Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பிடியிலிருந்து விடுவித்துக்கெண்டு கண்முன்னே சரணடைந்த கணவனை மீட்டுத்தாருங்கள்:

Featured Replies

எனது பிடியிலிருந்து விடுவித்துக்கெண்டு கண்முன்னே சரணடைந்த கணவனை மீட்டுத்தாருங்கள்:

 
Bookmark and Share
 

மனைவி உருக்கமான வேண்டுகோள்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

எனது பிடியிலிருந்து விடுவித்துக்கெண்டு கண்முன்னே சரணடைந்த கணவனை மீட்டுத்தாருங்கள்:



2009-05-18  திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் எனது கணவர் செல்லையா விஸ்வநாதன்  இராணுவத்தின் அறிவித்தலை தொடர்ந்து எனது கைபிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எனது கண்முன்னால் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். அவ்வாறு சரணடைந்த அவரை சீரிபி பஸ்ஸில் ஏற்றுவதனை எனது பிள்ளைகளுடன் நான் கண்டேன் எனவே அவரை மீட்டுத்தாருங்கள் என மனைவி விஸ்வநாதன் பாலனந்தினி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.

கிளிநொச்சி  நேற்று திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறுகின் காணமால் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த ஏழு வருடங்களாக எனது கணவரை தேடி வருகின்றேன், பல்வேறு இடங்களுக்குச் சென்று பதிவுகளையும் மேற்கொண்டிருக்கின்றேன். இன்றும் கூட எனது பிள்ளைகளுக்கு அப்பாவுக்கு இன்றுடன் நல்ல முடிவு கிடைக்கும் எனக் கூறி  அவர்களை பாடசாலையில் விட்விட்டு வந்திருக்கின்றேன். ஆனால் தற்போது இந்த ஆணைக்குழு மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆணைக்குழுவுக்கு முன் நானும் பல தடவைகள் சாட்சியமளித்துள்ளேன் இருந்தும் முடிவுகள் எதுவும் இ;ல்லை. எனக்கு எனது கணவர் தேவை எனது பிள்ளைகளுக்கு அப்பா தேவை வேறு எதுவும் தேவையில்லை, ஒருநாள் இயகத்தில் இருந்தாலும் சரணடையுங்கள் என முல்லைத்தீவில் வைத்து இராணுவம் தொடர்ச்சியாக அறிவிக்க அதனை ஏற்று எனது கை பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு நான் எனது பிள்ளைகள் பார்த்திருக்க சரணடைந்தவர். எனவே இவர்களை ஏன் இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கேள்வி எழப்பிய அவர் இந்தக் ஆணைக்குழு நினைத்தால் ஒரு மாத்திற்குள் காணமல் போனவர்கள் தொடர்பில் இருக்கின்றார்களா இல்லையா எனக் கண்டுபிடிக்க முடியும் அதற்கான  பல வருடங்கள் தேவையில்லை, இந்த சிறிய நாட்டுக்குள் அது பெரியவேலையல்ல எனவும் பாலனந்தினி குறிப்பிட்டார்.

மேலும் தனது கணவரின் பெயர் வவுனியா ஜோசப் முகாம், பூசா, மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியோரிடம் இருந்த பட்டியலில் காணப்பட்டது. எனவே எனது கணவர் தொடர்பில் நல்ல முடிவு கிடைக்க வேண்டும். ஆனால் அந்த முடிவை இந்த ஆணைக்குழு பெற்றுத்தரும் என்று நான் நம்பவில்லை அந்த நம்பிக்கையை இழந்து விட்டேன் என்றும் குறிப்பிட்டார்.

 உங்கள் கணவர் உயிரோடு இருக்க வேண்டும் அதற்காக நாங்கள் கடவுளை பிரார்த்திக்கின்றோம் நாங்கள் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு உங்களுக்குரிய முடிவை பெற்றுத்தருவோம் என ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131490/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.