Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற்றம் - மற்றும் துவேசத்தின் வளர்ச்சி பற்றி சேனன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைவதா? பிரிவதா? என்பதை முடிவெடுக்க இங்கிலாந்தில் நேற்று நடந்த பொது வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

கடும் மழையிலும் 72 வீத மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இதில் 52 வீதத்தினர் பிரிவுக்கும் 48 வீதத்தினர் இணைவுக்கும் வாக்களித்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து ஆளும்கட்சிப் பிரதமரின் தலைமையை நோக்கி எழுந்த அவரது கட்சிக்காரரின் அழுத்தம் காரணமாகப் பிரதமர் டேவிட் கமரூன் இராஜினாமா செய்திருக்கிறார்.

லேபர் கட்சித் தலைவருக்கும் நெருக்கடி கொடுக்கும் வேலை அக்கட்சிக்குள் இருக்கும் வலதுசாரிகளால் தொடக்கி விடப்பட்டிருக்கிறது.

1 அரசியல் அதிகாரத்தின் தோல்வி

இங்கிலாந்தின் மூன்று பெரும் கட்சிளான கன்சவேட்டிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமொகிராட் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அனைவருமே மக்கள் ஜரோப்பிய ஒண்றியத்தில் இருக்கவேண்டும் எனப் பிரச்சாரித்து வந்தனர்.

இது தவிர 1200க்கு மேற்பட்ட பெரும் வியாபாரங்கள், பல ஆயிரம் மில்லியனர்கள், பில்லியனர்கள், இங்கிலாந்து மத்திய வங்கி, அமெரிக்க அரசு சார்பில் ஒபாமா எனப் பெரும் அதிகாரச் சக்திகள் ஒன்றிய இணைவுக்கு ஆதரவையும் அதற்கான பிரச்சாரத்துக்கான உதவிகளையும் வழங்கிக்கொண்டிருந்தன.

இது போதாது என்று ஏராளமான ஊடகவியலாளர்கள் ஒண்றியத்துக்கு ஆதரவான கடும் பொய்பிரச்சாரங்களுக்கு இடம் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

லேபர் கட்சியின் வலதுசாரிகளுடன் எப்பொழுதும் ஒற்றுமையைக் காத்து வந்த வலதுசாரிய தொழிற்சங்க வாதிகள் பலரும் கூட ஆதரவு கொடுத்தனர்.

சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பின்போது பெரும் ஆதரவைப் பெற்ற ஸ்கொட்லாந்து தேசிய கட்சியும்கூட ஆதரவு வழங்கியது.இந்த நிலையில் ஒன்றிய எதிர்ப்பாளர்கள் வெல்வதற்கு எந்தச் சாத்தியமுமே இல்லை என ஆரம்பத்தில் நம்பப்பட்டது.

கடுமையான பயமுறுத்தல் பிரச்சாரங்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து - இணைவுக்கு ஆதரவான ஒரு லேபர் பாராளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எப்படியும் இணைவு வென்றுவிடும் என்றுதான்; பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் இந்த அதிகாரப் பலத்துக்கு தோல்வியைத் தேடிக்கொடுத்தது யார்? ஒன்றியத்துக்கு எதிராக வாதிட்டவர்கள் மிகவும் பலவீனமான குழுவினர். போரிஸ் ஜோன்சன், மைக்கள் கோவ் என மக்களால் வெறுக்கப்பட் கன்சவேட்டிவ் கட்சியினர் போன்றோர்தான் இதற்கு தலைமை தாங்கினர்.

லண்டனில் நடந்த மிகப் பொரும் ஆசிரியர் பேரணி ஒன்றின்போது “கோவ் அவுட்”; என்ற பதாகைகளோடு ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் ஊர்வலமாய் போனது சமீபத்தில் நடந்த வரலாறுதான். இதுபோல்தான் பொரிசுக்கும் “கிளவுன்” என்று ஒரு செல்லப்பட்டதுமுண்டு.

