Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்கிந்தியத் தீவுகள் எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

கடற்கரை கைபந்து விளையாடிய இந்திய அணி (வீடியோ இணைப்பு)

 

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்றுள்ள இந்தியா அணி ஓய்வு வேளையில்  கடற்கரை ஓரத்தில் கடற்கரை கைபந்து (Beach volleyBall ) விளையாடினார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இந்திய கிரிக்கெட் சபையின் உத்தியோகப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத் தொடரில் இந்திய அணிக்கு விராட் கோலியே தலைவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த தொடர் வருகிற 21 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

20266.jpg

20267.jpg

20268.jpg

20269.jpg

20270.jpg

20271.jpg

20272.jpg

20274.jpg

20275.jpg

20276.jpg

20277.jpg

 

http://www.virakesari.lk/article/8742

  • தொடங்கியவர்

மே.இ.தீவுகளில் ஹாட்ரிக் டெஸ்ட் தொடர் வெற்றியைச் சாதிப்பாரா கோலி?

 

 
அஜித் வடேகர், ராகுல் திராவிட், தோனி, விராட் கோலி. | கோப்புப் படங்கள்.
அஜித் வடேகர், ராகுல் திராவிட், தோனி, விராட் கோலி. | கோப்புப் படங்கள்.

2006-ல் ராகுல் திராவிட், 2011-ல் தோனி ஆகியோர் தலைமையில் மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடர்களை வென்றதையடுத்து கோலி தற்போது வென்று ஹாட்ரிக் வெற்றியை இந்திய அணிகாக சாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுவரை இந்தியா-மே.இ.தீவுகள் இடையே 90 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் மே.இ.தீவுகள் 30-ல் வெல்ல, இந்திய அணி 16-ல் மட்டுமே வென்றுள்ளது. மற்ற போட்டிகள் டிரா ஆகியுள்ளன. இந்தியா பெற்ற 16 டெஸ்ட் வெற்றிகளில் பெரும்பாலும் உள்நாட்டிலும், சரிவு கண்ட மே.இ.தீவுகள் அணிக்கு எதிராகவும் பெற்ற வெற்றிகளே.

இலங்கை, தென் ஆப்பிரிக்காவை டெஸ்ட் தொடர்களில் கோலி தலைமையில் இந்திய அணி வீழ்த்தியதால் தற்போது கோலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்ததும், இந்த அணியை பற்றி இவரும் ரவி சாஸ்திரியும் அளித்த ‘பில்ட்-அப்’ ஆகியவையும் சேர்ந்து எதிர்பார்ப்புகளைக் கூட்டியுள்ளது.

முரளி விஜய் உத்திரீதியாக மிகச்சிறந்த தொடக்க வீரராக விளையாடி வருகிறார், கவாஸ்கர் வாயால் சிறந்த உத்தி பட்டம் பெற்ற ‘பிரம்ம ரிஷி’ தற்போது முரளி விஜய்.

விராட் கோலி தனது சிறந்த ஃபார்மின் உச்சத்தில் இருக்கிறார். அவர் டி20, ஒருநாள், டெஸ்ட் என்று வித்தியாசம் பார்க்காமல் தனது பாணி ஆட்டத்தை ஆடினால் நல்லது. இல்லையெனில் இன்னொரு ஜேம்ஸ் ஆண்டர்சன் நிகழ்வு நடந்து விடும்.

அஜிங்கிய ரஹானே சிறந்த பேட்ஸ்மென் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, லார்ட்ஸில் கிரீன் டாப் பிட்சில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்டோருக்கு எதிராக முதல் நாள் பிட்சில், விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணிக்காக, அடித்த சதம் உலகத்தரம் வாய்ந்தது. இதனால் அந்த டெஸ்ட் போட்டியில் நாம் வென்றோம். நன்றி: இசாந்த் சர்மாவின் பவுன்சர்கள் வீழ்த்திய விக்கெட்டுகள்.

ஸ்பின் பிட்ச் போட்டால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெறவே வாய்ப்பு, ஆனால் அதே வேளையில் மே.இ.தீவுகளில் சுனில் நரைன் சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் மே.இ.தீவுகளில் தற்போது வேகப்பந்து வீச்சை விட ஸ்பின் நன்றாக உள்ளது.

வேகபந்து வீச்சுக்குச் சாதக பிட்ச் போட்டாலும் இந்தியாவில் மொகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர், மேலும் புவனேஷ் குமார், மும்பை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் உள்ளனர்.

எனவே மே.இ.தீவுகளுக்குத்தான் நெருக்கடி அதிகம். மே.இ.தீவுகள் இந்தத் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் டிராவுடன் எஸ்கேப் ஆனால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும்.

மே.இ.தீவுகளில் இந்தியா: ஒரு பார்வை

1948-ம் ஆண்டு இந்தியாவும் மே.இ.தீவுகளும் முதல் டெஸ்ட் போட்டியில் மோதி்ன. 1970-71-ல் இந்தியா முதன் முதலில் மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடரை வென்றது, அப்போதைய வலுவான அணிக்கு எதிராக இதனைச் சாதித்த இந்திய கேப்டன் அஜித் வடேகர். இந்த தொடரில் அறிமுகமான சுனில் கவாஸ்கர் இரு இன்னிங்ஸ் சதங்கள் சாதனையுடன் ஒரே தொடரில் 774 ரன்கள் விளாசி கிரிக்கெட் உலகில் பரவலாக பேசவைக்கப்பட்டார். திலிப் சர்தேசாயும் இந்தத் தொடரில் 612 ரன்களை எடுத்தார். பொதுவாக கவாஸ்கரை குறிப்பிடுபவர்கள் இந்தத் தொடரில் திலிப் சர்தேசாயின் சாதனைகளை குறிப்பிட மறந்து விடுவது வழக்கம்.

இதற்கு முன்னதாக 1952-53-ல் 1-0 என்று இந்திய அணி தோற்றது, பிறகு 1961-62 தொடரில் 0-5 என்று உதை வாங்கியது. 1975-76 டெஸ்ட் தொடரில் பிஷன் பேடி தலைமையில் போர்ட் ஆஃப் ஸ்பெயின் டெஸ்டில் 4-வது இன்னிங்சில் 406 ரன்களை எடுத்து இந்தியா மாரத்தன் வெற்றியை பெற்றது, கவாஸ்கர், விஸ்வநாத் இருவரும் அபாரமான சதம் எடுத்தனர், ஆனால் தொடரை இந்தியா 1-2 என்று இழந்தது. இந்த சாதனை டெஸ்ட் விரட்டல் 2013-ம் ஆண்டு மே.இ.தீவுகளாலேயே முறியடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 418 ரன்கள் இலக்கை விரட்டி மே.இ.தீவுகள் வென்றது. இப்போது இந்தியாவின் அந்த விரட்டல் 3-வது இடத்தில் உள்ளது.

1982-83-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மே.இ.தீவுகளுக்குச் சென்றபோது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்று தோற்றாலும் கபிலின் பந்து வீச்சும் பேட்டிங்கும் உலகிற்கு அறிவிப்பதாக அமைந்தது இந்தத்தொடரில் நடைபெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில் மே.இ.தீவுகளை இந்தியா வீழ்த்தியதே பிற்பாடு 1983 உலகக்கோப்பை வெற்றிக்கான முன்னோடியாக அமைந்தது.

இன்று விவரம் புரியாமல் சுனில் கவாஸ்கரை கேலி பேசுபவர்கள் இந்தப் போட்டியை பார்த்திருந்தால் கருத்தை மாற்றிக் கொள்வார்கள், கவாஸ்கர் 90 ரன்களை எடுக்க கபில்தேவ் 36 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 72 ரன்களை விளாச 47 ஓவர்களில் இந்தியா 282 ரன்கள் விளாசியது. லாய்ட் கேப்டன்சியில் எந்த ஒரு அணியும் ஓவருக்கு 6 ரன்கள் விகிதத்தில் குவித்ததில்லை. இந்த ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் 255 ரன்களை எடுத்து தோல்வி தழுவியது. மொஹீந்தர் அமர்நாத் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிறந்த பேட்ஸ்மென் என்ற பெயர் பெற்றார். இவர் இதற்கு முந்தைய பாகிஸ்தான் தொடரில் 583 ரன்களையும் இந்தத் தொடரில் 598 ரன்களையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு 1988-89 தொடரில் திலிப் வெங்சர்க்கார் தலைமையில் இந்திய அணி இங்கு 0-3 என்று உதை வாங்கியது, இதிலும் கபில், ரவிசாஸ்திரி, வெங்சர்க்கார் சோபித்தனர்.

1996-97 சச்சின் தலைமையிலான தொடரில் இந்தியா 1-0 என்று தோல்வி தழுவியது. ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்கான 119 ரன்களை எடுக்க முடியாமல் பிஷப், ஆம்ப்ரோஸ், பிராங்க்ளின் ரோஸ் பந்து வீச்சில் இந்திய அணி 81 ரன்களுக்குச் சுருண்டது சச்சின் மனதில் தீராத வேதனையை அளித்தது.

2002-ல் சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய அணி மீண்டும் 1-2 என்று தோல்வியே தழுவியது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரிடம் சச்சின் பவுல்டு ஆகிக் கொண்டேயிருந்தார்.

பிறகு 2006-ல்தான் ராகுல் திராவிட் தலைமையில் மே.இ.தீவுகளில் இந்தியா 1-0 என்று டெஸ்ட் தொடரை வென்றது, இதன் பிறகு தோனி தலைமையில் டெஸ்ட் தொடரை வென்றோம்.

எனவே இம்முறை கோலி தலைமையில் தொடரை வென்றால் ஹேட்ரிக் வெற்றியாகும். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடுவதில்லை எனவே அவருக்குப் பதிலாக ராகுல் மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட வேண்டும்.

அணி இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்: விஜய், தவண், புஜாரா, கோலி, ரஹானே, ராகுல், சஹா, ஜடேஜா, அஸ்வின், இசாந்த், மொகமது ஷமி

http://tamil.thehindu.com/sports/மேஇதீவுகளில்-ஹாட்ரிக்-டெஸ்ட்-தொடர்-வெற்றியைச்-சாதிப்பாரா-கோலி/article8824276.ece?homepage=true&ref=tnwn

  • தொடங்கியவர்

பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி, ரஹானே ஏமாற்றம்: இந்தியா 258/6

 
விராட் கோலி ஆட்டமிழந்து செல்லும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.
விராட் கோலி ஆட்டமிழந்து செல்லும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.

செயிண்ட் கிட்ஸில் நேற்று தொடங்கிய 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி ஏமாற்றமளித்தார்.

முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. அமித் மிஸ்ரா 18 ரன்களுடனும், ரோஹித் சர்மா 54 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

தொடக்க வீரர்களான தவண், லோகேஷ் ராகுல் 27 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 93 ரன்களைச் சேர்த்தனர். தவண் 7 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் அவுட் ஆனார். ராகுலும் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் அவுட் ஆனார்.

