Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிந்தால் சொல்லுங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

சகோதரி நீங்கள் படங்களைப் பார்த்து ஓரளவு உங்களின் வீட்டுத் தோட்டம் அனுமானத்தில் இருக்கு. நான் பல்கனியில்தான் வைத்திருக்கின்றேன்.

நான் செய்வது ஒரு 30 லிட்டர் தண்ணிக் கான். அதை தோட்டத்தின் ஒரு மூலையில் வைத்து அதனுள் அன்றாடம் வெட்டும் வெங்காயத் தோல், 100 கிராம் மஞ்சள், பெருங்காயம், மிளகாய் காம்புகள் கழிவுகள் ,கறிவேப்பிலை, கிடைத்தல் வேப்பிலையும், சாணி கிடைத்தால் அதுவும் பாதித் தேங்காயளவுபோட்டு அவை  மூழ்கும் அளவு தண்ணீ விட்டு நன்றாக மூடி வைக்கவும். ஒரு வாரத்துக்குப் பின் அந்த நீரை வடிகட்டி பம்முக்குள் விட்டு இருநாட்களுக்கு ஒருமுறை மாலையில் நன்றாக இலைகளின் கீழ்ப் பக்கம் எல்லாம் தோயும்படி அடித்து வரவும். ( இதில் ஒரு லிட்டருக்கு மூன்று லிட்டர் நல்ல தண்ணீர் கலக்கலாம்)

இந்த சம்மர் வர மூன்று மாதங்களுக்கு முன்பே  மரங்களுக்கு நன்றாகக் ஹேர்கட்டிங் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதிலேயே  அரைவாசி பூச்சி புழுக்கள் போய் விட்டிருக்கும். இப்ப துளிர் விட்டிருக்கும்.

சாடியில் தண்ணி எடுத்ததும் மீன்டும் அளவாய் தண்ணி விட்டு தொடர்ந்து கொண்டு வரலாம்.

--- அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தும் பூச்சிகள் விசிட் பண்ணுவினம். அதனால் அவர்களுக்கும் ஒவ்வொரு லிட்டர் தண்ணியும் ஒரு பம்மும் அன்பளிப்பு செய்வது பயன் தரும்.  அவர்களுக்கு நேரமில்லை என்று சொல்லும் பட்சத்தில், கோபப்படாமல் ஒரு விடுமுறை நாளில் நீங்களோ, துணைவரோ பம்முக்குள் கலைவையை நிரப்பிக் கொண்டு அந்த வீடுகளுக்குப் போய் அடித்து விட்டு வரலாம். 

அவசரம் சமயத்துக்கு அந்த பியர் கள்ளன் தம்பியைக்கூட மானரோசம் பார்க்காமல் கூப்பிட்டு இந்த வேலைக்குப் பயன் படுத்தலாம். நமக்குத் தோட்டம் முக்கியம்....!  tw_blush:

மிக்க நன்றி சுவி அண்ணா. பியர் கள்ளனைக் கூப்பிடச் சரிவராது. அவன் இடம்மாறிப் போட்டான். மற்றது எல்லாம் செய்து பாக்கிறன். இடப்பக்க வீட்டுக் கிழவிதான் ஒருத்தரையும் வீட்டுக்குள்ள விடாது. மற்றப்படி ஓகே

10 hours ago, Nathamuni said:

முதலுக்கே மோசம்... 

எல்லா மரங்களையும் கடையிலேயே வைச்சா, உதுகளை செய்ய சொல்லி, கையில ஒரு பியரையும் கொடுத்து அனுப்பலாம்.

கஸ்டமர்கள், மரங்களுக்கு இடையில தண்ணி தேடி எடுக்கிற, நல்ல அனுபவத்தில, அடிகடி வர, அக்கா அந்த மாதிரி துட்டு பார்ப்பா...

ஆனால் மரங்கள் வளர்ப்பு தொடர்பாக அக்கா சொல்லும் பைத்தியத்துக்கு வைத்தியம் தான் பிரச்னை... இது தொடர்பில் university of Newcastle ஒரு ஆய்வினை நடத்துகிறது. 

tw_astonished:tw_dizzy:

9 hours ago, Surveyor said:

விஸ்கி பிராண்டி பீர் என்பவற்றை ஒண்டுக்கு ஒண்டுக்கு நான்கு வீதத்தில் கலந்து பூசிகளின் மீது ஸ்ப்ரே செய்தால்,  மேற்படி கலவையைக்குடித்த பூசிகள், ஒவ்வாமை காரணமாக சாகக் கூடும் அல்லது மயங்கக் கூடும். எப்புடி எங்கடை ஐடியா??????tw_blush:

இயற்க்கை பூச்சி கொல்லி தயாரிக்கும் முறை பற்றி கீழே இணைப்பில் சென்று வாசித்து மேலதிக தகவல்களை பெறலாம்.

http://thamil.co.uk/?p=6586

ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனால் உந்தக் கோதாரி நாத்தத்தை நான் என்னெண்டு சகிக்கிறது ????

இணைப்புக்கு நன்றி

7 hours ago, ராசவன்னியன் said:

Well proven method..!

பூக்கூடையை கையிலெடுத்துக் கொள்ளுங்கள்..

பூக்களின் அருகே செல்லுங்கள்..

உரத்த குரலில் பக்திப் பரவசத்துடன் நெக்குருக பாடுங்கள்..

