Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரிபியன் பிரிமியர் லீக் செய்திகள்

Featured Replies

கரிபியன் பிரிமியர் லீக் செய்திகள்

#CPL16 முதல் போட்டியில் செயின்ட் லூசியா வென்றது. 

 

c2#CPL16 முதல் போட்டியில் செயின்ட் லூசியா வென்றது.

T20 க்கு புகழ் பெற்ற மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரிமியர் லீக்கின் முதல் போட்டியில் ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா அணிகள் பங்கெடுத்தன.

நாணய சுழற்சியில் வென்ற செயின்ட் லூசியா அணித்தலைவர் டரன் சமி முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி டரன் பிராவோவின் ஆட்டமிழக்காத 63 ஓட்டங்கள் துணையுடன் 20 பந்து பரிமாற்றங்களில் 6 இலக்குகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றது.

163 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய செயின்ட் லூசியா அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சார்ள்ஸின் அரைசதம் மற்றும் இறுதியில் டேவிட் மில்லர் 20 பந்துகளிலான 33 ஓட்டங்கள் மற்றும் சமியின் 5 பந்துகளிலான 11 ஓட்டங்கள் துணையுடன் இறுதிப் பந்துப்பரிமற்றத்தின் முதல் பந்தில் 164 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக சார்ள்ஸ் தேர்வானார்.

#சிவானுஜன் செல்வரத்தினம்

c1c3

 

http://vilaiyattu.com/cpl16-முதல்-போட்டியில்-செயின்/

  • தொடங்கியவர்

#CPL16_02 கரீபியன் பிரிமியர் லீக் – வென்றது கயானா அமேசான் வாரியர்ஸ். 

 

cc2#CPL16_02 கரீபியன் பிரிமியர் லீக் – வென்றது கயானா அமேசான் வாரியர்ஸ்.

மேற்கிந்திய தீவுகளின் கரிபியன் பிரிமியர் லீக் போட்டிகளின் 2வது போட்டியில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற கயானா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய செயின்ட் கிட்ஸ் அணிக்கு பிரட் ஹொட்ஜ் மற்றும் தோமஸ் தலா 38 ஓட்டங்கள், டுபிளஸ்சின் 30 ஓட்டங்கள் துணையுடன் 20 பந்து பரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது.

கயானா அணியின் பந்துவீச்சில் பாகிஸ்தானின் சோகைல் தன்வீர் 4 இலக்குகளையும் அவுஸ்திரேலியாவின் அடம் சம்பா 3 இலக்குகளையும் கைப்பற்றினர்.

பதிலளித்து துடுப்பெடுத்தாடிய கயானா அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டுவைன் ஸ்மித் 36 பந்துகளில் பெற்ற 62 ஓட்டங்களுடன் வெற்றி நோக்கி சென்றாலும் மத்திய வரிசை சொதப்ப இறுதியில் ஒரு பந்து மீதமிருக்க ஐக்சன் மொகம்மட்டின் ஆட்டமிழக்காத 29 பந்துகளிலான 42 ஓட்டங்கள் துணையுடன் 4 இலக்குகளால் வெற்றி பெற்றது.cc 2
ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

#சிவானுஜன் செல்வரத்தினம்

g1g2

g4g3

http://vilaiyattu.com/cpl16_02-கரீபியன்-பிரிமியர்-லீக/

  • தொடங்கியவர்

#CPL16_03 பார்படோஸ்க்கு எதிரான போட்டியில் ரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெற்றி. 

 

 

received_849330988532073

#CPL16_03 பார்படோஸ்க்கு எதிரான போட்டியில் ரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெற்றி.

நாணய சுழற்சியில் வென்ற பார்படோஸ் அணித்தலைவர் கிரான் பொல்லார்ட் ரின்பாகோவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட வந்த டுவைன் பிராவோ தலைமையிலான நைட் ரைடர்ஸ் ஆரம்பத்தில் 20 ஓட்டங்களுக்குள் 4 இலக்குகளை இழந்தாலும் ஹசிம் அம்லா (81 ஓட்டங்கள்) மற்றும் டரன் பிராவோ (ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்கள்) ஆகியோரின் இணைப்பாட்டம் மூலம் 20 பந்து பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்த நிலையில் 170 ஓட்டங்களை பெற்றது. எதிர்பார்க்கப்பட்ட பிரெடன் மக்கலம் 6 பந்துகளில் 1 ஓட்டத்து பெற்று ஆட்டமிழந்தார்.

ரவி ராம்பால் மற்றும் ஹுசைன் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளை கைப்பற்றினர்.

பதிலளித்து ஆடிய பார்படோஸ் 20 ஓவர்களில் 8 இலக்குகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்று 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஸ்டீவன் ரெய்லர் 37 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரன் 12 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர். ஏபி டீ வில்லியர்ஸ் 14 பந்துகளில் வெறுமனே 12 ஓட்டங்களையும் அணித்தலைவர் பொல்லார்ட் எதுவித ஓட்டத்தையும் பெறமால் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. சுனில் நரைன் மற்றும் கிவோன் கூப்பர் தலா இரு இலக்குகளை சாய்த்தனர்.

ஆட்டநாயகனாக தென்னாப்பிரிக்காவின் அம்லா தெரிவானார்.

received_849330991865406 received_849331011865404

http://vilaiyattu.com/15919-2/

 

  • தொடங்கியவர்

#CPL16_04 கிறிஸ் கெயிலின் ஜமைக்கா அணி வென்றது. 

 

received_849895011809004#CPL16_04 கிறிஸ் கெயிலின் ஜமைக்கா அணி வென்றது.

நாணய சுழற்சியில் வென்ற செயின்ட் கிட்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா அணிக்கு கெய்ல் அரைசதம் பெற்று அசத்த இறுதியில் அன்ரே ரசல் 34 ஓட்டங்களை பெற்று கொடுக்க ஜமைக்கா 20 பந்து பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. இலங்கையின் சங்கக்காரா 21 பந்துகளில் 26 ஓட்டங்களை பெற்று ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் இலங்கையின் பெரேரா மற்றும் தென்னாபிரிக்காவின் சம்சி தலா இரு இலக்குகளை வீழ்த்தினர்.

