Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

250 தமிழக இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் அனுமதி!

Featured Replies

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவதை தடுக்கும் வகையில் 250 இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் தொழில்செய்ய இலங்கை அனுமதிக்கலாம் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நாள் ஒன்றுக்கு 3000 இழுவைப்படகுகள் இலங்கை கடற்பகுதியில் அத்துமீறுவதை காட்டிலும் 250 படகுகளுக்கு அனுமதி வழங்குவது சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறது.

தென்னிலங்கை சிங்கள மீனவர்களும் கிழக்கு மீனவர்களும் இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர்.

எனவே இலங்கையில் இழுவைப்படகு மீன்பிடி தடைசெய்யப்படவில்லை என்ற அடிப்படையில் தமிழக இழுவைப்படகுகளுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறது என்றும் இந்திய செய்தித்தாள் கூறியுள்ளது

இதேவேளை கடந்த பெப்ரவரி மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை முன்வைத்தார். இதன்படி இலங்கையில் முழுமையாக இழுவைப்படகு மீன்பிடியை தடுப்பது நோக்காக இருந்தது. எனினும் இதற்கு 9 மாகாண அரசாங்கங்களின் தீர்மானத்தை கேட்டவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்திருந்தார்.

அதனை ஏற்றுக்கொள்ளாத சுமந்திரன், 13வது திருத்தச்சட்டப்படி மீன்பிடித்தொழில் மத்திய அரசாங்கத்தின் கைகளில் உள்ளமையால் மத்திய அரசாங்கமே இதற்கு முடிவெடுக்கமுடியும் என்று வாதிட்டிருந்தார்.

இந்நிலையில் சுமந்திரனின் கருத்துப்படி, இலங்கையில் உள்ளுரில் இழுவைப்படகு பயன்பாட்டை தடுக்காமல் தமிழகத்தின் அத்துமீறலை தடுக்கமுடியாது என்பதாகும் என்றும் இந்திய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/110650

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை மோதவிடும் சிங்கள-கிந்திய அரசுகளின் கூட்டுச்சதி. ஈழமும் தமிழகமும் சரியாகச் சிந்திக்காது பலயாதல் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.