Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானக் கொந்தளிப்பில் பயணிகளும் விமானப் பணியாளர்களும் காயமடைவு

Featured Replies

விமானக் கொந்தளிப்பில் பயணிகளும் விமானப் பணியாளர்களும் காயமடைவு
 

article_1465210215-MA-1kuluviakkaya.jpgஇலண்டனிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மலேஷியா எயார்லைன்ஸ் விமானமொன்றில் ஏற்பட்ட விபத்தில், எண்ணிக்கை வெளிப்படுத்தப்படாத பயணிகளும் பணியாளர்களும் காயமடைந்ததாக, அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

MH370, MH14 என இரண்டு விமானங்கள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்து இன்னமும் வெளிவரத் தடுமாறிவருகிறது. இந்நிலையிலேயே, இந்த விபத்துச் சம்பந்தமான விவரங்கள், அந்த நிறுவனத்துக்கு மேலதிக பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக் கடலுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த போதே, விமானத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்போது, சில பயணிகளும் பணியாளர்களும் காயமடைந்ததாக உறுதிப்படுத்திய மலேஷிய எயார்லைன்ஸ், அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாக உறுதிப்படுத்தியது. குறித்த விமானத்தில் பயணிகளும் விமானப் பணியாளர்களுமென 378 பேர் பயணித்திருந்த நிலையில், எத்தனை பேருக்குக் காயம் ஏற்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியிருக்கவில்லை.

ஆனால், உணவுகள் விமானத்துக்குள் சிதறிக் கிடக்கும் புகைப்படங்களும் தலையணைகளும் ஏனைய பொருட்களும் சிதறிக் கிடக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அத்தோடு, கழுத்துப் பாதுகாப்பை அணிந்த பெண் பயணியொருவர், தூக்குப் படுக்கையொன்றின் உதவியுடன் விமானத்திலிருந்து வெளியே கொண்டுவரப்படும் காட்சியும், வெளியாகியுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/174061/வ-ம-னக-க-ந-தள-ப-ப-ல-பயண-கள-ம-வ-ம-னப-பண-ய-ளர-கள-ம-க-யமட-வ-#sthash.VvwRlJRo.dpuf

CkN0XoaVEAA_BYj.jpg

Https%3a%2f%2fblueprint-api-production.s3.amazonaws.com%2fuploads%2fcard%2fimage%2f107467%2fturbulence3

  • தொடங்கியவர்

லண்டனிலிருந்து மலேசியாவுக்கு பயணித்த விமானம் கடுமையாக குலுங்கியதால் பரபரப்பு

லண்டனிலிருந்து  மலேசிய கோலாலம்பூருக்கு 378  பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன்  ஞாயிற்றுக்கிழமை பயணித்த  மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் கடும் குலுக்கம் ஏற்பட்டதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்வவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த  எயார் பஸ் ஏ380. எம்.எச்.1  விமானம் வங்காள விரிகுடாவிற்கு மேலாக பறக்கையில் குறுகிய நேரத்துக்கு இவ்வாறு கடுமையாக குலுங்கியதாக  அந்த விமானசேவை நிறுவனம்  கூறுகிறது.

34F1510900000578-3626191-image-a-71_1465

தொடர்ந்து மேற்படி விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்படி விமானத்தில் பயணித்து காயமடைந்த  பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் விமான நிலையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

34F1773800000578-3626191-image-a-70_1465

இந்த சம்பவத்தில் சுமார்  34  பேர் காயமடைந்துள்ளதாக மலேசியாவிலிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

34F15FE400000578-3626191-Terrifying_Pass

34F1774000000578-3626191-Photos_from_on_ 34F15FDB00000578-3626191-Photos_shared_o 34F19F4700000578-3626191-image-m-68_1465

http://www.virakesari.lk/article/7246

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.