Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவது சிறந்தது

Featured Replies

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை மாற்­று­வது சிறந்தது

 

புதிய தேசிய பாது­காப்புச்சட்ட கட்­ட­மைப்பு ஒன்­றினால் பழை­மை­யான பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தை மாற்­று­வது எதிர்­கால துஷ்­பி­ர­யோ­கங்களை தடுப்­ப­தற்கு மாத்­தி­ர­மன்றி, இலங்­கைக்கும் அதன் ஜன­நா­ய­கத்­திற்கும், பிர­ஜைகள் உரி­மை­க­ளுக்­கு­மான நவீன அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் எதி­ரான வலு­வான பாது­காப்­பையும் உறுதி செய்யும் என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் தெரி­வித்தார்.

இலங்கை சரி­யான இடத்தை நிரூ­பிப்­ப­தற்­கான முயற்­சி­களில், மேல­திக ஆத­ர­வினை வழங்­கு­வ­தற்கும், மேல­திக நிபு­ணத்­து­வத்தை பகிர்­வ­தற்­கான சந்­தர்ப்­பங்­க­ளையும் அமெ­ரிக்கா எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

தகவல் அறியும் சட்­ட­மூலம் தொடர்­பான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான செய­ல­மர்வு நேற்று வோட்டர்ஸ் எஜ் ஹோட்­டலில் நடை­பெற்­ற­போது அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

keshap-main.jpg

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

தம்மை தெரிவு செய்த பிர­ஜை­க­ளுக்கு நம்­ப­க­மாக அர­சாங்க அதி­கா­ரிகள் இருக்க வேண்டும் என ஜன­நா­யகம் கோரு­கின்­றது. அந்த நம்­ப­கத்­தன்­மைக்கு வெளிப்­படைத் தன்மை அவ­சி­ய­மாகும். இன்­றைய உங்­க­ளு­டைய கலந்­து­ரை­யா­டல்கள் “பொது­மக்­க­ளுக்கு தக­வ­லுக்­கான அணுகும் வச­தியை உறுதி செய்தல் மற்றும் அடிப்­படை சுதந்­தி­ரங்­களை பாது­காத்தல்” என்ற ஐக்­கிய நாடு­களின் 2030ஆம் ஆண்­டுக்­கான நிலை­யான அபி­வி­ருத்தி இலக்­கு­களில் பிர­தி­ப­லிக்­கப்­பட்­டுள்­ளதைப் போன்று, உலக சமு­தா­யத்தில் வளர்ந்து வரும் ஒரு­மித்த உணர்வை பிர­தி­ப­லிக்­கின்­றன.

ஒரு வரு­டத்­திற்கு முன்னர் தமது விஜ­யத்தின் போது செய­லாளர் கெர்ரி அவர்கள் உறு­தி­ய­ளித்­ததைப் போன்று, இந்த மிக முக்­கி­ய­மான நல்­லாட்சி மறு­சீ­ர­மைப்­புக்கள் மற்றும் மனித உரி­மைகள் வாக்­கு­று­தி­களில் நீங்கள் தேர்ச்சி எட்டும் போது அமெ­ரிக்­கா­வா­னது ‘உங்கள் பக்கம்’ இருக்கும்.

கடந்த 16 மாதங்­களில் எமது அதி­க­ரித்த ஒத்­து­ழைப்பில் பிர­தி­ப­லித்­த­வாறு, எமது இரா­ஜ­தந்­திர உற­வுகள் ஒரு­போதும் இல்­லா­த­வாறு உயர்ந்த நிலையில் உள்­ளன.

இலங்கை முழு­வ­திலும் மோத­லுக்குப் பின்­ன­ரான நிலை­யான சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் எமது முயற்­சிகள் உத­வு­கின்­றன. சட்ட ஒழுங்­கினை வலுப்­ப­டுத்தும், வலு­வான சிவில் சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்பும், மற்றும் ஜன­நா­ய­கத்­தையும், செழு­மை­யையும் வலுப்­ப­டுத்தும் செயற்­றிட்­டங்­க­ளுக்கும் சர்­வ­தேச அபி­வி­ருத்­திக்­கான அமெ­ரிக்க நிறு­வனம் ஆத­ர­வ­ளிக்­கின்­றது. உங்­க­ளு­டைய அர­சாங்­கத்தின் கோரிக்­கையின் பேரில், பொது நிதி முகா­மைத்­துவம், தேர்­தல்கள் ஆணைக்­குழு மற்றும் பாரா­ளு­மன்­றத்தை இலக்கு வைத்த உத­வி­களின் ஊடாக மறு­சீ­ர­மைப்­புக்­க­ளுக்கு நாம் தற்­போது உத­வு­கின்றோம்.