பதிலளித்தாடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 பந்து பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 148 ஓட்டங்களை மட்டும் பெற்று 5 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் லென்டி சிமென்ஸ் 29 ஓட்டங்களையும் அணித்தலைவர் டுபிளஸ்சிஸ் மற்றும் கார்டர் தலா 27 ஓட்டங்களை பெற இறுதியில் 7 பந்துகளில் 25 ஓட்டங்களை தோமஸ் அதிரடியாக பெற்றாலும் வெற்றி பெற முடியவில்லை. பந்துவீச்சில் 3 இலக்குகளை வீழ்த்திய கேஸ்ரிக் வில்லியம்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

received_849895021809003 received_849895028475669

 

http://vilaiyattu.com/cpl16_04-கிறிஸ்-கெயிலின்-ஜமைக்க/

  • தொடங்கியவர்

பந்துகளை பறக்கவிட்ட கிரிஸ் கெயில் : ஜமைக்காவிற்கு மீண்டும் வெற்றி

கரிபியன் பிரிமியர் லீக் போட்டியில் இன்று இடம்பெற்ற நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கிரிஸ் கெயில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 54 பந்துகளில் 108 ஓட்டங்களை பெற்றார்.

gaya.jpg

11 ஆறு ஓட்டங்கள் 4 நான்கு ஓட்டங்கள் அடங்களாகவே இவர் சதத்தினை பெற்றார்.

கரிபியன் பிரிமியர் லீக்  போட்டிகளில் ஜமைக்கா டவல்ஸ் மற்றும் நைட் ரைடர்ஸ் அணி மோதிய இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 191 ஓட்டங்களை பெற்றது.

192 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா டவல்ஸ்  அணியினர் 10 பந்துகள் மீதமிருக்க 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றியை பெற்றுக்கொண்டது.

அணித்தலைவர் கெயில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தமை போட்டியின் சிறப்பம்சமாகும்.

http://www.virakesari.lk/article/8538

  • தொடங்கியவர்

#CPL16_05 கயானா அமேசான் வாரியர்ஸ் 6 இலக்குகளால் வென்றது. 

 

received_849920188473153

#CPL16_05 கயானா அமேசான் வாரியர்ஸ் 6 இலக்குகளால் வென்றது.

நாணய சுழற்சியில் வென்ற கயானா அணி ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடியது நைட் ரைடர்ஸ்க்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மக்கலம் ஓட்டமேதும் பெறாமலும் மற்றும் அம்லா 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இருப்பினும் அடுத்து வந்த நியூஸிலாந்தின் கொலின் முன்ரோ ஆட்டமிழக்காமல் 65 பந்துகளில் சதம் அடித்து அசத்த நைட் ரைடர்ஸ் 20 பந்து பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் சோகைல் தன்வீர் இரு இலக்குகளை வீழ்த்தினார்.

பதிலளித்தாடிய கயானா அமேசான்க்கு ஆஸியின் கிறிஸ்  லினன் 77 ஓட்டங்களையும் மொகம்மெட் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்று கொடுக்க 4 பந்துகள் மீதமிருக்க 166 ஓட்டங்களை பெற்று 6 இலக்குகளால் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் டுவைன் பிராவோ இரு இலக்குகளை வீழ்த்தினார்.

சதம் கடந்த கொலின் முன்ரோ ஆட்டநாயகனாக தேர்வானார்.

received_849920171806488

http://vilaiyattu.com/15944-2/

  • தொடங்கியவர்

#CPL16_06 கரீபியன் பிரிமியர் லீக் -செயின்ட் லூசியாவுக்கு எதிராக செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பறியோட்ஸ் வெற்றி பெற்றது. 

 

received_850552285076610

#CPL16_06 கரீபியன் பிரிமியர் லீக் -செயின்ட் லூசியாவுக்கு எதிராக செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பறியோட்ஸ் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற டரன் சமி தலைமையிலான செயின்ட் லூசியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பறியோட்ஸ் அணி 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பில் ஏவின் லீவிஸ் 73 ஓட்டங்களை 36 பந்துகளிலும் தோமஸ் 48 ஓட்டங்களை 27 பந்துகளிலும்  (5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக) பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் சேன் வற்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலளித்த செயின்ட் லூசியாவுக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஜான்சன் சார்ள்ஸ் (30 பந்துகளில் 40 ஓட்டங்கள்) மற்றும் வட்சன்(31 பந்துகளில் 55 ஓட்டங்கள்) சிறந்த ஆரம்பத்தை அமைத்துக் கொடுத்தாலும் மத்திய வரிசையின் சொதப்பல், அனுபவ வீரர் மைக் ஹசி 29 பந்துகளை வீணடித்து பெற்ற 22 ஓட்டங்கள் என்பன 204 என்ற இமாலய இலக்கை துரத்த போதுமானதாக அமையவில்லை. ஆகையால் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை மட்டும் பெற்று 58 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது செயின்ட் லூசியா. பந்து வீச்சில் சமுவல் பத்ரி 4 பந்துப் பரிமாற்றங்கள் வீசி 22 ஓட்டங்களை மட்டும் கொடுத்து இரு விக்கெட்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக லீவிஸ் தேர்வானார்.

http://vilaiyattu.com/15970-2/

  • தொடங்கியவர்

வில்லியர்ஸ் அதிரடி: ட்ரைடன்ஸ் வெற்றி 

 

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரிபியன் பிரிமியர் லீக் தொடரின் இன்றைய  போட்ரியோட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ட்ரைடன்ஸ் அணி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

246765.jpg

தென்னாபிரிக்க அணியின் வில்லியர்ஸின் அதிரடியின் மூலமாக இந்த வெற்றியை ட்ரைடன்ஸ் அணி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய போட்ரியோட்ஸ்  அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றக்கொண்டது.

போட்ரியோட்ஸ் அணி சார்பில் லிவிஸ் அதிகபட்சமாக 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் பார்னெல் மற்றும் வைஸ் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

163 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ட்ரைடன்ஸ் 18.4 ஓவர்களில்  3 விக்கட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.