இந்தக் கோமாளிகளின் தலைமையில் நடந்த எதிர்ப்புப் பக்கம் இருந்து அளவுகணக்கற்ற பொய்கள் அவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருந்தது.

இது தவிர இவர்களுடன் இணைந்து நைஜல் பாராஜ் என்ற முன்னாள் பாங்கரும் யுகிப் கட்சியின் தலைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பெரும்பான்மைத் தருனங்களில் இவரது பிரச்சாரம் துவேசத்தின் அடிப்படையிலேயே இயங்கியது.

அகதிகளுக்கு எதிராகவும் வெளிநாட்டு வேலையாட்களுக்கு எதிராகவும் மிகக் கேவலமான பிரச்சாரங்களை அவர் செய்தார். அவர் தலமை வகித்த யுகிப் என்கிற அதிதீவிர வலதுசாரியக் கட்சி மிகச் சிறிய கட்சி. அவர்களுக்கு ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே உண்டு.

அவரும் கன்சவேட்டிவ் கட்சியில் இருந்து விலத்தி வந்த பொதுவான மக்கள் ஆதரவற்ற ஒருவர். ஆனால் அவர்கள் திரும்பத் திரும்ப ஊடகங்களினால் முன்தள்ளப்பட்டாரகள். அவர்களுக்குக் கிடைத்த –கிடைக்கும் ஊடக ஊக்குவிப்பைப் பார்த்தவர்கள் அவர்கள் இத்தகைய சிறு கட்சி என்பதை நம்பமுடியாமல் போய்விடுவர்.

லிபரல் குட்டி பூர்சுவா ஊடகவியலாளர் இந்த நடவடிக்கையைத் தெளிவுடன்தான் செய்தனர். இணைவுக்கு எதிரான பிரச்சாரத்தின் தலைமை அதி தீவிர வலதுசாரிய –துவேசிகளிடம் இருக்கிறது எனக் காட்டுவதன் மூலம் வாக்காளர்களை தமது பக்கம் - பிரதமர் கமிரோன் பக்கம் திருப்புவது அவர்களது கள்ள நோக்கமாக இருந்தது.

ஆனால் இதையும் மீறி இந்தக் கோமாளிகள் மக்களைத் தங்கள் வலதுசாரியத் துவேச போக்குக்கு வென்றெடுத்தால்தான் பிரிவு பக்கம் வெல்லும் என்ற நிலையிருந்தது.

அவ்வாறு ஒரு சிறுபான்மை பிரிவுக்கு வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் குறிப்பாக இமிக்கிரேசன் பற்றிய விசயத்தில் கடுப்பாயிருக்கும் மக்கள் எனச் சொல்லப்பட்டது. அதாவது பெருந்தொகை வெளிநாட்டார் இங்கிலாந்துக்குள் வேலைவாய்ப்புக்காக நுழைவதை விரும்பாத கூட்டம் ஒன்று பிரிவுக்கு வாக்களிக்கும் எனச் சொல்லப்பட்டது.

இதற்கு அப்பால் விவாதத்தை உண்மை நிலவரம் நோக்கி நடத்த யாரும் விடவில்லை. குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராக இருந்தாலும் நாடெங்கும் இருந்த சோசலிஸ்டுகள் சமூக பொருளாதார அடிப்படையிலான விவாதத்தை முன்னெடுக்க முயன்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் பிரிவினையின் முற்போக்கு பக்கத்தையும் - அதற்கு ஏன் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்பது பற்றியும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தனர். ஆனால் அவர்களின் குரல் முடக்கபட்டிருந்தது.

அத்தகைய விவாதம் எதுவுமே மெயின்ஸ்ரீம் ஊடகங்களில் நடத்தப்பட வில்லை. சோசலிச கட்சியைச் சேர்ந்த டேவ் நெல்லிஸ்ட் போன்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் சிறு சிறு சந்தர்பங்கள் வழங்கப்பட்டது.