விராட் கோலி மந்தமாக இன்னிங்ஸை தொடங்கினார், ஆனால் அதிலிருந்து மேலே கட்டமைக்க முடியவில்லை. 40 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் அவர் 14 ரன்களை மட்டுமே எடுத்து இடது கை ஸ்பின்னர் ஜோமெல் வாரிகன் பந்தில் விக்கெட் கீப்பர் டவ்ரிச்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அஜிங்கிய ரஹானே 5 ரன்களில் இதே வாரிக்கன் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறி ஏமாற்றமளித்தார்.

செடேஸ்வர் புஜாரா சரளமாக ஆடவில்லை 102 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் அவுட் ஆனார். ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா 6-வது விக்கெட்டுக்காக 47 ரன்கள் சேர்த்தனர். விருத்திமான் சஹா 22 பந்துகளில் வெளியேற, ரோஹித் சர்மா 109 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்தும், அமித் மிஸ்ரா 18 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/பயிற்சி-ஆட்டத்தில்-விராட்-கோலி-ரஹானே-ஏமாற்றம்-இந்தியா-2586/article8831260.ece?homepage=true

  • தொடங்கியவர்
முடிவை ஏற்கத் தான் வேண்டும்: ராம்டின்
 
 

article_1468153397-Ramdin.jpgஇந்தியாவுக்கெதிராக இடம்பெறவுள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் டினேஷ் ராம்டின், அந்த முடிவு குறித்து எதுவும் செய்ய முடியாது எனவும், அந்த முடிவை ஏற்கத் தான் வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இத்தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம், இதுவரை அறிவிக்கப்படாத போதிலும், அக்குழாமிலிருந்து தான் நீக்கப்படுவதாக. தேர்வுக்குழுவின் புதிய தலைவரான கோர்ட்னி பிறெளண் தெரிவித்ததாக, ராம்டின் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கருத்துத் தெரிவித்துள்ள ராம்டின், கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக, எந்தவித அழுத்தத்தையும் தான் எதிர்கொண்டிருக்கவில்லை எனவும், எனவே சிறிது ஆச்சரியமடைந்ததாகவும் தெரிவித்தார். எனினும், உயர் அதிகாரத்தில் இருப்போரின் முடிவுகளை ஏற்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், கிரிக்கெட்டை தான் உரிமைப்படுத்தி இருக்கவில்லை எனவும், பிராந்திய நான்கு-நாள் போட்டிகளில் பங்குபற்றி, மீண்டும் சர்வதேச அணியில் இடம்பெற முயல வேண்டுமெனத் தெரிவித்தார்.

‘கடந்த ஆண்டுகளில் சிறப்பாகச் செயற்பட்ட சிரேஷ்ட வீரராக நான் கணிக்கப்படவில்லை போலிருக்கிறது. ஆனால், இதேபோன்று முன்னமும் நடத்துள்ளது. அதிலிருந்து மீண்டு, நான் சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/176687/ம-ட-வ-ஏற-கத-த-ன-வ-ண-ட-ம-ர-ம-ட-ன-#sthash.hsyfuZPc.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பயிற்சி ஆட்டத்தில் ஹோப் சதம்; மிஸ்ரா 4 விக்கெட்டுகள்: ஆட்டம் டிரா 

 
அமித் மிஸ்ரா. | படம்: ஏ.எஃப்.பி.
அமித் மிஸ்ரா. | படம்: ஏ.எஃப்.பி.

செயிண்ட் கிட்ஸில் நடைபெற்ற இந்திய-மே.இ.தீவுகள் வாரியத் தலைவர் அணிகளுக்கு இடையேயான 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்திய அணி முதல் நாள் ஆட்ட ரன் எண்ணிக்கையான 258/6 என்பதில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. தொடர்ந்து ஆடிய மே.இ,தீவுகள் வாரியத் தலைவர் அணியில் ஹோப் 118 ரன்களையும், சந்திரிகா 69 ரன்களையும் கடைசியில் வாரிகன் 50 ரன்களையும் எடுக்க அந்த அணி 281/7 என்று இந்திய அணியைக் காட்டிலும் முன்னிலை பெற்றது, 87 ஓவர்கள் முடிவில் ஆட்டம் டிரா ஆனது. இந்தியத் தரப்பில் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அமித் மிஸ்ரா நடுக்கள வீரர்களை வீழ்த்தினார், 69 ரன்கள் எடுத்த சந்திரிகா ஸ்டம்ப்டு ஆனார். அடுத்த பந்தில் ஜெர்மைன் பிளாக்வுட் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 129/1 என்று இருந்த ஸ்கோர் 177/7 என்று ஆனது. சதம் அடித்த ஹோப், ஸ்பின்னர் வாரிகன் கூட்டணி 104 ரன்களைச் சேர்க்க ஆட்டம் டிரா ஆனது.

புவனேஷ் குமார், மொகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் இணைந்து 60 ஓவர்களை வீசி 205 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர். அமித் மிஸ்ரா 27 ஓவர்களில் 5 மெய்டன்களுடன் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதே மைதானத்தில் இதே அணியுடன் ஜூலை 14-ம் தேதி முதல் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது.

http://tamil.thehindu.com/sports/பயிற்சி-ஆட்டத்தில்-ஹோப்-சதம்-மிஸ்ரா-4-விக்கெட்டுகள்-ஆட்டம்-டிரா/article8835096.ece?homepage=true

  • தொடங்கியவர்
மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு
 
 

article_1468320473-TamiindiadwqisSquad.jமேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் கொண்ட குழாமாகவே இக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கடந்த வாரம் டினேஷ் ராம்டீன் டுவீட் செய்திருந்தது போன்று, முன்னாள் அணித்தலைவரும் விக்கெட்காப்பாளருமான அவர் இடம்பெற்றிருக்கவில்லை. இது தவிர, கடந்த டிசம்பரில், அவுஸ்திரேலியாவுக்கெதிராக டெஸ்ட் தொடரில் மோசமாகச் செயற்பட்டிருந்த அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் கேமர் ரோச்சும் இடம்பெறவில்லை, தவிர, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு அறிவித்த ஜெரோம் டெய்லரும் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.

ராம்டீனுக்கு பதிலாக ஷேன் டௌ ரிச், விக்கெட்காப்பாளராக குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, றொஸ்டன் சேஸ் எனும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர், முதற்தடவையாக மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, துடுப்பாட்ட வீரர் லியோன் ஜோன்ஸன் மீண்டும் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஷனோன் கப்ரியல் மட்டுமே வேகப்பந்துவீச்சாளராக குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர்களாக கார்லோஸ் பிராத்வெயிட், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளதோடு, சுழற்பந்துவீச்சாளராக தேவேந்திர பிஷூ மட்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 21ஆம் திகதி அன்டிகுவாவில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குழாமில் இடம்பெறாமை குறித்து எதிர்ப்பை வெளிப்படுத்திய ராம்டீனுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.  

குழாம்: ஜேஸன் ஹோல்டர், கிரேய்க் பிராத் வெயிட், தேவேந்திர பிஷூ, ஜெர்மைன் பிளக்வூட், கார்லோஸ் பிராத்வெயிட், டரன் பிராவோ, ராஜேந்திர சந்திரிகா, றொஸ்டன் சேஸ், ஷேன் டௌரிச், ஷனோன் கப்ரியல், லியோன் ஜோன்ஸன், மார்லன் சாமுவேல்ஸ்‌

- See more at: http://www.tamilmirror.lk/176853#sthash.WuyF48TW.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சோர்வூட்டக்கூடிய அளவுக்கு பொறுமை அவசியம்: மே.இ.தீவுகளில் பந்துவீசுவது பற்றி அஸ்வின்

 

 
அஸ்வின், ஜடேஜா. | படம்: பிடிஐ.
அஸ்வின், ஜடேஜா. | படம்: பிடிஐ.

மந்தமான மே.இ.தீவுகள் பிட்சில் சோர்வூட்டக்கூடிய அளவுக்கு பொறுமை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அதனால் தன் பந்து வீச்சும் சோர்வூட்டக்கூடிய அளவுக்கு நிதானப்போக்கையே கடைபிடிக்கும் என்று கூறுகிறார் அஸ்வின்.

பிசிசிஐ.டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடுமையான உஷ்ணம், மந்தமான பிட்ச்கள்... நிச்சயம் மே.இ.தீவுகள் ஒரு சவால்தான். வார்ம் அப் மேட்சில் பார்த்த போது பிட்சில் பந்துகள் ஆடி அசைந்து நிதானமாக வருவதைத்தான் பார்த்தேன். எனவே நான் சோர்வூட்டக்கூடிய அளவுக்கு பொறுமையுடன் நாள் முழுதும் வீச வேண்டும்.

பிட்ச் ஸ்பின் எடுக்க ஆரம்பித்தால் நாங்கள் எங்கள் இயல்பு ஆக்ரோஷத்துக்கு திரும்ப முடியும் அதுவரையில் பொறுமையே கை கொடுக்கும், இதனால் சோர்வு ஏற்பட்டாலும் கவலையில்லை. மேலும் அது தவிர்க்க முடியாத ஒன்று.

அன்று அமித் மிஸ்ரா 15-16 ஓவர்கள் வீசி விக்கெட்டுகள் விழவில்லை, ஆனால் ஒரு பிரேக் த்ரூ கிடைத்தது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். எனவே முதல் 2 நாள் அல்லது 3 நாட்களுக்குக் கூட ஸ்பின்னர்களுக்கு இங்கு வாய்ப்பிருக்காது போல்தான் தெரிகிறது. ஆகவே சோர்வூட்டக்கூடிய வகையில் லைன் மற்றும் லெந்த்தை துல்லியமாகக் கடைபிடித்து பிளைட் ஆகியவற்றைச் செய்து பேட்ஸ்மென் தவறு செய்யும் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியதுதான்.

வலையில் அனில் கும்ப்ளே பந்து வீசுவதை பார்த்தேன் அது மிக்க பயனளித்தது. அவர் அணி வீரர்களிடையே ஒரு உன்னிப்பான கவனத்தை உருவாக்கியுள்ளார். வலைப்பயிற்சிகளில் மிகச்சிறந்த கட்டுக்கோப்பு உள்ளது. சரியான நேரத்தில் வலைப்பயிற்சிக்கு பேட்ஸ்மென்கள் வருகின்றனர். இது சில காலங்களாக நடைபெறாத ஒன்று.