இதில் வில்லியர்ஸ் 33 பந்துகளில் 63 ஒட்டங்களையும், மலிக் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் திசர பெரேரா 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக வில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

246769.jpg

http://www.virakesari.lk/article/8593

  • தொடங்கியவர்

#CPL16_07 கெயில் அதிரடிச் சதம் – ஜமைக்கா டலவாஹ்ஸ்க்கு வெற்றி 

 

 

FB_IMG_1467687559046#CPL16_07 கெயில் அதிரடிச் சதம் – ஜமைக்கா டலவாஹ்ஸ்க்கு வெற்றி.

ரின்பாகோ நைட் ரைடர்ஸ்க்கு எதிராக நாணய சுழற்சியில் வென்ற ஜமைக்கா டலவாஹ்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது.

களம்கண்ட நைட் ரைடர்ஸ்க்கு முதல் போட்டிகளில் பிரகாசிக்காத மக்கலமும் (18 பந்துகளில் 35 ஓட்டங்கள்) ஹசிம் அம்லாவும் (52 பந்துகளில் 74 ஓட்டங்கள்) நல்ல ஆரம்பத்தை அமைத்துக் கொடுத்தனர். கடந்த போட்டியில் சதம் கடந்து அசத்திய கொலின் முன்ரோவும்   அடுத்து வந்து 55 ஓட்டங்களை 39 பந்துகளில் பெற்று கொடுக்க 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை பெற்றது ரின்பாகோ.

பந்துவீச்சில் டெல் ல்ரெய்ன் 4 பந்துப் பரிமாற்றங்களில் 56 ஓட்டங்களை வாரி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

192 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா டலவாஹ்ஸ் அணிக்கு கெயில் 11 ஆறு ஓட்டங்கள் 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 108 ஓட்டங்களை 54 பந்துகளில் பெற்றுக் கொடுக்க 10 பந்துகள் மீதமிருக்க இலக்கை துரத்தி 7 விக்கெட்டுகளால் வென்றது ஜமைக்கா அணி.  இலங்கையின் சங்கா 14 பந்துகளில் 20 ஓட்டங்களையும் அன்ரே ரசல் 18 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் சுனில் நரைன் 4 பந்துப் பரிமாற்றங்கள் வீசி வெறுமனே 9 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்

http://vilaiyattu.com/15978-2/

  • தொடங்கியவர்

#CPL16_08 கரீபியன் பிரிமியர் லீக் – 8வது போட்டியில் பார்படோஸ் வென்றது. 

 

received_851655198299652

#CPL16_08 கரீபியன் பிரிமியர் லீக் – 8வது போட்டியில் பார்படோஸ் வென்றது.

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பரியோட்ஸ் அணிக்கெதிராக இன்று அதிகாலை நடந்த போட்டியிலே வெற்றி பெற்றது பார்படோஸ்.

நாணய சுழற்சியில் வென்ற செயின்ட் கிட்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி 20 பந்து பரிமாற்றங்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஈவின் லீவிஸ் 50 ஓட்டங்களையும் ஜொனதன் கார்டர் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் தென்னாப்பிரிக்காவின் பார்னெல் மற்றும் வைஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலளித்தாடிய பார்படோஸ் 8 பந்துகள் மீதமிருக்க 3 இலக்குகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுகளால் வென்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தானின் மாலிக் 54 ஓட்டங்களையும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 63 ஓட்டங்களையும் இறுதியில் அணித்தலைவர் பொலார்ட் ஆட்டமிழக்காமல் 13 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதி செய்தனர். பந்துவீச்சில் இலங்கையின் பெரேரா 3 பந்துப் பரிமாற்றங்களில் 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

#சிவானுஜன்

received_851655211632984 

http://vilaiyattu.com/16018-2/

  • தொடங்கியவர்

#CPL16_09 கரீபியன் பிரிமியர் லீக் – கயானா அமேசான் வாரியர்ஸ் 7 விக்கெட்களால் வெற்றி. 

 

cpl4#CPL16_09 கரீபியன் பிரிமியர் லீக் – கயானா அமேசான் வாரியர்ஸ் 7 விக்கெட்களால் வெற்றி.

இன்று அதிகாலை முதல் நடந்த 9வது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கயானா அணியின் தலைவர் மார்ட்டின் கப்தில் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

இதன்படி துடுப்பெடுத்தாட களம் கண்டது கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா டலவாஹ்ஸ்.
முதலாவது பந்துப்பரிமாற்றத்தின் 2வது பந்தில் கெய்ல் தான் எதிர் கொண்ட முதல் பந்தில் ஓட்டமெதும் பெறாமல் ஆட்டமிழக்க அடுத்த வந்த சங்கக்கராவும் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் சகிப் அல் ஹசன் (25) மற்றும் ரோவ்மன் பவல் (38) ஆகியோரின் இணைப்பு மூலம் 75 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பெற்றது. பின் வந்தவர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 18 பந்துப் பரிமாற்றங்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களை மட்டும் பெற்றது ஜமைக்கா அணி.

பந்து வீச்சில் வீரசாமி பெருமாள் 3 இலக்குகளையும் தன்வீர், சம்பா, எம்ரிட் ஆகியோர் தலா இரு இலக்குகளையும் கைப்பற்றினர்.

101 என்ற இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கயானா அணிக்கு கப்தில் மற்றும் டுவைன் ஸ்மித் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

கிறிஸ் லீனன் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் அந்தோனி ப்ரம்ப்ளே ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 18 பந்துப் பரிமாற்றங்களில் 3 விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்களால் வெற்றி பெற்றது கயானா அமேசான் வாரியர்ஸ்.

பந்து வீச்சில் பாகிஸ்தானின் இமாட் வசீம் 4 பந்துப்பரிமாற்றங்கள் வீசி வெறுமனே 6 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக பந்து வீச்சில் 3 விக்கெட்களை கைப்பற்றிய கயானா அணியின் வீரசாமி பெருமாள் தேர்வானார்.

