Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண அமைச்சரின் இரட்டை வேடம்!

Featured Replies

வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தில் வடமாகாண அமைச்சர் பா. சத்தியலிங்கம் இரட்டை வேடம் போடுவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் அமைப்பது என முடிவாகியது.

இதற்கான அனுமதி கிடைத்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், வவுனியாவின் எந்த இடத்தில் பொருளாதார மையத்தினை அமைப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட விவசாயிகள் உள்ளிட்ட பலர் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என கோரி வந்த நிலையில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் செயற்பட்டு வந்தார்.

அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை வவுனியா, சிதம்பரபுரம் மக்களை குடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க தனக்கு பூரண விருப்பம் என தெரிவித்திருந்தர்.

அத்துடன், அதற்கான அனுமதி கிடைத்தால் தாம் ஆதரவு வழங்க தயார் எனவும், மத்திய அரசினால் தான் தாண்டிக்குளத்தை தெரிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

எனினும், குறித்த நிகழ்வு முடிந்து 3 நாட்களின் பின் நடந்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையிலான கூட்டத்தில் ஓமந்தை பொருத்தமில்லை எனவும், தாண்டிக்குளம் தான் பொருத்தம் எனவும் அவர், கடுமையாக வாதாடி கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இவ்வாறு இருவேறு கருத்துக்களை கூறுவது இவரது இரட்டை முகத்தை வெளிப்படுத்துவதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேவேளை, ஓமந்தையில் அமைக்க மத்திய அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/crime/01/109943

  • தொடங்கியவர்

அமைச்சர் ஹரிசன் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்! சிவமோகன் எம்.பி
(சிங்கள இனவெறி அமைச்சருக்கு கால் கழுவிடும் தொழிலில் சிவமோகன்)

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு ஓமந்தை காணியை வழங்கினால் அதனை அமைச்சர் ஹரிசன் ஏற்றுக் கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். விவசாய அமைப்பு சார்ந்த பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க வேண்டும் என்பதில் எனக்கு எதிர்ப்பு இல்லை. அதனையே நானும் விரும்பினேன். உள்ளூர் உற்பத்தியாளர் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நான் பங்கெடுக்காதிருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மற்றும் சிறிரெலோ உதயராசா ஆகியோர் பெயர் எடுத்திருப்பார்கள்.

அதன் காரணமாகவே நான் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனால் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க ஓமந்தையில் தெரிவு செய்த இடத்தை அமைச்சர் ஹரிசன் ஏற்றுக் கொள்ள மாட்டார். அவர் ஏற்றுக் கொண்டால் பரவாயில்லை. எனினும், அவர் ஏற்றுக் கொள்ளாமட்டார் என்பதன் காரணமாகவே, தான் தாண்டிக்குளத்தை தெரிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்திற்குரிய குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை தீர்மானிக்கும் பொறுப்பினை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/109939

டக்ளஸ், ஆனந்தசங்கரி வரிசையில் சிங்கள-பௌத்த இனமதவெறியர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யும் ஈனத்தொழிலில் இறங்கியிருக்கிறார் டொக்டர் சிவமோகன்.

இனி இவர் ஸ்டெதெஸ்கோப் க்கு பதிலாக சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் வீசும் எலும்புத் துண்டை மாலையாக போடுவதே இவரது ஈனத்தொழிலுக்கு பொருத்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.