Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிம்பாவே எதிர் இந்தியா ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

சிம்பாவே எதிர் இந்தியா ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள்

முதல் விக்கெட்டை வீழ்த்தினார் சரண்: இந்தியா முதலில் பீல்டிங் தேர்வு

 

ஹராரேயில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய சரண் அபாரமாக வீசினார். முதல் பந்திலேயே சிபாபாவுக்கு ஒரு இன்ஸ்விங்கரை வீச அது பிளம்ப் அவுட், ஆனால் நடுவர் ரசல் டிஃபின் அதனை அவுட் கொடுக்க மறுத்தார்.

ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் மற்றொரு தொடக்க வீரர் பி.ஜே.மூர் விக்கெட்டை எல்.பி.யில் வீழ்த்தினார் பரீந்தர் சரண். இந்தப் பந்தும் உள்ளே ஸ்விங் ஆனது, பந்தை லெக் திசையில் திருப்பி விட முயன்ற மூர் கால்காப்பில் வாங்கினார். அவர் 3 ரன்களில் அவுட்.

தற்போது மசகாட்சா 2 ரன்களுடனும், சிபாபா 7 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ஜிம்பாப்வே 18/1 (7-வது ஓவர்)

இந்திய அணி: ராகுல், மணிஷ் பாண்டே, கருண் நாயர், அம்பாத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, அக்சர் படேல், தவல் குல்கர்னி, பும்ரா, பரீந்தர் சரண், சாஹல்.

http://tamil.thehindu.com/sports/முதல்-விக்கெட்டை-வீழ்த்தினார்-சரண்-இந்தியா-முதலில்-பீல்டிங்-தேர்வு/article8717980.ece?homepage=true

சிம்பாவே 17 ஓவர்களில் 56/3

  • தொடங்கியவர்

முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே 168 ரன்களுக்கு சுருண்டது

 
சரண் பந்தில் பவுல்டு ஆன ஜிம்பாப்வே வீரர் சிகந்தர் ரசா. | படம்: ஏ.எஃப்.பி.
சரண் பந்தில் பவுல்டு ஆன ஜிம்பாப்வே வீரர் சிகந்தர் ரசா. | படம்: ஏ.எஃப்.பி.

ஹராரேயில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை முதலில் பேட் செய்ய அழைத்து 168 ரன்களுக்குச் சுருட்டியது.

டாஸ் வென்ற தோனி முதலில் ஜிம்பாப்வேயை பேட் செய்ய அழைத்தார். புதிய பிட்சாக இருப்பதால் தொடக்கத்தில் பவுலர்களுக்கு உதவியிருக்கும் என்ற எண்ணத்தில் தோனியின் முடிவு சரியாகவே அமைந்தது.

ஜிம்பாப்வே அணியில் சிபாபா, மசகாட்சா, கிரெய்க் எர்வின், சிகந்தர் ரசா, சிகும்பரா (அதிகபட்சமாக 41 ரன்கள்), முதும்பாமி ஆகியோர் இரட்டை இலக்கங்களைக் கடந்தனர். சுமார் 6 வீரர்கள் இரட்டை இலக்கம் கடந்துள்ளனர் என்றால் இவர்கள் கொஞ்சம் நிதானித்து ஆடியிருந்தால் நிச்சயம் ஸ்கோர் 168 ரன்களுக்கும் அதிகமாகவே அடித்திருக்க வேண்டும். இந்தப் பிட்சில் குறைந்தது 250 ரன்கள் இருந்தால் துரத்தும் அணிக்கு சவால் ஏற்படுத்தலாம்.

இந்தியப் பந்து வீச்சு அசாதாரணமாக இருந்தது என்று கூற முடியாவிட்டாலும், கட்டுக்கோப்புடன் அமைந்தது. லெக் பிரேக் பவுலர், அறிமுக வீரர் யஜுவேந்திர சாஹலுக்கு அருமையான அறிமுகப் போட்டியாக அமைந்தது, அவர் பந்துகள் நன்றாகத் திரும்பின. பொதுவாக லெக்ஸ்பின்னர்கள் மோசமாக வீசும்போது விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார்கள், ஆனால் சாஹல் நன்றாக வீசியும் 10 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டைத்தான் கைப்பற்றினார். இவரது பந்துகள் அவ்வப்போது எட்ஜ் ஆகி ஸ்லிப்பிற்கு சென்றது, அங்கு ராகுல் சரியாக இல்லை. தொடக்கத்தில் ஒரு கேட்சை விட்டதோடு, முன்னால் பிட்ச் ஆகும் பந்து ஒன்றை பவுண்டரியாக்கினார், இதுவும் சாஹலின் ஓவரில்தான் நடந்தது.

