Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொன்ம யாத்திரை - 04 "யாழ்ப்பாணத்தின் குளங்கள் " - வாழும் சொத்துக்கள்

Featured Replies

தொன்ம யாத்திரை - 04
"யாழ்ப்பாணத்தின் குளங்கள் " - வாழும் சொத்துக்கள்


ஸ்டான்லி வீதியால் சென்று ராஜா தியேட்டருக்கு திரும்பும் வழியில் உள்ள பெட்ரொல் ஸ்டேசனுக்கு பின்னுக்குள்ள குளத்தை தூய்மையாக்குதல் -
இதனோடு வடிகாலமைப்பு சார்ந்த நமது புரிதல் பற்றியும் , ஓர் அடையாளமாக யாழ்ப்பாணம் பொது வைத்திய சாலையைச் சுற்றி அமைந்துள்ள வடிகாலமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது அது ஓர் சாக்கடை அகழி போல் வைத்திய சாலையை சூழ்ந்துள்ளது.
பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் -
1 - அதனை மாநகரசபைக்கு அறிவித்து துப்பரவாக்குதல் 
2 - அனைவரும் சேர்ந்து அதனை துப்பரவாக்குதல் 
3 - கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
இந்த திட்டத்தினை எப்படி செய்யலாம் , இதற்கான உங்களின் கருத்துக்கள் எவை என்பதை தெரியப் படுத்தவும்.

யாழ்ப்பாண நகர மத்தியில் மாநகரசபைக்குப் பின்னால் உள்ள சலவைத் தொழிலார்கள் பாவித்த குளம். 02.07.2016 , எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
விதை குழுமம் - அக்கினிச் சிறகுகள் - Jaffna Today

13516227_1025173054203716_36349400933473

 

13521930_1025173197537035_78777954279557

 

13533113_1025173047537050_30850319990023

13528955_1025173020870386_42140729489188

13566975_1025173080870380_19561262806292

 

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

தோழர்களே,
தொன்ம யாத்திரை நான்கிற்கான முன் கள ஆய்வினை இன்றைய தினம் நடத்தியிருந்தோம். நிறையக் கதைகளும் அலையும் புனைவுகளுமாய் நீளும் நவாலியின் புதர் மண்டிய கோயில்களையும் கேணிகளையும் குளங்களையும் ஆவுரஞ்சிக் கற்களையும் மனிதர்களையும் கதைகளையும் சேகரித்து விட்டோம்.
வருகின்ற ஞாயிற்றுக் கிழமை (31.07.2016) காலை 9 மணிக்கு தொன்ம யாத்திரை நவாலி "சங்கரத்தையடியில் "இருந்து ஆரம்பிக்கப்படும். மதியம் ஒரு மணி வரை நிகழ்வு இடம்பெறும்.
மேலதிக விபரங்களுக்கு - 0775889397 ( கிரிஷாந்த் ) , 0777910459 (யதார்த்தன்)

13879189_890363307757095_215627157317334

13658929_890373761089383_898531137463294

13686731_890367014423391_254603779209103

13882658_890364094423683_427102212848481

 

13882516_890363217757104_158318769756904

13686732_890363867757039_267160582534749

 

நவாலி கேணிகள் மந்தைகளுக்கு பெரிதும் உதவுகின்றன.

13680939_1136907579688190_81733825068435

13882184_1136907716354843_65305687725724

ஆவுரஞ்சிக் கல்லும் தண்ணீர்த்தொட்டியும்

ஆவுரஞ்சிக் கல் மாடுகள் தமது உடல் எரிச்சலைப் போக்குவதறகு ஏதுவாக நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே ஆவுரஞ்சிக் கல்லாகும். பொதுவாக கேணிகள் போன்ற நீர்நிலைகளுக்கருகில் இத்தகைய அமைப்புகள் உருவாக்கப்பட்டன. நீர்நிலைகள் இல்லாதபோது இதனுடன் இணைந்த வகையில் தண்ணீர்தொட்டி ஒன்றும் கட்டப்பட்டிருக்கும்.

