Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதியின் தேவர்களே! தேடுங்கள், மூலவேர்களை....

Featured Replies

பக்க வேர்களை மட்டும் கத்தரிப்பதனால், மூலங்கள் அழிந்துவிடப் போவதில்லை - நடராஜா குருபரன்:-

நீதியின் தேவர்களே! தேடுங்கள், மூலவேர்களை....


28-05-2016 - 01:54
யாழ்ப்பாணத்தை திருத்துவது என்பதும் யாழ்ப்பாணம் திருந்தும் என்பதும் வெறுமனே இளையவர்களை தண்டிப்பதனாலோ, அடக்கி ஒடுக்குவதனாலோ, 6 மணிக்குப் பின் வீதிகளில் நிற்கக் கூடாது எனவும், வீதிகளில் காரணம் இன்றி, காரியம் இன்றி, திரிபவர்கள், நிற்பவர்களை கட்டுப்படுத்துவதனாலோ? சாத்தியம் ஆகும் என நான் நினைக்கவில்லை.


30 வருட போர் வடக்கில் ஒரு வன்முறைசார் கலாசாரத்தையும் விதைத்துச் சென்றிருக்கிறது.. எடுத்ததற்கு எல்லாம் ஆயுதம் தான் தீர்வு என்ற மனோநிலையும், பழக்கமும், நடைமுறையாகிப் போன காலமாய் 3 தசாப்தம் எம்மை விட்டு அகன்று இருக்கிறது…


மறுபறம். 3 தசாப்த காலமாக வடக்கில் தொடரும் புலனாய்வு யுத்தம் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின், வேறுடிவத்தில் நகரத் தொடங்கியிருக்கிறது.


இயல்பாகவே, ஒரு சிந்தனையற்ற, வீரியம் அற்ற, துணிச்சலற்ற சமூகமாக யாழ் சமூகம், வடக்கு சமூகம் உருவாக வேண்டும் என்று, கங்கணம் கட்டி நிற்கும், இந்தப் புலனாய்வு யுத்தத்தில், வடக்கின் இளையோர் சிக்கி சின்னாபின்னமாகிப் போகின்றனர்.


வடக்கில் குடிகொண்டுள்ள 2 லட்சம் படையினரைத் தாண்டி, அவர்களின் கண்காணிப்புகளை தகர்த்து, போதைப் பொருட்களும்,  போதை மருந்துகளும், சாதாரண உணவு வகைகள் போல் குடாநாட்டிற்குள் கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றை பாடசாலைகளுக்கு அருகில் அல்லது சற்று தொலைவில் விற்கின்ற போதெல்லாம் காவற்துறையினர்  கண்ணை கட்டிக் கொள்கின்றனர். பெரும் அரசியல் செல்வாக்கின் பின்னணியிலும் போதைப்பொருட்கள் வடக்கிற்குள் இலகுவாக செல்கிறது என பேச்சுக்கள் எழுந்துள்ளன.


வாள்வெட்டு, செயின்  வீச்சு, குழுச் சண்டைகள், றவுடித்தனங்கள், என இன்னோரன்ன சம்பவங்களின் பின்னால் மறைகரங்கள் இருப்பதாக பலரும் பேசிக் கொள்கிறார்கள்…


அந்த மறைகரம் என்ன? ஏன் அவ்வாறு தொழிற்படுகிறது, என்பது பற்றி எல்லாம் கணக் கெடுக்காமல், ஆணி வேரைப் புடுங்காது, பக்க வேர்களை வெடிட்டிவிட முனைவதனால் யாழ்ப்பாணத்தை திருத்தவோ, அது தானாக திருந்தவோ வாய்ப்பிருப்பதாக நான் எண்ணவில்லை.


வாள்வீச்சுக்காரர்கள், துணிந்து வாள்களை வீசுகிறார்கள், களவெடுக்கும் கள்வர்கள், சர்வ சாதாரணமாக களவெடுத்து போனபின்தான் பொலிஸ்காரர்கள் மெதுவாக சம்பவ இடத்திற்கு நகர்கிறார்கள்.


“எம்மைக் கண்டால் நீங்களாகவே ஓடித் தப்புங்கள், நின்றால் உங்களை நாம் பிடிக்க வேண்டிவரும்” என ஆசோசனை கூறும் பொலீஸ் படை ஒன்று யாழ்ப்பாணத்தை காவல் காக்கிறது.


சட்டத்தின் காவலர்கள் இப்படியெல்லாம் யாழ்ப்பாணத்தை ஆளுகின்ற போது, நீதியின் காவலர்கள், வழங்கும் தீர்ப்புக்களால் யாழ்ப்பாணம் திருந்திவிடுமா?


நீதியின் தேவர்களே! தேடுங்கள், மூலவேர்களை.. பக்க வேர்களை மட்டும் கத்தரிப்பதனால், மூலங்கள் அழிந்துவிடப் போவதில்லை. நீங்கள் கத்தரிக்கும், நச்சுகள் நிறைந்த பக்க வேர்களோடு, பல நல்ல வேர்களும் கத்தரிக்கப்படுகின்றன… அது மட்டும் அன்றி, 3 தசாப்த காலமாக அனைத்து வழிகளிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் இளைய தலைமுறையினர், மீண்டும் ஒரு முறை நீதியின் பால், அடக்கப்படுவதும், அவர்களின் இயல்பான வளர்ச்சி தடுக்கப்படுவதும், சுதந்திர நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப் படுவதும், யாழ்ப்பாண சமூகத்தை, வேறு ஒரு சகதிக்குள் இட்டுச் சென்றுவிடும்…


சட்டம் ஒரு திசையிலும், நீதி ஒரு திசையிலும், நிர்வாகம் வேறு ஒரு திசையிலும் செல்வதனால் ஒரு ஆரோக்கியமான நாட்டையோ, ஒரு சமூகத்தையோ உருவாக்கி விட முடியாது…


சட்டமும், நீதியும், நிர்வாகமும் ஒருங்கிணைந்து, புரிதல்களுடனான செயற்பாட்டின் மூலம் தான் யுத்தத்தின் பின்னரான முரண்பாடுகளை களைந்து சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும்….

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132601/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.