#சிவானுஜன்

cpl cpl1

cpl2 

http://vilaiyattu.com/cpl16_09-கரீபியன்-பிரிமியர்-லீக/

http://vilaiyattu.com/cpl16_09-கரீபியன்-பிரிமியர்-லீக/

  • தொடங்கியவர்

#CPL கரீபியன் பிரிமியர் லீக் – அணிகள் மற்றும் விபரங்கள் !!! 

 

received_852672948197877

#CPL கரீபியன் பிரிமியர் லீக் – அணிகள் மற்றும் விபரங்கள் !!!

உலகில் உள்ள அத்தனை ரி20 லீக் போட்டிகளில் கலக்கோ கலக்கென கலக்கும் மேற்கிந்தியதீவு வீரர்களின் சொந்த இடமான கரீபியனில்  நடைபெறும் கரீபியன்களின் ரி20 திருவிழா ஜூன் 29ம் திகதி (இலங்கைக்கு 30ம் திகதி)  ஆரம்பமானது.

ஜமைக்கா, பார்படோஸ், கயானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகியவற்றிலிருந்து கரீபியன் பிரிமியர் லீக்கில் ஆறு கழகங்கள் பங்கெடுக்கின்றனர். 34 போட்டிகள் நிறைவில் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி இறுதிப்போட்டி நடைபெறும்.

 அணிகள் மற்றும் அதில் இடம் பிடித்துள்ள வீரர்கள் :

1.பார்படோஸ் ரிடென்ட்ஸ்    

இவ் அணியின் பயிற்சியாளராக ரொபின் சிங்கும் தலைவராக  கிரான் பொல்லார்ட்டும் உள்ளனர். கடந்த வருடம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியாகும். போட்டியை மாற்றக்கூடிய வல்லமை கொண்ட வீரர்கள் இவ் அணியில் இடம் பெற்றுள்ளதுடன் இந்த அணியின் சொந்தக்காரராக விஜய் மல்லயா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர  சர்வதேச வீரர்களான கிரான் பொல்லார்ட், ஜேசன் ஹோல்டர், ரவி ரம்போல் (WI), ஏபி டீ வில்லியர்ஸ், டேவிட் விஸே, வாயன் பர்னெல் (SA), ஷோயிப் மாலிக் (Pak) போன்றவர்களுடன் நிக்கோலஸ் பூரான், ரொபின் பீட்டர்சன் (SA), ரேயமொன் ரெசிபிர், அஷ்லேய் நுர்ஸ், அக்கேல் ஹூசெய்ன், இம்ரான் கான் (Pak), கயில் ஹோப், நாவின் ஸ்டெவார்ட், கயில் கார்பின், ஸ்டிவென் டாய்லர், சமர் ஸ்ப்ரிங்கர் ஆகியோரும் உள்ளனர்.

2.கயானா அமேசான் வாரியர்ஸ்

கடந்த வருடம் 3ம் இடத்தை பிடித்த இவ் அணியின் பயிற்சியாளராக ரோஜர் ஹர்பெர், தலைவராக நியூசிலாந்தின்  மார்ட்டின் குப்தில் ஆகியோர் உள்ளனர். திறமையான சர்வதேச மற்றும் உள்ளூர் வீரர்களை கொண்டுள்ளது.

நட்சத்திர  சர்வதேச வீரர்களான மார்ட்டின் குப்தில் (NZ), சொஹைல் தன்வீர் (Pak), டுவைன் ஸ்மித் (WI), கிறிஸ் லினன், அடம் சம்பா (AUS) ஆகியோருடன் தேவேந்திர பிஷூ, ராயட் எம்ரிட், ஜேசன் மொஹாம்மேட், கிறிஸ்டோபர் பார்ன்வெல், வீரசாமி பெருமாள், ஒர்லாண்டோ பீட்டர்ஸ், அஸ்ஸாத் பிடடின், அந்தோனி ப்ரம்ப்ளே, பவுல் விண்ட்ஸ், ஸ்டிவென் ஜகோப்ஸ், ஸ்டிவென் காட்வேரோ, அலி கான், ஷிமரோன் ஹெட்மயெர் போன்ற வீரர்களை கொண்டுள்ளது.

3.ஜமைக்கா டல்லவாஹ்ஸ்

கடந்த வருடம் 4ம் இடத்தை பிடித்த இவ் அணியில் பவுல் நிஸோன் பயிற்சியாளராக செயற்பட அதிரடிவீரர் கிறிஸ் கெயில் தலைமையில் அன்ட்ரே ரஸ்ஸல் (WI), குமார் சங்கக்கார (SL), சாகிப் அல் ஹசன் (Ban), டெல் ஸ்டெய்ன் (SA) ஆகியோருடன் இமாட் வாசிம் (Pak), ரோவ்மன் பௌல், சாட்விக் வால்டன், ஜோன்-ரோஸ் ஜஃகேசர், அன்ட்ரே  மக்கர்த்தி, ஜோனாதன் போவ், அலெஸ் ரோஸ் (AUS), கேஸ்ரிக்  வில்லியம்ஸ், நிக்ரும்ஹ பொன்னேர், க்ரேய் மதுரின், டிமராய் அலன், ஓ’ஷான்  தோமஸ் போன்றோர் உள்ளனர்.

4.செயின்ட் கிட்ட்ஸ் மற்றும் நெவிஸ் பற்றியோட்ஸ்

எரிக் சிமொன்ஸ்சை பயிற்சியாளராக கொண்ட இந்த அணியின் தலைவராக தென்னாபிரிக்காவின் ரி 20 அணித்தலைவர் டு பிளெஸ்ஸிஸ் கடமையாற்றுகிறார்.

கடந்த முறை இறுதி இடத்தை பிடித்த அணியாகும்.

