Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து 'சமஷ்டி' என்ற குரல் ஏன் வந்தது? : மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி விளக்கம்

Featured Replies

வடக்கிலிருந்து 'சமஷ்டி' என்ற குரல் ஏன்   வந்தது? : மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி விளக்கம்

 

 

(காலியிலிருந்து ப.பன்னீர்செல்வம்)SLFP-at-galle.jpg

வடக்கிலிருந்து சமஷ்டி என்ற குரல் ஏன்   வந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து சிந்தித்து ஒன்றுபட்ட  இலங்கைக்குள் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டுமென்று இன்று காலியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். 

அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியை ஏற்படுத்த முரண்பாடுகளை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபடுவோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

காலியில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி மாலை 4.20 க்கு வருகை தந்தார். வந்த சில மணித்தியாலயங்களில் மழை ஆரம்பித்தது. ஆனாலும் காலி சந்தியிலிருந்து புறப்பட்டிருந்த ஊர்வலம் தொடர்ந்து  ஊர்வலமாக வந்து கொண்டிருந்தன. இந்த சூழ்நிலையிலேயே ஜனாதிபதி திறந்தவெளியில் மேடையில் பேசாது விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் உரையாற்றினார். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, DSC_0249.jpg

1956 களிலும் 1960 களிலும் வடக்கிலிருந்து சமஷ்டி வேண்டுமென்ற குரல் ஒலித்தது. அதேபோன்று 26 வருடகாலம் நாட்டில் பயங்கர யுத்தமும் நிலவியது. எனவே சமஷ்டி தேவை என்ற  குரல் ஏன் வடக்கிலிருந்து ஒலித்தது. அதேபோன்று ஏன் 26 வருடகால யுத்தம் நாட்டில் ஏற்பட்டது? என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அது தொடர்பில் ஆராய வேண்டும். 

அத்தோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றையாட்சிக்குள் நாம் தீர்வு காண வேண்டும். அதற்காக நாம் இன, மத, குல, அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும். 

இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் ஆரம்பகட்டமாக இலங்கையிலிருந்து கடலுணவுப் பொருட்களை ஐரோப்ப நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடைச் செய்தது. அதேபோன்று ஆடை தொழிற்துறைக்கு வழங்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையும் தடை செய்யப்பட்டது. இவையெல்லாம் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையினை விதிப்பதற்கு முன்னேற்பாடுகளாக மேற்க்கொள்ளப்பட்டது. 

ஆனால் இன்று எமது முயற்சியினால் ஐரோப்பிய ஒன்றியம் தனது தடையினை நீக்கியுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு 12.00 மணிக்குஅரசாங்கத்தால் வெளியிடப்படவுள்ளது. அதேவேளை இன்னும் இரண்டொரு வாரங்களில் தடைவிதிக்கப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையும் மீண்டும் எமக்கு கிடைக்கவுள்ளது. 

அத்தோடு உலக நாடுகள் பேதமில்லாமல் இன்று எமது அபிவிருத்திக்கு உதவி புரிய முன்வந்துள்ளன. இது எமது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். DSC_0213.jpg

 இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜீ.7 பொருளாதார மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்கான அழைப்பு இலங்கை ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டிருந்தது. இது எமக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகும். இதன்மூலம் எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மேலும் உதவிகள் கிடைக்கும் சந்தர்ப்பமாக அமையும். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதில் எந்த சவால்கள் வந்தாலும் நான் அஞ்சப் போவதில்லை. அதற்கான அடித்தளம் இன்று காலி மே தினத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். DSC_0224.jpg

http://www.virakesari.lk/article/5833

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.