Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தில் உள்ள பாஸிசவாதிகளின் துணையுடன் அரசாங்கத்தை வீழ்த்தச் சதி! - விக்கிரமபாகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவத்துக்குள் இருக்கும் பாஸிசவாத கொள்கையுடையவர்களின்  துணையுடன், அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக நாட்டுக்குள் சதி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பில்  இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இராணுவத்துக்குள் இருக்கும் பாஸிசவாத கொள்கையுடையவர்களின் துணையுடன், அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக நாட்டுக்குள் சதி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

   

'அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் பொய் வதந்திகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சதி நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. இந்த சதித்திட்டங்களுக்குள் கடந்த அரசாங்கத்தில் இராணுவத்துக்குள் இருந்து பாஸிசவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களும் இருக்கின்றனர். அவர்கள்தான் அரசாங்கத்துக்கு எதிரான சதி நடவடிக்கைகளுக்கு மறைந்திருந்து துணைபோகின்றனர். அத்துடன் கொஸ்கம சாலாவ இராணுவ ஆயுத களஞ்சியசாலை வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளிப்படவில்லை. இந்த சம்பவமும் சதி நடவடிக்கையாகவே இருக்கவேண்டும். அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செயலா என்ற சந்தேகமும் தோன்றுகின்றது என அவர் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=160180&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தை கவிழ்க்கும் வகையில் சதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கு இராணுவத்தில் இருக்கும் பாஷிச வாத கொள்கையுடைவர்கள் உதவி புரிவதாகவும் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தினை வீழ்த்தும் வகையில் சில போலியான பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.

கடந்த அரசாங்கத்தில் இராணுவத்தில் இருந்த பாஷிச வாதிகளே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் எதுவித காரணங்களும் வெளியிடப்படாத நிலையில், அது அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/108852

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.