Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராம் கடத்தப்படவில்லை; கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டில்;அம்பாறை எஸ்.எஸ்.பிக்கு தெரிவித்து விட்டே கைது செய்தோம் –பொலிஸார்

Featured Replies

ராம் கடத்தப்படவில்லை; கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டில்;அம்பாறை எஸ்.எஸ்.பிக்கு தெரிவித்து விட்டே கைது செய்தோம் –பொலிஸார்
2016-04-26 08:10:42

(ஆர்.கிறிஷ்­ணகாந், சர­வணன்)

 

16227_37.jpgதிருக்­கோவில் தம்­பி­லுவில் பிர­தே­சத்தில்  நேற்று முன்­தினம் கடத்­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்ட விடு­தலை புலிகள் அமைப்பின் அம்­பாறை மாவட்­டத்தின் முன்னாள் தள­பதி ராம் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் கட்­டுப்­பாட்டில் இருப்­ப­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

 

பயங்­க­ர­வாத தடுப்பு சட்­டத்தின் கீழ் விசாரணை­க­ளுக்­காக இவர் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்தார்.

 

நேற்று முன்­தினம் காலை 8.30 மணி­ய­ளவில் நீல நிற வேன் ஒன்றில் பொலிஸ் சீரு­டையை ஒத்த உடை­ய­ணிந்து வருகை தந்­தி­ருந்த நப­ரொ­ரு­வரும் மற்­று­மொரு சிவி­லி­ய­னொ­ரு­வரும் தம்­பி­லுவில் பிர­தே­சத்தில் வைத்து தனது கண­வரை கடத்திச் சென்­ற­தாக கடத்­தப்­பட்ட ராமின் மனைவி நேற்று முன்­தினம் திருக்­கோவில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு மேற்­கொண்­டி­ருந்தார் என பொலிஸார் தெரி­வித்­தனர்.

 

இது இவ்­வா­றி­ருக்க, புலி­களின் முன்னாள் அம்­பாறை மாவட்ட தள­பதி ராம் பயங்­க­ர­வாத குற்­றத்­த­டுப்பு பிரி­வி­னரால் நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவரைக் கடத்­த­வில்லை என திருக்­கோவில் பொலிஸார் தெரி­வித்­தனர்.

 

திருக்­கோவில் தம்­பி­லு­வி­லுள்ள வீட்டில் ராம் இருந்­த­போது சம்­ப­வ­தி­ன­மான ஞாயிற்­றுக்­கி­ழமை பயங்­க­ர­வாத குற்­றத்­த­டுப்பு பிரி­வினர் விசா­ர­ணைக்­காக அவரை கைது செய்­வது தொடர்­பாக அம்­பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்கு தெரி­வித்து விட்டு அவரை விசா­ர­ணைக்­காக கைது செய்­துள்­ளனர்.

 

இருந்­த­போதும் அவர் தனி­மையில் இருந்­த­போது இந்த சம்­பவம் இடம்­பெற்­றதால் அவ­ரது மனைவி ராமை கடத்திச் சென்­ற­தாக பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

 

இது தொடர்­பாக சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரிக்கு தெரி­யப்­ப­டுத்­திய போது அவர் பயங்­க­ர­வாத குற்­றப்­பி­ரிவு தெரி­வித்­து­விட்டு  ராமை கைது செய்து விசா­ரிக்க சென்­றுள்­ளமை தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து அவர் கட்­டத்­தப்­ப­ட­வில்லை கைது செய்­யப்­பட்டார் என்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு அவ­ரது மனை­விக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என பொலிஸார் தெரி­வித்­தனர்.

 

ராம் என்ற முன்னாள் விடுதலை புலிகள் முக்கியஸதர் 2009 ஆம் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு மேற்படி பிரதேசத்துக்கு வந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=16227#sthash.U2fwbA6G.dpuf
  • தொடங்கியவர்

600 பொலிஸாரின் கொலையுடன் தொடர்புபட்டவர் ராம்
 
26-04-2016 03:38 AM
Comments - 0       Views - 72

article_1461643155-54A.jpgகடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி, சமூகமயப்படுத்தப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் எனப்படும் ராம் என்பவர், பயங்கரவாத விசாரணைப்பிரிவின் (ரி.ஐ.டீ) காவலில் உள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவர், திருக்கோவில் - தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிலிருந்த போது  24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று (24), வான் ஒன்றில் வந்த இனந்தெரியாதோர் கடத்தப்பட்டார் என்று அவருடைய மனைவி முறைப்பாடு செய்திருந்தார்.

புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்), அவ்வமைப்பிலிருந்து விலகியதையடுத்து, ராம், தனக்குச் சார்பான உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பிச்சென்றுள்ளார்.

அதன் பின்னரே, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ஆயுதப் பிரிவுக்குப் பொறுப்பாக பிரபாகரனால், ராம் நியமிக்கப்பட்டார்.

ஆனையிறவு மற்றும் பூநகரி இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தலைமைவகித்த அவர், கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் குழுவொன்றைக் கடத்தி அதில் 600 பொலிஸாரை படுகொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, யால தேசிய சரணாலயத்தில் இடம்பெற்ற பல்வேறான தாக்குதல் சம்பவங்களுடன் இவர் தொடர்புடையவர் என்றும் அறியமுடிகின்றது.

இராணுவத்தினரால்  2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட அவர், கிழக்கு மாகாண இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது தப்பியோடிவிட்டார். நான்கு நாட்களுக்கு பின்னர் இராணுவத்தினரால் திருகோணமலையில் வைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்ட ராம், 2013ஆம் ஆண்டில் விடுதலையாகி, திருமணம் முடித்த நிலையில், தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதுடன் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/170686/-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B0-%E0%AE%AE-#sthash.LhFmF70y.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.