அதுவும் அவர்களின் கடும் போராட்டத்தின் பிறகே வழங்கப்பட்டது. இங்கிலாந்துத் தொழிலாளர்களின் காசில் இயங்கிக்கொண்டிருக்கும் பி.பி.சி இவ்வாறு வெற்றிகரமாக அவர்களின் குரல்களை நசுக்கி வைத்திருந்தது.

அந்தக் குரலும் - அவர்தம் வாதங்களும் கேட்கப்படாததால்தான் இந்த வாக்கெடுப்பு முடிவு பெரும் ஆச்சரியம் தருவதாக இருக்கிறது. தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்தவர்கள் மக்கள் மத்தியில் இருக்கும் மனநிலை பற்றித் திருப்பி திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்த போதெல்லாம் கேட்க மறுத்தவர்கள் இப்போது ஆச்சரியப்பட்டுக்கொள்கிறார்கள்.

2 இமிக்கிரேசன்தொழிலார்கள் மத்தியில் ஒன்றிய எதிர்ப்பு ஏற்படுவதற்கு இமிக்கிரேசன் மட்டுமல்ல காரணம். ஆனால் அது ஒரு முக்கிய காரணமாக விருந்தது என்பது சரியே.

வெளிநாட்டார் படையெடுத்து வந்த உள்நாட்டாரின் வேலைகளைக் கைப்பற்றிச் செல்லப்போகிறார்கள் எனவும் - இதனால் அனைத்து சேவைகளும் நெருக்கடிக்குள்ளாகப் போகிறது எனவும் - ஊதியம் குறையப் போகிறது எனவும் - பிரச்சாரங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருந்தன.

மக்கள் மத்தியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான துவேசம் வளர்க்கப்பட்டுக்கொண்டிருந்தது உண்மையே. மக்கள் மத்தியில் துவேசம் ஓரளவு வளர இது காரணமாக இருந்ததும் உண்மையே. இதே போக்கு தொடருமாயின் துவேசம் மேலும் வளரும் என்பதும் உண்மையே.

இதைச் சொல்லும்போது நாங்கள் ஒரு முக்கிய விசயத்தைக் கணக்கில் எடுக்கத் தவறி விடுகிறோம். அதாவது இமிக்கிறேசன் - வேலை வாய்ப்பு – சேவைகள் - மக்கள் கருத்துநிலை- இவற்றுக்கிடையில் ஒரு தொடர்பு இருக்கிறது என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

அந்தத் தொடர்பு – சமூக உறவு என்ன? அதன் பண்புகள் என்ன? அது எத்தகய அடிப்படைகளில் தோன்றுகிறது மறைகிறது? இந்தக் கேள்விகளை நோக்கி நகர்வது துவேச உணர்வு எங்கிருந்து எழுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

வேலைவாய்ப்பு குறைதலும் - சேவைகள் குறைவதும் - ஊதியம் குறைவதும் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வைத் தூண்டி விடுகிறது. இதனால் அவர்கள் வெளிநாட்டு வேலையாட்களை சந்தேகத்துடன் பார்க்கும் நோக்கு எழுகிறது.

இருக்கிற கேக்கைப் பகிர்ந்துகொள்ள ஆட்கள் கூடினால் தமக்குக் கிடைக்கும் துண்டு மேலும் சிறுசாக மாறிவிடும் என்ற பயம் அது என இதை இலகுபடுத்தி விளக்குவர் சிலர்.

இந்தப் பாதுகாப்பு பயம் நிலையே மற்றவர்மேலான வெறுப்புக்கான தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இதனாற்தான் துவேசம் குறிப்பாக கஸ்டப்படும் - பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய தொழிலாளர்கள் மத்தியில் -வளர்வது நிகழ்கிறது.