அனில் கும்ப்ளே ஏற்கெனவே வலையில் பந்துவீசத் தொடங்கி விட்டார், நான் குறிப்புகள் எடுத்து வருகிறேன். இதுவரை எனக்கு அவர் பெரிய அளவில் தன்னம்பிக்கையையும் பொறுப்பையும் அளித்துள்ளார். அதாவது நான் என் திறமைகளை சூழ்நிலைகளைப் பார்க்காமல், தயங்காமல் வெளிப்படுத்துவதற்கான ஊக்கமாகும் இது, இத்தகைய தன்மை அவரிடத்தில் நாம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. நாங்கள் இருவரும் நிறைய பேசினோம், என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

பேட்டிங்கில் பங்களிப்பு செய்வதற்கும் கவனமாக பயிற்சி செய்து வருகிறேன். பேட்டிங்கில் வெறும் ரன்கள் எடுப்பது மட்டுமல்ல, நல்ல திண்மையான பேட்ஸ்மெனாக பங்களிப்பு செய்வது பற்றியும் பயிற்சியாளரிடம் சில இலக்குகள் வைத்துள்ளேன்.

முதல் கட்டமாக விக்கெட்டை தூக்கி எறிந்து விடக்கூடாது, பிறகு ரன்குவிப்பில் ஈடுபடுதல் என்ற நடைமுறை சார்ந்ததாகும் அது. சஞ்சய் பாங்கர் என்னுடன் நாள் முழுதும் பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

http://tamil.thehindu.com/sports/சோர்வூட்டக்கூடிய-அளவுக்கு-பொறுமை-அவசியம்-மேஇதீவுகளில்-பந்துவீசுவது-பற்றி-அஸ்வின்/article8849210.ece

  • தொடங்கியவர்

மே.இ.தீவுகளில் ஸ்பின்னர்களுக்கு பெரும் பங்கு உள்ளது: தோனி கருத்து

 

 
Dhoni_2939521f_2939613f.jpg
 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்குவதாகக் கூறிய தோனி, ஸ்பின்னர்களுக்கு பெரும்பங்கு இந்தத் தொடரில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றிற்கிடையே செய்தியாளர்களிடம் தோனி பேசியதாவது:

மே.இ.தீவுகளில் பிட்ச்கள் மெதுவாகவே அமையும். ஆனாலும் நிச்சயமாகக் கூறிவிட முடியாது. ஸ்பின்னர்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

அணியில் போட்டிகள் இருக்கும் போது அது சிறப்பானதுதான். 8-10 பவுலர்கள் அணியில் தேர்வு செய்யப்படுவதற்காக தயார் நிலையில் காத்திருப்பது அணிக்கு நல்லது. ஓராண்டுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் சில பவுலர்கள் காயமடைந்ததை நான் நினைவில் கொள்ள வேண்டும்.

அனைத்துப் பகுதிகளையும் கவர் செய்யும் பவுலர்கள் நம்மிடையே உள்ளனர். வேகப்பந்து வீச்சு என்றால் அதற்கும் வீரர்கள் உள்ளனர், ஸ்விங் பந்து வீச்சுக்கும் ஆட்கள் உள்ளனர். ஆனால் காயம் குறித்த மேலாண்மையில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆனால் பேட்டிங்கில் நல்ல தரம் உள்ளது, நிலையான 6 வீரர்கள் பேட்டிங்கில் உள்ளனர். ஓரிரண்டு புதுமுகங்கள் இருக்கலாம் ஆனால் அணிக்கலவை அப்படித்தான் இருக்க வேண்டும்.

நான் டெஸ்ட் கிரிக்கெட்டை இழந்துள்ளேன், ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. என்னைப்பொறுத்தவரை இது என் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட வழிவகை செய்துள்ளது.

கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்கும் இந்தக் காலக்கட்டம் என்னுடைய பயிற்சிக்கு உதவுகிறது. நான் உடற்பயிற்சி நிலையத்துக்கு அடிக்கடி செல்ல முடிகிறது. நிறைய ஓடுகிறேன், என் உடலை நன்றாக பராமரித்து வருகிறேன். 30 வயதுக்குப் பிறகே நாம் நம் உடல் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கடந்த 10 ஆண்டுகளில் கூடுதலான பயணங்களின் மூலம் என் உடலை துஷ்பிரயோகம் செய்துள்ளேன். குறிப்பாக சாப்பிடும் பழக்க முறை, நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது பிரச்சினைகளை உருவாக்குகிறது. ஆகவே நான் என் உடல் ஆரோக்கியத்தை பேணி காத்து வருகிறேன்.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/மேஇதீவுகளில்-ஸ்பின்னர்களுக்கு-பெரும்-பங்கு-உள்ளது-தோனி-கருத்து/article8876735.ece?homepage=true

  • தொடங்கியவர்

விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் முதல் டெஸ்டில் இன்று மோதல்

 
 
விவ் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் பயிற்சியின் போது ஆலோசனை நடத்திய இந்திய அணி வீரர்கள். படம்: பிடிஐ
விவ் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் பயிற்சியின் போது ஆலோசனை நடத்திய இந்திய அணி வீரர்கள். படம்: பிடிஐ

இந்தியா - மேற்கிந்தியத் தீவு களுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

4 டெஸ்ட் போட்டிகள் இந்த கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. கும்ப்ளே - கோலி கூட்டணியில் இந்திய அணி சந்திக்கும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும், ஷிகர் தவணுமே களமிறங்கக்கூடும். கே.எல்.ராகுல் 3-வது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. பயிற்சி ஆட்டத்தில் 2 அரை சதம் அடித்த அவர் தற்போது நல்ல பார்மில் உள்ளார். அவர் இடம்பெறும் பட்சத்தில் புஜாரா இடம் பெறுவது சந்தேகம்தான்.

மிடில் ஆர்டரில் கோலி, ரஹானே, விருத்திமான் சகா, ரோஹித் சர்மா உள்ளனர். 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் பட்சத்தில் அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த முடிவை கோலி எடுக்கும் பட்சத்தில் ரோஹித் சர்மா அமரவைக்கப்படுவார்.

வேகப்பந்து வீச்சு

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஆடுகளங்கள் 3-வது நாளில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா முத்திரை பதிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் முகமது ‌ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர். இதில் இருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். இதனால் வேகப் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வது கேப்டனுக்கு சவாலாக இருக்கும்.

அனுபவம் குறைவு

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் டேரன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் மட்டுமே அனுபவ வீரர்களாக உள்ளனர். இருவரும் இணைந்து 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர். இதனால் இவர்களை அணி பெரிதும் நம்பி இருக்கிறது.

இளம் வீரர்களான பிளாக்வுட், ராஜேந்திர சந்திகா ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக் கூடும். பயிற்சி ஆட்டத்தில் பிளாக்வுட் இந்திய சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார்.

தொடர் தோல்விகள்

வேகப்பந்து வீச்சாளர்களாக கபேரியல், புதுமுக வீரர் மிகுல் கம்மின்ஸ், கார்லோஸ் பிராத் வெயிட், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் தேவேந்திர பிஷூ இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 0-2 என்ற கணக்கில் இழந்தது. மேலும் கடைசியாக விளையாடிய 8 தொடர்களிலும் படுதோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கக்கூடும்.

ஹாட்ரிக் முனைப்பு

மேற்கிந்தியத் தீவுகளில் அந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது முறையாக தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. 2007-ல் ராகுல் டிராவிட் தலைமையிலும், 2011-ல் தோனி தலைமையிலும் இந்திய அணி தொடரை வென்றிருந்தது.

மேலும் கோலி கேப்டனாக முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகளில் விளையாட உள்ளார். அவரது தலைமையில் இலங்கை, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியிருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் தொடரையும் வென்றால் ஹாட்ரிக் வெற்றியாக அமையும்.

மந்தமான ஆடுகளம்

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஆடுகளங்கள் மந்தமாக செயல் படக் கூடியவை. இதுபோன்ற ஆடுகளங்களில் பேட்ஸ்மேன் களும் சரி, பந்து வீச்சாளர்களும் சரி மிக பொறுமையுடன் செயல்பட்டால் மட்டுமே சோபிக்க முடியும். இதனால் இந்த தொடர் இந்திய அணி தனது திறனை மேலும் வலுப்படுத்த உதவும்.

மேற்கிந்தியத் தீவுகள் தொடரை தொடர்ந்து இந்திய அணி தனது சொந்த மண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் கரீபியன் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அணி விவரம்:

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவண், புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, விருத்திமான் சகா, கே.எல்.ராகுல், ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ‌ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ‌ஷர்துல் தாக்கூர்.

மேற்கிந்தியத் தீவுகள்:

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிராத்வெயிட், மார்லன் சாமுவேல்ஸ், டேரன் பிராவோ, லியான் ஜான்சன், பிளாக்வுட், கார்லோஸ் பிராத்வெயிட், ராஜேந்திர சந்திரிகா, ரோஸ்டன் சேஸ், டவ்ரிச், கம்மின்ஸ், கேப்ரியல், தேவேந்திர பிஷூ.

நேரம்: இரவு 7.30

ஒளிபரப்பு: டென் 3

http://tamil.thehindu.com/sports/விவியன்-ரிச்சர்ட்ஸ்-மைதானத்தில்-இந்தியா-மேற்கிந்தியத்-தீவுகள்-முதல்-டெஸ்டில்-இன்று-மோதல்/article8879205.ece

  • தொடங்கியவர்

ஜடேஜா இல்லை; 3 வேகப்பந்து, 2 ஸ்பின்: இந்தியா பேட்டிங்

 
 
இந்திய அணி. | படம்: பிடிஐ.
இந்திய அணி. | படம்: பிடிஐ.

ஆன்டிகுவாவில் முதல் டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற கோலி முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இந்திய அணியில் ஜடேஜா இல்லை, இசாந்த் சர்மா, மொகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களும் அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகிய 2 ஸ்பின்னர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி வருமாறு: விஜய், தவண், புஜாரா, கோலி, ரஹானே, சஹா, அஸ்வின், மிஸ்ரா, இசாந்த்சர்மா, ஷமி, உமேஷ் யாதவ்.

மே.இ.தீவுகள் அணி: கே.சி.பிராத்வெய்ட், சந்திரிக்கா, டேரன் பிராவோ, மர்லன் சாமுவேல்ஸ், பிளாக்வுட், சேஸ், டவ்ரிச் (வி.கீ.), சிஆர் பிராத்வெய்ட், ஜேசன் ஹோலடர் (கேப்டன்), தேவேந்திர பிஷூ, ஷனான் கப்ரியேல்.

இந்தியா 11 ரன்கள் எடுத்துள்ளது, விஜய் 6, தவண் 5. இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/ஜடேஜா-இல்லை-3-வேகப்பந்து-2-ஸ்பின்-இந்தியா-பேட்டிங்/article8882070.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்தியா 178/ 2

தவான் 84

கொஹ்லி 64

  • தொடங்கியவர்

மே.இந்திய தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் கேப்டன் விராட் கோலி

 

நார்த் சவுண்ட்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் விளாசி அசத்தியுள்ளார். 134 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்தார்.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=232942

  • தொடங்கியவர்

தொடரும் விராட் கோலியின் சதங்கள்: இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள்

 
விராட் கோலி | படம்: ராய்ட்டர்ஸ்
விராட் கோலி | படம்: ராய்ட்டர்ஸ்

ரிச்சர்ட்ஸ் பெயர் கொண்ட மைதானத்தில் அவருடன் ஒப்பிடப்படப்பட்டு வரும் விராட் கோலி டெஸ்ட் முதல்நாளில் சதம் அடித்தார். இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.