தொடக்கத்தில் பரீந்தர் சரண் அருமையாக இருபுறமும் ஸ்விங் செய்தார். ஜஸ்பிரீத் பும்ரா இன்றைய சிறந்த வீச்சாளர் இவர் 4 விக்கெட்டுகளை 28 ரன்களுக்குக் கைப்பற்றினார், இவருக்கு கூடுதல் பவுன்ஸ் கிட்டியது. வேகம் குறைவான பந்துகளையும் அளவு மாற்றி அபாரமாக வீசியதோடு யார்க்கர்களும் அவருக்கு சிறப்பாக கைகூடின. தவல் குல்கர்னி மசாகாட்சாவை தடுமாறச் செய்து கடைசியில் வீழ்த்தினார். அக்சர் படேல் தனது 10 ஓவர்களை விறுவிறுவென்று வீசி 26 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், விக்கெட் கைப்பற்றிய பந்து பயங்கர ஷாட் பிட்ச் பந்து அதனை எர்வின் வாரிக்கொண்டு அடித்தார், ஆனால் அது நீளமான பவுண்டரி, சூரிய வெளிச்சம் மறைத்த போதிலும் கடினமான கேட்சை பதிலி வீரர் ஃபாசல் எளிதில் பிடித்தது போல் தெரிந்தது.

சிகும்பரா (41), எர்வின் (21) ஆகியோர் போராடிப் பார்த்தனர், ஆனால் இந்தியப் பந்து வீச்சு கட்டுக்கோப்புடன் அமைந்ததால் பெரிதாக ஒன்றும் ஆட முடியவில்லை. சிகந்தர் ரசாவும் 23 ரன்களுக்குப் போராடிப் பார்த்தார், ஆனால அவர் சரண் பந்தில் பவுல்டு ஆனார். 168 ரன்களில் மொத்தம் 9 பவுண்டரிகளையே அடிக்க முடிந்தது. இதில் குல்கர்னி, சரண் கொடுத்தது தலா 3 பவுண்டரிகள். பும்ரா, படேல், சாஹல் ஆகியோர் தங்களது 10 ஓவர்களும் சேர்த்தே 3 பவுண்டரிகளையே விட்டுக் கொடுத்தனர்.

இந்திய அணியில் லோகேஷ் ராகுல், கருண் நாயர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/முதல்-ஒருநாள்-போட்டி-ஜிம்பாப்வே-168-ரன்களுக்கு-சுருண்டது/article8718294.ece

  • தொடங்கியவர்

வலுவான அணியை அனுப்பாதது குறித்து ஜிம்பாப்வே பயிற்சியாளர் நிடினி காட்டம்

 

 
 
மகாயா நிடினி. | படம்: ஏ.எஃப்.பி.
மகாயா நிடினி. | படம்: ஏ.எஃப்.பி.

ஜிம்பாப்வே தொடருக்கு தோனி தலைமையில் அனுபவமற்ற புதுமுக வீரர்களைத் தேர்வு செய்து அனுப்பியுள்ளமை அந்நாட்டு கிரிக்கெட் பயிற்சியாளர் மகாயா நிடினியிடத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ஜிம்பாப்வேயிற்கு இரண்டாம் நிலை அணிகளை அனுப்புவது குறித்து அவர் வருத்தமடைந்துள்ளார். முன்னால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான மகாயா நிடினி, ஜிம்பாப்வே அணியை மேன்மையுறச் செய்வதில் தற்போது முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறார்

இந்நிலையில் இன்று காலை போட்டி தொடங்கும் முன் நிடினி கூறியதாவது:

“நாங்கள் வலுவான அணியுடன் விளையாடுவதை விரும்புகிறோம். இங்கு நாங்கள் புதிய சூழலை உருவாக்கி வருகிறோம். இந்த நாடு அதிக கிரிக்கெட் போட்டிகளை விளையாடுவதை உறுதி செய்ய தீவிரமாக விரும்புகிறோம்.

எனவே நீங்கள் அனுப்பும் அணி வலுவான அணியாக இல்லாத போது நாங்கள் அந்த அணிக்கு கடும் சவால்களை அளிப்போம், அதன் பிறகு அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் சென்று வலுவான அணியை ஜிம்பாப்வேவுக்கு அனுப்ப வேண்டிய தேவையுள்ளது பற்றி தெரிவிக்க வேண்டும்” என்றார்.

பொதுவாக கிரிக்கெட் மேம்பாட்டு பயணங்களாகவே இவை இருக்கும் போது வளரும் அணி, அல்லது மறுகட்டுமான கட்டத்தில் இருக்கும் அணியை ஊக்குவிக்க வலுவான வீரர்களுக்கு எதிராக ஆடி அவர்கள் ஊக்கம்பெறச் செய்வதுதான் முறை என்றும், இளைஞர்கள் இந்தியாவின் சிறந்த டாப் வீரர்கள் அங்கு வந்து ஆடுவதைப் பார்க்கும் போதுதான் தாங்களும் அப்படி ஆட வேண்டும் என்ற தூண்டுதல் பெறுவார்கள் எனவே எந்த ஒரு பலவீனமான அணிக்கு எதிராகவும் முக்கிய கிரிக்கெட் அணிகள் தங்கள் வலுவான அணியை அனுப்புவதே நல்லது, மேலும் இதில் ஆட்டத்தின் முடிவுகள் பற்றி பரிசீலிக்கத் தேவையில்லை என்றே கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

http://tamil.thehindu.com/sports/வலுவான-அணியை-அனுப்பாதது-குறித்து-ஜிம்பாப்வே-பயிற்சியாளர்-நிடினி-காட்டம்/article8718208.ece?homepage=true&ref=tnwn

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அறிமுக போட்டியிலேயே கே.எல்.ராகுல் சதம்! இந்தியா அசத்தல் வெற்றி!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி, நிர்ணயித்த 168 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவின், துவக்க ஆட்டக்காரரான கருண் நாயர் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பிறகு அம்பத்தி ராயுடுவும்(62*), கே.எல்.ராகுலும் (100*) அசத்த, கலக்கல் வெற்றி பெற்றது இந்தியா. வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என இருந்த நிலையில், சிக்ஸ் அடித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்த முதல் வீரர் இந்திய வீரர் ராகுல்தான். உலக அளவில் இவர் 11-வது வீரர்.