நாங்களே வழியற்றிருக்கும் போது அடுத்தவனையும் கூப்பிட்டு வைச்சு எப்படிச் சாப்பாடு போடுவது என்ற பொது அறிவின் பாற்பட்டதான உணர்வாகவும் இருக்கிறது இது.இந்த நிலையில் இருக்கின்ற சேவைகளை உடைத்து துண்டாக்கிப் பெரும் வியாபார முதலைகளுக்கு விற்கும் கொள்கைகளை ஆளும் அரசு முன்வைக்கிறது.

சேவைகள் வெட்டப்படுகின்றன. ஊதியம் குறைக்கப்படுகிறது. மட்டுப்படுத்தப்படுகிறது. சீரோ அவர் ஒப்பந்தம் என்ற மோசமான – நிரந்தரமற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்யும்படி குறைந்த ஊதியம் எடுக்கும் தொழிலாளர்கள் பணிக்கப்படுகின்றனர்.

டெஸ்கோ முதலான பெரும்கடைகள் , மாக்டொனால்ட் ஆகிய இடங்களில் வேலை செய்பவர்களும் மற்றும் பல்வேறு அடிமட்டத் தொழிலாளர்களும் இத்தகய நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். பொருளாதார நெருக்கடியின் அழுத்தம் இவ்வாறு இந்த தொழிலாளர்கள் மேல் இறக்கிவிடப்படும் நடவடிக்கை எடுக்கும் அதே தருணத்தில் பெரும் வங்கிகள் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு காப்பாற்றப்படுகின்றன.

எவ்வாறு பெரும் செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் தாம் செலுத்தவேண்டிய பெரும்தொகை வரிப் பணத்தை சூறையாடிச் செல்கிறார்கள் என்பதை பனாமா பேப்பர் மூலம் வெளிவந்த ஊழல் பற்றிய கசிவு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இந்நிலையில் - இந்த முரன் அலையில் இழுபடும் மக்கள் எத்தகய மனநிலைக்கு உட்படுவர் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள். மக்கள் முழுத் தெளிவான உணர்வின் அடிப்படையில் மட்டும் இருந்து தங்கள் முடிவுகளுக்கு தாவுவதில்லை.

இத்தகய நிலவரங்கள்தான் அவர்கள் வரும் பல்வேறு முடிவுகளைத் தீர்மானிக்கிறது.தமிழர் பலரும் மற்றவர்கள் இங்கிலாந்து வருவதை விரும்பாத நிலையில் இருப்பதற்கும் இந்த போக்கே காரணம்.

அதிக போலந்துக்காரர் வந்து எங்கட வேலைகளைத் தூக்கிக்கொண்டு போறாங்கள் - வீடுகளுக்கு வாடகை கூடிப்போச்சு என்ற அடிப்படைகளில் இருந்துதான் இந்த வெறுப்பு தூண்டப்படுகிறது. இதை வெறும் துவேசம் என்று திட்டி அனைத்து மக்களையும் தள்ளிவைத்துப் பேசும் பேச்சு மிக மிகத் தவறு.

இத்தகய பேச்சைப் பேசுபவர்கள் சிறுபான்மை – லிபரல் சிந்தனையுடவர்கள் மட்டுமே. அவர்கள் இதற்கான தீர்வைப் பற்றி சிந்திக்காதவர்களாயும் இருக்கின்றனர். பெரும் வியாபாரிகளுக்கு வெளிநாட்டார் வருகை பற்றி கவலையில்லை.

மாறாக அவர்களைக் கொண்டு வந்து குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வைத்திருப்பதன்மூலம் பெரும் லாபமீட்டுவதே அவர்களின் நோக்கம். எல்லா குறைந்த சம்பளம் வழங்கும் இடங்களிலும் வெளிநாட்டாரை வேலைக்கெடுக்கவே விரும்புகிறார்கள் என்பது நாமறிந்ததே.

இதைச் சரியான முறையில் எதிர்கொள்வது எவ்வாறு?

மக்களைத் துவேசிகள் என்று திட்டி ஒதுக்கிவிட்டு இளைப்பாறப்போகும் இறுமாப்பான நடவடிக்கையால் யாருக்கும் பயனில்லை. தவிர மக்களை துவேசிகள் - பிற்போக்கு வாதிகள் - படிப்பறிவற்றவர்கள் எனக் கேவலமாக நோக்கும் போக்கு அநாகிரிகமானது.

