே திணறினார். மெக்குல்லத்தின் ஸ்டேண்டர்டுக்கு இந்த சீசன் ஒரு ஃபெயிலியர் சீசன்தான்.

ஷ்ரேயாஸ் ஐயர்

delhi.jpg

2015 சீசனில் 4 அரைசதம் உட்பட 439 ரன்கள் எடுத்த ஐயர், இம்முறை 6 போட்டிகளில் சேர்த்து அடித்தது வெறும் 30 ரன்களே! ரிசாப் பன்ட், கருண் நாயர்  போன்ற புதிதாக அணிக்குள் வந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டேர்டெவில்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த இவரின் ஆட்டம் இம்முறை  படுசொதப்பல். உள்ளூர், வெளியூர் என எல்லாப் போட்டிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்களிடம் மிகவும் திணறினார். விளைவு, வெறும் 6 போட்டிகளில் மட்டுமே அவரால் விளையாட முடிந்தது. ஷ்ரேயாஸ் ஐயரின் மோசமான ஃபார்ம் காரணமாக, டெல்லி அணிக்கு தொடக்க விக்கெட் ஒவ்வொரு முறையும் விரைவில் விழுந்துவிடுவதால், பவர் பிளேவில் அந்த அணியால் ரன்களை குவிக்க முடியவில்லை.

ஹர்டிக் பாண்டியா

2740.png

 

இந்திய அணிக்காக நீண்ட நாட்களாக தோனி  தேடிக்கொண்டிருந்தது வேகப்பந்து வீசும் ஒரு ஆல்ரவுண்டரை. அவ்விடத்தை நிரப்ப சரியான ஆளாகத் தென்பட்டார் பாண்டியா. உலகக்கோப்பை டி20 யிலும் இடம்பெற்றார். அத்தொடரில் சொதப்பினாலும் ஐ.பி.எல் லில் கலக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் மிக மோசமாக செயல்பட்டார் பாண்டியா. பேட்டிங்கில் முன்னரே களமிறக்கப்பட்ட போதிலும், இவரால் கொஞ்சம் கூட சிறப்பாக செயல்பட முடியவில்லை. 11 போட்டிகளில், வெறும் 44 ரன்களும் 3 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்த இவரது இடத்தை,  அவரது அண்ணன் குரூனல் பாண்டியவே கைப்பற்றினார்.  இவர்  ஆடுகளத்தில் ஹீரோயிசம் காட்ட முயற்சிப்பதை தவிர்த்து, ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ஷேன் வாட்சன்

watson.jpg

16 போட்டிகளில் வெறும் 179 ரன்கள் மட்டுமே எடுத்தார் இந்த 9 கோடி ஆல்ரவுண்டர். ஒரு பவுலராக வாட்சன் சிறப்பாக செயல்பட்டாலும், ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு ஆல்ரவுண்டராக வாட்சன் ஒரு மிகப்பெரிய ஃபெயிலியர். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மிக முக்கியமான குவாலிஃபயர் மற்றும் ஃபைனலில் பொறுப்பாக ஆட வேண்டிய தருணத்தில் படுமோசமாக விளையாடினார். நான்கு ஓவரில் 61 ரன்கள் விட்டுக்கொடுத்தார் . இதுவே பெங்களூரு அணி கோப்பையை நழுவ விட முக்கிய காரணம்.

மேக்ஸ்வெல்
 

maxwell.jpg

பஞ்சாப் அணி பெரிதும் நம்பியிருந்தது மேக்ஸ்வெல்லைத்தான். ஆனால் மேக்ஸ்வெல், பஞ்சாப் ரசிகர்களுக்கு அல்வா தந்ததுதான் மிச்சம். மிடில் ஆர்டரில் களமிறங்கி வெளுத்துக் கட்டுவார் என எதிர்பார்த்தால், பெட்டிப்பாம்பாய் அடங்கிப்போனார். பவுலிங்கிலும் சோபிக்கவில்லை. 11 போட்டிகளில் வெறும் 179 ரன்களை மட்டுமே எடுத்து  ஏமாற்றினார். சொதப்பல் மன்னன் மேக்ஸ்வெல்தான், சொதப்பல் டீமுக்கு பக்கா ஆல்ரவுண்டர்.
 
 டேவிட் மில்லர் (கேப்டன்)

davidmiller.jpg

கேப்டனாக தொடரைத் தொடங்கிய மில்லருக்கு, இது மறக்க வேண்டிய ஒரு தொடராக அமைந்துவிட்டது. 14 போட்டிகளில் 161 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிலும் அதிகபட்சம் வெறும் 31 தான். அசால்டாக பந்துவீச்சாளர்களைப் பந்தாடிய கில்லர் மில்லரா இது என பலருக்கும்  நினைக்கத் தோன்றியது. சுழற் பந்தை, பேட்டால் தொடவே மிகவும் சிரமப்பட்டார் மில்லர். டைமிங் மிஸ்ஸாகிக் கொண்டே இருந்தது . கேப்டன்சியும் மிக  மோசமாகவே இருந்தது. விளைவு கடைசி இடம் பிடித்து வெளியேறியது பஞ்சாப் அணி. டி20 உலகக்கோப்பையிலிருந்தே மில்லரின் ஃபார்ம் மங்க ஆரம்பித்துவிட்டது. ஐ.பி.எல்லில் மோசமாக செயல்பட்டதால் இப்போது தென்னாப்பிரிக்கா அணியிலும் மில்லருக்கு  இடம் இல்லை. இந்த மோசமான அணியில், மோசமான கேப்டன் பதவிக்கும் பொருத்தமானவர் இவர்தான்.