13423948_1154713844587404_41720196431650

  • தொடங்கியவர்

அறிமுக வீரர் கே.எல்.ராகுலின் அசத்தல் சதத்தால் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா

 


 

ஹராரே: அறிமுக வீரர் கே.எல்.ராகுலின் அபாரமான சதத்தால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி  சார்பில் அறிமுக வீரர்கள் கே.எல்.ராகுலும், கருண் நாயரும் ஆட்டத்தைத் தொடங்கினர். தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைத் தக்கவைக்கும் வகையில் இருவரும் நிதானமாக விளையாடினர்.

எனினும் கருண் நாயர், சாட்ரா வீசிய பந்தில் ஷிக்கந்தர் ராசாவிடம் `கேட்ச்' கொடுத்து 7 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து ராகுலுடன் இணைந்தார் அம்பதி ராயுடு. இரு வீரர்களும் நிதானமாக விளையாடினர். ஜிம்பாப்வே வீரர்களின் பந்துவீச்சை எவ்வித சிரமமுன்றி எதிர்கொண்ட இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர்.

அதிலும் முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடும் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினர். 57 பந்துகளில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். அவருக்குத் துணையாக விளையாடிய அம்பதி ராயுடு 93 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

42 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 165 ரன்கள் எடுத்திருந்தபோது, ராகுல் 92 ரன்களுடன் களத்தில் இருந்தார். 43-வது ஓவரைச் சந்தித்த ராகுல், இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுத்து தனது எண்ணிக்கையை 94 ஆக உயர்த்தினார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. எனினும், அடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டி, அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார் ராகுல். இந்தப் போட்டியில் அடிக்கப்பட்ட ஒரே ஒரு சிக்ஸரும் அதுவே.

இந்திய அணி 42.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற டாஸ் வென்ற தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் மூத்த வீரர்கள் விராட் ஹோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அஜிங்கா ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூத்த வீரர்களுக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

 ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம்பெற்ற யுவேந்திர சாஹல், கே.எல்.ராகுல், கருண் நாயர் ஆகியோருக்கு விளையாடும் 11 பேர்களில் இடம் அளிக்கப்பட்டது. மூவரும் முதன் முறையாக இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டியில் விளையாடினர்.

இந்திய அணிக்காக தவன் குல்கர்னியும், ஷரனும் பவுலிங்கை தொடங்கினர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 24 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதையடுத்து இணைந்த ஷிக்கந்தர் ராசாவும், சிக்கும்புராவும் இணைந்து விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்தது. ஷரன் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார்  ஷிக்கந்தர் ராசா. அவர் 23 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 168 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் சிக்கும்புரா அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் சார்பில பூம்ரா 9.5 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக வீரர் சாஹல் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

http://www.dinamani.com/latest_news/2016/06/11/அறிமுக-வீரர்-கே.எல்.ராகுலின்-/article3477676.ece

  • தொடங்கியவர்
2ஆவது போட்டியிலும் சிம்பாப்வேயை வென்றது இந்தியா
 
13-06-2016 06:45 PM
Comments - 0       Views - 11

article_1465820220-MatchrACHS.jpgசிம்பாப்வே, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியிலும், இந்திய அணி இலகுவாக வெற்றிபெற்றுள்ளது.

ஹராரேயில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிம்பாப்வே அணி, 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, இறுதி 7 விக்கெட்டுகளையும் 20 ஓட்டங்களுக்கு இழந்தது.

துடுப்பாட்டத்தில் வுசி சிபன்டா 53 (69), சமு சிபாபா 21 (26) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் யுஸ்வேந்த்ரா சஹால் 3, பரிந்தர் ஸ்ரான் 2, தவால் குல்கர்ணி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலளித்தாடிய இந்திய அணி, 26.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அம்பத்தி ராயுடு ஆட்டமிழக்காமல் 41 (44), கருண் நாயர் 39 (68), லோகேஷ் ராகுல் 33 (50) ஓட்டங்களைப் பெற்றனர்.

போட்டியின் நாயகனாக, யுஸ்வேந்த்ரா சஹால் தெரிவானார்.

இத்தொடரின் முதலாவது போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, இத்தொடரை 2-0 என்றகணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/174599/-ஆவத-ப-ட-ட-ய-ல-ம-ச-ம-ப-ப-வ-ய-வ-ன-றத-இந-த-ய-#sthash.2wgRpkzx.dpuf
  • தொடங்கியவர்

2-வது போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

 
ஜிம்பாப்வேயை 126 ரன்களுக்குச் சுருட்டிய பிறகு பெவிலியன் செல்லும் வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி.
ஜிம்பாப்வேயை 126 ரன்களுக்குச் சுருட்டிய பிறகு பெவிலியன் செல்லும் வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி.

