Jump to content

ரமழான் ஸ்பெஷல் சீரக சம்பா மட்டன் பிரியாணி


Recommended Posts

ரமழான் ஸ்பெஷல் சீரக சம்பா மட்டன் பிரியாணி

 

mutton.jpg

தேவையான பொருள்கள்.

  • சீரக சம்பா அரிசி - 4 கப்
  • மட்டன் - அரை கிலோ
  • இஞ்சி - 50 கிராம்
  • பூண்டு - 25 பல்
  • பெரிய வெங்காயம் - 4
  • தக்காளி - 3
  • பச்சை மிளகாய் - 4
  • மிளகாய் தூள் 1  ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - அரை   ஸ்பூன்
  • இஞ்சி, பூண்டு விழுது -   2 ஸ்பூன்
  • தேங்காய் - ஒரு மூடி
  • தயிர் - அரை கப்
  • லெமன் -1
  • புதினா - ஒரு கட்டு
  • மல்லித் தழை - ஒரு கட்டு
  • நெய் - அரை கப்
  • எண்ணெய் - அரை கப்
  • உப்பு      - தேவையான அளவு
  • தாளிக்க:
  • கிராம்பு - 3
  • பட்டை - 3 சிறிய துண்டு
  • ஏலக்காய் - 3
  • பிரிஞ்சி இலை - ஒன்று
  • சோம்பு - ஒரு   ஸ்பூன்

 செய்முறை

 மட்டனில் கால்கப்தயிர், மஞ்சள்தூள்,, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் ஒரு  ஸ்பூன் உப்பு  போட்டு 5விசில்வரும் வரை வேக வைக்கவும்.                 

பெரியவெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைகீறி வைக்கவும்.பூண்டைதனியாக அரைத்துக் கொள்ளவும்.              

குக்கரை அடுப்பில் வைத்து நெய்,  எண்ணெய் இரண்டையும்சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய்சேர்த்துவதக்கவும்.       

வெங்காயம்  பொன்னிறமானதும் பூண்டுவிழுதைப்போட்டுவதக்கவும்.   வெங்காயம் 

2 நிமிடங்கள்வதங்கியதும் மிளகாய்தூள் போட்டுவதக்கவும்.                 

5நிமிடங்கள்வதக்கிஎண்ணெய்பிரிந்ததும்நறுக்கியதக்காளியைச்சேர்க்கவும்.தக்காளிநன்றாகவதங்கிகூழானதும்தயிர்சேர்க்கவும்.                  

தேங்காயுடன் இஞ்சி, சேர்த்து மிக்ஸியில்அரைத்து தண்ணீர்ஊற்றி 4 கப் பால்எடுத்து வைக்கவும்.

தேங்காய்பால், மட்டன்வேக வைத்த தண்ணீர்இரண்டும்சேர்த்து 8  கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, மல்லித்தழைசேர்க்கவும்.          

ஒருகொதிவந்ததும்அரிசியைபோட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளரி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.

பின்பு 10 நிம்டம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளரி விட்டு பரிமாறவும் சுவையான சீரக சம்பா  மட்டன்பிரியாணிதயார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.