கோலியின் 12-வது டெஸ்ட் சதமாகும் இது.

விராட் கோலி 197 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார், மறு முனையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 22 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். சஹாவுக்கு முன்பாக அஸ்வின் களமிறக்கப்பட்டுள்ளது தீர்மானமான முடிவே தவிர சஹாவைப் பாதுகாக்கும் இரவுக்காவலனாக அஸ்வின் இறங்கவில்லை என்பது தெளிவு.

பிஷூவுக்கு ‘அளித்த’ விக்கெட்டுகள்:

மே.இ.தீவுகள் அணியின் லெக் ஸ்பின்னர் பிஷூவுக்கு 3 விக்கெட்டுகள் கொடுக்கப்பட்டது என்றே கூற வேண்டும். அதுவும் புஜாராவும், ரஹானேவும் ஆட்டமிழந்தது மிக மோசமான பந்துகளில். குறிப்பாக ரஹானே ஆட்டமிழந்தது துரதிர்ஷ்டமே. பிஷூ தன் காலின் கீழேயே ஒரு பந்தைப் பிட்ச் செய்ய அது ஆஃப் ஸ்டம்புக்கு மிக வெளியே சென்றது. ஏற்கெனவே புல்ஷாட்டுக்கு தயாராகி விட்ட ரஹானே பந்தை மந்தமாக ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டார் இதனால் நேராக மிட்விக்கெட்டில் மே.இ.தீவுகளே எதிர்பாராத வகையில் கேட்சிங் பிராக்டீசை விடவும் மிக எளிதான கேட்ச் ஆனது.

ரஹானே அவுட்டின் பின்னணியில் ஒரு முக்கியமான நுட்பம் உள்ளது. பிஷூ வீசிய அந்த ஓவரில் விராட் கோலி தனது சதத்திற்கு அருகில் இருந்தார், இந்நிலையில் தனது டிரேட்மார்க் கவர் டிரைவ் ஒன்றை கோலி அபாரமாக அடிக்க, அது கவர் திசை பீல்டரால் பாய்ந்து தடுக்கப்பட்டது, ஆனால் பந்து அவரத் கையிலிருந்து சிறிது தூரம் சென்றதால் கோலி ஒரு ரன் எடுத்தார். பேட்டிங் முனைக்கு வந்த ரஹானே, கோலிக்கு ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்க வேண்டிய மட்டமான பந்தை சிங்கிளுக்காக ஆடப்போக துரதிர்ஷ்டவசமாக கேட்ச் ஆனது. ரஹானே 4 அற்புதமான பவுண்டரிகளுடன் 22 ரன்களை எடுத்து அச்சுறுத்தும் இன்னிங்ஸிற்காக அச்சாரம் போட்ட நிலையில் அவரது விக்கெட் மே.இ.தீவுகளுக்கு அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். கிரிக்கெட்டில் சில வேளைகளில் இப்படி நடப்பதுண்டு. அந்த முதல் பந்தில் கோலி அடித்த கவர் டிரைவ் வழக்கம் போல் பவுண்டரி சென்றிருந்தால் ரஹானே பேட்டிங் முனைக்கு வந்திருக்க மாட்டார், விக்கெட்டும் விழுந்திருக்காது.

கப்ரியேலின் தொடக்க வேகம்:

புதிய பந்தில் கப்ரியேல் அபாரமாக வீசினார், அவரது எகிறு பந்துகள் ஷிகர் தவணை பாடாய்ப்படுத்தியது, பின்னால் செல்வதா முன்னால் காலைப் போட்டு ஆடுவதா என்பதில் தவணுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டது. இதனால் முன்னால் வந்து ஆட வேண்டிய பந்துகளையும் ஷார்ட் பிட்ச் பயத்தில் பின்னாலிலிருந்தே ஆட இன்சைடு எட்ஜுகளும் எடுத்தது. கப்ரியேலின் சில எகிறு பந்துகள் தவணின் மட்டையில் பட்டு பீல்டர்கள் இல்லாத பகுதியிலோ அல்லது பீல்டருக்கு வெகு முன்னதாகவோ விழுந்தது.

ஆனால் இந்த தொடக்க தடுமாற்றத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட தவண், உறுதியாக நின்றார். மேற்கிந்திய அணியின் மற்ற வீச்சாளர்களும் கட்டுக்கோப்புடன் வீசிய பகுதியாகும் இது, ஆனால் தவண் நிற்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த எகிறு பந்து ஸ்பெல்லில்தான் தவண் ஆட்டமிழக்க வேண்டிய சூழ்நிலைகளைத் தாண்டி விஜய்க்கு ஒரு அருமையான ஆஃப் ஸ்டம்ப் எகிறு பந்து விழுந்தது. விஜய் மட்டையை உயர்த்த பந்து எட்ஜ் ஆகி கிரெய்க் பிராத்வெய்ட்டின் தட்டித்தட்டிப் பிடித்த கேட்சில் விஜய் 7 ரன்களில் வெளியேறினார்.

ஷிகர் தவண் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அதீத கவனம் செலுத்தி ஆடினார். புதிய பந்து கொஞ்சம் தேய்ந்தவுடன் தவண் நிறைய கட் ஷார்ட்களை ஆடினார். கவர் டிரைவ்களை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டார். உணவு இடைவேளையின் போது தவண் 46 ரன்களில் இருந்தார். இந்தியா 72/1 என்று இருந்தது, புஜாரா 14 ரன்கள் எடுத்திருந்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ரன் குவிப்பு வழிமுறைகளை தவண் அதிகப்படுத்திக் கொண்டார். லேட் கட்களை ஆடினார், ஸ்பின்னர்களை மேலேறி வந்து ஆடினா, ஆனால் புஜாரா 67 பந்துகளில் 16 ரன்கள் என்று தேங்கிப் போனார். கடைசியில் பிஷூவின் எங்கு வேண்டுமானாலும் அடிக்க வேண்டிய ஷார்ட் பிட்ச் பந்தை ஏதோ லெக் திசையில் சுழற்றி பந்து விளிம்பில் பட்டு ஆஃப் திசையில் கேட்ச் ஆனது. அவருக்கே ஒன்றும் புரியவில்லை. ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை எப்படி இந்தப் பந்தில் ஆட்டமிழந்திருக்க முடியும் என்பது.

கோலியின் ‘ராஜ’ கவர் டிரைவ்கள்:

புஜாரா இருக்கும் வரையில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி சில எளிதான டாட்பால்களை பெற்ற மே.இ.தீவுகள், கோலி இறங்கி அவற்றையெல்லாம் கவர் திசையில் பவுண்டரிகளாகவோ அல்லது ரன்களாகவோ மாற்றத் தொடங்கியவுடன் மே.இ.தீவுகள் வாசல் அடைக்கப்பட்டது. முதல் பவுண்டரி மர்லான் சாமுவேல்ஸின் மிஸ்பீல்டில் வந்தது கோலிக்கு. கோலி ஆடத் தொடங்கியவுடன் தவண் புகுந்தார், கப்ரியேலை ஒரு அப்பர் கட் சிக்ஸ், பிஷூவை சக்திவாய்ந்த ஸ்வீப் பவுண்டரி என்று தன்னை திறந்து கொண்டார்.

கோலி ஒருமுனையில் டிரைவின் கிங்குடா என்று ஆடிக்கொண்டே இருந்தார், அனைத்து கவர் டிரைவ்களும் ஒரு முழுவீச்சு டிரைவ்கள் என்பதை விட புஷ்-டிரைவ் என்றே கூற வேண்டும், மறைந்த ஹாக்கி மேதை மொகமது ஷாகித்தின் ஹாக்கி ரக ஆஃப் சைடு பிளிக் என்றே கோலியின் கவர் டிரைவ்களை கூற முடியும். பிஷூ வீசிய மோசமன பந்துகளை மிட்விகெட்டில் விளாசினார் கோலி, சச்சின் போலவே அவரது குட் லெந்த் லெக்ஸ்பின் பந்துகளை ஸ்பின் ஆகும் திசைக்கு எதிர்த் திசையில் மிட்விக்கெட், மிட் ஆனில் அடித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.

கோலி 75 பந்துகளில் தன் அரைசதத்தைக் கொண்டு வர, தவண் ஏற்கெனவே சதம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார், இருவரும் இணைந்து 105 ரன்களை 27 ஓவர்களில் சேர்த்த போது, தேநீர் இடைவேளைக்கு சற்று முன் பிஷூவை ஒரு ஸ்வீப் பவுண்டரி அடித்த தவண் அதே ஷாட்டை ரிபீட் செய்த போது கால்காப்பில் வாங்கி எல்.பி. ஆகி 147 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 84 ரன்களில் வெளியேறினார்.

ரஹானே இறங்கி 22 ரன்களை வெகு சுலபமாக எடுத்தார், கோலியுடன் இணைந்து 57 ரன்கள் கூட்டணி அமைத்தார், ஆனால் அந்த பிஷூவின் மோசமான பந்து ஷார்ட் பிட்ச் ஆகி பிட்சில் நின்று வந்தது, ரஹனேவும் சிங்கிள் எடுத்து கோலியின் சதத்திற்கு ஸ்ட்ரைக் கொடுக்க முயன்றதால் கேட்ச் ஆனது, முதல் பந்து கோலியின் ராஜ கவர் டிரைவ் ஒரு ரன்னாக இல்லாமல் இருந்திருந்தால் ரஹானே ஆட்டமிழந்திருக்க மாட்டார்.

கோலி 134 பந்துகளில் சதம் கண்டார். ரஹானே அவுட் ஆனவுடன் அஸ்வின் களமிறக்கப்பட்டார். மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சிலும் கேப்டன்சியிலும் தீவிரமில்லை, இந்திய அணியை கட்டுப்படுத்தவே விரும்புகின்றனரே தவிர அட்டாக் இல்லை. இதனால் அஸ்வினும் கோலியும் மேலும் 66 ரன்களைச் சேர்த்தனர்.

கோலி 143 ரன்களில் களத்தில் இருப்பது மே.இ.தீவுகளுக்கு பெரிய அபாயம்.

http://tamil.thehindu.com/sports/தொடரும்-விராட்-கோலியின்-சதங்கள்-இந்தியா-4-விக்கெட்-இழப்புக்கு-302-ரன்கள்/article8885459.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்தியா 404 /5

கொஹ்லி 200 அவுட்

247861.jpg

  • தொடங்கியவர்

கொஹ்லின் இரட்டை சதத்தை தொடர்ந்து அஷ்வினும் சதம் அடித்தார்..

India 528/7 (158.0 ov)

247877.jpg

  • தொடங்கியவர்

ஆன்டிகுவா டெஸ்ட்: இந்திய அணி 566/8 டிக்ளேர்

  • தொடங்கியவர்

இரட்டை சதமடித்து 84 வருட சாதனையை நிகழ்த்தினார் கோலி, அஸ்வின் சதம்.