ஹராரேயில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியிலும் ஜிம்பாப்வேயை இந்திய அணி வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

இன்னொரு ஒருதலைபட்சமான ஆதிக்கத்தில் தொடரை இந்தியா இப்போதைக்கு 2-0 என்று கைப்பற்றியது.

திங்களன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தோனி மீண்டும் ஜிம்பாப்வேயை பேட் செய்ய அழைத்தார். அந்த அணி சிபாந்தாவின் அரைசதம் மற்றும் இவரும் சிகந்தர் ரசாவும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 65 ரன்கள் என்பதைத் தவிர எழும்பவில்லை. குறிப்பாக சிபந்தா, சிகந்தர் ரசா இருவருமே மோசமான ஷார்ட் தேர்வில் தங்கள் விக்கெட்டை விட்டுக் கொடுக்க கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 20 ரன்களுக்கு இழந்த ஜிம்பாப்வே 55 பந்து இடைவெளியில் மோசமாக 34.3 ஓவர்களில் 126 ரன்களுக்குச் சுருண்டது. யஜுவேந்திர சாஹல் ஒரு நேரத்தில் ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார், கடைசியில் 6 ஓவர்கள் 2 மெய்டன்கள் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார். பும்ரா, அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும், பரீந்தர் சரண் மற்றும் தவல் குல்கர்னி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு மீண்டும் எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ளாமல் 44 பந்துகளைச் சந்தித்து 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ராகுல் 33 ரன்கள் எடுத்தும் கருண் நாயர் 39 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர், கடைசியில் மணீஷ் பாண்டே தான் எதிர்கொண்ட முதல் பந்தை கவர் திசையில் பவுண்டரி அடித்து வெற்றி பெறச் செய்தார்.

ஜிம்பாப்வே அணியின் ஆட்டத்திறன் துயரத்துடன் கிரெய்க் எர்வினுக்குப் பதிலாக அணிக்குள் வந்த சான் வில்லியம்ஸ் காயம் காரணமாக பேட்டிங் செய்ய முடியாமல் போன துயரமும் சேர்ந்து கொண்டது.

பந்து வீச்சிலும் எந்த வித தாக்கமும் இல்லை, இந்திய பேட்ஸ்மென்களுக்கு எந்த வித சவால்களும் அளிக்கப்படவில்லை. அணியில் தேர்வு செய்யப்படும் அனைவருக்கும், தோனி உட்பட, பேட்டிங் பெற வேண்டுமென்றால், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்திருக்கலாம்.

3-வது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

106/3 என்ற நிலையில் ஜிம்பாப்வே நிச்சயம் 200 ரன்களைக் கடக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சிகந்தர் ரசா, சாஹல் பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், தேவையற்ற ஷாட். அடுத்த பந்தே சாஹல், சிகும்பராவை எல்.பி. செய்தார். களமிறங்கிய முதும்பாமி ஹாட்ரிக்கைத் தடுத்து நிறுத்தினார். சிபந்தா 69 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது 28-வது ஓவரில் சாஹலிடம் வீழ்ந்தார்.

முதல் போட்டியில் சிறப்பாக வீசியும் 1 விக்கெட்டுகளுக்கு மேல் கிடைக்காத சாஹல் இந்தப் போட்டியில் சிறப்பாக வீசினார், பிளைட், லெந்த், திருப்புதல் என்று அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டார் சாஹல். சிபாந்தா நன்றாக ஆடிக்கொண்டிருந்த போதே அலட்சியமான, பொறுப்பற்ற ஷாட்டில் ரசா போலவே ஆட்டமிழந்தார். சான் வில்லியம்ஸ் காயம் காரணமாக இறங்க முடியாத நிலையில் ஜிம்பாப்வே 126 ரன்களுக்கு மடிந்தது.

இந்திய இன்னிங்ஸ் தொடங்கிய போது கருண் நாயர், நோ-பாலில் பிழைத்தார். டெண்டய் சதாரா வீசிய பந்தை விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் செய்தார் கருண் நாயர். பிறகு நன்றாக ஆடினார், பேக்புட், பிரண்ட் புட் இரண்டிலுமே ஷாட்களை ஆடினார் நாயர். பந்துவீச்சும் எப்படி வேண்டுமானாலும் ஆடலாம் என்ற சுதந்திரத்தை வழங்கியது. ஆட்ட நாயகனாக சாஹல் தேர்வு செய்யப்பட்டார்.

இது போன்ற தொடர்களால் யாருக்குப் பயன் என்பதை பிசிசிஐ, ஐசிசி யோசிக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/2வது-போட்டி-ஜிம்பாப்வேயை-வீழ்த்தி-ஒருநாள்-தொடரை-வென்றது-இந்தியா/article8724600.ece?homepage=true

  • தொடங்கியவர்

2 போட்டிகளுக்கிடையே வித்தியாசம் காணும் தோனி

 
கேப்டன் தோனி. | படம்: ராய்ட்டர்ஸ்.
கேப்டன் தோனி. | படம்: ராய்ட்டர்ஸ்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகளிலும் சவால்கள் இன்றி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த இரு போட்டிகளுக்கும் இடையே வித்தியாசம் காண்கிறார் கேப்டன் தோனி.

ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி கூறியதாவது:

கேட்ச்களைப் பிடிப்பது எப்பவுமே சிறந்தது. குறிப்பாக மட்டையின் உள்விளிம்பில் பட்டு வரும் கேட்ச்களை பிடிப்பது மேலும் சிறந்தது. முதல் ஆட்டத்தை விட இந்த ஆட்டம் வித்தியாசமானது. சற்றே வேறு விதமான பிட்ச். முதல் 10 ஓவர்களில் விளையாடப்பட்ட ஷாட்களை வைத்துப் பார்க்கும் போது பந்துகள் ஸ்ட்ரோக் ஆட ஏதுவாக மட்டைக்கு வந்ததாகவே தெரிகிறது.

பவுலர்கள் ஜிம்பாப்வே அணியை குறைந்த ஸ்கோருக்கு மட்டுப்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் 200 ரன்களைக் கடந்து விடுவார்கள் என்றே நான் நினைத்தேன். ஸ்பின்னர்கள் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அனைத்தையும் விட முக்கியமானது போட்டிகளை வெல்வது, அதே போல் பேட்டிங்கில் தொழில்நேர்த்தியான ஆட்டம் வெளிப்படுவதும் நல்ல அறிகுறி. முதல் போட்டியிலும் கூட பேட்டிங் தொழில் நேர்த்தியாக அமைந்தது.

அடுத்த போட்டிக்கான வீரர்களை சஞ்சய் பாங்கருடன் அமர்ந்து முடிவு செய்வோம், பெஞ்சில் நிறைய வீரர்கள் ஆனால் இருப்பதோ ஒரேயொரு போட்டி. டி20 அணிக்கு பொருத்தமான வீரர்கள் யார் என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளது. ஒரு பவுலருக்கு ஓய்வு அளிக்க வாய்ப்பிருக்கிறது, என்றார் தோனி.

ஆட்ட நாயகன் விருது பெற்ற ஸ்பின்னர் சாஹல் கூறும்போது, “பந்து வீச்சை மகிழ்ச்சியுடன் செய்கிறேன். பிட்ச் கொஞ்சம் மந்தமாக செயல்பட்டது. முதல் போட்டியில் பேட்ஸ்மென்கள் எனது பந்து வீச்சை அடிக்க முயலவில்லை, தற்காப்பு உத்தியைக் கடைபிடித்தனர். இன்று என் பந்தை அடிக்க முற்பட்டனர். இதனால் விக்கெட்டுகள் கிடைத்தது.

விக்கெட் டு விக்கெட் பந்து வீச முயற்சி செய்தேன், காற்றில் மெதுவாக வீசுமாறு தோனியும் ஆலோசனை வழங்கினார்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/2-போட்டிகளுக்கிடையே-வித்தியாசம்-காணும்-தோனி/article8724640.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜிம்பாப்வே பரிதாப ஒயிட்வாஷ்: தொடரை வென்றது இந்தியா

 
 
படம்: ஏஎஃப்பி
படம்: ஏஎஃப்பி

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹராரேவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கெனவே இந்தியா தொடரை வென்ற, 3-வது போட்டியின் வெற்றி ஜிம்பாப்வே அணிக்கு ஒயிட்வாஷ் தோல்வி ஆனது.

இந்தப் போட்டியில் 124 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி ஆரம்பம் முதலே எந்தவித அழுத்தமும், அச்சுறுத்தலும் இன்றி ரன் குவித்தது. துவக்க வீரர்கள் லோகேஷ் ராகுல் 58 பந்துகளில் தனது முதல் அரை சதத்தை எட்டினார்.

மற்றொரு வீரர் ஃபாசலும், 58 பந்துகளில் அரை சதம் எட்டினார். இது அவரது முதல் ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் ராகுல் 63 ரன்களும், ஃபாசல் 55 ரன்களும் சேர்த்தனர்.

இந்திய அணி 21.5 ஓவர்களிலேயே 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கடந்த 2 போட்டிகளைப் போலவே இந்த போட்டியிலும், ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் பிரகாசிக்க தவறினர்.

ஜிம்பாப்வே அணியின் சிபந்தா அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்தார். 42.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தை ஜிம்பாப்வே அணி 123 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய தரப்பில் பும்ரா 10 ஓவர்கள் வீசி 22 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

http://tamil.thehindu.com/sports/ஜிம்பாப்வே-பரிதாப-ஒயிட்வாஷ்-தொடரை-வென்றது-இந்தியா/article8732754.ece?homepage=true

 

  • தொடங்கியவர்
இந்திய அணியை வென்று அதிர்ச்சியளித்தது ஸிம்பாப்வே
2016-06-18 20:38:01

இந்திய அணியுடனான சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஸிம்பாப்வே அணி 2 ஓட்ங்களால் வென்று அதிர்ச்சியளித்தது.

 

17393_india-vs-zimbabwe.jpg

 

ஸிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களைக் குவித்தது.

 

7 ஆவது வரிசை துடுப்பர்ட வீரர் சிகும்புரா 26 பந்துகளில் 7 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்று தனது அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்ங்களையே பெற்றது.

 

மனீஷ் பாண்டே 35 பந்துகளில் 48 ஓட்டங்களையும் மந்தீப் சிங் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.  எனினும் ஏனைய வீரர்கள் பிரகாசிக்கத் தவறினர்.

