Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணத்தை ஈஸியாக்கும் ஐந்து ஆப்ஸ்!

Featured Replies

பயணத்தை ஈஸியாக்கும் ஐந்து ஆப்ஸ்!

 

 

Cellphoneapps600.jpg

நாம் வாழும் இந்த பரபரப்பான 21-ம் நூற்றாண்டில், யாருக்கும் பயணத்திற்கான ரயில்/பஸ் டிக்கெட்டையோ, நண்பர்களுடன் செல்லும் சினிமாவிற்கான டிக்கெட்டையோ நீண்ட வரிசையில் நின்று வாங்குவதற்கான நேரமும், பொறுமையும் இல்லாமல் போய் விட்டது. ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, ஆபிஸ்/வீடு என நாம் இருக்கும் இடத்திலிருந்தே நமக்குத் தேவையான அனைத்தையும் கையடக்க மொபைல் வாயிலாக, அவசரமான நிமிடங்களில் கூட நாம் வசதியாக செய்து கொள்ள முடிகிறது. அத்தகைய திறன் படைத்த அப்ளிகேஷன்களில், மக்களிடையே அதிகம் பிரபலமானவற்றின் தொகுப்பை இப்போது நாம் பார்க்கலாம்.

கூகுள் மேப்ஸ் (GOOGLE MAPS)

googlemap.jpg

கூகுள் ஆண்டவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றான கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷனை, அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல் மற்றும் டேப்லெட்களில் நாம் பயன்படுத்த முடியும். கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.3 ஸ்டார் ரேட்டிங்கை, இந்த அப்ளிகேஷன் பெற்றுள்ளது. 220 நாடுகள் மற்றும் 15,000 நகரங்களின் விரிவான மற்றும் துல்லியமான வரைபடங்கள் இதில் அடக்கம் என்பதால், வழி தெரியாமல் ஓரிடத்திற்கு செல்லும்போது பலருக்குச் சரியான நேரத்தில் உதவும் தோழன் இதுதான். ஜிபிஎஸ் மற்றும் இன்டர்நெட் உதவியுடன் இயங்கும் இந்த அப்ளிகேஷன் ஆனது, டிராஃபிக் நிலவரங்களையும், அதற்கான மாற்று வழியையும் கூட நமக்கு வாய்ஸ் கமாண்ட் மூலம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் முக்கிய இடங்கள், உணவகங்கள், திரையரங்குகள் போன்ற மக்கள் அதிகம் புழங்கும் இடங்களை நாம் எளிதாக அடையாளம் காண முடியும். இதை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.maps

ட்ரிப் அட்வைசர் - ஹோட்டல்/ரெஸ்டாரென்ட் (TRIP ADVISOR - HOTELS & RESTAURANTS)

tripadvisor.jpg

பயண அனுபவங்கள், பயணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், (தரமான ஹோட்டல், விமான டிக்கெட், உணவகம்) ஆகியவற்றை குறைவான விலையில் புக்கிங் செய்யும் ஆப்ஷன் என பலவித தகவல்கள் மற்றும் வசதிகளை ட்ரிப் அட்வைசர் அப்ளிகேஷன் வழங்குகிறது. உலகெங்கும் இருக்கும் சிறந்த 300 நகரங்களின் வரைபடங்கள் மற்றும் அவற்றின் விமர்சனங்களை நாம் டவுன்லோட் செய்து கொள்ள முடியும் என்பதுடன், பயணத்தின் போது எழும் சந்தேகங்களுக்கும் உடனடியாக பதில் கிடைக்கும். ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் ஸ்டோரேஜ், கேமரா, ஜிபிஎஸ், இன்டர்நெட் போன்ற வசதிகள் அனைத்தையும் இந்த அப்ளிகேஷனுடன் இணைத்துக் கொள்ள முடியும். கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.4 ஸ்டார் ரேட்டிங்கை, இந்த அப்ளிகேஷன் பெற்றுள்ளது. இதை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.tripadvisor.tripadvisor&hl=en

