Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னமும் நீடிக்கும் மனித உரிமை கவலைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இன்னமும் நீடிக்கும் மனித உரிமை கவலைகள்!
[Friday 2016-04-22 09:00]
இலங்கை மனித உரிமை நிலைமையில் கடந்த ஆண்டு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒருசில விடயங்கள் தொடர்பான கவலைகள் இன்னும் தொடர்கின்றன என்று பிரிட்டனின் வருடாந்த மனிதஉரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.நேற்று வெளியிடப்பட் டுள்ள அந்த அறிக்கை யில் இலங்கை தொடர் பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு-

இலங்கை மனித உரிமை நிலைமையில் கடந்த ஆண்டு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒருசில விடயங்கள் தொடர்பான கவலைகள் இன்னும் தொடர்கின்றன என்று பிரிட்டனின் வருடாந்த மனிதஉரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.நேற்று வெளியிடப்பட் டுள்ள அந்த அறிக்கை யில் இலங்கை தொடர் பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு-

  

இலங்கையின் மனித உரிமைகள் தொடர் பில் தொடர்ச்சியாக பிரிட்டனின் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.இலங்கையின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பில் பிரிட்டன் அதிக அக்கறையுடன் செயற்படுகின்றது. அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமை நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஒருசில விடயங்கள் தொடர்பான கவலைகள் இன்னும் இலங்கையில் தொடர்கின்றன.

2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் கவனிக்கத்தக்கன. குறிப்பாக கருத்து சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், இனக்கலவர பதற்றமின்மை, ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டமை போன்றவற்றை குறிப்பிடலாம். அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியமையும் நல்லிணக்கத்துக்கும், பொறுப்புக்கூறலுக்கும் தன்னை அர்ப்பணித்தமையும் வரவேற்கத்தக்க விடயங்களாகும். அந்த விடயங்களை ஆராய்வதற்கு அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கின்ற முயற்சிகள் பாராட்டத்தக்கன.

அதேநேரம் வடக்கிலும், கிழக்கிலும் நிலைமைகள் குறிப்பிட்டத்தக்களவு மோசமானதாகவே காணப்படுகின்றன. மனித உரிமை காப்பாளர்கள் தொடர்ந்தும் சித்திரவதைக்குட்படுதல், தொடர் கண்காணிப்புக்கள், சித்திரவதை சம்பவங்கள், பாலியல் வன்முறைகள் என்பவை 2015 ஆம் ஆண்டிலும் பதிவாகியிருக்கின்றன.

இதேவேளை பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் இலங்கைக்கு 6.6 மில்லியன் பவுண்களை அடுத்த மூன்று வருடகாலத்துக்கு உதவியாக வழங்கியுள்ளார். நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும் பலப்படுத்தவே இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் பிரிட்டனின் அனுபவங்களை பகிர்வதுடன் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும் பிரிட்டன் தயாராக உள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=155981&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.