உலகின் எந்தப் பகு­தி­யிலும் நல்­லாட்­சியை வலுப்­ப­டுத்தும் கடமை என்­பது இல­கு­வா­னது இல்லை. சட்­டத்தில் பிர­ஜை­களின் தக­வ­லுக்­கான உரி­மையை உள்­ள­டக்­கு­வது, சரி­யான வழியில் செல்­வ­தற்­கான ஒரு முக்­கி­ய­மான படி­நி­லை­யாகும். தமது நாட்டை சிறந்த இட­மாக்­கு­வ­தற்கும், இர­க­சியம், நம்­பகத் தன்மை குறைந்த யுகத்­திற்கு திரும்­பு­வ­தனை தடுப்­ப­தற்­கான கரு­வி­களை அவ்­வா­றான சட்டம் இலங்­கை­யர்­க­ளுக்கு வழங்கும்.

கடந்த வருடம் தேர்­தல்­க­ளுக்கு முன்னர் தமது வாக்­கா­ளர்­க­ளுக்கு உங்­க­ளு­டைய அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­று­திகள் இவை­யாகும். நல்­லி­ணக்கம், ஐக்­கியம், சமா­தானம், ஜன­நா­யகம், மற்றும் சட்ட ஒழுங்கு கொண்ட யுகம் ஒன்­றிற்­கான நிலை­மாற்­றத்தை விரும்­பிய பெரும்­பான்­மை­யா­னோரை நீங்கள் புரிந்து கொண்­டீர்கள்;. குறிப்­பாக சிக்­கலை களை­வ­தற்கு, ஆனால் அனை­வ­ருக்கும் நல்­லி­ணக்கம், உண்மை, நீதி மற்றும் மோதல் மீள நிக­ழாமை என்ற அத்­தி­யா­வ­சிய பாதையை நோக்கி உறு­தி­ய­ளிக்கச் செய்யும் சிறப்பு மிக்க துணை அனு­ச­ரணை ஐ.நா. தீர்­மானம் ஊடாக, சர்­வ­தேச சமூ­கத்தில் இலங்­கையின் இருப்­பினை மீள­மைக்க உத­வு­வ­தற்­கான உங்­க­ளு­டைய தீர்­மா­னத்தை நான் பாராட்­டு­கின்றேன்.

சிறந்த, மற்றும் நீடிக்கும் சமா­தானம் மற்றும் செழு­மையை நோக்­கிய பாதையில் இந்த நாட்டை உறு­தி­யாக வைப்­ப­தற்கு முதன்மை தலை­மைத்­துவம் மற்றும் அர்ப்­ப­ணிப்பு தேவை­யா­க­வுள்­ள­வர்கள் உள்­ள­டங்­க­லாக உங்கள் மக்­களின் தலை­வர்­க­ளா­கிய உங்கள் முன்­னி­லையில் வேறு முக்­கிய தீர்­மா­னங்­களும் உள்­ளன. அர­சி­ய­ல­மைப்பை மேலும் நீதி­யா­ன­தா­கவும், உள்­ள­டக்­க­மா­ன­தா­கவும் ஆக்­கு­வ­தற்கு, இலங்­கையின் பல்­வ­கைத்­தன்­மையை பிர­தி­ப­லிப்­ப­தற்கும், கொண்­டா­டு­வ­தற்கும், அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்கும் சம உரி­மைகள் மற்றும் சந்­தர்ப்­பத்தை உறுதி செய்­வ­தற்கும், பிர­ஜைகள் தமது முழு ஆற்­ற­லையும் எட்­டு­வ­தற்கு வலுப்­ப­டுத்­து­வ­தற்­கு­மான முயற்சி ஊக்­க­மிகு, சாத­க­மான மற்றும் முதன்மை தொலை­நோக்கை பிர­தி­ப­லிக்­கின்­றது.