நட்சத்திர  சர்வதேச வீரர்கள்: லெண்டில் சிம்மோன்ஸ், சமுவேல்  பத்ரீ, கார்லோஸ் பரத்வைட் (WI), டு பிளெஸ்ஸிஸ், டப்ரைஸ் சம்சி (SA), பிரட் ஹோட்ஜ் (AUS), திசார பெரேரா (SL)

உள்ளூர் வீரர்கள்: ஜோனாதன் கார்ட்டர், கிரிஷ்மர் சன்டொக்கி, ஏவின் லெவிஸ், கிரான் பௌல், JJ ஸ்மூட்ஸ், டெவோன் தோமஸ், ஷாமர்ஹ ப்ரூக்ஸ், டினோ பேஸ்ட், ஜெரெமியாஹ் லூயிஸ், நிக்ஹில் டுட்டா, அல்சாரி ஜோசேப்.

received_852673171531188 received_852673204864518

5.செயின்ட் லூசியா ஸ்வுக்ஸ்

மேற்கிந்திய தீவுகளின் ரி 20 வெற்றித்தலைவர் டர்ரென் சமி தலைமை தாங்குகிறார். இவ் அணியின் பயிற்சியாளராக ஸ்டுவர்ட் வில்லியம்ஸ் உள்ளார்.

நட்சத்திர  சர்வதேச வீரர்களான டர்ரென் சமி (WI), சேன் வற்சன், மைக் ஹஸி (AUS), டேவிட் மில்லர், மோர்னே மோர்கெல் (SA), கிரான்ட் எல்லியட் (NZ) போன்றோருடன் ஜோன்சன் சார்ள்ஸ், அன்ட்ரே பிளெட்சர், தினேஷ் ராம்டின் (ஜூலை 11ம் திகதிக்கு பின் மாற்றுவீரராக மிகுவேல் கும்மின்ஸ்), டெரோனி டேவிஸ், கிறிஸ்டோபர் ராம்சரண், ஷான் ஷில்லிங்போர்ட, டெலான் ஜான்சன், கயில் மாயேர்ஸ், கெட்டி லெஸ்போருஸ், நிதிஷ் குமார், கிடறேன் போப்பே ஆகியோர் இவ்வணியில் இடம் பிடித்துள்ளனர்.

6.ரின்பகோ நைட் ரைடர்ஸ்

கடந்தமுறை சம்பியன் பட்டம் வென்ற இவ் அணியின் தலைவர் ‘சாம்பியன்’ டுவைன் பிராவோ. சிமோன் ஹெல்மோட் பயிற்சியாளராக உள்ளார். நட்சத்திர வீரர்களை கொண்ட இவ்வணியில் நட்சத்திர  சர்வதேச வீரர்களாக டுவைன் பிராவோ, ட்ரென் பிராவோ, சுனில் நரைன் (WI), ப்ரெண்டன் மக்கலம், கோலின் முன்ரோ (NZ), ஹாசிம் அம்லா (SA) ஆகியோர் உள்ளநிலையில்   உமர் அக்மல், கெவின் குப்பர், சுளைமான் பேன், அன்டன் டேவிஸிக், ரோன்ஸபோர்ட் பெட்டன், நீக்கிட மில்லர், ஜெவோன் சேர்ல்ஸ், வில்லியம் பெர்கின்ஸ், யான்நிக் காரிஹ், ராம்நரேஷ் சர்வான், ஹம்ஜா தாரிக், அன்டேர்சன் பில்லிப் போன்றோரும் உள்ளனர்.

T20க்கென பிறந்த இவர்களின் திருவிழாவில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது.

http://vilaiyattu.com/16134-2/

  • தொடங்கியவர்

CPL16_10 மார்ட்டின் கப்தில் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ்க்கு 4வது தொடர்ச்சியான வெற்றி. 

 

received_853878428077329

#CPL16_10 மார்ட்டின் கப்தில் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ்க்கு 4வது தொடர்ச்சியான வெற்றி.

நாணய சுழற்சியில் வென்ற செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பறியோட்ஸ் அணியின் தலைவர் டூ பிளெஸ்சிஸ் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

அதன்படி துடுப்பெடுத்தாட வந்த பறியோட்ஸ்க்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் 60 பந்துகளில் 50 ஓட்டங்களையும் ஜோனதன் கார்டர் 15 இறுதியில் ப்ரூக்ஸ் 9 பந்துகளில் 19 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க மற்றவீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 20 பந்துப் பரிமாற்றங்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது பறியோட்ஸ்.

பந்துவீச்சில் அடம் சம்பா 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலளித்தாடிய வாரியர்ஸ்க்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டுவைன் ஸ்மித் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்த வந்த கிறிஸ் லீனுடன் (32) கப்தில் (22 பந்துகளில் 43) புரிந்த இணைப்பாட்டம் வாரியர்ஸ்க்கு வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றாலும் மத்திய வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். இறுதியில் சோகைல் தன்வீர் 11 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க 22 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது கயானா அமேசான் வாரியர்ஸ்.

பந்துவீச்சில் பத்ரி, சம்சி, ஸ்முட்ஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இவ்வெற்றி மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் நிலையில் உள்ளது.

போட்டியின் ஆட்ட நாயகனாக மார்ட்டின் கப்தில் தேர்வானார்.

received_853878404743998 

http://vilaiyattu.com/16183-2/

received_853878408077331

  • தொடங்கியவர்

#CPL16_11 முதலாவது தோல்வியை சந்தித்தது கயானா அமேசான் வாரியர்ஸ். 

 

received_854457808019391
#CPL16_11 முதலாவது தோல்வியை சந்தித்தது கயானா அமேசான் வாரியர்ஸ்.

நாணய சுழற்சியில் வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் முதலில் ரின்பாகோ நைட் ரைடர்ஸை துடுப்பாட பணித்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் 20 பந்துப் பரிமாற்றங்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா 64 ஓட்டங்களையும் டுவைன் பிராவோ 8 பந்துகளில் 25 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் ரயாட் எமிரேட் இரு விக்கெட்டுகளையும் சம்பா மற்றும் பெருமாள் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

152 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய வாரியர்ஸ்க்கு டுவைன் ஸ்மித் ஓட்டமெதும் பெறாமல் ஆட்டமிழந்தார். கிறிஸ் லின் (21), ஜசன் மொகம்மட் (19) ஆட்டமிழக்க ஒருபுறம் அணித்தலைவராக நின்ற கப்திலும் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இறுதியில் வந்த வீரசாமி பெருமாளும் 7 பந்துகளில் 18 எடுத்து ஆட்டமிழக்க வாரியர்ஸால் 20 பந்துப் பரிமாற்றங்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது

விறுவிறுப்பான போட்டியில் 7 ஓட்டங்களால் ரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெற்றி பெற இந்த தொடரில் தன் முதலாவது தோல்வியை சந்தித்தது கயானா அமேசான் வாரியர்ஸ்.