247863.jpg

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணி நேற்றைய ஸ்கோரான 302/4 என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை துவங்கியது. இந்திய கேப்டன் விராட் கோலியும், அஸ்வினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமாக் ஆடிய கோலி 283 பந்துகளில் இரட்டை சதமடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் இரட்டை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சரியாக 200 ரன்களில் கோலி வெளியேற, அஸ்வின் விச்வரூபம் எடுத்தார். தனது 3வது சதத்தை பூர்த்தி செய்தார் அஸ்வின். அமித் மிஸ்ரா அரைசதம் அடித்து ஆட்டமிழந்ததும் இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 566 ரன்கள் குவித்தது.

247897.jpg

பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 16 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 31 ரன்களை குவித்தது. ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக இருப்பதால் அஸ்வின், மிஸ்ரா பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் நாள் புள்ளி விவரங்கள்:


247861.jpg

84 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கேப்டன் ஒருவர் இந்தியாவுக்கு வெளியே இரட்டை சதமடிப்பது இதுவே முதல் முறை.

கோலியின் முதல் இரட்டை சதம் இது தான். இன்னும் அவர் முதல் தர போட்டிகளில் கூட இரட்டை சதமடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுககளில் தான் ஆடும் முதல் போட்டியிலேயே சதமடித்த 4வது வீரர் அஸ்வின்.

இந்திய அணி 2008ம் ஆண்டுக்கு பிற‌கு 2வது விக்கெட் முதல் 7வது விக்கெட் வரை தொடர்ந்து ஆறு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/sports/66436-kohli-creates-new-record-in-west-indies.art

  • தொடங்கியவர்

'டாப் ஆர்டரில் இறங்குவதே எனது இலக்கு!' -சதமடித்த அஸ்வின்

டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்குவதே தனது இலக்காக இருந்ததாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ash.jpg

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 566 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து, அஸ்வின் நிலைகொண்டு ஆடியதால், அணி நல்ல ஒரு ஸ்கோரை எட்ட முடிந்தது. விராட் 200 ரன்களையும் அஸ்வின் 113 ரன்களையும் அடித்தனர். டெஸ்ட் அரங்கில் அஸ்வின் அடித்த 4வது சதம் இதுவாகும்.

சதமடித்தது குறித்து அஸ்வின் கூறுகையில்,'' டெஸ்ட் அரங்கில் முதல் 7 இடத்திற்குள் களமிறங்க வேண்டுமென்பது எனது கனவு. இலக்காகவும் கூட இருந்தது. இந்தப் போட்டியில் என் மீது நம்பிக்கை வைத்து பயிற்சியாளரும் கேப்டனும் என்னை 6வது இடத்தில் களமிறங்க அனுமதித்தனர். 'குறைந்தது 200 பந்துகளை எதிர்கொண்டு சதமடிக்கலாம்' என இந்த போட்டித் தொடங்குவதற்கு முன், துணை கேப்டன் அஜிங்கிய ரஹானே கருத்து வெளியிட்டிருந்தார்.  எனது இலக்கு 150 பந்துகளில் சதமடிப்பதாக இருந்தது. ஆனாலும் முடிந்தளவு பந்துகளை வீணடிக்காமல் ரன்களை சேகரிக்க முயற்சித்தேன்.

கேப்ரியல் சில பந்துகளை வெளியே வீசினார். அந்த பந்துகளை அடித்து விளையாட நான் எத்தனித்த போது,  விராட் என்னிடம் வந்து, 'டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற ஷாட்களை தவிர்த்தால் நல்லது' என ஆலோசனை வழங்கினார்  இதற்கு முன் கொல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம், 6 விக்கெட்டுக்கு 60 ரன்களை எடுத்திருந்த போது களமிறங்கினேன். அப்போதும் நான் சதமடித்தேன். வி.வி.எஸ் லக் ஷ்மணுக்கு எப்படி ஆஸ்திரேலிய அணியோ அது மாதிரி எனக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி. ''என்றார்

அஸ்வின் அடித்த 3வது டெஸ்ட் சதம் இது. இந்த மூன்று சதமுமே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், ''மற்ற இரு பார்மட்களையும் விட டெஸ்ட் கிரிக்கெட்தான் மிகவும் முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் உங்களுக்கு நிச்சயம் ஒரு மனதிருப்தி கிடைக்கும். பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடும்போது, ஒரு கேப்டனாக அவர்கள் பாணியில் விளையாட அனுமதித்து விடுவேன். என்னால் செய்ய முடியாத விஷயங்களை அவர்கள் செய்தால் நான் தடுப்பதில்லை'' என்றார்.

முன்னதாக இந்த போட்டியில் அஸ்வினை 6 வது விக்கெட்டாக, பரீட்சார்த்த முறையில்தான் பயிற்சியாளர் கும்ப்ளேவும் கேப்டன் விராட் கோலியும் களமிறக்கினர். அஸ்வின் சதமடித்து அசத்தியதால், தொடர்ந்து அவர் 6வது விக்கெட்டாக களமிறங்க வாய்ப்புள்ளது.

http://www.vikatan.com/news/sports/66445-always-wanted-to-be-top-order-batsman-ashwin.art

  • தொடங்கியவர்

ஷமி, யாதவ் அபாரமான பந்து வீச்சில் மே.இ.தீவுகள் ஃபாலோ ஆன்

 
மர்லன் சாமுவேல்சை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷமி. | படம்: ஏ.பி.
மர்லன் சாமுவேல்சை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷமி. | படம்: ஏ.பி.

ஆன்ட்டிகுவா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான நேற்று மே.இ.தீவுகள் தங்கள் முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பிறகு ஃபாலோ ஆனிலும் 1 விக்கெட்டை இழந்து 21 ரன்கள் எடுத்துள்ளது.

மிகவும் மெதுவான பிட்சில், பேட்ஸ்மென்களை வீழ்த்தக் கடினமான பிட்சில் மொகமது ஷமி மிக அருமையாக வீசினார். இதனால்தான் தோனி, விராட் கோலி, இந்திய அணி நிர்வாகம் மொகமது ஷமி மீது இத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளனர். இவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்த பிறகு உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஃபாலோ ஆனில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா, முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய கே.சி.பிராத்வெய்ட்டை அருமையான ஸ்விங்கரில் எல்.பி.செய்தார்.

மொகமது ஷமி முன்பு ஓடி வரும் போது லாங் ஸ்டெப்களை வைத்து ஓடிவருவா, இது அவரது பிரச்சினையாகக் கண்ட பயிற்சியாளர்கள் அவரை ஷார்ட் ஸ்டெப்களில் ஓடிவரச் செய்தனர். இதனால் லைன் மற்றும் லெந்த், வேகம் என்று அவர் சமரசம் எதுவும் இல்லாமல் வீச முடிந்தது. நிறைய ஓவர்களையும் வீச முடிந்தது.

இரவுக்காவலன் தேவேந்திர பிஷூவை வீழ்த்த இந்திய பவுலர்கள் திணறினர். 46 பந்துகள் பிஷூ வெறுப்பேற்றினார். கே.சி.பிராத்வெய்ட் (74) அதிகபட்ச ஸ்கோரை எடுத்தார். ஆனால் இவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது. தொடக்கத்தில் பேக்வர்ட், பார்வர்ட் ஷார்ட் லெக் பீல்டர்களை வைத்துக் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் பிராத்வெய்ட்டின் நெஞ்சுக்கு பந்தை எகிறச் செய்த போது இவரது தடுப்பாட்டம் சரியாக அமையாமல் பந்து காற்றில் சென்றாலும் பீல்டர்களுக்கு அருகில் செல்லாததால் பிழைத்தார். பிஷூ அடிக்கடி ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் பீட் ஆனாரே தவிர ஆட்டமிழக்கவில்லை.

அப்போதுதான் அஸ்வின் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அமித் மிஸ்ராவுக்கு கோலி பந்தைக் கையில் கொடுத்தார், மிஸ்ராவும் பிஷூ விக்கெட்டை வீழ்த்தினார். மிகவும் பொறுமையாக ஆடி வெறுப்பேற்றிய பிஷூவே பொறுமை இழந்து ஸ்வீப் ஆட முயன்ற போது கால் கிரீசுக்கு வெளியே சென்றது, ஸ்டம்ப்டு ஆனார்.

தொடக்கத்தில் ஷமிக்கு விக்கெட் விழாதது துரதிர்ஷ்டமே. பேட்ஸ்மென் தடுப்பாட்ட மூடில் இருக்கும் போது கூட ஷமி அச்சுறுத்தினார். டேரன் பிராவோ ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தொட முயன்று ஷமியிடம் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு மர்லன் சாமுவேல்ஸ் பேக்ஃபுட்டிலேயே ஆட முடிவெடுத்தார். இதனால் பவுலர்களுக்கு லைன் அண்ட் லெந்த்தில் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் சாமுவேல்ஸ் முன்னால் வந்தோ, முன்னங்காலை குறுக்காகப் போட்டோ ஆட முடிவெடுக்கவில்லை, இருந்த இடத்திலிருந்தே ஆடிக்கொண்டிருந்ததால் ஷமியின் ஒரு பந்து எட்ஜ் எடுக்க ஆட்டமிழந்தார். ஷமியின் 50-வது டெஸ்ட் விக்கெட் சாமுவேல்ஸ்.

இதே ஓவரின் 6-வது பந்தில் பிளாக்வுட்டிற்கு ஆக்ரோஷமான ஷார்ட் பால் ஒன்றை வீச மட்டையின் விளிம்பில் பட்டு ரஹானேயிடம் கேட்ச் ஆனது. 2 விக்கெட்டுகள் மற்றும் மெய்டன். 92/5 என்ற நிலையிலிருந்து கே.சி.பிராத்வெய்ட், ராஸ்டன் சேஸ் கொஞ்சம் நிலை நிறுத்தமுயன்றனர். 47 ரன்களை மேலும் சேர்த்தனர், ஆனால் அப்போதுதான் உமேஷ் யாதவ் வைடு ஆஃப் த கிரீசிலிருந்து பந்தை உள்ளே கொண்டு வந்து கடினமான கோணங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார், சேஸ் ஷார்ட் பிட்ச் பந்தை நேராக மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். அதே போல் 74 ரன்களில் இருந்த பிராத்வெய்ட்டிற்கு வைடு ஆஃப் த கிரீசிலிருந்து கடுமையான ஷார்ட் பிட்ச் பவுன்சர் ஒன்றை வீச பந்து அவரது முகத்துக்கு எகிற பந்து கிளவ்வில் பட்டு சஹாவிடம் கேட்ச் ஆனது, வெறித்தனமான பந்து.

