Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுக போகத்திற்காக தமிழ்மக்களை தாரை வார்த்து கொடுத்தவர்களின் வழித்தோன்றலே புனர்வாழ்வு அமைச்சர்

Featured Replies

3768_1462080032_PhototasticCollage-2016-

இலங்கை 1948 ம் ஆண்டு சுதந்திரம் பெற்றவேளையில் பல்லக்கிற்கும், வெண்சாமரைக்கும், குதிரைக்கும் தமிழ்மக்களை தாரை வார்த்து கொடுத்தவர்களே சேர்பொன் இராமநாதன், அருணாசலம் போன்றோர் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார்.

எருவில் உதயநிலா கலைக்கழகத்தின் கலை, கலாசார நிகழ்வுகள் இரவு 7.00 மணிக்கு மட்டு. எருவில் கண்ணகி மகாவித்தியாலய மைதானத்தில் உதயநிலா கலைக்கழகத் தலைவர் இ.வேணுராஜ் தலைமையில் நடைபெற்றது.

இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.

இன்று நல்லாட்சி அரசாங்கத்திலே மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சர் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பற்றி கூறியிருக்கும் கருத்தானது அனைத்து தமிழ் மக்களையும் மனம்நோக வைக்கும் ஒரு செயற்பாடாகும்.

குறிப்பாக வடக்கையும், கிழக்கையும் இணைத்தால் இந்த நாட்டிலே பெரும் பிரச்சினை உருவாகும் என்ற தொனியில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இந்த நாட்டிலே உள்ள பெரும்பான்மை இனவாதிகள் இந்தக் கருத்தனை முன்வைக்காத வேளை ஒரு தமிழ் அமைச்சர் இதனை கூறியிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் இந்த விடயத்தினை தமிழ் மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன்.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்நாட்டிலே பிறந்த ஜின்னா தனது இனத்திற்காக வேண்டி இந்தியாவில் உள்ள ஒரு பகுதியினை பிரித்துக் கேட்டார். ஆனால் எமது இலங்கை நாடு 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது அன்றைய எமது தமிழ் தலைவர்களாக இருந்த சேர் பொன் இராமநாதன், அருணாசலம் போன்றோர் பல்லக்கிற்கும், வெண்சாமரைக்கும், குதிரைக்கும் தமிழ்மக்களை தாரை வார்த்து கொடுத்தவர்கள்.

அதே வழித்தோன்றலில் வந்த அவர்களது பேரன் தான் வடகிழக்கு இணைந்தால் இந்த நாட்டிலே பிரிவினை வரும் என்று தெரிவித்துள்ளார்.

அன்று தமிழ் தலைவர்களாக இருந்த இவர்கள் இருவரும் 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் எதைச் சாதித்தார்கள், என்னதான் செய்தார்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பதனையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 
எதிர்காலத்தில் எமது இனம் கலை, கலாசாரங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த கிராமத்தில் உள்ள கழகங்கள் அனைத்திற்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் இனிமேலும் இந்த கழகங்கள் எமது பண்பாடுகள், கலை, கலாசாரங்களை பேணிப் பாதுகாப்பதில் முன்நின்று உழைக்க முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழவில் பிரதம அதிதிகளாக த.தே.கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா, கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்ணம், மா.நடராஜா விசேட அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர் ,கி.ஜெயந்திமாலா மற்றும் சிறப்பதிதிகள், கௌரவ அதிதிகள், அழைப்பு அதிதிகள் கிராம பெரியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது கல்வியில் சாதனை படைத்த சாதனையாளர்கள், ஆன்மீகப் பணிக்காக தம்மை அர்ப்பணித்த மத குரு, ஆயுர் வேத வைத்தியர்கள், நாடக ஆசிரியர்கள், கலைஞர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

3768_1462080032_7.jpg

 

3768_1462080032_625056035016030005380012

3768_1462080032_625056035016030005380012

http://battinaatham.com/description.php?art=3768

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு வாலாட்டுபவர்களைத்தான் சிங்களம் பதவியில் அமர்த்தும். அந்த பதவியை தக்க வைப்பதற்கு இவர்களும்  இப்படித்தான் குரைப்பார்கள். இது என்ன புதுசா? இவர்கள் இப்படி குரைக்காவிட்டால்த்தான் ஆச்சரியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.