பந்து வீச்சில் டேவ்கிச், நரேன், பிராவோ, கூப்பர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக ஹசிம் அம்லா தெரிவானார்.

http://vilaiyattu.com/16226-2/

  • தொடங்கியவர்

கெயில், சங்கா அதிரடி ; மழை குறுக்கிட்டதில் ரசிகர்கள் ஏமாற்றம் (படங்கள் இணைப்பு)

 

கரிபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

247045.jpg

பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் மற்றும் ஜமைக்கா தலவாஸ் அணிகள் மோதின .

இந்த  போட்டியின் ஆரம்பம் முதலே மழை குறுக்கிட்டதன் காரணமாக அணிக்கு தலா 12 ஓவர்கள் என நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ட்ரைடன்ட்ஸ் அணி களத்தடுப்பை தீர்மானித்தது.

247039.jpg

இதன்படி துடுப்பெடுத்தாடிய தலவாஸ் 10 ஓவர்கள் நிறைவில் 116 ஓட்டங்களை பெற்றிருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ய போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.

247041.jpg

இதன்படி இரண்டு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

இதேவேளை துடுப்பாட்டத்தில் கெயில் ஆட்டமிழக்காமல் 5 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அதுமாத்திரமின்றி சங்கக்கார 14 பந்துகளை சந்தித்து ஒரு ஆறு ஓட்டம் 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 25 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

ட்ரைடன்ட்ஸ் அணி சார்பில் மலிக் மற்றும் ராம்போல் தலா ஒரு விக்கட்டினை கைப்பற்றினர்.

247037.jpg

http://www.virakesari.lk/article/8868

  • தொடங்கியவர்

#CPL16_13 கயானா அமேசான் வாரியர்ஸ் 8 விக்கெட்டுகளால் வென்றது. 

 

Guyana Amazon Warriors v Jamaica Tallawahs - Hero Caribbean Premier League - Match 9#CPL16_13 கயானா அமேசான் வாரியர்ஸ் 8 விக்கெட்டுகளால் வென்றது.

நாணய சுழற்சியில் வென்ற கயானா அமேசான் வாரியர்ஸின் தலைவர் மார்ட்டின் கப்தில் முதலில் டரன் சமி தலைமையிலான செயின்ட் லூசியாவை துடுப்பெடுத்தாட பணித்தார்.

துடுப்பெடுத்தாட வந்த செயின்ட் லூசியாவிற்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஜோன்சன் சார்ள்ஸ் (0), சேன் வற்சன் (4) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.

இருப்பினும் 20 பந்துப் பரிமாற்றங்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்றது செயின்ட் லூசியா.
மைக் ஹசி 50 பந்துகளில் 64 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ரயாட் எமிரேட், அடம் சம்பா மற்றும் சொகைல் தன்வீர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

139 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அமேசான் வாரியர்ஸ்க்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் டுவைன் ஸ்மித் (32), மார்டின் கப்தில் (19) ஆகியோர் 7 பந்துப் பரிமாற்றங்களில் 55 ஓட்டங்களை குவித்து நல்ல ஆரம்பத்தை வழங்கினர். அடுத்து வந்த ஜசன் மொகம்மட் (28), கிறிஸ் லீன் (4 ஆறு ஓட்டம் அடங்கலாக 43) ஆகியோர் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.

16 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுகளால் இலகுவாக வென்றது அமேசான் வாரியர்ஸ்

http://vilaiyattu.com/16257-2/

  • தொடங்கியவர்

சீ.பி.எல் போட்டியில் ஸ்மாட்ஸ், பவவேல் மோதல் ; பவவேல் வைத்தியசாலையில் அனுமதி (வீடியோ இணைப்பு)

 

கரிபியன் பிரிமியர்  லீக் தொடரில் இன்றைய டை்ரைடன்ட்ஸ் மற்றும்  போட்ரியோட்ஸ் அணிகளுக்கெதிரான போட்டியில்  இரண்டு வீரர்கள் மோதுண்டு வீழ்ந்ததில் ஒருவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ஏ.பி.டி வில்லியர்ஸ் அடித்த பந்தினை பிடியெடுக்க சென்ற போட்ரியோட்ஸ் அணியின் ஜே.ஜே.ஸ்மாட்ஸ் மற்றும் கிரான் பவவேல் ஆகியோர் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் சுருண்டு மைதானத்தில் வீழ்ந்தனர்.

Untitled-1.jpg

இதன்போது உபாதைக்குள்ளான நிலையில் பவவேல்  உடனடியாக அம்யுலன்ஸ் வாகனத்தின் மூலமாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/8953

  • தொடங்கியவர்

கெயில், ஷக்கிப் அசத்தல் ; ஜமைக்கா டலவாஸ் வெற்றி (வீடியோ இணைப்பு)

 

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரிபியன் பிரிமியர் லீக் தொடரின் இன்றைய  வொரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஜமைக்கா டலவாஸ் அணி 5விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

ஷக்கிப் ஹல் ஹசனின்  நிதானமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இந்த வெற்றியை ஜமைக்கா டலவாஸ் அணி பெற்றுள்ளது.

 

 

முதலில் துடுப்பெடுத்தாடிய வொரியர்ஸ்  அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

வொரியர்ஸ் அணி சார்பில் மொஹமட்  2 ஆறு ஓட்டங்கள் , 1 நான்கு ஓட்டம் அடங்கலாக 46 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.

247371.jpg

பந்துவீச்சில் ஸ்டெயின் மற்றும் வசீம் அகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

129 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா டலவாஸ்  அணி 15.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்று வெற்றியை பெற்றுக்கொண்டது. 