பால்வடியும் முக விக்கெட் கீப்பர் டவ்ரிச்சும், ஹோல்டரும் ஸ்கோரை 213 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அப்போது ஹோல்டர், யாதவ்வின் அவுட் ஸ்விங்கரை எட்ஜ் செய்ய சஹாவின் 6-வது கேட்ச் ஆனது, இதன் மூலம் 6 கேட்ச்களுடன் தோனி, சையத் கிர்மானி சாதனையை சமன் செய்தார் சஹா. ஹோல்டர் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தே கார்லோஸ் பிராத்வெய்ட், உமேஷ் யாதவ்வின் வைடு ஆஃப் த கிரீஸ் இன்ஸ்விங் பந்தை வேடிக்கைப் பார்க்க ஸ்டம்பை தொந்தரவு செய்தது. பவுல்டு ஆனார். டவ்ரிச் 79 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். கேப்ரியலை மிஸ்ரா பவுல்டு செய்தார். மே.இ.தீவுகள் 243 ரன்களுக்குச் சுருண்டது யாதவ் 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், மொகமது ஷமி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் மிஸ்ரா 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, அஸ்வின் 17 ஓவர்களில் 43ரன்களை கொடுத்து கட்டுப்படுத்தும் வேலையைச் செய்தார்.

ஃபாலோ ஆனில் கே.சி. பிராத்வெய்ட் இசாந்த்சர்மா ஒரு பந்தை உள்ளே கொண்டு வர கே.சி.பிராத்வெய்ட் எல்.பி. ஆனார். ஆட்ட முடிவில் சந்திரிகா 9 ரன்களுடனும் டேரன் பிராவோ 10 ரன்களுடனும் இருந்தனர்.

http://tamil.thehindu.com/sports/ஷமி-யாதவ்-அபாரமான-பந்து-வீச்சில்-மேஇதீவுகள்-பாலோ-ஆன்/article8893763.ece

  • தொடங்கியவர்
இந்தியா  566/8d
மேற்கிந்திய தீவுகள்  243 & 96/4 (38.3 ov) (f/o)

248077.jpg

  • தொடங்கியவர்

அஸ்வின் 7 விக்கெட்டுகள்: இந்திய அணி மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றி

 
வெற்றியைக் கொண்டாடும் அஸ்வின் | படம்: எ.பி.
வெற்றியைக் கொண்டாடும் அஸ்வின் | படம்: எ.பி.

ஆன்ட்டிகுவா டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் ஃபாலோ ஆனில் 231 ரன்களுக்குச் சுருண்டது. இதனையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ரவிச்சந்திரன் அஸ்வின் 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த இன்னிங்ஸ் வெற்றி கரீபியனில் முதலாவது, ஆசியாவுக்கு வெளியே இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியும் இதுவே. சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் அல்லது அதற்கும் அதிகமான விக்கெட்டுகள் என்று ஒரே டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அசத்துவது 2-வது முறையாகும்.

உணவு இடைவேளைக்குப் பிறகு 8 விக்கெட்டுகள் வேண்டிய நிலையில், அஸ்வின் பந்துகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. பிளைட் செய்யப்பட்ட பந்துகள் பிட்ச் ஆகும் இடம் பற்றிய எதிர்பார்ப்பை அஸ்வின் மாற்றிக் கொண்டேயிருந்தார்.

நேற்று காலை உமேஷ் யாதவ் ஒரு அருமையான பந்து வீச்சு ஸ்பெல்லில் டேரன் பிராவோவை முதல் ஓவரில் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸ் போலவே ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தை தொட்டார் கெட்டார்.

மர்லன் சாமுவேல்ஸுக்கு மொகமது ஷமி கிளவ் உயர பந்தை வீச விருத்திமான் சஹாவிம் இடது புறம் தாழ்வான கேட்ச் ஆனது. ஏகப்பட்ட ரீப்ளேக்கள், கோணங்களுக்குப் பிறகு சந்தேகத்தின் பலன் சாமுவேல்ஸுக்கு அளிக்கப்பட்டது, இந்திய வீரர்கள் உண்மையில் இதில் வெறுப்படைந்தனர். பால்கனியிலிருந்து அவுட் என்று கூறிய பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் ஏமாற்றம். கோலி நடுவர் இயன் கோல்டுடன் காரசாரமாக ஏதோ பேசினார்.

ஏனெனில் அதன் பிறகு சந்திரிகா, சாமுவேல்ஸ் 22 ஓவர்கள் இந்திய அணியை வெறுப்பேற்றினர். குறிப்பாக அவுட் மறுக்கப்பட்ட பிறகு சாமுவேல்ஸ் சில அருமையான கட் ஷாட்களையும், லாஃப்டட் ஷாட்களையும் ஆடினார். மழை வந்தது. இந்த இடைவெளி நேரத்தில் சாமுவேல்ஸ் எப்படி நாட் அவுட் என்ற கேள்வியுடன் அனைவரும் ரீ-ப்ளேவில் உட்கார்ந்து விட்டனர்.

இந்த டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுக்காத ஒரே முக்கிய பவுலர் அஸ்வினாக இருந்தார். அவர் பந்துகளை எளிதில் கட் ஆட முடிந்தது, சாமுவேல்ஸ் ஒரு பந்தை மேலேறி வந்து ஸ்பின்னுக்கு எதிர்த்திசையில் தூக்கி அடிக்க முடிந்தது. நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வெற்றி அஸ்வினால் சாத்தியமில்லை என்ற எண்ணம் தலைதூக்கிய போது இடைவேளைக்குப் பிறகு அஸ்வின் தனது பந்து வீச்சின் முழுமையை கண்டடைந்தார்.

சாமுவேல்ஸை ஒரு ஓவர் தனது பிளைட்டினால் ஆட்டிப்படைத்தார். சந்திரிக்காவுக்கு ஆஃப்வாலி போன்ற ஒரு பந்தை வீசினார், ஆனால் அது ஆஃப்வாலி அல்ல, பிளைட்டின் மூலம் பந்து பிட்ச் ஆகும் இடம் பற்றிய பேட்ஸ்மென்களிடம் ஊகத்தை ஏற்படுத்தி ஏமாற்றினார் அஸ்வின். சந்திரிக்கா அப்படிப்பட்ட பந்து ஒன்றில்தன் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பிளாக்வுட் 2வது இன்னிங்சிலும் டக் அவுட் ஆனார். அஸ்வின் இவரையும் பிளைட்டில் ஏமாற்றினார், பந்து ஆஃப் பிரேக் ஆனது ஆனால் டிரைவ் ஆடும் லெந்த் அல்ல இதனால் ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனது.

சாமுவேல்ஸ் 85 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து ஒன்று எதிர்திசையில் திரும்பியது ஆனால் நன்றாகத் திரும்பவில்லை சற்றே நேர் ஆக சாமுவேல்ஸ் மட்டையைக் கடந்து பவுல்டு ஆனது. இத்தகைய கிளாசிக் ஸ்பின் பந்து வீச்சை எதிர்கொள்ள மே.இ.தீவுகள் பேட்டிங் வரிசையில் அனுபவம் போதவில்லை என்றே கூற வேண்டும். ராஸ்டன் சேஸ் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடி அரைசதம் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்த டவ்ரிச்சை அமித் மிஸ்ரா எல்.பி. செய்து வெளியேற்றினார். ஜேசன் ஹோல்டருக்கு அஸ்வினின் பந்து மிக அருமையானது, சிறந்த பேட்ஸ்மென்கள் ஆடினாலும் கூட பவுல்டுதான் ஆக முடியும். ஒரு ஆஃப் பிரேக் பந்தை எதிர்பார்த்து டிரைவுக்கு முயன்றார் ஹோல்டர் ஆனால் பந்து சற்றே உள்முகமாகத் திரும்பி பேட், பேடு இடைவேளியில் லெக் ஸ்டம்பை பதம் பார்த்தது. அஸ்வின் ஆசியாவுக்கு வெளியே முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 132/8 என்ற நிலையில் கார்லோஸ் பிராத்வெய்ட் (51), தேவேந்திர பிஷூ (45) வெறுப்பேற்றி ஸ்கோரை 227 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். கடைசியில் பிஷூ, கேப்ரியலை அஸ்வின் வீழ்த்தி 25 ஓவர்கள் 7 மெய்டன்கள் 83 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மே.இ.தீவுகளின் போராட்டம் 78-வது ஓவரில் 231 ரன்களுடன் முடிவுக்கு வந்தது.

ஆட்ட நாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/அஸ்வின்-7-விக்கெட்டுகள்-இந்திய-அணி-மிகப்பெரிய-இன்னிங்ஸ்-வெற்றி/article8896326.ece?homepage=true

  • தொடங்கியவர்

கற்றல் காலம் முடிந்தது; ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் தொடங்கி விட்டது: விராட் கோலி பேட்டி

 

விராட் கோலி. | கோப்புப் படம்: ஜி.பி.சம்பத்குமார்.
விராட் கோலி. | கோப்புப் படம்: ஜி.பி.சம்பத்குமார்.

மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்ற விதம் குறித்து அதிக ‘மகிழ்ச்சி’ அடைவதில் கோலிக்கு நிகர் ஒருவரும் இல்லை என்றே கூறிவிடலாம்.

கற்றுக்கொள்ளும் காலம் முடிந்து விட்டது, ஆதிக்கம் செலுத்தும் காலம் தொடங்கி விட்டது என்று விராட் கோலி கூறுவதில் ஒரு அரை ஸ்டீவ் வாஹ், ஒரு அரை ரிக்கி பாண்டிங் தொனிக்கின்றனர்.

வெற்றிக்குப் பிறகு கோலி கூறியதாவது:

தர்க்கபூர்வமாக யோசித்தால் இதுதான் துல்லியமான முடிவு. இதைத்தான் ஒவ்வொரு அணியும் எதிர்நோக்குகின்றன. இரண்டு இன்னிங்ஸ்களிலும் பந்துவீச்சாளர்கள் அமைத்துக் கொண்ட கூட்டணி அற்புதம். பேட்ஸ்மென்களும்தான்.

அதாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்யும் வரைக்கும் கொண்டு செல்லும் திறமை நம் அணியிடம் இருக்கிறது என்ற ஒரு விஷயத்தைத்தான் பேசினோம். இல்லாமல் கீழ்வரிசை வீரர்கள் உதவியுடன் 350 ரன்களுக்கு போராடும் பழக்கம் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அதாவது இம்மாதிரியான மனநிலையில் விளையாடுவதைத்தான் வலியுறுத்தினோம்.

குறிப்பாக 5 பேட்ஸ்மென்களுடன் ஆடும் போது, பொறுப்பு கூடுதலாகத் தேவைப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிலைக்கு அணி வந்துள்ளது. அதாவது முக்கியமான தருணங்கள், ஆட்டநேரங்களில் வெற்றிக்கு சாதகமான நிலைகளை உருவாக்குவதுதான் ஆதிக்க வழி. இப்படித்தான் சிறந்த அணியாக முடியும்.

