Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ப் புத்தாண்டு ரெசிப்பிக்கள்

Featured Replies

தமிழ்ப் புத்தாண்டு ரெசிப்பிக்கள்

 

மிழ்ப்புத்தாண்டு அன்று மதியம் எல்லோருடைய வீட்டிலும் வடை பாயாசத்தோடு துவங்கும் ரெசிப்பிக்களை இங்கே உங்களுக்காக வழங்கியிருக்கிறோம். அவற்றில் நான்கு அட்டகாசமான ரெசிப்பிக்களுக்கான செய்முறை வீடியோக்களும் இங்கு உள்ளன.  

 

 

தேவையானவை:
பலாப்பழம் - 15
வெல்லம் - அரை கப்
கெட்டியான தேங்காய் பால் - அரை கப்
இரண்டாம் தேங்காய் பால் - அரை கப்
முந்திரி - 10
நெய் - 3 டீஸ்பூன்
தண்ணீர் - கால் கப்
தேங்காய் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை

0011.jpg

செய்முறை: பலா பழத்தின் கொட்டையை நீக்கி விட்டு,  குக்கரில் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த உடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அரைத்த பலாப்பழ விழுதுடன் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கலந்து, இரண்டாம் தேங்காய்ப்பால் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும். வாணலியில் இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரியையும், தேங்காய் துண்டுகளையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த தேங்காய், முந்திரியை வெந்து கொண்டிருக்கும் சக்க பிரதமனில் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். கடைசியாக திக்கான தேங்காய்ப்பால் சேர்க்கவும்.

Chakka Pradhaman

Ingredients:
Jack Fruit - 12 - 15
Jaggery - half cup
Thick Coconut milk - half cup
Thin Coconut milk - half cup
Cashew - 10
Ghee - 3 tsp
water - 1/4 cup
Coconut bits - 1 t&lsp
Cardamon - a pinch

Method: Discard the seeds of jack fruit and cook in a pressure cooker with 1/4 cup water, Grind the cooked fruits in the ninie. Dissolve Jaggery in little water and strain. Add Jaggery Syrup to the blended Jack fruit and min it well. Add thin cocount milk and boil. Fry cashew and coconut in little Ghee. till it turns golden brown. Add this to the chakka pradhaman and sustch off the stove. Add thick Coconut milk and mix it well.


மாம்பழ மோர்க்குழம்பு

தேவையானவை:
மாம்பழம் - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்பொடி - சிறிது
அரைக்க:
தேங்காய் - அரை கப்
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - கால் டீஸ்பூன்
பச்சரிசி - 2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 2

004.jpg

செய்முறை:
மாம்பழத்தை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். தயிருடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கடைந்து கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம், பச்சரிசி முதலியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காய் விழுது, கடைந்த தயிர் முதலியவற்றை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் மாம்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் தாளித்து மோர்க்குழம்பில் ஊற்றி இறக்கவும். 

 

பி.கு. தயிர் சேர்த்தவுடன் அதிகம் கொதிக்க விடக் கூடாது. தயிர் திரிந்து விடும்.


மாங்காய் பச்சடி

தேவையானவை:
மாங்காய் - ஒன்றரை கப்
வெல்லம் - முக்கால் கப்
உப்பு - ஒரு சிட்டிகை
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

003.jpg

செய்முறை: மாங்காயின் தோலை சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் மாங்காய் துண்டுகளை குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு ஒரு விசில் சத்தம் வரும் வரை வேக வைக்கவும். வெந்த மாங்காயை நன்றாக மசித்துக்கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும். மாங்காயுடன் வெல்லத்தைச் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பச்சடி கெட்டியாக வந்தவுடன் ஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து மாங்காய் பச்சடியில் ஊற்றவும்.

Mango Pachadi

Ingredieats:
Raw Mango - 1 1/2 cup
Jaggery - 3/4 cup
salt - a pinch
To Temper:
oil - 1 tsp
Mustard - 1/4 tsp
Red Chilli - 2 tsp

Method: Peel the mango and cut into cubes. Pressure cook with little water. Mash it well Add little water to Jaggery dissolve and strain in the stove. Add jaggery syrup to mashed manago and ocok well. Heat oil in tadka pan and add mustard and red Chilli and add the Pachadi.


வேப்பம் பூ ரசம்

தேவையானவை:
வேப்பம் பூ - ஒரு டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - அரை டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 2 சிட்டிகை
தாளிக்க:
நெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு  டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 - 5
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது

002.jpg

செய்முறை:
வேப்பம் பூவை லேசான தீயில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, வெல்லம், மஞ்சள்பொடி சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன், ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும். இறுதியாக சிறிது நெய் விட்டு வேப்பம் பூவை  வதக்கி ரசத்தில் சேர்க்கவும். வேப்பம் பூ சேர்த்தவுடன் ரசத்தை கொதிக்க விடக் கூடாது.

 


உப்புப் பருப்பு

தேவையானவை:
 பாசிப்பருப்பு - 100 கிராம்
 நல்லெண்ணெய் - அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 சீரகம் - கால் டீஸ்பூன்
 பூண்டு - 2 பல்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு

p20.jpg

செய்முறை:
பருப்பைக் கழுவி சுத்தம் செய்து நல்லெண்ணெய், மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிடவும். பருப்பு சிறிது வெந்ததும் தட்டிய பூண்டு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி மூடி போட்டு வேக வைக்கவும். பருப்பு நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து, கரண்டியால் நன்கு மசித்துவிட்டு, நெய்யுடன் பரிமாறவும்.



சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை:
 பச்சரிசி - 200 கிராம்
 பாசிப்பருப்பு - 50 கிராம்
 வெல்லம் - 250 கிராம்
 ஏலக்காய் - 2 (பொடித்தது)
 முந்திரி - 10
 உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - 10
 நெய் - 7 டீஸ்பூன்

p21.jpg

செய்முறை:
அரிசியைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பச்சை வாசனை போகும் வரை வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, வறுத்த பாசிப்பருப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். இத்துடன் அரிசியைச் சேர்த்து 800 மில்லி தண்ணீர் ஊற்றி, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். வெந்த பச்சரிசியை அடுப்பில் வைத்து, வடிகட்டிய வெல்லப்பாகை இத்துடன் சேர்த்து அரிசி உடைந்துவிடாமல் மெதுவாகக் கிளறவும். சூடான நெய்யில் முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை (கிஸ்மிஸ்) ஆகியவற்றை வறுத்து பொங்கலில் சேர்த்தால், சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.


 பச்சைப்பட்டாணி வடை

தேவையானவை:
 பச்சைப்பட்டாணி - அரை கிலோ
 காய்ந்த மிளகாய் - 6
 சோம்பு - 2 டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய   
பெரிய வெங்காயம் - 4
 கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடியளவு
 கறிவேப்பிலை - 10 கிராம்
 இஞ்சி - 1 துண்டு (தட்டிக் கொள்ளவும்)
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - பொரிக்கத்
தேவையான அளவு

p22.jpg

செய்முறை:
பச்சைப்பட்டாணியை 8 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறிய பட்டாணியுடன் காயந்த மிளகாய், சோம்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து வைக்கவும். இத்துடன் வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


பரங்கிக்காய்ப் பொரியல்

தேவையானவை:
 மீடியம் சைஸில் நறுக்கிய
பரங்கிக்காய் - கால் கிலோ
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 நீளவாக்கில் நறுக்கிய
சின்ன வெங்காயம் - 15
 நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாய் - 2
 உப்பு - தேவையான அளவு
 தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன்

தாளிக்க:
 காய்ந்த மிளகாய் - ஒன்று
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 உளுந்து  - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் - 3 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு

p23.jpg

செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் பெருங்காயத்தூள், வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பரங்கிக்காய் சேர்த்து வதக்கி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு மூடி வைத்து வேகவிடவும். பரங்கிக்காய் வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


சாம்பார்

தேவையானவை:
 துவரம்பருப்பு - 100 கிராம்
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
 மீடியம் சைஸில் நறுக்கிய தக்காளி - 2
 நீளமாக நறுக்கிய கத்திரிக்காய் - 100 கிராம்
 துண்டுகளாக்கிய முருங்கைக்காய் - 2
 நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 20
 புளி - சின்ன எலுமிச்சை அளவு
 சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 உளுந்து - அரை டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 காய்ந்த மிளகாய் - 2

p24.jpg

செய்முறை:
புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும். பருப்பைக் கழுவி சுத்தம் செய்து மஞ்சள்தூள், விளக்கெண்ணெய் சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவும் இத்துடன் தக்காளி, கத்திரிக்காய், முருங்கைக்காய், வெங்காயம் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றவும். பிறகு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து காய்கள் வேகும் வரை கொதிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்து தாளித்து கொதிக்கும் சாம்பாரில் ஊற்றி இறக்கிப் பரிமாறவும்.


கதம்பப் பொரியல்

தேவையானவை:
 பாசிப்பருப்பு - 6 டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய கேரட் - 4
 பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 50 கிராம்
 பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - 200 கிராம்
 உப்பு - தேவையான அளவு
 தேங்காய்த்துருவல் - 50 கிராம்

தாளிக்க:
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுந்து - கால் டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு

p25.jpg

செய்முறை:
பாசிப்பருப்பை 20 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும். ஊறிய பாசிப்பருப்புடன் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். வேகவைத்த காய்களை இத்துடன் சேர்த்து வதக்கவும். காய்களில் உள்ள ஈரத்தன்மை குறைந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.


செளசெள கூட்டு

தேவையானவை:
 மீடியம் சைஸில் நறுக்கிய செளசெள - கால் கிலோ
 கடலைப்பருப்பு - 100 கிராம்
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு

அரைக்க:
 தேங்காய் - அரை முடி
(துருவிக் கொள்ளவும்)
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 பச்சைமிளகாய் - 2

தாளிக்க;
 தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 கடுகு - ஒரு டீஸ்பூன்

p26.jpg

செய்முறை:
கடலைப்பருப்பை அரை மணிநேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு செளசெள சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த பேஸ்ட்டைச் சேர்த்து வேக விடவும். செளசெள வெந்ததும் வேகவைத்த பருப்பைச் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.


வாழைக்காய் ரோஸ்ட்

தேவையானவை:
 வாழைக்காய் - 2
 மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 எண்ணெய் - தேவையான அளவு

p27.jpg

செய்முறை:
வாழைக்காயை வட்டமாக தோலுடன் நறுக்கிக் கொள்ளவும். மிளகுத்தூள், சோம்புத்தூள், உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று கலக்கவும். இதில் வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து அரை மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வாழைக்காய்களை வைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

இது வருடப்பிறப்பு சமையல் இல்லை.வருத்தக்காரருக்கு ஏற்ற சமையல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.