 

அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனி  17 பந்துளகில் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களைப் பெற்றார். கேதார் யாதவ், அம்பத்தி ராயுடு ஆகியோர் தலா 19 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

எல்டன் சிகும்புரா பந்துவீச்சிலும் பிரகாசித்து 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழத்தினார். முரஸாரபானி 31 ஓட்டங்களுக்கு 2விக்கெட்களை வீழ்த்தினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17393#sthash.EdifgDzR.dpuf
  • தொடங்கியவர்

முதல் டி20: தோனி நின்றும் ஜிம்பாப்வேயிடம் இந்தியா தோல்வி

 
  • இந்தியாவை வீழ்த்திய வெற்றிக்களிப்பில் பயிற்சியாளர் மகாயா நிடினியுடன் ஜிம்ப். வீரர்கள். படம்: ஏ.பி.
    இந்தியாவை வீழ்த்திய வெற்றிக்களிப்பில் பயிற்சியாளர் மகாயா நிடினியுடன் ஜிம்ப். வீரர்கள். படம்: ஏ.பி.
  • தோனி. | கோப்புப் படம்.
    தோனி. | கோப்புப் படம்.

ஹராரேயில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி சிகும்பராவின் கடைசி கட்ட தாறுமாறு இன்னிங்சினால் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவைப்படும் 8 ரன்களை ‘பினிஷர்’ தோனி இருந்தும் எடுக்க முடியாமல் 168 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் நெவில் மட்சிவா என்பவர் அருமையாக வீசினார். அக்சர் படேலும், தோனியும் களத்தில் இருந்தனர். 20-வது ஓவரின் முதல் பந்தை தோனிக்கு அவர் வீசியபோது முதல் பந்தை ஓங்கி அடித்தார் தோனி ஆனால் லாங் ஆஃபில் 1 ரன் மட்டுமே கிடைத்தது. லெக் திசையில் பவுண்டரிகள் பெரிது என்பதால் தோனி 2 ரன்களாகவே ஓடி முடித்துவிடுவார் என்று தெரிந்த மட்சிவா ஆஃப் திசையில் டீப் பாயிண்ட் வைத்துக் கொண்டு வைடு யார்க்கர்களாக வீசினார்.

2-வது பந்து அக்சர் படேல் ஆட்டமிழந்தார், இந்தப் பந்தை உண்மையில் சிக்சருக்குத் தூக்கியிருக்க வேண்டும், ஆனால் ஷாட்டில் பவர் இருந்தும் பந்து காற்றில் எழும்பிச் செல்லவில்லை. இதனால் அவர் லாங் ஆஃபில் கேட்ச் ஆனார். தோனி இப்போது கிராஸ் செய்திருந்தார். புதிய பேட்ஸ்மென் ரிஷி தவண் இறங்கினார், இவருக்கு இது அறிமுக போட்டியாகும். மட்சிவா தோனிக்கு வைடு யார்க்கரை வீசினார் தோனி 1 ரன் எடுத்திருக்கக் கூடாது, ஆனால் ரிஷி தவணை நம்பி ஒரு ரன் எடுத்து விட்டார். 4-வது பந்து மட்சிவாவின் அருமையான யார்க்கர், ரிஷி தவணால் ரன் எடுக்க முடியவில்லை. 5-வது பந்து நடுவர் டிஃபினால் மிகமிகத் தவறாக வைடு என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் 5-வது பந்தை மட்சிவா வீச ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான ஃபுல் பந்து, தவண் இதனை சிங்கிள் எடுத்தார்.

கடைசி பந்து வெற்றிக்குத் தேவை 4 ரன்கள், தோனி ஸ்ட்ரைக்கில், மிகவும் பிரபலமான சூழ்நிலை இது. மீண்டும் ஃபுல் லெந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு பந்து தோனி அதனை பவுண்டரி அடிக்க முடியவில்லை நேராக பீல்டரிடம் சிக்கியது 1 ரன்னே வந்தது. ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை இழுத்தடித்த தோனி 17 பந்துகளில் 19 ரன்களை எடுத்து அதில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே எடுத்தது தோல்விக்கு முக்கியக் காரணமானது.

ரிஷி தவணுக்கு சிங்கிள் எடுத்துக் கொடுக்காமல் தோனியே ஆடியிருக்க வேண்டும், ஆனால் ஏனோ தோனி சிங்கிள் ஓடினார். அறிமுக ஆட்டத்தில் ஆடும் ரிஷி தவணை நெருக்கடி தருணத்தில் ஆடவிட்டது தோனியின் தவறு. தோல்வியில் முடிந்தது. ஜிம்பாப்வே 1-0 என்று முன்னிலை.

முன்னதாக மற்றொரு அறிமுக வீரர் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே திரிபானோ பந்தை தேர்ட்மேன் திசையில் திருப்பி விட நினைத்தார் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது. மந்தீப் சிங் 5 பவுண்டரிகளை விளாசி 27 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க, அம்பாத்தி ராயுடு 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுக்க இருவரும் இணைந்து 5.5 ஓவர்களில் 2-வது விக்கெட்டுக்காக 44 ரன்களைச் சேர்த்தனர். அப்போது ராயுடு மேலேறி வந்து அவசரக்குடுக்கை தனமாக ஒரு பெரிய சுற்று சுற்ற பந்து அவரைத் தாண்டி சென்றது ஆஃப் ஸ்டம்ப் இடம்பெயர்ந்தது.

