Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த வெடிபொருட்களே நாசம் – வலுக்கிறது சந்தேகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

shellசீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த வெடிபொருட்களே சலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் நாசமாகியதாக, சிறிலங்கா இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகமான “ராவய” செய்தி வெளியிட்டுள்ளது.

போரின் போது, சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள், பயன்படுத்தப்படாமல் இருந்தன. சிறிலங்கா போன்ற சிறிய நாடுகளில் இவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் வசதிகள் இல்லை.

எனவே இவற்றை கொள்வனவு செய்த நாட்டிடமே அவற்றை திரும்பவும் கையளிக்கப்படவிருந்தது.

சீனாவின் நொறிங்கோ நிறுவனம் இந்த வெடிபொருட்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு இணங்கியிருந்தது. அதுபற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பயணமும் இடம்பெற்றிருந்தது.

லங்கா லொஜிஸ்ரிக் அன்ட் ரெக்னொலொஜிஸ் நிறுவனத்தின் ஊடாக, 150 மில்லியன் டொலர் ஆயுதங்களை விற்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு கடந்த ஏப்ரல் 7ஆம் நாள் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

சீனாவிடம் திருப்பி விற்கப்படவிருந்த வெடிபொருட்கள் தீவிபத்தில் நாசமாகியதால், பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன என்றும் ராவய செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2016/06/11/news/16740

இது போர்க் குற்றவாளிகளான கோதபாய கும்பலின் வேலை என முன்னரே செய்திகள் கசிந்திருந்தன.
இந்த ஆயுதக் கொள்வனவுகளில் இடம்பெற்ற ஊழல் அம்பலமாகும் என்பதால், கோதபாய கும்பலின் விசுவாசிகளான சிங்கள-பௌத்த இராணுவ வெறியர்கள் இதை அழித்திருக்க வேண்டும்.

இந்த ஆயுதங்களை திரும்பக் கொடுத்து ஆவணங்களில் மிகையாக குறிப்பட பணத்த அரசு மீளப்பெறும் போது தரகாக பெறப்பட்ட பணத்தை சிங்கள-பௌத்த இனமதவெறியர்களான கோதபாயவும் சார்ந்த இராணுவ ஊழல் கும்பலும் மீளச் செலுத்தவேண்டி இருக்கும். இதிலிருந்து தப்ப வெடிக்க வைத்திருக்கலாம்.

ஆயுதக் கிடங்கு வெடிப்பின் பின்னர் சிங்கள-பௌத்த இனமதவெறியர்களான ராஜபக்சே கும்பல் விழுந்தடித்து வெளியிட்ட அறிக்கைகளில் சம்பவத்தை திசைதிருப்பும் அவசரமும் காணப்பட்டது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.