Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி என்ற பேச்சுக்கே தயாரில்லை': சுதந்திரக் கட்சி

Featured Replies

சமஷ்டி என்ற பேச்சுக்கே தயாரில்லை': சுதந்திரக் கட்சி

150325123811_mahinda_samarasinghe_512x28

அமைச்சர் மகிந்த சமரசிங்க

இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை பற்றி பேச்சு நடத்துவதற்கு கூட ஆளும் பிரதான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என்று அக்கட்சி கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

'ஃபெடரல் ஆட்சிமுறை பற்றி பேசுவதற்கு நாம் தயாராக இல்லை. அதனால், நாம் வென்றெடுத்துள்ள அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை, ஸ்திரமற்ற நிலைக்குத் தான் செல்லும்' என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13-ம் திருத்தம் மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கி- நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்ற அதிகாரங்களை வழங்குவது பற்றி பேச்சு நடத்தினாலும் சமஷ்டி முறைக்கு ஒருபோதும் தமது கட்சி ஒத்துழைப்பு அளிக்காது என்றும் மகிந்த சமரசிங்க கூறினார்.

150901114329_c_v_vigneswaran_512x288_bbc

 

 வடக்கு கிழக்கு மக்களுக்கு சமஷ்டி முறை தீர்வினை வடக்கு மாகாணசபை யோசனையாக முன்வைத்துள்ளது

'மாகாணசபைகள் தேவையானால் தீர்மானங்களை நிறைவேற்றி இங்கு அனுப்பமுடியும். ஆனால், எமது தரப்பிலிருந்து எந்தவிதமான ஒத்துழைப்பும் கிடைக்காது' என்றார் மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக உள்ள மகிந்த சமரசிங்க.

வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கும் சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது என்றும் சமரசிங்க கூறினார்.

இலங்கையின் புதிய அரசியலமைப்பில், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை கொண்டுவருவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று வடக்கு மாகாணசபை தீர்மானம் ஒன்றை அண்மையில் நிறைவேற்றியிருந்தது.

'நாட்டைப் பிரிக்காமல், தனித்து வாழும் அதே நேரம் அனைத்து மக்களுடனும் இணைந்துவாழவே' தமிழர்கள் ஆசைப்படுவதாகவும், அதை மையப்படுத்தியே தமது தரப்பால் புதிய அரசியல் சாசனத்துக்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/04/160425_slfp_federal

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனோட பேசி ஒரு பிரயோசனமும் இல்லை என்பதை அவன் தெளிவாச் சொல்லுறான். எங்கடையள் தான் கேட்குதுகள் இல்லை. 

சிங்களவனுக்கு தமிழர்களைப் போரில் வெல்ல.. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற முழக்கத்தின் கீழ் உதவிகளை அள்ளி வழங்கினவை தான்.. தமிழர்களின் இந்த அவல நிலையைப் போக்க எனி தமிழர்கள் பேச வேண்டிய இடம். அது சொறீலங்காவுக்கு வெளியில் தான் உள்ளது. 

தமிழர்களை அழிக்க அடிமைப்படுத்த சிங்களவன் சர்வதேசத்தை அணுகியது போல.. ஏன் தமிழர்கள் தாம் வாழ வாழ வழிவிட சர்வதேசத்தை உரிய முறையில் அணுக முடியாதுள்ளனர் என்பது தான் இன்றுள்ள கேள்வியே..?!

எத்தனை தீர்மானங்களை என்றாலும் போடு நாங்கள் அவற்றைக் கணக்கில் எடுக்கமாட்டம் என்று சிங்களவன் பகிரங்கமாகச் சொல்வது ஒன்றே போதுமே சர்வதேசத் தலையீட்டை தமிழர்கள் தமக்காகக் கோர. ஏன் அதில் தமிழர்கள் இன்னும் தயக்கம் காட்டுகிறார்கள்...??!

நல்லிணக்கம் என்பது தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாமல் சாத்தியமில்லை என்பதை சர்வதேசம் அறியச் செய்வது ஒன்று மட்டுமே தமிழர்களுக்கு இன்று அவசியமாக உள்ள ஒரு நகர்வாகும்.

போர்க்குற்ற விசாரணைகளையும் சர்வதேசம் முன்னெடுக்க வலியுறுத்த சிங்களவனின் அரசியல் அணுகுமுறைகளில் உள்ள கேலித்தனங்களைப் பாவிக்கலாம். 

இது தமிழர்களுக்கு சாதகமான களம். பாவிப்பார்களா...??! tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

image_1461656606-3774b0bea0.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.