247373__1_.jpg

 இதில் ஷக்கிப் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 54 ஒட்டங்களையும், கெயில் 4 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 45  ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தன்வீர் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஷக்கிப் ஹல் ஹசன் தெரிவு செய்யப்பட்டார்.

247369.jpgCndfRnYVIAALZAL.jpg

http://www.virakesari.lk/article/9047

  • தொடங்கியவர்

#CPL16_17 சங்காவின் அரைச்சதத்துடன் ஜமைக்கா டலவாஹ்ஸ் வெற்றி பெற்றது. 

 

received_858311794300659

#CPL16_17 சங்காவின் அரைச்சதத்துடன் ஜமைக்கா டலவாஹ்ஸ் வெற்றி பெற்றது.

இன்று நடந்த கரீபியன் பிரிமியர் லீக்கின் 17வது போட்டியில் ஜமைக்கா டலவாஹ்ஸ் அணியும் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பற்றியொட்ஸ் அணியும் போட்டியிட்டன.

நாணய சுழற்சியில் வென்ற பறியோட்ஸ் அணித்தலைவர் டு பிளெஸ்ஸிஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா டலவாஹ்ஸ் 20 பந்துப் பரிமாற்றங்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது. டலவாஹ்ஸ் சார்பில் அதிக பட்சமாக குமார் சங்ககாரா 47 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றார்.

இறுதியில் சகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 34 ஓட்டங்களை விளாசினார். அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் கிறிஸ்மர் சன்டோக்கி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பறியோட்ஸ் அணி 15.5 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கெட்களையும் இழந்து 75 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. பற்றியொட்ஸ் சார்பில் அதிக பட்சமாக ஜோனாதன் கார்ட்டர் 23 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும் டெல் ஸ்டெய்ன் (3.5 பந்துப் பரிமாற்றங்கள் வீசி 5 ஓட்டங்கள்), சகிப் அல் ஹசன் (2 பந்துப் பரிமாற்றங்கள் வீசி 2 ஓட்டங்கள்),  அன்ரே ரசல் ஆகியோர் தலா இரு விக்கெட்களை வீழ்த்தினர்.

சங்கா போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

http://vilaiyattu.com/16342-2/

  • தொடங்கியவர்

முன்ரோ விளாசல் ; நைட் ரைடர்ஸ் வெற்றி

 

சீ.பி.எல். தொடரின் நேற்று இரவு இடம்பெற்ற ட்ரைடன்ஸ் மற்றும் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ட்ரைடன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.

 

 

டைரடன்ஸ் அணி சார்பாக மலிக் 47 ஓட்டங்கள், வில்லியர்ஸ் 45 ஓட்டங்கள், பொலார்ட் ஆட்டமிலக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

247469.jpg

நைட் ரைடர்ஸ் அணி சார்பில் சுலைமான் பென் மற்றும் கூப்பர் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினர்.

173 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கினை அடைந்தது.

247489.jpg

நைட் ரைடர்ஸ் அணி சார்பில் முன்ரோ 39 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் 42 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 68 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

247491.jpg

ட்ரைடன்ஸ் அணி சார்பில் பார்னெல் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக நைட் ரைடர்ஸ் அணியின் முன்ரோ தெரிவு செய்யப்பட்டார்.

247493.jpg247495.jpg247497.jpg

http://www.virakesari.lk/article/9066

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சங்கா அதிரடி ; 108 ஓட்டங்களால் வெற்றிபெற்றது டலவாஸ் (வீடியோ இணைப்பு)

 

சீ.பி.எல். தொடரின் இன்று இடம்பெற்ற பட்ரியோட்ஸ் மற்றும் டலவாஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் டலவாஸ் அணி 108 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

 

 

முதலில் துடுப்பெடுத்தாடிய டலவாஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.

247483.jpg

டலவாஸ் அணி சார்பாக சங்கக்கார 2 ஆறு ஓட்டங்கள் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 65 ஓட்டங்களையும் ஷக்கிப் ஹல் ஹசன் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

247479.jpg

பட்ரியோட்ஸ் அணி சார்பில் சென்டொக்கி 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

184 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பட்ரியோட்ஸ்அணி 15.5 ஓவர்களில்  அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்களை பெற்று மோசமான தோல்வியினை பதிவுசெய்தது.

247477.jpg

இதன்மூலம் 108 ஓட்டங்களால் டலவாஸ் அணி வெற்றிபெற்றது.

பட்ரியோட்ஸ் அணி சார்பில் காட்டர் அதிகபட்சமாக 23 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

247475.jpg

ட்ரைடன்ஸ் அணி சார்பில் வில்லியம்ஸ் 3 விக்கட்டுகளை விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக டலவாஸ் அணியின் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.

247473.jpg

http://www.virakesari.lk/article/9068

  • தொடங்கியவர்

சீ.பி.எல். இன்றைய போட்டியில் ட்ரைடன்ஸ் வெற்றி

சீ.பி.எல். தொடரின் இன்று இடம்பெற்ற லூசியா ஸ்வுக்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரைடன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

1188180.jpg

பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பூரன் 4 ஆறு ஓட்டங்கள் 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 81 ஓட்டங்களையும், வில்லியர்ஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

247567.jpg

லூசியா ஸ்வுக்ஸ் அணி சார்பில் ஜெரோம் டெய்லர் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

247565.jpg

174 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லூசியா ஸ்வுக்ஸ் அணி 20 ஓவர்களில்  8 விக்கட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

247563.jpg

லூசியா ஸ்வுக்ஸ் அணி சார்பில் பிளட்சர் அதிகபட்சமாக 20 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி சார்பில் பார்னெல் மற்றும் ராம்போல்  2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக லூசியா ஸ்வுக்ஸ் அணியின் பூரன் தெரிவு செய்யப்பட்டார்.

247561.jpg

http://www.virakesari.lk/article/9102

  • தொடங்கியவர்

CPL16_18 கரீபியன் பிரிமியர் லீக் – கிரான் பொலார்ட்தலைமையிலான பார்படோஸ் அணி 25 ஓட்ட்ங்களால் வென்றது. 