ஒவ்வொரு தொடரிலும் கற்றுக் கொள்கிறோம், ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக்கொள்கிறோம் என்ற மனநிலையுடன் களமிறங்கினால் கடினமான சூழ்நிலைகளிலிருந்து வெற்றி பெறுவதற்காக ஆடுவது எப்போது? நமக்கு நாமே சவால்களை சிறிதளவு உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த அணி இதற்குத் தயாராக இருக்கிறது என்பது நல்ல அறிகுறி. இந்த டெஸ்ட் போட்டியை முடித்த விதம் அதற்காக ஆடிய விதம் என்று அனைத்துமே சிறப்பாக வெளிவந்துள்ளது.

மே.இ.தீவுகளை இரு இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட் செய்துள்ளது ஒரு நல்ல தொடக்க முயற்சி. முதல் இன்னிங்ஸில் அனைவரும் போதிய ஓவர்களை வீசவில்லை என்று உணர்ந்தனர், அதானல்தான் மீண்டும் பவுலிங் செய்வோம் என்று முடிவெடுத்தோம்.

முதல் இன்னிங்ஸின் முடிவில் ஓரிரு விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவது முக்கியம். ஏனெனில் 15-20 ஓவர்களை ஒரு இன்னிங்ஸில் கூடுதலாக வீசி வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டால், தொடர்ச்சியாக 2-வது இன்னிங்ஸிலும் பவுலிங் செய்வது பற்றிய ஐயம் மனதில் தோன்றும்.

இந்த வகையில் மே.இ.தீவுகளின் முதல் இன்னிங்ஸை சரியான நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வந்தோம், இதனால் அதே நாளில் மேலும் 13-14 ஓவர்கள் வீசமுடிந்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்ற முடிந்தது. ஃபாலோ ஆன் கொடுத்து மீண்டும் பவுலிங் செய்வோம் என்பதில் பந்து வீச்சாளர்கள் அனைவருமே ஒருமனதாக இருந்தனர். ஸ்பின் பவுலர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

முதல் இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய வீசியதை ஸ்பின் பவுலர்கள் உணர்ந்திருந்தனர். அதனால் 2-வது இன்னிங்ஸில் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடிவெடுத்தனர். அஸ்வின் சிறப்பாக வீசினார் என்பதைக் கூற வேண்டியதில்லை. மிஸ்ரா நன்றாக வீசினார், ஆனால் அவரால் எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. இருவருமே அழுத்தத்தை அதிகரித்தனர். கூட்டணி அமைத்து பந்துவீசுவது பற்றி நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம்.

முதல் இன்னிங்ஸில் உமேஷ் யாதவ், ஷமி அற்புதமாக வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் கடைசியில் மிஸ்ரா எடுத்த விக்கெட்டுகள் முக்கியமானது. ஏனெனில் அப்போது ஏகப்பட்ட ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்கள் வீச நேரிட்டால் அதுதான் அவர்களை களைப்படையச் செய்யும். இசாந்த் சர்மாவும் அழுத்தத்தை பராமரித்தார், ரன் விகிதம் ஓவருக்கு 2 ரன்களுக்கு மேல் செல்லவில்லை.

இருந்தாலும் சில இடங்களில் முன்னேற்றம் தேவை, இடைவேளை வரும் சமயத்தில் விக்கெட்டுகளை இழத்தல் கூடாது. ஆனால் 3 முறை இவ்வாறு நிகழ்ந்தது. புஜாரா, ஷிகர் தவண் அவ்வாறு இடைவேளைக்கு முன்னதாக ஆட்டமிழந்தனர். நானே உணவு இடைவேளைக்கு சற்று முன் ஆட்டமிழந்தேன். எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.

அதே போல் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி விட்டு கடைசியில் ரன் அடிக்க விடுவது... இதையும் நாம் கடந்தாக வேண்டும். நல்ல பேட்ஸ்மென்களை அவுட் ஆக்கிய பிறகே, பின்வரிசை வீரர்களுக்காக வித்தியாசமாக நாம் எதையும் செய்ய வேண்டியதில்லை. எனவே இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் இந்த இடத்தில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். எப்போதும் பின்வரிசை வீரர்கள் மூலம் நாம் 8-10 கூடுதல் ஓவர்களை வீசுமாறு போய்விடுவதுதான் வெறுப்புக்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெற விழைகிறோம்.

வெற்றி பெறும் பழக்கம் என்பது ஒரு தொற்று போல் பரவ வேண்டும். எந்த சூழ்நிலையிலிருந்தும், உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் வெற்றிதான் குறிக்கோளாக இருக்க வேண்டு என்பது ஒரு பழக்கமாகவே மாற வேண்டும்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/கற்றல்-காலம்-முடிந்தது-ஆதிக்கம்-செலுத்த-வேண்டிய-நேரம்-தொடங்கி-விட்டது-விராட்-கோலி-பேட்டி/article8897068.ece?homepage=true

  • தொடங்கியவர்

கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: முரளி விஜய் களமிறங்குவது சந்தேகம்

 

 
விராட் கோலி. | கோப்புப் படம்: ஜி.பி.சம்பத்குமார்.
விராட் கோலி. | கோப்புப் படம்: ஜி.பி.சம்பத்குமார்.

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இரவு 8.30 மணிக்கு தொடங்கும் போட்டியை டென் 3 சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஆசிய கண்டத்துக்கு வெளியே மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்ற உற்சாகத்துடன் 2-வது டெஸ்ட் போட்டியை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சந்திக்கிறது.

சபினா பார்க் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தில் புற்கள் உள்ளதால் பந்துகள் எழும்பி வரக்கூடும். கடைசியாக இங்கு நடைபெற்ற 5 டெஸ்ட் ஆட்டங்களும் 4 நாட்களி லேயே முடிவுக்கு வந்துள்ளது.

2011-ல் இந்திய அணி இங்கு நடைபெற்ற டெஸ்ட்டில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்திருந்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் இந்த டெஸ்ட்டில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் போது கபேரியல் வீசிய பந்தில் முரளி விஜயின் கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பீல்டிங்கில் களமிறங்கவில்லை.

இந்நிலையில் நேற்று வலைப் பயிற்சியிலும் முரளி விஜய் ஈடுபடவில்லை. அவர் களமிறங்காத பட்சத்தில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

முதல் டெஸ்ட்டில் விராட் கோலி இரட்டை சதம் விளாசினார். அஸ்வின் பேட்டிங்கில் 113 ரன்களும், பந்து வீச்சில் 7 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தினார். ஷிகர் தவணும் 84 ரன்கள் குவித்து தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருந்தார். புஜாரா 16, அஜிங்க்ய ரஹானே 22 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்த டெஸ்டில் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை பயன்படுத்தி இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் நெருக்கடி கொடுக்கக்கூடும்.

இளம் வேகங்கள்

அனுபவம் இல்லாத மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த டெஸ்ட்டிலும் வலிமையான இந்திய அணியை சமாளிக்க கடுமையாக போராட வேண்டியதிருக்கும். எனினும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதால் சொந்த மண்ணின் சாதகத்தை பயன்படுத்திக்கொள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் முயற்சி செய்வார்கள்.

19 வயதான இளம் வேகப் பந்து வீச்சாளர் அல்ஷாரி ஜோசப், 25 வயதான மிகுவெல் கம்மின்ஸ் ஆகியோர் இன்று அறிமுக வீரர்களாக இடம் பெற வாய்ப்புள்ளது. இதில் அல்ஷாரி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரில் அவர் 13 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.

பேட்டிங்கில் டேரன் பிராவோ, மார்லோன் சாமுவேல்ஸ், கிரெய்க் பிராத்வெயிட், சந்திரிகா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன் குவிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தலாம்.

அணி விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, விருத்திமான் சாகா, அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.

மேற்கிந்தியத் தீவுகள்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரெய்க் பிராத் வெயிட், ராஜேந்திர சந்திரிகா, டேரன் பிராவோ, மார்லோன் சாமுவேல்ஸ், பிளாக்வுட், ரோஸ்டன் சே-ஸ, லியான் ஜான்சன், ஷேன் டவுரிச், தேவேந்திரா பிஷூ, கார்லோஸ் பிராத் வெயிட், கபேரியல், மிகுவெல் கம்மின்ஸ், அல்ஷாரி ஜோசப்.

நேரம்: இரவு 8.30

ஒளிபரப்பு: டென் 3

http://tamil.thehindu.com/sports/கிங்ஸ்டன்-சபினா-பார்க்-மைதானத்தில்-இந்தியா-மேற்கிந்தியத்-தீவுகள்-2வது-டெஸ்ட்-இன்று-தொடக்கம்-முரளி-விஜய்-களமிறங்குவது-சந்தேகம்/article8920805.ece

  • தொடங்கியவர்

முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின், ராகுல் அசத்தல்: மே.இ.தீவுகள் 196; இந்தியா 126/1

 

 
அஸ்வின் | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி
அஸ்வின் | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி

கிங்ஸ்டன் ஜமைக்கா பிட்ச் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதன் அசல் தன்மையுடன் அமைய மே.இ.தீவுகள் 196 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்கத்தில் இசாந்த் சர்மா, மொகமது ஷமி ஆகியோருக்கு ஓரளவுக்கு நல்ல ஸ்விங்கும் பவுன்சும் இருந்தன. அஸ்வின் ஒரே ஓவரில் பிராத்வெய்ட், டேரன் பிராவோவை வீழ்த்தினார். இதில் டேரன் பிராவோவுக்கு நல்ல பந்து. பிராத்வெய்ட்டிற்கு பந்து நெஞ்சுயரம் எகிறியது. ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது. மொகமது ஷமி சந்திரிகாவுக்கு அவுட் ஸ்விங்கரை எழுப்ப அவர் ஆடாமல் விட வேண்டிய பந்தை பலவீனமாக ஆட எட்ஜ் ஆனது. 7/3 என்ற நிலையில் பிளாக்வுட் இறங்கினார்.

பிளாக்வுட் மட்டுமே எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆடினார். ஆனால் முதலில் ஷமி இன்ஸ்விங்கர் ஒன்றை ஆடாமல் விட்டு தவறு செய்தார், பந்து ஸ்டம்புக்கு சற்று மேலே சென்றது. சரி இதற்கு மேல் நிற்க முடியாது என்று அதே ஓவரில் ஒரு குட் லெந்த் பந்தின் மீது பேட்டை விட்டார். எட்ஜ் பவுண்டரி. பிறகு மீண்டும் ஷமியின் பந்தை சற்றே வன்மையாக தடுத்தாட கல்லிக்கு முன்னால் பந்து விழுந்தது. ஷமியின் பவுன்சரை ஹூக் செய்ய அதுவும் டாப் எட்ஜ் பவுண்டரி.

இடைஇடையே நெஞ்சிலும் தொடைக்காப்பிலும் வாங்கினார் பிளாக்வுட். பிறகு இசாந்த் சர்மாவின் ஃபுல் லெந்தை மிட் ஆஃபில் ஒரு பவுண்டரியும் பிறகு அதே ஓவரில் நேராக ஒரு சிக்சரையும் அடித்தார். பிறகு ஒரு ஆஃப் ஸ்டம்ப் ஷார்ட் பிட்சை ‘அப்பர் கட்’ பவுண்டரி அடித்தார். 22 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடி வழிமுறைகளுக்கு வந்திருந்தார் பிளாக்வுட்.

