Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு மாவட்டச் செயலர் விஜயம்

Featured Replies

மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு மாவட்டச் செயலர் விஜயம்
 
 

article_1467027352-DS01.jpg

-செல்வநாயகம் கபிலன்

வலி.வடக்கு, தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், இன்று திங்கட்கிழமை (27) நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார்.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் கடந்த 26 வருடங்களாக உள்ளடங்கியிருந்த குரும்பசிட்டி, வறுத்தலைவிளான் மற்றும் காங்கேசன்துறை பகுதிகளை சேர்ந்த 201.3 ஏக்கர் காணி மக்களிடம் மீளவும் கடந்த சனிக்கிழமை(25) பாதுகாப்பு செயலாளர் கருணாசேன கெட்டியாரச்சியால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த பகுதிகளில் இருந்த இராணுவ முட்கம்பிவேலிகள் அகற்றப்பட்டு, மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக காணி உரிமையாளர்கள் காடு மண்டியிருந்த தமது காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மாவட்டச் செயலர் இது தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கும் போது, “விடுவிக்கப்பட்ட மூன்று கிராமசேவையாளர் பிரிவில் உள்ள காணி உரிமையாளர்கள் தமது மீள்குடியேற்ற பதிவுகளை தமது கிராமசேவையாளர் ஊடாக உடனடியாக மேற்கொள்ளவும். மீளக்குடியமர பதிவு செய்தவர்களுக்கு மீள்குடியேற்ற தொகையாக 25 ஆயிரம் ரூபாயும், 1 ஏக்கர் காணியினை துப்பரவு செய்வதற்கு 28,000 ரூபாயும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் இப் பகுதியில் உள்ள பாதைகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிரதேச செயலர் பிரிவினால் மீள்குடியேற்றத்திற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறினர்.

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சுப்பிரமணியம் முரளிதரன், தெல்லிப்பளை பிரதேச செயலர் கனகராஜா ஸ்ரீமோகனன் ஆகியோர் உடனிருந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/175708#sthash.5amFuzyC.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.