தொழிலாளர்களை அநாகரிகப்படுத்தும் அராஜகச் செயற்பாடு அது. சாவ்ஸ் எனச் சொல்லி தொழிலாளர்களை – அதிலும் முக்கியமாக வசதியற்றி குடும்பங்களை திட்டிக் குறைத்து நடத்தும் அதிகாரப் பழக்கத்தை கடுமையாக எதிர்த்த வந்திருக்கிறார்கள் இடதுசாரிகள்.

இந்த சாவஸ் ஆளும் திறமை அற்றவர்கள் என்ற அடிப்டையிலேயே பெரும் பல்கலைக்கழகங்களும் அவர்களைப் புறக்கணித்து வருகிறது. டேவிட் கமரோணும்- அவரை எதிர்க்கும் போரிசும் ஒரே படிப்பறைக்குள்ளால் வந்தவர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பெரும்பான்மை வலது சாரிய அரசியல்வாதிகள் ஈட்டோனியன்கள் எனச் சொல்லபடுகிறார்கள். சாதாரன தொழிலாளர் நெருங்க முடியாத ஈட்டோன் கல்லூரில்குள்ளால் வந்த “உண்ணதமானோர்” அவர்கள். அவர்களுக்குத்தான் ஆளும் திறமை இருப்பதாகவும் - அறிவும் - அரசியல் நுணுக்கங்களும் இருப்பதாகவும் பாவனை செய்யப்படும் கேவலமும் உண்டு.

வறிய மக்களுக்கான சந்தர்பங்கள் வழங்க மறுக்கும் உறவுமுறை கொண்ட முதலாளித்துவ சமூகத்தில்தான் நாம் வாழுகிறோம்.தொழிலாளர்மேல் அதிகாரத்துடன் எரிந்து விழுவதாலும் - அவர்களை நோக்கி படிப்பற்றோர் மற்றும் துவேசிகள் எனத் திட்டுவதாலும் மட்டும் அவர்கள் வெறுப்பை நோக்கி நகர்வதைத் நிநுத்திவிட முடியாது.

ஊதியம் உயர வேண்டும் என்ற கோரிக்கை வேண்டும். ஊதியம் குறைக்கப்படுவவது தடுக்கப்படவேண்டும். வாடகை கூட்டப்படுவதற்கு எதிரான சட்டம் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். சேவைகள் வெட்டப்படுவதற்கு எதிராக போராடி அதைத் தடுக்க வேண்டும்.

வெளிநாட்டார் வேண்டுமானால் வரட்டும் - ஆனால் அவர்களை அடிமை ஊதியத்தில் சம்மபளம் எடுக்க வேண்டாம் என்ற தடையை வியாபாரங்களுக்கு வழங்க வேண்டும். வெளிநாட்டாரை உள்நாட்டவர்களுக்கு எதரிராகப் பாவிக்கும் வியாபாரத் தந்திரங்கள் தடுக்கப்படவேண்டும்.

வருபவர்களைத் தாங்கிக் கொள்ளத்தக்க முறையில் சேவைகளில் முதலீடு செய்யப்படவேண்டும். ஒழித்து வைக்கப்படும் பெரும் வரிபணங்களை வட்டியோடு திரும்பிப் பெறுவதால் இதை இலகுவாக நிறைவேற்ற முடியும்.

இது மட்டுமின்றி பெரும் லாபமீட்டும் கம்பனிகளுக்கு ஒரு சொட்டு வரியை அதிகரிப்பதன் மூலம் மக்கள் சேவைகளில் பெரும் முதலீடுகளைச் செய்ய முடியும்.