அஸ்வின் வந்தவுடன் எகிறிக் குதித்து மிட் ஆனில் ஒரு சிக்ஸ், பிறகு அஸ்வின் வீசிய ஒரே மோசமான பந்தை கவர் திசை பவுண்டரிக்கு விரட்டினார். பிறகு மிஸ்ரா பந்தை நேராக சிக்ஸருக்கு விரட்டி 48 பந்துகளில் அரைசதம் கண்டார். மீண்டும் மிஸ்ரா தவறிழைக்க மீண்டும் சிக்ஸ், என்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று விடுவாரோ என்ற பயத்தை இந்திய வீச்சாளர்களுக்கு உருவாக்கினார் பிளாக்வுட்.

கடைசியில் 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 62 பந்துகளில் 62 ரன்கள் என்று கலக்கிய பிளாக்வுட், அஸ்வின் பந்து ஒன்று டிரைவ் லெந்தில் அல்லாமல் பிட்ச் ஆகி உள்ளே திரும்ப பீட் ஆகி கால்காப்பில் வாங்கினார், நடுவர் அலீம்தார் எல்.பி.என்றார். ஆனால் பொதுவாக இத்தகைய திருப்பத்திற்கு அவுட் கொடுக்கும் வழக்கமில்லை. ஒருவிதத்தில் பிளாக்வுட்டிற்கு துரதிர்ஷ்டமே. உணவு இடைவேளக்கு சற்று முன் அவுட் ஆனார்.

மர்லன் சாமுவேல்ஸ் 78 பந்துகளில் 18 ரன்கள் என்று தடவினாலும் நின்று விட்டார், ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு இசாந்த் சர்மா ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார், பிறகு அஸ்வின் பந்தை மேலேறி வந்து நேராக சிக்ஸ் அடித்தார். ஆனால் அடுத்த பந்தே அப்படிப்பட்ட ஆசை வலையை விரித்தார் அஸ்வின், பந்தை நன்றாக பிளைட் செய்தார் ஆனால் பந்து பிட்ச் ஆகும் இடத்தை மாற்றினார், மீண்டும் மேலேறி வந்த சாமுவேல்ஸ் தடுமாறி ஆட பந்து மட்டையில் பட்டு பேடில் பட்டு ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது, 37 ரன்களில் சாமுவேல்ஸ் வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் டவ்ரிச் அஸ்வின் பந்தை ஆடுவதா வேண்டாமா என்ற தவிப்பில் கடைசியில் ஆட முற்பட மட்டையின் அடிப்பகுதியை அவரது பேடின் மேல் பகுதி தடுக்க பந்து மட்டையில் லேசாக பட்டு சஹாவிடம் கேட்ச் ஆனது. பிறகு 10 ரன்கள் எடுத்திருந்த சேஸ், ஷமியின் தீராத ஆஃப் ஸ்டம்ப் ஆசை வலை லெந்திற்கு இரையானார். தவண் அருமையாக ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தார்.

பிஷூ (12), ஹோல்டர் (13) ஆகியோரும் அஸ்வினிடம் ஆட்டமிழந்தனர், பிஷூ பொறுமை இழந்து ஸ்வீப் ஆடினார், ஆனால் கோலி ஏற்கெனவே ஷார்ட் லெக்கை எடுத்து விட்டு ஷார்ட் ஃபைன் லெக்கை நிறுத்த அங்கு தவணிடம் கேட்ச் ஆனது. ஹோல்டர் பேட்-கால்காப்பு பொறியில் சிக்கினார். அஸ்வின் 18-வது முறையாக 5 விக்கெட்டைக் கைப்பற்றினார். கேப்ரியலை மிஸ்ரா வீழ்த்தினார். ஷார்ட் கவரில் கோலி கேட்ச் பிடிக்க மே.இ.தீவுகள் இன்னிங்ஸ் 53-வது ஓவரில் 196 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. அஸ்வின் 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ராகுல் அபார ஆட்டம்:

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், தவண் ஆகியோர் திசை, லெந்த் என்று எந்தக் கட்டுக்கோப்பும் இல்லாத மே.இ.தீவுகள் பந்து வீச்சை எளிதில் எதிர்கொண்டனர். ஒன்று ஷார்ட் பிட்ச் அல்லது வைடாக வீசுவது என்று தவறு செய்தனர். பிஷூ தொடக்கத்திலேயே 3 அதி ஷார்ட் பிட்ச் பந்துகளுடன் தொடங்கினார். ஆனால் தவண் இருமுறை மந்தமாக பந்தை டிரைவ் ஆடினார் ஆனால் பந்து பீல்டருக்கு அருகில் செல்லவில்லை. ராகுல் தனது அரைசதத்தை எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் சேஸ் பந்தை ஸ்பின் ஆகும் திசைக்கு எதிர் திசையில் அடிக்க முனைந்து ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆக வேண்டியது, ஆனால் அங்கு டேரன் பிராவோ கேட்சை விட்டார்.

உதவிகரமான பிட்சில் கூட மே.இ.தீவுகள் சரியாக வீசவில்லை.

ஷிகர் தவன் 27 ரன்களில் 5 பவுண்டரிகள் அடித்தார். இம்முறை சேஸ் பந்தை தளர்வாக தவண் ஆட ஷார்ட் கவரில் பிராவோ கேட்ச் பிடித்தார். ஆனால் தவண், ராகுல் இணைந்து 19.3 ஓவர்களில் 87 ரன்கள் என்ற அபாரத் தொடக்கம் கொடுத்தனர்.

கே.எல்.ராகுல் 114 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக உள்ளார், புஜாரா 57 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இன்று மே.இ.தீவுகளுக்கு ஒரு நீண்ட நாள் காத்திருக்கிறது, முதலில் ராகுல், புஜாரா இருவரில் ஒருவரைக் காலி செய்தால் கோலி என்ற பூதம் காத்திருக்கிறது. பார்ப்போம்.

http://tamil.thehindu.com/sports/முதல்-நாள்-ஆட்டத்தில்-அஸ்வின்-ராகுல்-அசத்தல்-மேஇதீவுகள்-196-இந்தியா-1261/article8924656.ece?homepage=true

  • தொடங்கியவர்

தொடக்க வீரராக கவாஸ்கர், வினு மன்கட் சாதனைகளுடன் இணைந்த ராகுல்

 

 
158 ரன்களை விளாசிய கே.எல்.ராகுல். | படம்: ஏ.பி.
158 ரன்களை விளாசிய கே.எல்.ராகுல். | படம்: ஏ.பி.

ஜமைக்கா டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் காயமடைந்ததையடுத்து வாய்ப்பு பெற்ற கே.எல்.ராகுல் 158 ரன்களை எடுத்ததில் சில சாதனைகளை புரிந்துள்ளார்.’

3 இந்திய டெஸ்ட் தொடக்க வீரர்கள் தங்களது முதல் 3 சதங்களை இந்தியாவுக்கு வெளியே எடுத்துள்ளனர். ராகுல் தன் 3 சதங்களை, ஆஸ்திரேலியா, இலங்கை, மே.இ.தீவுகளில் எடுத்துள்ளார், சுனில் கவாஸ்கர் தனது முதல் 8 சதங்களை வெளிநாட்டில்தான் எடுத்தார். அதே போல் வினு மன்கட்டின் முதல் 3 சதங்கள் வெளிநாட்டில்தான் எடுக்கப்பட்டது. தற்போது ராகுல் இந்த உயர்மட்ட தொடக்க வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

1981-ம் ஆண்டு ஜமைக்கா சபைனா பார்க் மைதானத்தில் இங்கிலாந்தின் கிரகாம் கூச் 150+ ஸ்கோரை எடுத்த பிறகு தொடக்க வீரராக தற்போது ராகுல் 158 ரன்களை எடுத்துள்ளார். மேலும் இந்த மைதானத்தில் பங்கஜ் ராய்க்கு அடுத்த படியாக 150 ரன்களுக்கும் கூடுதலாக எடுத்துள்ள சாதனையையும் நிகழ்த்தினார் ராகுல். மொத்தமாகவே இதுவரை 9 தொடக்க வீரர்கள்தான் இங்கு 150 ரன்களை எட்டியுள்ளனர். இந்த மைதானத்தில் 1930-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த சந்தம் என்ற வீரர் எடுத்த 325 ரன்களே அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும்.

மேலும் ஆசியாவுக்கு வெளியே 150 ரன்களுக்கும் கூடுதலாக கடைசியாக எடுத்த இந்திய தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் 2009-ம் ஆண்டு நியூஸிலாந்தில் 167 ரன்கள் எடுத்தார். தற்போது ராகுல்.

தனது முதல் 3 அரைசதத்தை சதமாக மாற்றிய இந்திய வீரர்களில் அசாருதீன் மற்றும் தற்போது ராகுல் அடங்குவர். அசாருதீன் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் கண்டவர்.

மே.இ.தீவுகளில் முதன் முதலாக அறிமுக போட்டியில் ஆடும் இந்திய வீரர்களில் பாலி உம்ரீகர் முதலில் 130 ரன்களை எடுத்ததே அதிகபட்சம். தொடக்க அறிமுக வீரராக 1996-97-ல் அஜய் ஜடேஜா 96 ரன்களை எடுத்தார். மற்ற டவுன் ஆர்டர்களில் அஸ்வின் கடந்த போட்டியில் சதம் எடுத்தது தன் அறிமுகப் போட்டியில் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் பாலி உம்ரிகரின் அறிமுக 130 ரன்களைக் கடந்து 158 ரன்கள் எடுத்ததோடு, மே.இதீவுகளில் முதல் டெஸ்ட் போட்டியை ஆடும் போது சதம் எடுத்த 5-வது இந்திய வீரரானார்.

மே.இ.தீவுகளில் தனது முதல் டெஸ்ட்டை ஆடும் தொடக்க வீரர் என்ற முறையில் முதல் டெஸ்டிலேயே அதிகபட்சமாக அங்கு ரன் எடுத்தது கிளென் டர்னர் என்ற நியூஸிலாந்து தொடக்க வீரர், இவர் 1971-72-ல் இதே மைதானத்தில் 223 ரன்கள் எடுத்தார், தற்போது இதே மே.இ.தீவுகளில் தன் முதல் டெஸ்டை ஆடும் ராகுல் 158 ரன்கள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார், தென் ஆப்பிரிக்க தொடக்க வீர்ரர் ஆண்ட்ரூ ஹட்சன் 163 ரன்களை பிரிட்ஜ்டவுனில் எடுத்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/தொடக்க-வீரராக-கவாஸ்கர்-வினு-மன்கட்-சாதனைகளுடன்-இணைந்த-ராகுல்/article8928351.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.