ரவீந்திர ஜடேஜா

ravindrajaeja.jpg

சென்னை சூப்பர் கிங்சின் சூப்பர் ஆல்ரவுண்டர், தனது சொந்த ஊருக்காக விளையாடும்போது எதிர்பார்ப்புகள் எந்த அளவிற்கு இருக்கும்?. ஆனால் குஜராத் அணியின் துணைக் கேப்டன் ஜடேஜாவின் ஆட்டம், மிகப்பெரிய ஏமாற்றமாய் அமைந்தது. 191 ரன்கள் மட்டுமே எடுத்த ஜடேஜா, 8 விக்கெட்டுகளை மட்டுமே இத்தொடரில் வீழ்த்தினார். அதுவும் அவருடைய பந்துவீச்சு சராசரி, 38 க்கும் மேல். ஒரு போட்டியில் கூட இவர் இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணின் மைந்தன் ஜடேஜாவிடம் எதிர்பார்த்த ராஜ்கோட் ரசிகர்களுக்கு எஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

ஜேம்ஸ் ஃபால்க்னர்
 
James-Faulkner-GL.jpg
 
சொதப்பல் பட்டியலில் இருக்கும் இன்னொரு  ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்கனர்.  டெத் பவுலிங், நல்ல ஆல்ரவுண்டர், அட்டகாச ஃபினிஷர் என பல காரணங்களை சொல்லி குஜராத் அணி, இவரை ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் வீரரான ஸ்டெயினுக்கு கூட வாய்ப்பு தராமல்,  அணி நிர்வாகம் தொடர்ந்து ஃபால்க்னருக்கு வாய்ப்பு தந்தது. ஆனால் இத்தொடரில் வெறும் இரண்டே இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி மோசமாக செயல்பட்டார் ஜேம்ஸ். பேட்டிங்கிலும் சொதப்பல், ஃபினிஷர் ரோலிலும் மோசம். மோசமாக விளையாடிவர்கள் பட்டியலில் இந்த மோசமான ஃபினிஷர் & ஆல்ரவுண்டருக்கு  இடம் கிடைத்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பவன் நெகி

pawannegi.png

டெல்லி அணி செலவு செய்த 8.5 கோடி ரூபாய், பத்துப் பைசாவிற்குக் கூட உபயோகமாகவில்லை. 84 ரன்களை விட்டுக்கொடுத்து, 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். ஆல் ரவுண்டர் என்று சொல்லிக்கொள்ளுமளவிற்கு பேட்டிங்கிலும் அவர் சோபிக்கவில்லை. 6 இன்னிங்ஸ்களில் வெறும் 57 ரன்கள்தான் எடுத்தார். இளம் வீரர்களை நம்பியே களமிறங்கிய டெல்லி அணி, இவ்வளவு செலவு செய்த ஒரு வீரர் சரியாக செயல்படாததால் சோர்ந்து போனது. சென்னை அணிக்காக அவ்வப்போது அதிரடி காட்டிய நெகி, அடுத்த சீசனில்  முழு பலத்துடன் மீண்டு வந்து சிறப்பாக விளையாட வேண்டும்.

ரவிச்சந்திரன் அஷ்வின்

ravindthrajedeja1.jpeg

இப்படிப்பட்ட லிஸ்டில் அஷ்வினா? புனே அணிக்காக தன்னுடைய பழைய ஃபார்மைத் திரும்ப எடுத்து வர முடியாமல் தவித்தார் அஷ்வின். போன வருடத்தைப் போல இந்த வருடமும் 10 விக்கெட்டுகளைதான் வீழ்த்தினார். கடைசிப் போட்டி இல்லாமல் பார்த்தால் வெறும் 6 தான். அதிலும் அவரது  எகானமி  7.25 என்பது அஷ்வினின் திறனுக்கு மோசமான செயல்பாடுதான். டெஸ்ட் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் மீண்டு வந்தால் மட்டுமே, புனே அணி அடுத்த சீசனில் எழுச்சி பெற முடியும். பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில், பந்தை திருப்புவதற்கு பெரும் பாடுபடுகிறார் அஷ்வின். புனே அணி அஷ்வினை பெரிதும் நம்பியிருந்ததும் அந்த அணிக்கு ஒரு பின்னடைவாகப் போனது.

இம்ரான் தாஹிர்

imrantahir.jpg

உலகின் தலைச்சிறந்த ஸ்பின்னர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட தாஹிர், ரன்களை வழங்குவதில் வள்ளலாக இருந்தார். ஒரு ஓவருக்கு 8.62 என்ற விகிதத்தில் ரன்களை வாரி வழங்கிய இவர், 5 விக்கெட்டுகளை (4 போட்டிகள்) மட்டுமே வீழ்த்தினார். ஒருபுறம் ஜாகிரும் மிஷ்ராவும் ரன்களைக் கட்டுப்படுத்தினால், அதையெல்லாம் இவர்  தாரளமாக விட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் டெல்லி அணியிலிருந்து  கழட்டிவிடப்பட்டார். இக்கட்டான நேரத்தில் அசத்தலாக பந்து வீசி விக்கெட்டுகளை பறிப்பார் என பலரும் எதிர்பார்த்தால், கடைசியில் வாட்டர் பாயாக வெளியில் இருந்தார் தாஹிர்.

இவர்கள் மட்டுமல்ல பொல்லார்டு, குப்தில், வில்லியம்சன், மார்கன், ஹர்பஜன் என பல  வீரர்கள் அவர்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தத் தவறினர். நிஜத்தில் மேட்ச் வின்னர்களான அவர்கள், வெகுண்டெழ வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் ஆவல்.

http://www.vikatan.com/news/sports/64699-worst-xi-players-of-ipl-2016.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.