மந்தீப் சிங் கவர் திசையில் அடிக்க நினைத்து கடைசியில் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேற இந்தியா 53/3 என்று தடுமாற்றம் கண்டது.

கேதர் ஜாதவ் (19 ரன்கள் ஒரு பவுண்டரி 1 சிக்ஸ்). மணீஷ் பாண்டே ஸ்கோரை 90 ரன்களுக்கு உயர்த்தினர், அப்போது கேதர் ஜாதவ்வும் திருப்திகரமில்லாத ஷாட் ஒன்றில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

மணிஷ் பாண்டே, தோனி இணைந்தனர். இருவரில் மணிஷ் பாண்டே ஆக்ரோஷம் காட்டி 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடிக்க 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் களைப்படைந்த ஷாட் ஒன்றில் அவுட் ஆனார். பாண்டியின் உதவியுடன் தோனியின் நிதானமும் இணைய 5 ஓவர்களில் 53 ரன்கள் வந்தது. ஆனால் தோனி நிறைய 2 ரன்களை வேகமாக ஓடியதால் பாண்டே உண்மையில் களைப்படைந்தார், அவரது ஷாட்டும் களைப்பான ஒரு ஷாட்டாகவே அமைந்தது.

இந்த 2 ரன்கள் ஓடுவதை விளையாட்டுத்தனமாக தோனி பலகாலமாகச் செய்து வருகிறார், இதனால் பவுண்டரி பந்துகளை அவர் சரியாக கணிக்க முடியாமல் போய் வருகிறது, மணீஷ் பாண்டே ஆட்டமிழந்தவுடன் அக்சர் படேல் 2 அற்புதமான சிக்ஸர்களுடன் 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் முக்கியக் கட்டத்தில் ஆட்டமிழக்க இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

தோனி 17 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 19 ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபமாக நாட் அவுட்டாக இருந்தார்.

எல்டன் சிகும்பராவின் தாக்குதல்:

முன்னதாக ஜிம்பாப்வே அணி மசகாட்சா (25), சிபாபா (20) ஆகியோர் மூலம் 4.3 ஓவர்களில் 33 ரன்கள் என்ற நல்ல தொடக்கம் கண்டது. சிபாபா, ரிஷி தவணிடம் பவுல்டு ஆக, முதும்பாமி காயத்தினால் ரிட்டையர்டு ஆனார். முன்னதாக பும்ராவிடம் மசகாட்சா அவுட் ஆக, ஜிம்பாப்வே 6.6 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தது. சிகந்தர் ரசா, வாலர் இணைந்து 5.4 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்தனர். வாலர் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து சாஹலிடம் வீழ்ந்தார். ரசா 20 ரன்களில் பாண்டே தோனி கூட்டணியில் ரன் அவுட் ஆனார்.

ஆனால் எல்டன் சிகும்பரா ஆடிய ஆட்டம் உண்மையில் அபாரமான அதிரடியாகும். 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 26 பந்துகளில் 54 ரன்களை அவர் பின்னி எடுத்தார். முதலில் 15-வது ஓவரில் அவர் சாஹலை லாங் ஆஃபில் ஒரு சக்தி வாய்ந்த ஷாட்டில் சிக்ஸ் அடித்தார். பிறகு சாஹலில் அடுத்த ஓவரில் கவர் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார், இது அழகான சிக்ஸ். மீண்டும் இதே ஓவரில் இறங்கி வந்து லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ். 19வது ஓவரில் ஜெயதேவ் உனட்கட் சிக்க முதலில் ஒரு பவுண்டரி பிறகு ஓவர் பிட்ச் மிடில் ஸ்டம்ப் பந்தை ஒரு அசுர அடி அடிக்க பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றது. அதே ஓவரில் மீண்டும் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ் விளாசினார்.

20-வது ஓவரை பும்ரா வீச சிகும்பரா இவரையும் விட்டு வைக்கவில்லை. லாங் ஆஃபில் தாழ்வான புல்டாஸை சிக்சராக மாற்றினார், மீண்டும் ஒரு வேகம் குறைவாக வந்த பந்தை மீண்டும் ஒரு சிக்ஸ். 54 ரன்களை இவர் விளாசியதால் கடைசி 5 ஓவர்களில் ஜிம்பாப்வே 59 ரன்களை நொறுக்கியது. இதில் கடைசி 3 ஓவர்களில் 40 ரன்கள். இந்திய தரப்பில் பும்ரா மட்டுமே கடைசி ஓவர் நீங்கலாக சிக்கனமாக வீசி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அக்சர் படேல் ஸ்பின்னர்கள்ல் அதிசிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஆட்ட நாயகனாக எல்டன் சிகும்பரா தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/முதல்-டி20-தோனி-நின்றும்-ஜிம்பாப்வேயிடம்-இந்தியா-தோல்வி/article8746220.ece

  • தொடங்கியவர்

2வது T20 போட்டியில் சிம்பாவேக்கு பதிலடி கொடுத்தது இந்தியா. 

 

Zimbabwe-Cricket-CRICKET-ZIM-IND2வது T20 போட்டியில் சிம்பாவேக்கு பதிலடி கொடுத்தது இந்தியா.

இந்தியா – சிம்பாப்வே அணிகள் மோதும் 2வது T20 போட்டி, ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் சற்று முன்னர் நிறைவுக்கு வந்தது.