இலங்­கையில் சமா­தானம் மற்றும் ஜன­நா­ய­கத்தின் புதிய சூழல், தேவை­யான மாற்­றங்­களை கொண்டு வரு­வ­தற்­கான அரிய சந்­தர்ப்­பத்தை தரு­கின்­றது. புதிய தேசிய பாது­காப்பு சட்ட கட்­ட­மைப்பு ஒன்­றினால் பழை­மை­யான பயங்­க­ர­வாத சட்­டத்தை மாற்­று­வது, எதிர்­கால துஷ்­பி­ர­யோ­கங்­களை தடுப்­ப­தற்கு மாத்­தி­ர­மன்றி, இலங்­கைக்கும், அதன் ஜன­நா­ய­கத்­திற்கும், பிர­ஜைகள் உரி­மை­க­ளுக்­கு­மான நவீன அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் எதி­ரான வலு­வான பாது­காப்­பையும் உறுதி செய்யும்.

முன்­னோக்கிச் செல்­வ­தற்­கான சிறந்த வழியை தீர்­மா­னிப்­ப­தற்கு சாதா­ரண பிர­ஜைகள் மற்றும் சிவில் சமூ­கத்­துடன் உங்­க­ளு­டைய அர­சாங்கம் கலந்­து­ரை­யாடல் ஒன்றை ஆரம்­பித்­துள்­ளது. காணாமல் போன­வர்­க­ளுக்­கான அலு­வ­லக உரு­வாக்கம் மற்றும் வேறு பய­னுள்ள படி­நி­லைகள் உள்­ள­டங்­க­லாக இந்த காயங்­களை ஆற்­று­வ­தற்­கான உறுதியான தேர்ச்சியை நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.

மோதலுக்குப் பின்னரான நிலைமாற்றத்திற்கு புத்தாக்க தீர்வுகளுடன், தமது ஐ.நா. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் ஜனநாயக மாதிரியாக, மோதலின் பின்னர் இலங்கையானது உண்மையில் மீண்டும் உலக தளத்திற்கு வந்துள்ளது.

உலக பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் மனித உரிமைகள், நம்பகத் தன்மை, நிலைமாற்று நீதி மற்றும் ஜனநாயகத்தை முன்னிறுத்தும், மற்றும் சர்வதேச சட்டத்தை மதிக்கும், சர்வதேச சமூகத்தில் தலைவராக இலங்கை சரியான இடத்தை நிரூபிப்பதற்கான முயற்சிகளில், மேலதிக ஆதரவினை வழங்குவதற்கு, மேலதிக நிபுணத்துவத்தை பகிர்வதற்கான சந்தர்ப்பங்களையும் அமெரிக்கா எதிர்பார்த்திருக்கின்றது.

http://www.virakesari.lk/article/6465

  • கருத்துக்கள உறவுகள்

'பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படமாட்டாது' பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி:

 

 

'பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படமாட்டாது' பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி:


'பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்றால் அதற்கு இணையான அல்லது நாட்டைப் பாதுகாக்கக்கூடிய  சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான புதிய பலமான சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படாது' என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிததுள்ளார்.

பயங்கரவாத தடுப்புச்சட்டம் அகற்றிக்கொள்ளப்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். நீதியமைச்சுடன் வெளிவிவகார அமைச்சு இணைந்து புதிய சட்டமொன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் முதற்கட்ட வரைபுப் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தை உருவாக்கத் தேவையான நிபுணத்துவப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகளுடைய ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்தாலும் பொருளாதார, தொழில்நுட்ப ரீதியாக பயங்கரவாதம், சர்வதேசத்தில் தலையெடுத்துள்ளது.

சாதாரண சட்டமொன்றை உருவாக்கி, நாடாளுமன்ற அனுமதியுடன் அமுலாக்க 8 மாதங்கள் வரை செல்லுகின்ற நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கான பாரிய சட்டத்தை உருவாக்க நீண்ட காலம் எடுக்கும். அவசரமாக அரைகுறையான சட்டத்தை உருவாக்க முடியாது.

அதனைபோல, அவசரப்பட்டு பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை நீக்கி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளிக்க முடியாது' எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/131310/Default.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.