" சிவமயமே.. எங்கும் சிவமயமே..!
இனி பவபயம் இல்லை, எங்கும் சிவமயமே..!! "

பச்சை பூங்கன்றுகளை பீடித்துள்ள பூச்சிகள், அழுக்கணவன், பங்கஸ் எல்லாம் உங்கள் கையிலுள்ள கூடைக்குள் தானாக பறந்து சென்று ஒளிந்துகொள்ளும்..!

(Click Red arrow to play..)

மேடை இல்லாமல் நான் பாட ஏலாதண்ணா.

7 hours ago, பெருமாள் said:

உங்களைப்பற்றி கேள்விப்பட்டது உண்மைதான் போலுள்ளது வேப்பிலை கடைகளில் 1kg ஆறு பவுன்ஸ் இனி முடிவு உங்கள் கையில் 

அட உங்கட காதுக்கும் வந்திட்டுதே

1 hour ago, nedukkalapoovan said:

நன்றி

1 hour ago, ரதி said:

சுமோ,உங்கள் வீட்டு கழிவறையின்ட தண்ணீரை நேரே தோட்டத்திற்கு போகக் கூடியவாறு செய்து விடுங்கள்.அப்புறம் பாருங்கள் கிருமிகள் சாவதோடு மட்டுமல்லாமல் தோட்டமும் செழித்து வளரும்

அடடே முதலே தெரியாமல் போச்சே. இனி எல்லாத்தையும் இடிச்சுக் கட்டேலாதே

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வாழும் நாட்டில் Scots pine இதன் இன்னுமொரு வகை மரத்திலிருந்துதான் கற்பூரம் தயாரிக்கிறார்கள். இதன் மரச்சாறிலிருந்து ஒருவகை சவர்காரத் திரவம் தயாரிக்கிறார்கள் அதாவது நீங்கள் பாத்திரம் கழுவப்பாவிப்பீர்களே நிரைத்திரவங்கள் அதுபோலவே இதுவும் அனேகமாகத் தரைவிரிப்புகள் சுத்தம்செய்யப் பாவிப்பார்கள். அதைச் சிறிதளவு தண்ணிரில் கலந்து பூவாளியால் தெளிச்சுப்பார்க்கவும். அனேகமாக நீங்கள் பூச்சிகொல்லிகளைப்பாவித்ததால் இயற்கையாகவே உங்கள் தோட்டத்தில் உள்ள லேடிபேர்ட் எனும் வண்டினம் அழிந்துவிட்டது என நினைக்கிறேன் லேடி பேர்ட் இருந்தாலே போதும் அழுக்கணவனை இவைகள் சாப்பிட்டுவிடும்

Effective Microorganisms  (EM ) இது சிலவேளை உதவக்கூடும் அனேகமாக வீட்டுத்தோட்டம் சம்பந்தமான கடைகளில் கிடைக்கலாம் தவிர இந்த ஈ எம் எனப்படுவது பயிர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதுடன் நத்தை வருவதைக் கட்டுப்படுத்தும். மேலும் மாலை நேரங்களைல் சிறு விளக்கை உங்கள் வீட்டுத்தோட்டத்தில் ஏற்றிவைத்து அதன் பக்கங்களில் எண்ணை தடவிய காகிதத்தைத் தொங்கவிடவும் (கவனம் நெருப்புப்பிடிச்சால் நான் பொறுப்பில்லை தவிர தோட்டத்தின் ஓரங்களில் செவ்வந்தி சூரியகாந்தி திருநீற்றுப்பச்சை (Basil) இவ்வினத்தில் தொடர்ந்தும் வருடக்கணக்கில் வாழக்கூடிய இனம் இருக்கு தேடிப்பிடித்து நடவும் அதிலும் லெமன் பசில் மின்ட் பசில் சோக்லேட் பசில் என ஏகப்பட்ட இனங்கள் இருக்கு தவிர லவண்டர் செடியை நடலாம் இவைகளைப் பூச்சிகள் அணுகாது இவ்வாசனையே ஏனைய பயிருக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்

இன்னுமொரு விடையம் பூச்சிகொல்லிகள் செயற்கை பயிர்வளர்ச்சி ஊக்கிகள் இவற்றைத் தவிர்கவும் காலப்போக்கில் சரியாக வந்துவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/04/2016 at 9:57 AM, Elugnajiru said:

மிக்க நன்றி பயனுள்ள தகவல் தந்தமைக்கு.  Effective Microorganisms  (EM ) இது பற்றிக் கொஞ்சம் விளக்கம் தாருங்கள்.

  • 8 months later...

என் வீட்டுப் பூச்சிகள் பொல்லாதவை. நீங்கள் கூறியபடி லெமன், பசில்  எல்லாம் வாங்கி நட்டேன் அவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டன பூச்சிகள்.

On 17/04/2016 at 7:56 PM, nedukkalapoovan said:

இந்த மருந்து வேலை செய்ததுதான். ஆனால் சில செடிகளின் இலைகளும் கருகிவிட்டன.

இப்பொழுது விசேடமாக வெள்ளைச் சிறு பூச்சிகள் வந்துள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த முடியவே இல்லை.

கொலண்டில் இருந்து, யேர்மனியில் இருந்து கொண்டுவந்த கன்றுகள் நாசமாகிவிட்டன இவற்றால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.