அவ்வாறு ஓரளவுக்காவது செய்யும் நோர்வே போன்ற நாடுகளை விட்ட வியாபாரங்கள் ஓடிப்போய் விட்டனவா என்ன? நாங்கள் விட்டு விட்டுப் போய்விடுவோம் என்ற வியாபாரங்களின் பிளாக் மௌயிலுக்கு பயந்து இயங்குவதாக பாவனை செய்யும் அரசு யாருக்கு வேண்டும்.

அது ஒரு பாவனைப் பிரச்சாரம் மட்டுமே. உண்மையில் அவர்கள் வியாபார நலன்களுக்காக இயங்கும் அரசாக மட்டுமே இருக்கிறார்கள். இந்த அரசின் பண்பு மாற வேண்டும். மேற் சொன்ன கொள்கைகளை முன்தள்ளி மக்களின் நலனை முதன்மைக் குறிக்கோளாக கொண்டு இயங்கும் மக்கள் அமைப்பு உருவாகாமல் இது சாத்தியமில்லை.

அந்த வெற்றிடத்தில்தான் அனைத்துவித பிற்போக்குத்தனங்களும் வளர்ச்சியடைகின்றன.இத்தகய அரசியல் பிரதிநிதித்துவ வெற்றிடத்துக்குள் இருந்து கொண்டு அந்த வெற்றிடத்தை காப்பாற்றுபவர்கள் பக்கம் நின்றுகொண்டு – சேவைகளை உடைப்பவர்கள் பக்கம் நின்றுகொண்டு வெறுப்புக்கு எதிராக பேசுவது என்பது வெற்று நடவடிக்கையே.

இவர்களின் தலமையில் - அதிகார சக்திகளின் தலமையில் நடந்த பிரச்சாரம் எவ்வாறு மக்களால் மறுக்கப்பட்டது என்பதன் மர்மத்தின் விளக்கமும் இங்கிருந்ததான் பிறக்கிறது. மக்களின் கோபதாபங்கள் அவர்களுக்கு கிடைத்த சந்தர்பத்தின் ஊடாகக் கசிந்துள்ளது.

இந்த தெளிவான போக்கு வளர்த்தெடக்கப்பட்டு அமைப்பு மயப்படவேண்டும். இதை விட்ட விட்டு நாம் மக்களை இ;த்தருனத்தில் பறந்தள்ளினால் அவர்களுக்கு போக்கிடம் என்ன இருக்கிறது. சமூகத்தின் எல்லா வியாதிகளையும் வெளிநாட்டார் தலையில் போட்டுப் பிரச்சாரம் செய்யும் துவேச அமைப்புக்களை நோக்கி அவர்களைத் தள்ளும் செயற்பாடு அது.

அந்தச் செயலை நாம் செய்வது தவறு. அந்தச் செயற்பாடுதான் முதலாம் உலக யுத்தத்தின் பின் பாசிசம் வளரக் காரணமாக இருந்தது. மக்களை உள்வாங்கிய முற்போக்குத் தொழிலாளர் அமைப்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் பலவீனப்படுவதுதான் பாசிசத்தின் வளர்சிக்கு உதவியது.

தொழிலாளர்களின் அமைப்புக்களின் சீரளிவின் முதுகில் நின்றபடிதான் பாசிசம் கூக்குரலிட்டது. இந்த வரலாற்றைப் புதைத்துவிட்டுத்தான் பாசிச எதிர்புக் கதைகள் செய்கின்றனர் வலுதுசாரிகள்.

இதை மறுத்துத் தெளிவுகள் பிறக்கும் பிரச்சார நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அதற்கும் மேலாக முற்போக்கு கொள்கைகளை முன்னெடுக்கும் மக்கள் அமைப்புக்கான செயற்பாடுகளில் இணைந்துகொள்ள வேண்டும்.

இதற்கு அப்பால் எங்களை நாங்களே சுகப்படுத்துவதற்காக மட்டும் துவேச எதிர்ப்பு கதை கதைத்தவிட்டு சுகம்காணப் போய்விடுவதால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை.

 

http://www.tamilwin.com/articles/01/108841

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.