Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“புலிகளால் பிடிக்கப்பட்ட என் இரண்டு பிள்ளைகளும் இல்லை" தாயார் உருக்கம்..

Featured Replies

“புலிகளால் பிடிக்கப்பட்ட என் இரண்டு பிள்ளைகளும் இல்லை" தாயார் உருக்கம்..

 

மகள் எங்கே எனக் கேட்டு அடிக்கச் சென்ற என் கணவனும் புலிகளால் கைது செய்யப்பட்டு பங்கர்வெட்ட அனுப்பப்பட்டார்”

“புலிகளால் பிடிக்கப்பட்ட என் இரண்டு பிள்ளைகளும் இல்லை" தாயார் உருக்கம்..

 


பாடசாலை சென்று வரும் போது விடுதலைப்புலிகளால் 2006,2008 இல் கட்டாய ஆட்சேர்பில் பிடித்துச்செல்லப்பட்ட எனது மகன் மற்றும் மகள் இருவருரையும் இதுவரையும் காணவில்லை என கிளிநொச்சி கந்தபுரம் கண்ணகிநகரைச் சேர்ந்த தாய் மனோன்மணி  ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வின் போதே குறித்த தாய் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

18 வயதுடைய மகன் யோகேஸ்வரன் திவ்யராஜன் சிவபாதகலையக பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது 2006-04-13 ஆம் திகதி விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்பில் பிடித்துச்செல்லப்பட்டார்.  இவரை நான் 2009 பெப்ரவரி மாதம் இரனைப்பாலை செந்தூரன் சிலையடியில் வைத்து சந்தித்தேன் ஆனால் பேச முடியவில்லை போராளிகளுடன்  வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.

இதுதான் நான் எனது மகனை இறுதியாக சந்தித்தது. எனத் தெரிவித்த  பின்னர் 2008-12-06 ஆம் திகதி அக்கராயன் பாடசாலைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த 17 வயதுடைய  மகள்  யோகேஸ்வரன் கிருஸ்ணதேவி விடுதலைப்புலிகளால் கட்டாயமாக பிடித்துச்செல்லப்பட்டார். தகவல் அறிந்து நானும் எனது கணவரும் இயகத்தின் அரசியல் துறை அலுவலகம் சென்று விசாரித்தோம் அவர்கள் இல்லை என்று கூறிவிட்டார்கள். இதனால் கோபமடைந்த எனது கணவர் மகளை எங்கு வைத்திருக்கின்றாய் என கேட்டப்படி அங்குள்ள கதிரை ஒன்றை எடுத்து அவர்களை தாக்க முற்றபட்டார். பின்னர் எனது கணவரும் கைது செய்யப்பட்டு ஒன்றரை மாதங்கள் பங்கர் வெட்டுவதற்கு அனுப்பிவி;டார்கள். எனத் தெரிவித்த மனோண்மனி. மகள் கிருஸ்ணதேவி 2009-05-06 ஆம் திகதி சிறு துண்டு பேப்பர் ஒன்றில் தான் சண்டைக்கு போவதாகவும் நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிந்த ஒருவரிடம் எழுதிக்கொடுத்து விட்டு சென்றார்.

அதன் பின்னர் நாங்கள் அறிந்தது 2009-05-08 இராணுவ சுற்றிவளைப்பில் எனது மகள்  உட்பட பல பெண் போராளிகள் பிடிப்பட்டுள்ளனர் என்று. எனவே பிடிப்பட்ட மகள் எங்கே? விசாரித்து கூறுங்கள் என கண்ணீருடன் கேட்டுக்கொண்டார். மேலும் தனது மகன்  உயிரோடு இருப்பது தொடர்பில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும்  ஆனால் மகள் உயிரோடு இருப்பதாகவே தான் கருதுவதாகவும் தனது மனம் மரணசான்றுதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131508/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.