உபெர் (UBER)

uber.jpg

நகருக்குள்ளே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திலிருந்து சொகுசாகச் சென்று வருவதற்கு உருவான வாகனமே டாக்ஸி. இந்த சேவையை வழங்குவதில் உலகளவில் புகழ்பெற்றுள்ள உபெர் நிறுவனத்தின் அப்ளிகேஷன் ஆனது, கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.2 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. ஜிபிஎஸ் மற்றும் இன்டர்நெட் உதவியுடன், நாம் இருக்கும் இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடம் பற்றிய தகவலையும், நமக்கு விருப்பமான காரையும் அப்ளிகேஷனில் நாம் தேர்வு செய்ய முடியும். அது தவிர நமக்கென்று ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கிக் கொண்டு, க்ரெடிட் கார்டு மற்றும் பே-பால் விபரங்களை அதில் சேர்த்து விட்டால் போதும்; நாம் காரில் சென்ற தூரத்திற்கு ஏற்ப தானாகவே பணம் செலுத்தப்படுவதுடன், அதற்கான ரசீதும் உடனடியாக மெயிலில் வந்துவிடுவது சிறப்பு. இதை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.ubercab&hl=en

ப்ளா ப்ளா கார் (BLA BLA CAR)

blablacar.jpg

வாடகைக் காரில் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்குத் தனியாகப் பயணிப்பதைவிட, குழுவாக நண்பர்களுடன் பயணிப்பதில் இருக்கும் சுகமே தனி. மேலும், அதற்கான தொகையை காரில் பயணித்த அனைவரும் பகிர்ந்து கொள்ள முடிந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு எதும் இல்லை. மேற்கூறிய அனைத்தையும் செய்யும் ப்ளா ப்ளா கார் அப்ளிகேஷன், கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. இதில் வேண்டிய காரை முன்பதிவு செய்யலாம் என்பதுடன், நாம் இதுவரை பழக்கமில்லாத நபர்களுடனும் காரை பகிர்ந்து கொள்ள நேர்ந்தாலும், அவர்களைப் பற்றிய தகவல்களை அப்ளிகேஷன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.comuto&hl=en

மேக் மை ட்ரிப் (MAKE MY TRIP)

makemytrip1.jpg

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணத்திற்கான டிக்கெட், உணவு மற்றும் தங்கும் வசதி கொண்ட ஹோட்டல் ரூம்கள், பஸ் மற்றும் ரயில் டிக்கெட் புக்கிங் போன்ற சேவைகளை, குறைவான இன்டர்நெட் வேகத்தில் கூட தடையின்றி வழங்குகிறது மேக் மை ட்ரிப் அப்ளிகேஷன். இதில் நமக்கென்று ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கிக் கொண்டால், அடிக்கடி கிடைக்கும் டிஸ்கவுன்ட் கூப்பன்களால், தள்ளுபடி விலையில் மேற்கூறிய அனைத்தையும் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்தே நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. ரயில் டிக்கெட் மற்றும் விமான டிக்கெட்டின் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ்ஸையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிவதுடன், அனைத்து பிராண்ட் கார்டுகளாலும் பத்திரமாக அதற்கான விலையைச் செலுத்த முடிகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.1 ஸ்டார் ரேட்டிங்கை இந்த அப்ளிகேஷன் பெற்றுள்ளது. இதை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.makemytrip&hl=en

irctcapp.jpg

மேலே சொன்ன அனைத்தும், தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால் நமது நாட்டின் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட (INCREDIBLE INDIA) அப்ளிகேஷன், 2014-ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டதாகும். கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.2 ஸ்டார் ரேட்டிங்கை இந்த அப்ளிகேஷன் பெற்றிருந்தாலும், போதிய அளவு அப்டேட்கள் செய்யப்படாத காரணத்தால், மக்களிடம் வரவேற்பைப் பெற தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதே நேரத்தில் ரயில் டிக்கெட் புக்கிங்கிற்காக IRCTC தயாரித்துள்ள அப்ளிகேஷன் ஓரளவிற்கு நல்ல வரவேற்பையும் (4.0 ஸ்டார் ரேட்டிங்), பயனீட்டாளர்களையும் பெற்றுள்ளது.

http://www.vikatan.com/news/information-technology/61963-apps-that-will-help-you-travel-easy.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.