 

cpl#CPL16_18 கரீபியன் பிரிமியர் லீக் – கிரான் பொலார்ட்தலைமையிலான பார்படோஸ் அணி 25 ஓட்ட்ங்களால் வென்றது.

கரீபியன் பிரிமியர் லீக்கின் 18வது போட்டியாக இன்று நடந்த போட்டியில் கிரான் பொலார்ட் தலைமையிலான பார்படோஸ் ரிடென்ட்ஸ் அணியும் டரன் சமி தலைமையிலான செயின்ட் லூசியா அணியும் போட்டியிட்டன.

நாணய சுழற்சியில் வென்ற டரன் சமி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் 20 பந்துப் பரிமாற்றங்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

அதிக பட்சமாக நிக்கோலஸ் பூரான் 81 ஓட்டங்களை வெறுமனே 39 பந்துகளில் விளாசி ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதைவிட ஏபி டீ வில்லியர்ஸும் 22 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்து இருந்தார்.
பந்து வீச்சில் ஜெரோம் டெய்லர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலளித்தாடிய செயின்ட் லூசியா அணி 8 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை மட்டும் பெற்று 25 ஓட்டங்களால் தோற்றது.பந்து வீச்சில் ராம்பால், பார்னெல் தலா இரு விக்கெட்களை வீழ்த்தினர்.
போட்டியின் நாயகனாக நிக்கோலஸ் பூரான் தேர்வானார்.

http://vilaiyattu.com/cpl16_18-கரீபியன்-பிரிமியர்-லீக்/

  • தொடங்கியவர்

ரஸ்ஸல் அதிரடியில் கெயில் தலைமயிலான ஜமைக்கா தலைவாஸ் அணி வெற்றி. 

 

FB_IMG_1468949640067

ரஸ்ஸல் அதிரடியில் கெயில் தலைமயிலான ஜமைக்கா தலைவாஸ் அணி வெற்றி.

கரிபியன் பிரிமியர் லீக்கின் 19 ஆவது போட்டியில் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தலைவாஸ் மற்றும் பிராவோ தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் தலைவாஸ் 19 ஓட்டங்களால் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தலைவாஸ் அணி ஆரம்பத்திலேயே கைலை இழந்து தடுமாறியது. கைலை தொடர்ந்து வால்டோன்னும் ஆட்டமிழக்க 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் ஜோடி சேர்ந்த சங்கக்கார மற்றும் பவெல் சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரையும் கூப்பர் சங்கக்கார(23) மற்றும் பவெல்(44) இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றினார்.

தொடர்ந்து விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்த அணியை ரஸ்ஸல் தனது இறுதி நேர அதிரடியால் மீட்டெடுத்தார்.

இறுதியில் தலைவாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்று கொண்டது. ரஸ்ஸல் 24 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 44 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். பந்து வீச்சில் கூப்பர் 3 விக்கெட்களையும் பிராவோ 2 விக்கெட்களையும் நரேன் 1 விக்கெட்டையும் வீழ்ழ்த்தினர்.

பதிலுக்கு 159 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. எனினும் அம்லா 42 ஓட்டங்கள் பெற்று நம்பிக்கை தந்தார். மற்றைய வீரர்கள் சொதப்ப ஓட்டத்துடன் ஆட்டமிழக்க மறுமுனையில் ராம்டின்(31) சிறப்பாக விளையாடினார். எனினும் ரஸ்ஸல் ராம்டினுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இறுதியில் நைட் ரைடர்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்று 19 ஓட்டங்களால் தோழ்வியடைந்தது.

பந்துவீச்சில் தலைவாஸ் சார்பாக ரஸ்ஸல் 4 விக்கெட்களையும்(4-0-4-23) ஸ்டெய்ன் 2 விக்கெட்களையும்  சாகிப், வாசிம்,வில்லியம்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக சகலத்துறையிலும் ஜொலித்த ரஸ்ஸல் தெரிவு செய்யப்பட்டார்.

இவ்வெற்றியின் மூலம் தலைவாஸ் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது.

FB_IMG_1468949630090FB_IMG_1468949623009FB_IMG_1468949607540 FB_IMG_1468949588251

FB_IMG_1468949588251

http://vilaiyattu.com/16417-2/

  • தொடங்கியவர்

மைதானத்தை அதிர வைத்த வால்டன் ;  டலவாஸ் வெற்றி

 

சீ.பி.எல். தொடரின் இன்று இடம்பெற்ற டலவாஸ் மற்றும் பார்படோஸ் ட்ரைடன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் டலவாஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய டலவாஸ் அணி 8 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழைக்குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

மீண்டும் போட்டி ஆரம்பிக்கப்பட்டு அணிக்கு தலா 18 ஒவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய டலவாஸ் அணி 18 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது.

1189310.jpg

டலவாஸ் அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய வால்டன் 54 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் 9 நான்கு ஒட்டங்கள் அடங்கலாக 97 ஒட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொண்டார். மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார 31 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள் 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 50 ஒட்டங்களை பெற்றார். இறுதி தருணத்தில் களம் நுளைந்த பவெல்  14 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள் ஒரு 4 ஓட்டம் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

1189316.jpg

பார்படோஸ் ட்ரைடன்ஸ்  அணி சார்பில் வைஸ் மற்றும் ராம்போல் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

195 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி  17.4  ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

1189315.jpg

பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி சார்பில் பூரன்  25 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் 1 நான்கு ஒட்டம் அடங்கலாக 51 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

டலவாஸ் அணி சார்பில் ஸ்டெயின் 4 விக்கட்டுகளை  கைப்பற்றினார்.

1189318.jpg

போட்டியின் ஆட்டநாயகனாக டலவாஸ் அணியின் வால்டன்  தெரிவு செய்யப்பட்டார்.

1189317.jpg1189321__1_.jpg1189313.jpg13731497_1417995968215804_25182682308146247699.3.jpg247701.3.jpg13709847_1417990321549702_75064031247709

http://www.virakesari.lk/article/9248

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.