 

13876375_890281884431904_673810655797137

ஒரு முதியபெண் பெருங்குரலில்
பழங்கதை சொல்லி அழுகிறாள்
தூர்ந்து போய் ஐதீகங்கள் மண்டிக் கிடக்கும்
உன்னுடைய கேணிகளில்
நினைவின் ஆழ அடுக்குகளுள் இழுத்துச் செல்கிற்
பூர்வீகத் தெருக்களில்
பித்தாய் மனம் பற்றி அலைகிறது
எங்கே நீ...
தெய்வங்கள் உள்ளுறைந்த உன்னுடைய முதுமரங்கள்
எங்கே?
நொந்தநிலா முகில்களுள் முகம்புதைத்து விம்முகிறது
விழி திறந்து
இரவுக் கடலில் எரிகிற சூள் விளக்குகளை*
விழாநாட் தெருக்களில்
ஒயாது முழங்குகின்ற பறைகளின் ஒலிகளை
காற்றைப் பிடித்துலுப்பி எழுகிற
மூதாதையரின் பாடல்களை
வாள் முனையில் உயிர்துடிக்க
இழந்துதான் போனோமா?
பா அகிலன்

யாத்திரையில் இரண்டு பிரதான உரைகள் நிகழ்த்தப்பட்டன. முதலாவதாக கலை வரலாற்றுப் பட்டதாரியான தி. சதீஷ்குமார் ‘மரபுரிமை என்றால் என்ன ?’ என்ற விளக்கத்தினை பா.அகிலனின் ‘காலத்தின் விளிம்பு’ என்ற நூலின் கட்டுரை ஒன்றினை அடிப்படையாக வைத்து விளக்கினார். நமது பண்பாட்டின் எஞ்சியுள்ள சொத்துக்களை பாதுகாக்க வேண்டியதன் வரலாற்றுக் கடமை பற்றியதாக அவரது உரை அமைந்தது.
இரண்டாவதாக மகேந்திரன் திருவரங்கன் (இவர் தனது கலாநிதிப் பட்ட ஆய்வினை அமெரிக்காவில் செய்து வருபவர்) ‘அடையாளங்களை பற்றி புரிந்து கொள்ளுதல்’ என்ற அடிப்படையில் நமது அடையாளங்களை பேணும் போது நமது புரிதல் எப்படியானதாக இருக்க வேண்டும், எப்படி பன்மைத்துவமாக அடையாளங்களை பற்றி நாம் பார்ப்பது ?என்பவற்றை அவர் வலியுறுத்தினார்.
பயில்நிலை ஆசிரியரும் செயற்பாட்டாளருமான சி.கிரிஷாந்த் இரண்டு உரைகளின் பின்னும் இந்த நிலைமைகளை மேலதிகமாக புரிந்து கொள்வதற்கான உதாரணங்களுடனான விளக்கங்களினை வழங்கினார். ‘ஆவுரஞ்சிக் கல்லை வைத்துக் கொண்டு நமது ஊரின் இன மாடுகளை தொலைத்து விட்டோம். நாட்டுக் கோழிகளில் சேவல்களில் இருந்து எப்படி ப்ரொயிலர் கோழிகளுக்கு மாறி நிற்கிறோம்’ என்பது போன்ற நடைமுறையில் சமகாலத்தில் நமது மாறிவரும் உலகமய பண்பாட்டில் இழந்து வரும் மதிப்பும் ஆரோக்கியமும் மிக்க எமது கடந்த காலத்தை நாம் நினைவு கூர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

13892183_892868674173225_537466834539599

 

13879467_892880717505354_518843977309619

13872798_892880344172058_850135920163308

13686589_892868717506554_189768262449249

13895229_892868914173201_655881897504884

 

13912409_892879467505479_667244175208397

https://www.facebook.com/ThonmaYathirai/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.