கடந்த போட்டியில் டோனி இறுதிவரைக்கும் ஆடுகளத்தில் இருந்தும் இந்திய அணி 2 ஓட்டங்களால் தோல்வியை தழுவிய நிலையில், 3போட்டிகள் கொண்ட T20 தொடரின் இன்றைய 2வது போட்டி யில் இந்தியா அதற்க்கு பதிலடி கொடுத்தது.

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணியின் தலைவர் முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார்.

அதன்படி துடுப்பாடிய சிம்பாவே அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றது.

ஒருநாள் போட்டிகளில் கலக்கிய ப்ரைண்டர் ஸ்ரான் , மற்றும் தவால் குல்கர்னி ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டு ,T20 அறிமுகம் கொடுக்கப்பட்டது.

se 2da 1

தனது அறிமுகப் போட்டியில் ப்ரைண்டர் ஸ்ரான் தனது 4 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், பூம்ரா 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்திய அணிக்கு 100 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆரம்ப வீரர்கள் லோகேஷ் ராகுல், மண்டீப் சிங் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி 103 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவுக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர்.

மண்டீப் சிங் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தியா இதன்மூலம் 1-1 என்று தொடரை சமன் செய்தது.இந்தியா  T20 போட்டிகளில் 10 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்ட முதல் சந்தர்ப்பமாகவும் இந்த வெற்றி அமைந்தது.

ஆட்டநாயகன் விருதை அறிமுக வீரர் ப்ரைண்டர் ஸ்ரான் பெற்றுக்கொண்டார்.

சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியது.

டோனி தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி அபாரமாக விளையாடி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

moooo

http://vilaiyattu.com/2வது-t20-போட்டியில்-சிம்பாவே/

  • தொடங்கியவர்

ஜிம்பாப்வே போராடி தோல்வி: டி20 தொடரை வென்றது இந்தியா

 
தொடரை வென்ற இந்திய அணி. | படம்: ராய்டர்ஸ்.
தொடரை வென்ற இந்திய அணி. | படம்: ராய்டர்ஸ்.

ஹராரேயில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி தழுவியது. இதன் மூலம் டி20 தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றியது.

இதன் மூலம் ஒருநாள், டி20 தொடர்களை இளம் அணியுடன் சென்ற தோனி தலைமையில் இந்தியா வென்றுள்ளது.

முதலில் இந்தியாவை பேட் செய்ய அனுப்பியது ஜிம்பாப்வே. இந்திய அணியை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் என்று அருமையாக மட்டுப்படுத்திய ஜிம்பாப்வே இலக்கைத் துரத்திய போது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் என்று நெருக்கமாக வந்து போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

கடைசி ஓவரில் 21 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் சரண் வீசிய முதல் பந்தை மிட்விக்கெட்டில் பெரிய சிக்ஸை அடித்தார் மரூமா. அடுத்த பந்து வைடு வகையில் 1 ரன் வந்தது. அடுத்த பந்து யார்க்கர் முயற்சியில் அதிக உயரம் வந்த புல்டாஸாக மாற பந்து கவர் திசையில் மரூமா பவுண்டரி விளாசினார், இதோடு இது நோ-பால் எனவும் அறிவிக்கப்பட்டது. 2-வது பந்தை மீண்டும் வீசிய சரண் வைடு யார்க்கராக வீச ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்த பந்து வைடாகியிருக்க வேண்டியது, ஆனால் அது வைடு அல்ல ரன் இல்லை. 4-வது பந்தில் மரூமா 1 ரன் எடுத்து அதிரடி வீரர் சிகும்பராவிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார்.

சிகும்பரா 5-வது பந்தை மேலேறி வந்து சுழற்ற ஷார்ட் தேர்ட் மேனுக்கு வாய்ப்பில்லாமல் தேர்ட்மேனில் பவுண்டரி ஆக, கடைசி பந்து 4 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. ஆனால் சரண் கடைசி பந்தை தாழ்வான புல்டாசாக வீச மட்டையின் அடி விளிம்பில் பட்டு கவர் திசையில் அருகிலேயே சாஹலிடம் கேட்ச் ஆனது அவுட் ஆனார் சிகும்பரா, இந்தியா 3 ரன்களில் வெற்றி பெற்றது. விரட்டலில் ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கண்ட ஜிம்பாப்வே நடுவில் சொதப்பியது, இறுதியில் அடித்து ஆடத் தொடங்கினாலும் விக்கெட்டுகள் விழுந்ததால் நெருங்க மட்டுமே முடிந்தது வெற்றி பெற முடியவில்லை, தொடரை வெல்ல கிடைத்த அருமையான வாய்ப்பு அந்த அணிக்கு கிட்டி வந்து பலிக்காமல் போனது.

இந்திய அணியில் தவல் குல்கர்னி 4 ஓவர்களில் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சரண் 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற பும்ரா 4 ஓவர்களில் 23 ரன்கள் ஆனால் விக்கெட் இல்லை, அக்சர் படேல் 18 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் சற்றே சாத்து வாங்கிய சாஹல் 4 ஓவர்களில் 32 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/ஜிம்பாப்வே-போராடி-தோல்வி-டி20-தொடரை-வென்றது-இந்தியா/article8760686.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.